வியாழன், 30 ஜூன், 2011

வக்கீல் சதீஷ்குமார் கொலையில் 2 I P S அதிகாரிகளுக்கு தொடர்பு?


திருமங்கலத்தை சேர்ந்தவர் சங்கரசுப்பு. சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். இவரது மகன் சதீஷ்குமார் வக்கீலுக்கு படித்துள்ளார். கடந்த 7-ந் தேதி சதீஷ்குமார் காணாமல் போனார். இது குறித்து அவரது தந்தை சங்கரசுப்பு திருமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி ஐ.சி.எப். ஏரிக் கரையில் சதீஷ்குமாரின் பிணம் மீட்கப்பட்டது. தனது மகன் கடத்தி சென்று கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் இச்சம்பவத்தில் இன்ஸ்பெக்டர்கள் ரியாசுதீன், கண்ணன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் சங்கரசுப்பு குற்றம் சாட்டினார்.

இதையடுத்து சதீஷ்குமார் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமாறு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஐகோர்ட்டு நீதிபதிகள் நாகப்பன், சிவக்குமார் ஆகியோர் முன்பு 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த வழக்கின் விசாரணை குறித்த நிலவரத்தை சி.பி.ஐ. தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மேற்கண்ட நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சங்கரசுப்பு சார்பில் வக்கீல் ஆஜராகி வாதித்தார்.அவர் ‘’சதீஷ்குமார் காணாமல் போன அன்று இன்ஸ்பெக்டர்கள் ரியாசுதீன், கண்ணன் ஆகியோர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளனர்.

சதீஷ்குமார் உடலை கண்டுபிடிக்க பின்னர் அவர்கள் ஊர் திரும்பி உள்ளனர். ஆனால் இந்த இருவரும் விசாரணைக்காக வெளியூர் சென்றிருந்தாக கூறியிருந்தனர்.

இது அவர்கள் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது. திருமங்கலம் போலீஸ் நிலைய அதிகாரிகள் 2 பேர் டாக்டர் விஜயகுமாரை சந்தித்து சதீஷ்குமாரின் சாவு தற்கொலை என்று சான்றிதழ் தருமாறு கேட்டுள்ளனர். இந்த கொலையில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது.  

சங்கரசுப்புவால் சந்தேகிக்கப்படும் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களையும் சி.பி.ஐ. தனது கஷ்டடியில் எடுத்து விசாரிக்கவில்லை. தமிழக போலீசாருக்கு கொலை செய்தது யார்? என தெரியும். அதனால்தான் திருமங்கலம் போலீஸ் நிலைய அதிகாரிகள் விஜயகுமாரை சந்தித்து பொய்யான சான்றிதழை கேட்டுள்ளனர்’’ கூறினார்

கருத்துகள் இல்லை: