சனி, 2 ஜூலை, 2011

மனித உணர்ச்சிகள் நாய்களுக்கும் புரியும்!

மனிதர்களின் உணர்ச்சிகளை நாய்கள் இனம் கண்டறிந்து கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்வதாக நியூசிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மகிழ்ச்சியான மற்றும் கோபமான மனிதர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும், சிரிக்கின்ற மற்றும் அழுகின்ற மனிதர்களுக்கு இடையே எழும் வேறுபாடுகளையும் நாய்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியுமாம்.

தெற்கு தீவில் உள்ள ஒடாகோ பல்கலைக்கழகம் 90 டியூனிடின் வகை நாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியது. ஆய்வின் போது குழந்தைகளின் சிரிப்பு, அழுகை, கொஞ்சல் போன்ற உணர்வுகளை பதிவு செய்தும் மனிதர்களின் பல்வேறுபட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் படங்களையும் நாய்களிடம் காட்சிப்படுத்தினர் ஆய்வாளர்கள்

உடல்மொழியை வெளிப்படுத்தும் நாய்கள்

அந்த காட்சியில் இருந்த உணர்வுகளை நாய்களை புரிந்து கொண்டு உணர்ச்சிகளை சரியாக வெளிப்படுத்தியதாக டெட் ரப்மென் என்ற ஆஸ்திரேலிய பேராசிரியர் தெரிவித்துள்ளார். மனிதர்களின் உணர்வுகளை உடனடியாக புரிந்து கொள்வதில் நாய்கள் மிகச்சிறந்தவை என்று ஒடாகோவில் இருந்து வெளிவரும் டெய்லி டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மனித உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப நாய்கள் அவற்றின் உடல்மொழியை வெளிப்படுத்தியதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றியுள்ள பிராணிகள்

நாய்கள் நன்றியுள்ளவை, விசுவாசம் மிக்கவை அதனால்தான் உலகம் முழுவதும் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகின்றன. வீட்டு எஜமானர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப காரியங்களை நிறைவேற்றுவதில் கில்லாடிகளாக உள்ளன. இது நாய்களிடம் இயல்பிலேயே அமைந்துள்ள சிறப்பம்சமாகும்.

English summary
Dogs can tell the difference between a happy and an angry person and a laugh from a cry, a New Zealand study claims. To reach the conclusion, researchers at the University of Otago, in the South Island, put 90 Dunedin dogs through their paces - showing some recorded images of babies laughing, crying and babbling and giving others verbal instructions from human's displaying happy or stern expressions.

கருத்துகள் இல்லை: