சனி, 2 ஜூலை, 2011

Kerala சிறுமியை சீரழித்த அரபு ஷேக்!இன்டர்போல் உதவியை நாடியது போலீஸ்

கொச்சி : சிறுமி கற்பழிப்பு விவகாரத்தில் சிக்கிய அரபு ஷேக்-பிடிக்க இன்டர்போல் உதவியை நாடியது போலீஸ்

திருவனந்தபுரம் கொச்சி சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஷேக் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரைப் பிடிக்க இன்டர்போல் உதவியை நாட கேரள காவல்துறை முடிவு செய்துள்ளது.

கொச்சியைச் சேர்ந்த 18 வயது மாணவியை அவரது தந்தையே கற்பழித்து கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளி சீரழித்த விவகாரம் நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த பரபரப்பு வழக்கில் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். இவர்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், திரைத் துறையினர் என பலரும் அடக்கம்.

இந்த வழக்கு தற்போது நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சிறுமியிடமிருந்து விசாரணை மூலம் பெற்ற தகவல்கள் அடிப்படையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பலாத்கார வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை படிப்படியாக போலீஸார் கைது செய்து வருகின்றனர்.

5 ஸ்டார் ஹோட்டலில் சீரழித்த அரபு ஷேக்

இந்த நிலையில் சிறுமியின் செல்போனை போலீஸார் சோதனை செய்து பார்த்ததில் அதில் ஒரு அரபுஷேக்கின் படம் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் அவர் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர் என்றும் கொச்சியில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் வைத்து தன்னை பலாத்காரம் செய்தார் என்றும் சிறுமி கூறினார்.

அந்த ஷேக் தற்போது சவூதிக்கு ஓடி விட்டார். இவர் மட்டுமல்லாமல் மேலும் சில வெளிநாட்டினரும் கூட தன்னை பலாத்காரம் செய்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து ஷேக் உள்ளிட்ட வெளிநாட்டினரைப் பிடிக்க இன்டர்போல் உதவியை கேரள காவல்துறை நாடியுள்ளதாக தெரிகிறது.
 

English summary
Kerala police has decided to seek Interpol's help to nab a Saudi Arabian, who is involved in Cochin girl rape case. Some other foreigners also involved in this case, police sources say.

கருத்துகள் இல்லை: