யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ மாணவர்களிடையே கடந்த 7 ஆம் திகதி நடந்த கைகலப்புச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 மாணவர்கள் கடுமையாகக் எச்சரிக்கப்பட்டு யாழ். நீதிமன்றத்தால் நேற்று விடுவிக்கப்பட்டனர்.
யாழ்.பதில் நீதிவான் மு. திரு நாவுக்கரசு முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு மாணவர்களுடன் மேலும் 11 மாணவர்கள் நேற்று பொலிஸாரால் ஆஜர்செய்யப்பட்டனர். நேற்றைய விசாரணையில் யாழ். பல்கலைக்கழக வணிக, முகாமைத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் எஸ். வேல்நம்பி மாணவ ஆலோசகர் ஏ.என். சரவணபவன், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்லலித் பிரேமரத்ன ,பிரதான பொலிஸ் அதிகாரி சமன்சி கேரா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
வழக்கை விசாரித்த பதில் நீதிவான் மு. திருநாவுக்கரசு மாணவர்களுக்கு எச்சரித்து அறிவுரை வழங்குகையில் தெரிவித்ததாவது:
பல்கலை மாணவர்கள் பொறுப்புடன் கல்வி கற்று சமூகத்துக்கு உதவுபவர்களாக மிளிரவேண்டும். அதை விடுத்து அடி, தடி கலாட்டா, கோஷ்டி மோதல் என்று அநாகரிகமற்ற முறையில் நடந்து யாழ். பல்கலைக்கழகத்தின் தரத்தையும், நம்பிக்கையையும் அழித்து விடும் நடவடிக்கையில் ஈடுபடாதீர்கள்.யாழ்ப்பாணத்தின் பாரம்பரியங்கள யும், கலாசார விழுமியங்களைக் காக்க வேண்டியவர்களில் யாழ். பல்கலை மாணவர்களுக்கும் முக்கியமான பங்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.இனிவரும் காலங்களில் இத்தகைய அநாகரிகமான செயல்களில் நீங்கள் ஈட படு வீர்களானால் சுலபமான முறையில் விடுதலை செய்யப்படமாட்டீர்கள், விசாரணைகள் முடியும் காலம் வரை தடுப்புக் காவலில் வைக்கப்படுவீர்கள் என்று தெரிவித்தார். ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு மாணவர்கள யும் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட 11 மாணவர்களையும் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
கைகலப்பின் பின்னர் யாழ். பல் கலைக்கழக வளாகத்தில் பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள் ஆகியவற்றை உரியவர்களிடம் ஆவணப் பரிசீலனை செய்து ஒப்படைக்குமாறும் பொலிஸாருக்கு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக