வெள்ளி, 13 மே, 2011

தேர்தல் தோல்வி எதிரொலி-திமுக அமைச்சரவை ராஜினாமா

சென்னை சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வியைச் சந்தித்துள்ளதைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது மற்றும் அமைச்சரவையின் விலகல் கடிதத்தை ஆளுநர் பர்னாலாவுக்கு அவர் கடிதம் அனுப்பினார்.

அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதிமுக கூட்டணி 200 இடங்களைப் பிடித்துள்ளது.

இதையடுத்து ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவுக்கு முதல்வர் கருணாநிதி தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்தார். அதேபோல திமுக அரசின் ராஜினாமா கடிதத்தையும் அவர் அனுப்பினார்.

முதல்வர் மற்றும் அமைச்சரவையின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். அதே நேரத்தில் புதிய அரசு பதவியேற்கும் வரை பதவியில் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.
English summary
CM Karunanidhi has resigned from CM post. After DMK routed in the assembly elections, he rushed to the Raj Bhavan. He met the Govrnor Barnala and handed over his and DMK govt's resignation letters.
 

கருத்துகள் இல்லை: