புதன், 29 ஜூன், 2011

ராமலிங்க அடிகளார் வீட்டை அரசுடமையாக்க கோரிக்கை




அகில இந்திய வேளாளர் - பிள்ளைமார், செங்குந்தர் - முதலியார் கூட்டமைப்பு தலைவர் கே.ராஜன், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில்,

சென்னை ஏழுகிணறு வீராசாமி தெருவில் உள்ள இல்லத்தில் ராமலிங்க அடிகளார் 33 ஆண்டுகளாக வாழ்ந்தார். அதன்பின்னர், வடலூர் சென்று சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவி ஆன்மீகத் தொண்டாற்றினார்.
ஆனால், சென்னையில் 33 ஆண்டுகள் ராமலிங்க அடிகளார் வாழ்ந்த வீடு கவனிப்பாரற்று பாழடைந்த நிலையில் உள்ளது. அதன் உரிமையாளர்கள் வெளியூரில் இருந்து கொண்டு வீட்டை வாடகைக்கு விட்டுள்ளனர்.

2001-2006-ல் நடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வள்ளலார் வாழ்ந்த வீட்டை அரசுடமையாக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த வீட்டை அரசுடமையாக்கி அருங்காட்சியகம் அமைத்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: