சனி, 2 ஜூலை, 2011

Tamilnadu அகதி முகாமில் பெண் குழந்தை பலாத்காரம்? (இரண்டரை வயது) தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டில் இலங்கை


குழந்தை பலாத்காரம்? இலங்கை அகதிகள் போராட்டம்

காலாப்பட்டு : விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. 465 குடும்பத்தை சேர்ந்த 1,787 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள புதுமுகாமை சேர்ந்தவர் ரகுநாதன். இவரது மனைவி தேவதர்ஷினி. இவர்களது மகள் திவ்யா (இரண்டரை வயது). நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் மின்சாரம் தடைபட்டு இருந்தது. ரகுநாதன் வெளியில் சென்றிருந்தார். குழந்தை திவ்யாவை வீட்டின் முன்பு தூங்க வைத்து விட்டு, வீட்டுக்குள் தேவதர்ஷினி சமையல் செய்து கொண்டிருந்தார்.  

அங்கு வந்த 20 வயது மதிக்கத்தக்க இளைஞர், அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினார். இதனை பார்த்த முகாம் மக்கள் கூச்சலிட்டனர். சிலர், அவரை துரத்தினர். முதலியார்குப்பம் கடற்கரை பகுதிக்கு சென்று அவர்கள் தேடிய போது, கடற்கரை ஓரம் முட்புதரில், அந்த சிறுமி கிடந்தாள். உடல் முழுவதும் காயங்கள் இருந்தது.
தப்பியோடிய இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதைறிந்த முதலியார் குப்பம் மீனவ பஞ்சாயத்தார் அங்கு வந்து, இளைஞரை மீட்டு சென்றனர்.

ஆத்திரமடைந்த முகாம் மக்கள், கடற்கரை சாலையில் மறியல் செய்ய முயன்றனர். தகவலறிந்து வந்த டிஎஸ்பி சிவனேசன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தி, இளைஞரை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமி, கனகசெட்டிகுளம் பிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போலீஸ் விசாரணையில், சிறுமியை தூக்கிச்சென்ற வாலிபர் முதலியார்குப்பம் மீனவர் குப்பத்தை சேர்ந்த சுகுமார்(21) என்பது தெரிந்தது.

புதுவையில் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கிடையில், முகாமை சேர்ந்தவர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று அகதி முகாம் நுழைவு வாயில் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து சப்&கலெக்டர் சண்முகம், அவர்களிடம் பேச்சு நடத்தினார். முகாம் பகுதியில் இரவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்று முகாம் மக்கள் கலைந்து சென்றனர்.
எங்கே போய்விட்டார்கள் இந்த நெடுமாறன் சீமான் வைகோ வகையறாக்கள்? 
இருந்து பாருங்கள் வழக்கம்போல யாரவது தலையிட்டு குற்றவாளியை ஏதாவது சிறு தண்டனையுடன் தப்பவிட்டுவிடுவார்கள். ஆனால் இதற்காக தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் போராட்டத்தின் பெயரால் வயிறு வளர்க்கும் கூட்டம் ஆர்பாட்டம் எதுவும் செய்யாது. அகதிகளிடம் தான் காசு இல்லையே? 
புலன்பெயர்களை கவரும் ஜாலவித்தைகளிலும் தமிழ்நாட்டு வாக்கு வங்கிகளை வேட்டை யாடும் விவகாரங்களில் மட்டும்தான் இந்த சீமான் மாறன் கோஷ்டி ஈடுபடும்,

கருத்துகள் இல்லை: