திங்கள், 20 டிசம்பர், 2021

ஆந்திரா திராவிட பல்கலை கழகத்தில் தமிழ் கற்க மாணவர் முன்வரவேண்டும்! இல்லையேல் தமிழ் துறை நீக்கப்படும் அபாயம்

Dravidian University Admissions 2019 Open for UG, PG, Diploma and  Certificate Courses | CollegeDekho

Renganathan Rajendran  :  ஆந்திர மாநிலம் குப்பம் என்ற இடத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகம் என்ற சிறப்பு மிகுந்த பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் தமிழ் துறை மூடப்படும் அபாயத்தில் உள்ளது
 30 மாணவர்களை அனுமதிக்கக் கூடிய அளவில் உள்ள அந்த தமிழ்துறையில்  எம் ஏ தமிழ் படிக்க வரும் மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் விடுதி கட்டணம் உட்பட்ட அனைத்து கட்டணங்களும் இலவசமாக தரப்படுகின்றன
 இதனை பயன்படுத்தி மாணவர்கள் எம் ஏ தமிழ் படிக்க முன்வரவேண்டும் இல்லாவிட்டால் அந்தத் துறையை இந்த ஆண்டுடன் மூடப்போவதாக ஆந்திர அரசு தெரிவிக்கிறது
 உடனடியாக அவசரமாக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ் அமைப்புகள் களத்தில் இறங்கி முப்பது தமிழ் மாணவர்கள் அந்த திராவிடப் பல்கலைக்கழக தமிழ்த் துறையில் சேர முயற்சி எடுக்க வேண்டும்
 20/ 12 !2021 தேதிக்குள் மாணவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது

250 நாய்களை கொன்ற குரங்குகள் பிடிபட்டன- பழிக்குக் பழியாம் மகாராஷ்டிராவில் பரபரப்பு சம்பவம்

 மாலைமலர் : நாய்களை கொலை செய்து வந்த குரங்குகள் பள்ளிக் குழந்தைகளையும் தாக்கியதாக பீட் வனத்துறையினரிடம் பாதிக்கப்பட்ட பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் குரங்குகள் ஒன்று சேர்ந்து குட்டி நாய்களை பிடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீட் மாவட்டத்தில் உள்ள லவூல் கிராமத்தில் சமீபகாலமாக குட்டி நாய்கள் காணாமல் போவதும் பின்னர் அவை இறந்த நிலையில் கண்டெடுக்கப்படுவதும் நிகழ்ந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்த, வனத்துறையினரின் உதவியை போலீஸார் நாடியுள்ளனர். 

சாட்டை துரைமுருகன்மீண்டும் கைது! 9 தொழிலார்கள் இறந்ததாக வதந்தி பரப்பினார்

 Vigneshkumar  -   Oneindia Tamil:   திருச்சி: சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்பிய சாட்டை துரைமுருகனை தில்லைநகர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அருகிலுள்ள விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடுதிகளில் தரமான உணவு வழங்கப்படுவதில்லை, அடிப்படை வசதிகள் இல்லை உட்பட பல புகார்கள் உள்ளன.
இதற்கிடையே கடந்த புதன்கிழமை இரவு விடுதியில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் இழுவை வலையால் பாக்கு நீரிணையின் கடல் வளம் முற்றாக அழிகிறது .. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

May be an image of 3 people, people standing and outdoors

May be an image of ocean

Douglas Devananda :   தமிழக உறவுகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் பகிரங்க வேண்டுகோள்.
கடந்த கால அழிவு யுத்தத்தினால் அனைத்தையும் இழந்த வடக்கு கடற்றொழிலாளர்களை மீண்டும் மீண்டும் துன்பப்படுத்தும்  செயற்பாடுகளை கடற்றொழிலில் ஈடுபடுகின்ற தமிழக உறவுகள் நிறுத்த வேண்டும் என்று  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இல்லாத காஸ் கிணறுக்கு தீனதயாள் என்று பேரு வேற... பீட்டர் அல்போன்ஸ்

  பீட்டர் அல்போன்ஸ் : தென்னிந்தியாவில் உள்ள துறைமுகங்கள் விமான நிலையங்கள் எதுவும் தென்னிந்தியர்கள் கையில் இல்லை. தென்னிந்தியாவின் ரெயில்வே காண்டீன்கள் காண்ட்ராக்டுகள் எதுவும் தென்னியர்களுக்கு இல்லை...  தபால் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஹரியானாவில் இருந்து  அவர்கள்  தமிழில் பரீட்சை தேறி 85 மாக்ஸ் பெற்று வேலைக்கு சேர்ந்துள்ளவர்கள். ஆனால் எவருக்கும் தமிழ் எழுத தெரியவில்லை .. முழுக்க முழுக்க எல்லாம் பறிபோய் கொண்டிருக்கிறது ..
காந்தி அடிகள்  ஏன்  பட்டேலை பிரதமர் ஆக்கவில்லை என்பதற்கு காந்தி சொன்னது : ஒரு குஜராத்தியரை பிரதமராக்கினால் நாட்டில் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியும் .. நானும் ஒரு குஜராத்தி பனியாதான் என்றார்.
இதுதான் காமராஜரும் குஜராத்தி மொரார்ஜியை பிரதமர் ஆக்கவில்லை .. அவர்கள் வியாபாரிகள் நாட்டை சூறையாடிவிடுவார்கள்  
சென்ற தேர்தலுக்கு முன்பாக  2005 juin கிருஷ்ணா  கோதாவரி ஆற்றுபடுகையில் 20 Trillion cubic feet கனஅடி இயற்கை எரிவாயும் கண்டு பிடிக்கபட்டதாகவும் இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 2 இலட்சம் கோடி என்று மோடி அறிவித்தார் .

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

நாம் தமிழர் நிர்வாகிகள் 400 பேர்கள் மீது சிங்கப்பூர் அரசு வாழ்நாள் தடை.. திருப்பி அனுப்பட்டனர்

 Shyamsundar  -  Oneindia Tamil :  சென்னை: சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியாவை சேர்ந்த பலர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள்.
அதிலும் சிங்கப்பூர், மலேசியாவில் தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள்.
தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழர்களின் முதல் தேர்வாக இருக்கும் வெளிநாடு சிங்கப்பூர் அல்லது மலேசியாதான்.
 தமிழர்கள் பலர் சிங்கப்பூரில் அமைச்சர்களாக உள்ளனர்.
கலாச்சார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் சிங்கப்பூர் - தமிழ்நாடு நெருங்கிய தொடர்புடையது.

ஃபாக்ஸ்கான் ஊழியர்களுக்குத் தரமற்ற உணவு.. ஊழியர்கள் உயிரிழந்ததாக ... வதந்தி ?

மின்னம்பலம் : ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவன கிளை சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தைவானைச் சேர்ந்த இந்த நிறுவனத்தில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்நிறுவனம் சார்பில் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுதி வசதி, உணவு வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருப்பவர்களுக்கு நிறுவனம் சார்பில் கேப் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

மணமகள் குதிரையில் வந்தார் ... மரபை மீறிய மணப்பெண்.... பிகாரில் சம்பவம்

தினமலர் : இண்டிகோ ஏர்லைன்ஸில் விமானப் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருபவர் அனுஷ்கா குஹா. இவர் பீகாரில் கயாவில் உள்ள சிஜூர் பகுதியை சேர்ந்த நபரைத் திருணம் செய்ய முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில், மணமகள் அனுஷ்கா குஹா தனது திருமண நாளன்று கல்யாண கோலத்தில், கயாவில் உள்ள மணமகன் வீட்டிற்குக் குதிரையில் சென்ற வீடியோ வைரலாகி உள்ளது.
இதில், மணமகளின் குடும்பத்தினர், நண்பர்கள், என ஒன்று கூடி வழி நெடுக, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் மணமகன் வீட்டிற்குச் சென்றனர்.

ஹரியானா இ-ஸ்கூட்டர் வெடித்து முதியவர் உடல் கருகி உயிரிழப்பு மின்சார கசிவு?

இ-ஸ்கூட்டர் வெடித்து முதியவர் உடல் கருகி பலி..

மாலைமலர் : வீட்டிற்குள் சார்ஜ் ஏற்றியபோது இ-ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து தீ பரவியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் குருக்கிரமை சேர்ந்த சுரேஷ் சாஹு என்ற 60 வயது முதியவர், இ-ஸ்கூட்டர் வெடித்து தீப்பற்றி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குருகிரமில் உள்ள சிறிய வீட்டில் முதியவர் சுரேஷ் சாஹூ, அவரது மனைவி மற்றும் 3 மகன்கள் இரவில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ-ஸ்கூட்டர் திடீரென்று பெரும் சத்தத்துடன் வெடித்துள்ளது. பின் அங்கு கிடந்த துணிகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியது. இந்த விபத்தில் சுரேஷ் சாஹூ உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகன்களும் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டீச்சருக்கு பிறந்தவன்னு சொல்லாத.. மாங்காடு மாணவியின் இன்னொரு கடிதம்- முக்கிய தடயம் சிக்கியது

 Shyamsundar -   Oneindia Tamil  :  சென்னை: பாலியல் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாங்காடு மாணவியின் கடிதம் ஒன்று ஏற்கனவே கைப்பற்றப்பட்ட நிலையில் அதன் இன்னொரு பாதியும் தற்போது வெளியாகி உள்ளது.
தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் குறித்து அந்த மாணவி மறைமுகமாக இதில் குறிப்பிட்டுள்ளார். சென்னை மாங்காட்டில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட அந்த 11 வகுப்பு மாணவி தனது மரணம் குறித்து உருக்கமாக கடிதம் எழுதி உள்ளார்.

இலங்கை தமிழர் பகுதிகளில் சீன தூதர் மக்கள் அமோக வரவேற்பு

இலங்கையின்  தமிழர் பகுதிகளில் சீன தூதர்:  இந்தியாவுக்கான எச்சரிக்கை!

மின்னம்பலம் :  2009இல் விடுதலைப் புலிகளுடனான இலங்கை அரசின் இறுதிக்கட்ட போரில் இலங்கை அரசு இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ உதவியை நாடியது. போரில் ஜெயித்தவுடன் இந்தியாவைவிட சீனாவோடு பல விதங்களில் உறவை வளர்த்தது இலங்கை. இந்த நிலையில் கொழும்பு, தென்னிலங்கையிலேயே தனது பார்வையைப் பதித்திருந்த சீனா தற்போது முதன்முறையாக தமிழர்கள் வாழும் வட மாகாணத்தின் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளது

கோபாலபுரத்தில் கலைஞரை காண வந்த சத்திய சாயி பாபா! ‘கடவுளை நான் ஏற்றுக் கொள் கிறேனா என்பது பிரச்னையல்ல... கடவுள் என்னை......... flashback

An Atheist Himself, Karunanidhi Had Much In Common With Godman Sathya Sai  Baba

விகடன்  : கோபாலபுரத்தில் சாய்பாபா... அதிசயம் நிகழ்ந்தது எப்படி?
அத்தி பூத்தது போல் எப்போதாவது சில அபூர்வ சந்திப்புகள் நிகழ்வது உண்டு. அப்படி ஓர் அபூர்வ சந்திப்பு கடந்த 20&ம் தேதி, சென்னை கோபாலபுரத்தில் நடந்திருக்கிறது!
கொள்கையிலும் நம்பிக்கையிலும் எதிரெதிர் துருவங்களாக இயங்கிவரும் முதல்வர் கலைஞர் அவர்களும் , புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபாவும் 20&ம் தேதி ஒருவரையருவர் சந்தித்து சுமார் முக்கால் மணி நேரம் அளவளாவி இருக்கிறார்கள்.
பகுத்தறிவையே தன் உயிர் மூச்சாக கொண்டிருக்கும் கலைஞரும் , பக்திமார்க்கத்தையே தன் வாழ்வியல் நெறியாகக் கடைப்பிடித்து வரும் சாய்பாபாவும் சந்தித்துக் கொண்டது& தமிழக அரசியல் களத்திலும் சரி, ஆன்மிக தளத்திலும் சரி... வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Behavioural Award ! விளையாட்டு, கல்வி, கணினி என எந்த துறையில் பரிசு பெற்றாலும் இவ்வளவு மகிழ்ச்சி இருந்திருக்காது.

May be an image of 2 people, people standing and monument

சுமதி விஜயகுமார் :  பரிணாம வளர்ச்சியை தவிர, உலகின் அனைத்து வளர்ச்சிக்கும் அடிப்படையானது கேள்விகள்.  அனைத்து மருத்துவ மற்றும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் கேள்விகள் மட்டுமே அடிப்படையாய் அமைந்திருக்கின்றன. ஆப்பிள் ஏன் மேலே செல்லாமல் கீழே விழுகிறது என்பதில் துவங்கி கருப்பு துளை (Black Hole) இருக்கும் போது வெள்ளை துளை (White Hole) ஏன் இருக்க கூடாது என்பது வரை. கேள்விகள் பிறந்திருக்காவிட்டால் நாம் இன்னமும் குகைகளில் வாழ்ந்திருப்போம். உலகம் இன்னும் அழகானதாய் இருந்திருக்கும்.  மழையும் வெயிலும் கால நிலைக்கு ஏற்ப இருந்திருக்கும். ஆனால் மனிதனின் வாழ்வு 30 வயதோடு நின்றிருக்கும். நம் உலகை போல் வேறு பல உலகங்கள் இருக்கும் சாத்தியத்தை அறியாமலேயே இறந்து போய் இருப்போம்.
இயற்கை சுழலியில் 100 அடி பின் சென்ற போதும் அறிவியலால் 1000 அடி முன்னோக்கி நகர்ந்திருப்பதற்கான காரணம் மனிதனுக்கு எழுந்த கேள்விகள் தான். 

ஆசிரியரின் பாலியல் அத்துமீறலால் மீண்டும் ஒரு மரணம்.. சென்னை மாங்காட்டில்

suicide

zeenews.india.com : சென்னை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11 வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை வீட்டில் அனைவரும் வெளியில் சென்றிருந்த நிலையில்  மாணவி மட்டும் வீட்டில் தனியாக  இருந்திருக்கிறார்
வெளியில் சென்றிருந்த மாணவியின் தாய் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்பக்கம்  தாழிட்டு இருந்ததாகவும் நீண்ட நேரம் கதவை தட்டியும்  திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து காவல் நிலையத்திற்கு  தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாங்காடு போலீசார்  மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக KMC மருத்துவமனைக்கு 14.30 மணிக்கு உடலை  அனுப்பி வைத்தனர். இறந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

கொரோனா.. 22 மாவட்டங்களில் 10க்கும் கீழ் குறைந்த பாதிப்பு.. பாசிட்டிவ் விகிதமும் குறைவு

 Vigneshkumar  -  e Oneindia Tamil  :  சென்னை: தமிழ்நாட்டில் இன்று 613 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 22 மாவட்டங்களில் தினசரி கேஸ்கள் 10க்கு கீழ் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் இருந்தது. இதன் காரணமாக அப்போது மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதன் பிறகு மாநிலத்தில் வைரஸ் கேஸ்கள் தொடர்ந்து குறைந்தே வருகிறது. மாநிலத்தில் தற்போது தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் கேஸ்களும் தொடர்ந்து குறைந்தே வருகிறது.

சனி, 18 டிசம்பர், 2021

மீண்டும் சென்னை சங்கமம்... நகரத்து வீதிகளில் நாட்டுப்புறக் கலைவிழா.

நகரத்து வீதிகளில் நாட்டுப்புறக் கலைவிழா... மீண்டு(ம்) வருமா சென்னை சங்கமம்!
மின்னம்பலம் : பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆயிற்று, அந்தக் கொண்டாட்டங்கள் முடிவடைந்து.. மீண்டும் அதே உற்சாகத்தோடும் உந்துதலோடும் வருமா, சென்னை சங்கமம் கலை விழா என ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள், தலைநகர கலாரசிகர்கள். அவர்கள் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கலைவடிவங்களை நிகழ்த்தும் ஆயிரக்கணக்கான கலைஞர்களும் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். நாட்டுப்புறக் கலைகளை நகரத்து வீதிகளில் நிகழ்த்துவோம் எனும் முழக்கத்தோடு, 2007ஆம் ஆண்டில் தொடங்கியது, சென்னை சங்கமம் கலை விழா. முக்கால் கோடி மக்களைக் கொண்ட சென்னைப் பெருநகரில் முந்நூறு ஏக்கர் தனி உலகில் இருக்கும் ஐ.ஐ.டி.வாசிகள் அதற்கு முன்னர் அங்கு ஒலித்திராத பறை இசை மேளங்கள் முழங்க, சங்கமம் விழாவைத் தொடங்கிவைத்தார், அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.

கவிஞர் வைரமுத்து : வள்ளலாரும் ஆறுமுக நாவலரும் .. உண்மையில் நடந்தது என்ன?

 செல்லபுரம் வள்ளியம்மை  : கவிஞர் வைரமுத்து அவர்கள் வடலூர் ராமலிங்க வள்ளலாரின் வரலாற்றை தனது தமிழாற்று படையின் தொடர்களில் ஒன்றாக மேடையேற்றி உள்ளார்  அந்த ஆற்று நீரில் சற்று நனைந்து பாருங்கள் .
கிழக்கிந்திய கம்பனியோடு வந்த கிறித்துவம் ஒரு கோடி மக்களை மதம் மாற்றியதற்கும் ராமலிங்கரின் மனமாற்றத்திற்கு உள்ள தொடர்பு ஊன்றி உணரத்தக்கது .மதமாற்றம் இந்த மண்ணில் எந்தவழி நுழைந்தது? அந்நியர் இம்மண்ணில் எவ்வழி புகுந்தனர்?
வருணங்களென்றும் குலங்கள் என்றும் ஜாதிகள் என்றும் பிளந்து வைத்த சந்து வெளி புகுந்தது.
அந்நியரை ஓட்டவேண்டும்  அதற்கு முன்னால் அந்நியரை வரவழைத்த மதச்சண்டைகளின் பிற்போக்குத்தனத்தின் பிடரியை பிடித்து ஆட்டவேண்டும் என்று சிந்தித்த முதல் புரட்சி துறவி வள்ளலார் என்றே சொல்ல தோன்றுகிறது.
இந்து மதம் துறவின் நிறம் காவி என்றது   வள்ளாளரோ வெள்ளை என்றார்.

கரூர் எம்பி ஜோதிமணி பாஜக அண்ணாமலையை கவிழ்த்துவிட்டு பாஜக தலைவராக போகிறாரா?

May be a Twitter screenshot of 1 person and text that says 'Jothimani Sennimalai December at 21:13 நேற்று மதியம் ஜஸ்தான் மாநிலம் ஜய்பூ கட்சிக்கூட்டம் முடித்துவிட்டு, ரவு ஒரு மணி க்கு கரூர் சென்று சேர்ந்தேன் காலையில் கரூரில் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்துகொண்டு விட்டு, டெல்லி வந்து இரவு நாடாளுமன்றம் சென்று தொகுதியில் ரயில்வே பாலங்களில் உள்ள பிரச்சினை தாடர்பாக சினேன். தொடர்ச்சியான பயணம்,தூக்கமின்மை,விமான நிலையத்தில் இருந்து பூஜய நேரம் சென்றதால் அதனால்தானோ எனன வோ சபாநாயகர் உடனடியாக பேச வாய்ப்பளித்தார் அவருககு எனது மனமார்ந்த கடந்தவாரம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் பூஜய நேரத்தில் பேச சபாநாயகர் வாய்ப்பளித்தார்.பல்வோ போராட்டங்களுக்கிடையே பெண்களை மாண்புமிகு சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள் தொடர்ந்து வருவது பாராட்டுக்குரியது @loksabhaspeaker ਜਵरਨी'
May be an image of 2 people, people sitting and indoor

Venkat Ramanujam  :  ராகுல்காந்தி எதிர்க்கும் சபாநாயகரை பாராட்ட சீராட்ட ஜோதிமணிக்கு உரிமை இல்லையா..
கடந்த இரு நாட்களாக #திமுக  காங்கிரஸ் சமாஜ்வாடி கட்சிகளுடன் சேர்ந்து விவசாயிகளை திட்டமிட்டு சதி செய்து கொன்ற  குற்றவாளி ஒன்றிய பாஜக அமைச்சர் பதவி விலக வேண்டும் என கோஷம் போட்டு நாடாளுமன்றத்தை முடக்கி வரும் வேளையில்..
இதே காலத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஒன்றிய பாஜக அமைச்சர்களை வரிசையாக பார்த்துக்கொண்டு அவர்கள் பெருமைகளை தொடர்ந்து கரூர் தொகுதி நலனுக்காக என்ற முகமூடி அணிந்து மகிழ்வுடன் டீவிட்டி வரும் வேளையில்..
இதே காலத்தில் அதிலும் மிக முக்கியமாக தன்னை பேச விட மறுக்கும் லோக்சபா ஸ்பீக்கர் எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பி  வரும் வேளையில்..
இதே காலத்தில் நாக்பூர் தமிழரல்லாத கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திமுகவை சங்கி என குற்றம் சாட்டி செருப்பை தலையில் தூக்கி உள்ளாரே..
ராமன் பாதகையை தலையில் கொண்டு தான் பரதன் நடந்து சென்றான் என்கிறது ராமாயணம்..
நவீன காலமோ கருப்பு சிவப்பு செருப்பை சீமான் தலை மீது தூக்கி வைத்து கொண்டாட வைத்துள்ளது..

செங்கல்பட்டு ஆதீஸ்வரர் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் சிறார்களுக்கு பாலியல் சித்திரவதை .. முடிச்சூரில்

குழந்தைகள் இல்லம்

tamil.samayam.com :    அந்த இல்லம் ஆண்களை மட்டுமே சேர்த்து கொள்ள அனுமதியளிக்கப்பட்ட ஒன்று
    குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சமூக நல அதிகாரி ஒரு வாரத்திற்கு முன்பு அந்த இல்லத்தை ஆய்வு செய்தனர்
அரசு அங்கீகார இல்லத்தில் சிறார்களுக்கு நடைபெற்ற பாலியல் ரிதியான துன்புறுத்தல் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட   குழந்தைகள் நலன் குழந்தைகள் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பல்வேறு உடல் ரீதியான வன்கொடுமைகளில் ஈடுபட்டு வரும் “ஆதீஸ்வரர் குழந்தைகள் இல்லத்தின்” மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் நல ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் நடுரோட்டில் தீக்குளித்த பெண்.. விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

 கலைஞர் செய்திகள் : திருப்பூரில், நடுரோட்டில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் தெய்வானை. இவரது கணவர் கோபால் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து தெய்வானை திருப்பூர் பகுதியில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது, உடன் பணியாற்றிய ஒருவருடன் தெய்வானைக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த நபரிடம் தெய்வானை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு அந்த நபர் தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகக் கூறியுள்ளார்.

நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு 110 கோடியாம் .. அடுத்தவருடம் இன்னும் கூடுமாம்

What is the shocking secret of Anushka Shetty? - Quora

  மாலைமலர் . சினிமா   : தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
யோகா ஆசிரியையாக இருந்த அனுஷ்கா 2005-ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ், தெலுங்கு, இந்தியில் 65 படங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் அனைத்து பெரிய கதாநாயகர்களுக்கும் ஜோடியாக நடித்து இருக்கிறார்.
நயன்தாராவுக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் இருக்கிறார். உடல் எடை கூடி பட வாய்ப்புகள் குறைந்தாலும் அனுஷ்கா மவுசு ரசிகர்கள் மத்தியில் குறையவில்லை. இந்த நிலையில் அனுஷ்காவின் சொத்து மதிப்பு இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. அவருக்கு ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இலங்கை முழுவதும் இந்து கோயில்கள் அமைக்க முடியுமெனில் யாழ்ப்பாணத்தில் ஏன் பெளத்த விகாரைகள் அமைக்க முடியாது? அருண் சித்தார்த் கேள்வி

 Arun Siddharth  :  நல்லூர் பற்றிய அருண் சித்தார்த்தின் சர்ச்சைக்குரிய கருத்து என்ன????
கேள்வி - உலகிலுள்ள இந்துக்கள் எல்லோரும் வணங்கும் நல்லூர் கோயிலை இடித்து விட்டு அங்கு மலசலகூடம் அமைக்க வேண்டும் என நீங்கள் கூறக் காரணம் ??
பதில் - அந்தக் கூற்றை ….. ( எனது பதிலைக் கூற விடாமல் ஊடகவியலாளர் இடைமறிக்கின்றார்….)
கேள்வி— நான் ஒரு இந்து பக்திமான் அல்ல, நான் ஒரு மார்க்ஸிஸ்ட் (Marxist)என்றும் நீங்கள் கூறியுள்ளீர்கள். நான் கூறுவது சரிதானே??
பதில் - ஆம் அது சரிதான். நான் இன்னமும் ஒரு மார்க்ஸிஸ்ட் (Marxist) தான். இன்னமும் நான் ஒரு இடதுசாரியே.
கேள்வி - இன்னமும் இடதுசாரி( Left ) அவ்வாறாயின் நீங்கள் ஒரு இந்து பக்திமான் அல்ல ????
பதில் - நான், அம்பேத்கார் இந்தியாவில் என்ன செய்தார்.. அதையே தான் நாங்களும் செய்கின்றோம். நான் பெளத்த தரிசனத்தைப் பின்பற்றுகிறேன்.
கேள்வி - நீங்கள் நல்லூர் கோயில் தொடர்பாக வெளியிட்ட கருத்தை மீளப் பெறப்போவதில்லையா????
பதில் - இல்லை. எப்போதும் இல்லை .
கேள்வி - அது சரியெனக் கருதுகிறீர்களா???

சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே நோக்கம்"

சீன தூதுவர்
யாழ் பொதுநூலக வாசலில் சீன தூதுவர்
சீன தூதுவர்
நல்லூர் வாசலில் சீன தூதுவர்
BBC : ரஞ்சன் அருண்பிரசாத் -      பிபிசி தமிழ் :  சீன தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம்
''தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்"" என்ற நோக்கத்தை கொண்டே, இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கான பயணம் மேற்கொண்டுள்ளனர்.
''இந்தியா தொல்லை, ஆனால் சீனா அப்படியில்லை. பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குகிறது," என்பதை வடக்கு தமிழர்களுக்கு உணர்த்துவது சீனாவின் நோக்கமாக உள்ளது என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இலங்கை தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கொழும்பிலுள்ள சீன தூதரக அதிகாரிகள், வடக்கு மாகாணத்திற்கான விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங் தலைமையிலான குழுவொன்று, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

வெள்ளி, 17 டிசம்பர், 2021

நீதிக்கட்சி அமைச்சரவை பதவி ஏற்ற நாள் இன்று(17-12-1920) .. 101 வருட திராவிட வரலாற்றின் முதல் தினம்

May be an image of 6 people and text that says 'டாக்டர் நடேசனார் பிட்டி. தியாகராயர் டாக்டர் டி.எம்.நாயர் ஏ. சுப்பராயலு ரெட்டியார் கே.வி.ரெட்டி பனகல் அரசர்'

 Seshathiri Dhanasekaran  :  101 வருட திராவிட வரலாற்றின் முதல் அத்தியாயம் துவங்கிய தினம் இன்று.
முதல் நீதிக்கட்சி ஆட்சி அமைச்சரவை பதவி ஏற்ற நாள் இன்று(17-12-1920)
1919 ஆம் ஆண்டு மாண்டேகு-செம்சுபோர்டு சட்டப்படி அமையப் பெற்ற சட்டமன்றத்திற்கான முதல் பொதுத் தேர்தல் 1920 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாளும், டிசம்பர் 1, 2 நாள்களிலும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலைப் புறக்கணிக்குமாறு தீவிரப் பிரச்சாரத்தைக் காங்கிரஸ் மேற்கொண்டது. காங்கிரஸ், நீதிக் கட்சியை எதிர்த்தது.1919இல் இயற்றப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டப்படி நடைபெற்றது நீதிக் கட்சி ஆட்சி. அது இரட்டை ஆட்சி முறையாகும். நீதிக் கட்சி ஆட்சிக் காலம் முழுவதும் ஒரு முதலமைச்சர், 2 அமைச்சர்கள் என மொத்தம் 3 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர்.

15 அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் திமுகவுக்கு தாவத்தயார்? முயற்சிகள் வேகமெடுக்கிறது

அலேக்கா தூக்கு 15...! அ.தி.மு.க. எம்.எல்.ஏ.களுக்கு தி.மு.க. இலக்கு!!
மின்னம்பலம் :   : அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை வளைத்துப்போட்டு அந்தக் கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை உண்டாக்க தி.மு.க. தரப்பில் முயற்சிகள் தீவிரமாகியுள்ளன. சில அமைச்சர்களுக்கு தலைமையிலிருந்து பிரத்யேகமான வேலைத்திட்டம் தரப்பட்டிருக்கிறது என தகவல் வந்துள்ளது. நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை அமைத்தது. அ.தி.மு.க. 65 தொகுதிகளில் வென்று முக்கிய எதிர்க்கட்சியாக அமர்ந்தது, பழைய கதை!