மீன்பிடிப்பட கொன்றின் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்திருந்த அவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர்கள் என அவுஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை அதனை அங்குள்ள இலங்கைத் தூதரகத் திற்கு அறிவித்துள்ளது. விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் தற்போது அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைக்கு அவுஸ்திரேலியாவில் ஆறாயிரத்துக்கும் அதிமான சட்ட விரோதக் குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கையர்கள் என்றும் மேலதிகத் தகவல்களிலிருந்து தெரியவருகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக