சனி, 2 ஜூலை, 2011

போலி நகைகளை அடகு வைத்து ஒரு கோடி ரூபாவிற்கு மேல் மோசடி

கண்டிப் பகுதியில் போலி நகைகளை அடகு வைத்து ஒரு கோடி ரூபாவிற்கு மேல் மோசடி செய்த மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மத்திய மாகாணத்தைச் சேர்ந்த வங்கிக் கிளைகள் 72இல் சுமார் 423 பவுண் எடை கொண்ட மூன்று கிலோவுக்கும் அதிகமான போலி தங்க நகைகளை அடகு வைத்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த மூன்று சந்தேக நபர்களை அலவத்துகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீண்டகாலமாக இச் சந்தேக நபர்கள் தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக அலவத்துகொட பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்; மூலம் வங்கிக் கிளைகளில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவை மூன்று கிலோ 300 கிராம் எடை கொண்டதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று 2011 07 01 ஆம் திகதி கண்டி பிரதான நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் செய்யவுள்ளதாக அலவத்துகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிஷாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: