வெள்ளி, 1 செப்டம்பர், 2017

கமல் :கனவுகளோடு வாழ்ந்த பெண்ணை கண் மூடவைத்து மண்ணோடு மண்ணாக ஆக்கிவிட்டோம்:

கனவுகளோடு வாழ்ந்த பெண்ணை கண் மூடவைத்து மண்ணோடு மண்ணாக ஆக்கிவிட்டோம் என நடிகர் கமல் மாணவி அனிதா தற்கொலை குறித்து வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. அனிதா தற்கொலை போன்ற துயரம் இனி நிகழக்கூடாது. இதை விட அவலம் வேறு வேண்டுமா? அந்த பெண் எந்த ஊர்? என்ன ஜாதி? எல்லாம் முக்கியமல்ல. அவர் என் மகள், அந்த பெண்ணின் பெயர் அக்க்ஷராவோ, சுருதியாகவோ இருந்தால் தான் நான் கோபப்பட வேண்டுமா? ஜாதி, கட்சி, மாநில எல்லை கடந்து நாம் போராட வேண்டியதிருக்கும். நியாயத்திற்காக போராட வேண்டியதிருக்கும். கனவுகளோடு வாழ்ந்த பெண்ணை கண் மூடவைத்து மண்ணோடு மண்ணாக ஆக்கிவிட்டோம். இந்தோ வருகிறது நல்ல செய்தி என்று குடுகுடுப்பை குலுக்கியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள்.
அந்த பெண்ணும்தான். தோழர் திருமாவளவன் வெகுண்டு எழவேண்டும்.

மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு போராட திராவிடர் கழகம் அழைப்பு!

அனிதாவின் முடிவை வேறு எந்த மாணவர்களும் எடுக்கவேண்டாம்!*- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி* அனிதாவின் முடிவை வேறு எந்த மாணவர்களும் எடுக்கவேண்டாம் - நாம் போராடி வெற்றி பெறுவோம் என்கிற அந்தத் துணிவும், ஒரு வைராக்கிய உணர்வும், உறுதியும் தேவையே தவிர - தங்களுடைய இழக்கக்கூடாத உயிரை இதற்காக இழக்கக்கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனியார்
தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். பேட்டியின் விவரம் வருமாறு: அனிதாவின் தற்கொலை செய்தி நம் உள்ளத்தை வெகுவாக உலுக்குகிறது! இந்தச் செய்தி அவருடைய பெற்றோர் எவ்வளவு வேதனை அடைகிறார்களோ, அந்த அளவிற்கு சொல்லொணா துயரத்தையும், வேதனையையும் எங்களுக்கெல்லாம் ஏற்படுத்தியிருக்கிறது. அனிதா போன்ற கிராமப்புற மாணவிகள் தங்களுடைய கனவுகள் நினைவாக்கப்படவில்லையே என்பதற்காக, இப்படிப்பட்ட ஒரு இறுதி முடிவை எடுத்துவிட்டார்களே என்கிற வேதனை, தேள் கொட்டுவதுபோல கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதேநேரத்தில், இதற்கு முழுக்காரணம் யார்? நம்ப வைத்து கழுத்தை அறுத்தது மத்திய அரசும் - மாநில அரசும்!

பீட்டர் அல்போன்ஸ்: மாணவி அனிதாவின் மரணத்துக்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலகவேண்டும்


நீட் தேர்வை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திய மாணவி அனிதா தற்கொலைக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வை எதிர்த்த மாணவி தற்கொலை: தமிழக அரசு ராஜினாமா செய்ய காங். தலைவர் வலியுறுத்தல் சென்னை: நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். மாநில பாடத்திட்டத்தில் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலையில் அவர் உயிரை மாய்த்துள்ளார்.
அவரது மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு முறைதான் மாணவியின் உயிரைப் பறித்ததாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றி தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘மாணவி அனிதாவின் தற்கொலை அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மாணவர்கள் இதுபோன்ற முடிவுகளை எடுக்காமல் மனவலிமையோடு இருக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு சட்டரீதியாக எடுத்த முடிவுக்கு துணை நின்றவர் மாணவி அனிதா. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு தொடர்ந்து முயற்சி செய்தது’ என்றார்.

மாணவி அனிதா தற்கொலை .... " நீட்" .. மத்திய மாநில அரசுகளின் பச்சை படுகொலை! பிளஸ் 2-வில் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றவர்

அரியலூர்: மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரியலூரைச் சேர்ந்த அனிதா பிளஸ் 2-வில் 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றவர். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அனிதாவின் கட்ஆஃப் மதிப்பெண் 196.5 ஆகும். ஆனால் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தகுதி தேர்வில் அவர் 86 மதிப்பெண்களே பெற்றிருந்தார். இதனால் அவரது மருத்துவராகும் ஆசை நிராசையானது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக விரக்தியின் உச்சத்தில் இருந்த மாணவி அனிதா, திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா,
நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடைசி வரை போராடியும் நீட் தேர்வு முடிவின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது. தமிழக அரசின் பொறுப்பின்மையும், மத்திய அரசு முதலில் ஓராண்டு நீட்டிலிருந்து விலக்கு அளிக்க தயார் என கூறி பின் அந்தர் பல்டி அடித்து, தமிழகத்திற்கு மட்டும் நீட்டிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் கூறியதும் தமிழகத்தில் பல மாணவர்களின்
மருத்துவராகும் கனவை சிதைத்து விட்டது.

தேசிய உணர்வு மயிர் கூச நிற்கும் டுபாக்கூர்கள் ஆட்சி நடக்கிறது .

By Elango Kallanai
எதையும் மறக்காமல் மக்கள் இருந்தால் மோதி மாதிரி வாய்ச் சவடால் வீரர்களை நாம் பிரதமராக அடைந்திருக்க மாட்டோம். மோதி பிரதம வேட்பாளர் ஆனா கதையே அசிங்கமானது. அதிலும் அருண் ஜெட்லி போன்ற ஜே என் யூ இழி பிறவியின் வேலை அருவருப்பானது. வலதுசாரிகளின் தீவிர முகமாக அவர் உருவாக்கப்பட்டார்.
ஸ்கில் இந்தியா என்று துவக்கினார்கள். நாட்டில் பெரும் வேலைப் பஞ்சத்தை போக்குவோம் என்று. அவர்கள் சொல்ல வந்தது என்னவென்றால் திறன்கள் இல்லாததால் தான் வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியவில்லை என்று. ஆனால் வேலையே உருவாக்கப்படவில்லை. ஸ்கில் இந்தியா சம்பந்தமான ஒரு ப்ராஜக்டில் தொக்குப்புப் பனி செய்தேன். அதன் பாடத் திட்டங்களின் அடிப்படையில் பிரிட்ஜ் மெக்கானிக் ஏசி மெக்கானிக் ஹாஸ்பிட்டாலிட்டி (விருந்தோம்பல் ) போன்ற துறைகளுக்கான பாடத் திட்டங்களை தொகுத்தார்கள். பல நிறுவனங்கள் இந்த தயாரிப்பில் இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் தயார் செய்தார்கள். ஆனால் பாருங்கள் இவர்கள் கொடுத்த சான்றிதழ்களோடு எவரும் வேலை பெற்றனரா என்று கேட்டால் பூஜ்யம் தான் விடை.

தோழர் தமிழரசன் ( 14.4.1945 - 1.9.1987 ) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்

தமிழரசன் ( 14.4.1945 - 1.9.1987 ) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய இலெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர்
தமிழ்த்தேசியத் தலைவர் தோழர் தமிழரசன் அவர்கள் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அஞ்சல், மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை உண்டு.< கோவையில் B.E. ( Chemical Eng) வேதியியல் பொறியியல் படித்தார்.
இளம் வயதிலேயே பொதுவுடைமைக் கருத்தில் நாட்டம் கொண்ட இவர் 1969 –ல் இந்திய கம்ஸயூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (மா. லெ)-ன் மாபெரும் போராளி ' சாரு மஜும்தாரின் அறைகூவலான ’’ மக்கள் விடுதலை” எனும் முழக்கத்தினை ஏற்று மாணவராக இருந்தபோதே அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

குழந்தையை 40 முறை கன்னத்தில் அறைந்த ஆசிரியை ரித்திகா ... லக்னோ


லக்னோவில் உள்ள பள்ளி ஒன்றில் வருகை பதிவேடு பரிசோதனையின்போது எழுந்திருந்து உள்ளேன் அம்மா என சொல்லாத குழந்தையை ஆசிரியை 40 முறை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோவில் உள்ள செயின்ட் ஜான் வைத்யன்யா பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் ரித்தீஷ் புதன்கிழமை( ஆகஸ்ட் 31) வீட்டுக்குத் திரும்பியபோது, கன்னம் வீங்கிக் காணப்பட்டிருந்தது. இதையடுத்து, குழந்தையிடம் பெற்றோர் விசாரித்தபோது, ஆசிரியை தன்னை அடித்ததைக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பள்ளியில் மற்ற குழந்தைகளிடம் விசாரிக்கும்போது, வருகை பதிவேடு பரிசோதனையின்போது, ரித்தீஷ் ஓவியம் வரைந்து கொண்டிருந்தான். ஆசிரியை அவனது பெயரை அழைத்தபோது, எழுந்திருந்து பதிலளிக்காத காரணத்தால், அவனது கன்னத்தில் 40 முறை அடித்தார்.

நெட்டிசன்கள் அராஜகம்! உயிரோடு கொளுத்துங்கள்:

பிரதமராக பொறுப்பேற்ற பிறகு நரேந்திர மோடி அவர்கள் பேசிய எத்தனையோ பேச்சுக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதில் மிக முக்கியமான ஒன்று கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி ‘டிமானிடைசேஷன்’ எனும் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் திட்டத்தை அமல்படுத்திய பிறகு, கோவாவின் மோபா நகரில் கிரீன்ஃபீல்டு விமான நிலையத்துகு அடிக்கல் நடும் விழாவுக்கு வந்தபோது பேசிய பேச்சு.

உயிரோடு கொளுத்துங்கள்: நெட்டிசன்கள் அராஜகம்!எனக்கு 50 நாட்கள் அவகாசம் கொடுங்கள். 10 மாதங்களாக வேலை செய்து, திடீரென அமல்படுத்தியிருக்கும் இந்தத் திட்டம் தோல்வியடைந்தால் என்னை உயிரோடு கொளுத்திவிடுங்கள் என அவர் பேசிய பேச்சு அதுவரை அவரை நம்பாதவர்களைக்கூட ‘உயிரையே கொடுக்கத் துணிந்துவிட்ட பிரதமரை சந்தேகப்பட்டுவிட்டோமே’ என மனவருத்தம் கொள்ளச் செய்தது.

அமித் ஷாவைச் சந்தித்த செங்கோட்டையன்: அதிர்ச்சியில் எடப்பாடி , ஓபிஎஸ்!

அமித் ஷாவைச் சந்தித்த செங்கோட்டையன்: அதிர்ச்சியில் எடப்பாடி , ஓபிஎஸ்!முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று அதிமுகவில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் சுமார் இருபத்தைந்து பேர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில் யாரும் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் அதிமுகவில் நடந்துகொண்டிருக்கின்றன.
இதற்கு அச்சாரம் போடும்விதமாக பள்ளிக் கல்வித்துறை செங்கோட்டையன் நேற்று ஆகஸ்ட் 31ஆம் தேதி டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை நிர்மலா சீதாராமனுடன் இணைந்துச் சந்தித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நயினார் போட்ட விதை!
மிகச் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த நயினார் நாகேந்திரனிடம் அதிமுகவின் கடந்த கால வரலாறு பற்றி விரிவாகவே பேசித் தெரிந்துகொண்டிருக்கிறார் அமித் ஷா. அப்போது நயினார் அமித் ஷாவிடம், ‘நீங்கள் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை அகற்றுவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் தமிழகம் முழுதும் மக்களிடையே பேச்சாக இருக்கிறது.

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க.,... ?

ஓரிரு நாட்களில் மாற்றப்பட உள்ள மத்திய அமைச்சரவையில், அ.தி.மு.க.,வுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என, தெரிகிறது. தமிழகத்தில், சசிகலா கும்பல் இல்லாத, அ.தி.மு.க., அணி உருவாக, பா.ஜ., விரும்பு கிறது. முதல்வர் பழனிசாமி - பன்னீர் செல்வம் அணிகள் இணைந்ததும், அவர்களுக்கு,தொலை பேசி மூலம், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித் ததே, அதற்கு சான்று. டில்லிக்கு செல்லும் போது, இருவரும்,சர்வ சாதாரணமாக, பிரதமரை சந்திக்கும் அளவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கம், அ.தி. மு.க.,வுக்கு விரைவில், அமைச்சரவையில் இடம் பெற்றுத் தரும் என, தெரிகிறது.இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வசம், பாதுகாப்பு, நிதி ஆகிய இரு முக்கிய துறைகள் உள்ளன. சுற்றுசூழல் துறை அமைச்சராக இருந்த அனில் தவே மறைவுக்குபின், அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன், அத் துறையை கூடுத லாக கவனிக்கிறார். வெங்கையா நாயுடுவிடம் இருந்த, தகவல், ஒலிபரப்புத் துறை, ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் கூடுதலாக உள்ளது.

ரகசிய எம்.எல்.ஏக்கள் கூட்டம்: வாக்குறுதி பெற்ற முதல்வர் பழனிசாமி

tamilthehindu :எம்.எல்.ஏக்களை முதல்வர் சந்திப்பதாக இருந்த கூட்டம் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் இல்லத்துக்கு மாற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களிடமும் ஆட்சிக்கு எதிராக போகக் கூடாது என்று வாக்குறுதி பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக அணிகள் இணைப்பு, 22 அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் தினகரன் அணி ஆட்சிக்கு எதிராக செயல்படுவது, எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட பரபரப்பான சுழ்நிலையில் தமிழக அரசு நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 22 பேர் தவிர மேலும் பலர் தங்கள் அணிக்கு வர உள்ளனர் என டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.

நிர்மலா சீதாராமன் தமிழக பாஜக தலைவர்? தமிழக Defacto முதலமைச்சர் ஆகிறார்?

தமிழக மாநில தலைவராகிறாரா நிர்மலா சீத்தாராமன்? மத்திய இணை அமைச்சர்கள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி, மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே ஆகியோர் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பாஜகவில் உள்ள மூத்த மத்திய அமைச்சர்கள் எல்லாம் தொடர்ந்து தங்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிலையில் ராஜினாமா செய்த மூத்த அமைச்சர்களுக்கு மாநில தலைவர்கள் பதவி வழங்கப்பட இருக்கிறது. அதில் மத்திய இணை அமைச்சராக இருந்த நிர்மலா சீத்தாராமன் தற்போது ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 கற்பழிப்புகளுக்காக லட்சம் ஆதரவாளர்கள் உள்ள சாமியாரை தண்டிக்கலாமா? பாஜக எம் பி சாக்சி மகராஜ்

Kumararaja Karuppusamy: நடக்குற நிர்வாகத்தை இல்லாம காட்டுவதற்கு பாண்டிச்சேரியில் ஒரு கவர்னர்... நடக்காத நிர்வாகத்தை நடக்குற மாதிரி . காட்டுவதற்கு தமிழ்நாட்டில் ஒரு கவர்னர்.... செத்துப் போன ஆயாவுக்கு வைத்தியம் . பார்த்து இட்லி கொடுக்க ஒரு மருத்துவமனை....
உயிரோட இருக்கும் குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் கொடுக்காம கொலை செய்ய ஒரு மருத்துவமனை.. பல ஆயிரம் பெண்களை கெடுத்த . பகவான் பிறந்த புண்ணிய நாட்டில், ஒரு சாமியாருக்கு இரண்டு பெண்களை பலாத்காரம் செய்ய உரிமை இல்லையா? எல்லையில் ராணுவ வீரர்கள் நமக்காக சாகும் போது, ஒரு 30 பேர் சாமியாருக்காக செத்தா என்ன தப்பு ? கண்ணீரில் குழந்தை பிறக்கும் என்று கண்டுபிடித்த நீதியரசர் வாழும் நாட்டில்... சாமியாரும் அமித்ஷாவும் கிடைக்காம... சாக்ரடீசும் அம்பேத்கருமா கிடைப்பாங்க????

லைசென்ஸ்.. 500 ரூபாய்+,குவாட்டர்+,கோழி பிரியாணிக்கும் ஓட்டு.. விஜயபாஸ்கர்தான் வருவான்

ஒரிஜினல் டிரைவிங் லைசன்ஸ் . கையில் இருக்க வேண்டும் -. அமைச்சர் MR விஜயபாஸ்கர்..... உலக நாடுகள் எங்கோ போய்விட்டன
பல நாடுகளில் டிரைவிங் லைசன்ஸ்
நகல் கூட தேவையில்லை./; லைசன்ஸ் எண்ணை சொன்னாலே போதும். ஒரிஜினல் தொலைந்தால் . அதை வாங்குவதற்குரிய நடைமுறை . சிக்கல்கள் பற்றி அமைச்சருக்கு தெரியாதா?.... சாதாரண செல் போன் ரீசார்ஜ் கடைகளில் கூட ஆதார் எண்ணை சொல்லி ரேகை வைத்தால் ஆதார் கார்டே வந்துவிடும் அளவிற்கு வசதிகள் உண்டு. இந்த மிசின்களின் விலை 400 க்கும் குறைவே. இந்த கருவிகளை எல்லாம் வாங்க அரசுக்கு வக்கில்லையா?? இந்த காலத்தில் வந்து ஒரிஜினல் கொண்டுவா
அத கொண்டுவா இத கொண்டு வா என்பதைவிட இவங்க எல்லாம் அரசாங்கம் நடத்தறதுக்கு பதில் பெட்டி கடை நடத்திட்டு போகலாம் ... 500 ரூபாய்க்கும்,குவாட்டருக்கும்,கோழி பிரியாணிக்கும் ஓட்டு போட்ட சில பரதேசிகளால்...; இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டி ? இருக்கும் போலிருக்கிறதே ... முகநூல் பிராண்டல்

உமா பாரதி உட்பட.. பல மத்திய அமைச்சர்கள் பதவி விலகல்

டெல்லி: மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பதவியை ராஜீவ் பிரதாப் ரூடி ராஜினாமா செய்துள்ளார். உத்தரபிரதேச பாஜக தலைவராக மகேந்திர நாத் பாண்டே நியமிக்கப்பட்டதால் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார். மேலும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று மதியம் மத்திய மந்திரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மந்திரிசபையை மாற்றி அமைக்க ஏதுவாக மத்திய மந்திரிகள் ராஜீவ் பிரதாப் ரூடி, மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் நேற்று இரவு திடீரென தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனிடையே மத்திய மந்திரிகள் ராதா மோகன் சிங், கல்ராஜ் மிஸ்ரா, சஞ்சீவ் குமார் பல்யாண், நிர்மலா சீதாராமன், கிரிராஜ் சிங் ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஊட்டியில் படப்பிடிப்புக்கு கெடுபிடி .. சினிமா தொழிலை பதம் பார்க்கும் மாமூல் அதிகாரிகள் !

ஆர்.டி.சிவசங்கர்: ஒரு காலத்தில், ரிச்சான அவுட்டோர் ஷூட்டிங் என்றாலே அது ஊட்டியாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது ஊட்டி பகுதியில் படப்பிடிப்பு வாகனங்களைப் பார்ப்பதே அரிதிலும் அரிதாய் இருக்கிறது.
கருப்பு – வெள்ளை காலம் தொட்டு தற்போதைய டிஜிட்டல் யுகம் வரை ஊட்டியில் படப்பிடிப்பு நடக்காத இடங்களே இல்லை என்று சொல்லலாம். மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் ஆகிய முன்னணி இயக்குநர்களின் கதைக் களமாக உதகை இருந்துள்ளது. முன்பு, குளு குளு காட்சிகளை படம்பிடிக்க காஷ்மீருக்கும் சிம்லாவுக்கும் ஓடிக் கொண்டிருந்தவர்கள், காஷ்மீரில் தீவிரவாதம் உச்சத்துக்குப் போனதும் ஊட்டிப் பக்கம் திரும்பினார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஊட்டியும் கேமரா கண்களுக்கு குளுமை தந்தது. இதனால், பிறமொழி இயக்குநர்களும் ஊட்டிக்கு வண்டியைத் திருப்பினார்கள்.
வருமானம் தந்த சினிமா

அம்பத்தி ராயுடு ... முதியவரை காலரை பிடித்து இழுத்து அடித்தான் ... கிரிகெட் ரவுடி


veerakumaran. Oneindia Tamil  : ஹைதராபாத்: காரை மெதுவாக ஓட்டுமாறு கூறிய முதியவரை சட்டை காலரை பிடித்து இழுத்து அடித்ததாக கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு மீது புகார் எழுந்துள்ளது.
ஹைதராபாத்தில் வசிக்கும் அம்பத்தி ராயுடு இன்று காலை அங்குள்ளராஜிவ்காகாந்தி சர்வதேச மைதானத்திற்கு தனது எஸ்யூவி வகை காரில் சென்றார். அதிவேகமாக கார் ஓட்டிய அவர், சாலையோரம் காலையில் வாக்கிங் சென்ற முதியவர்களை உரசும் வகையில் சென்றுள்ளார்.
இதை பார்த்த ஒரு முதியவர், காரை மெதுவாக ஓட்டுமாறு சத்தமாக தெரிவித்துள்ளார். இதனால் ராயுவுக்கு கடுமையாக கோபம் வந்துவிட்டதாம். காரை நிறுத்திய அவர் கீழே இறங்கி அந்த முதியவரிடம் தகராறு செய்துள்ளார்.< இருவருமே வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, வாக்கிங் சென்ற பிற முதியவர்களும், அம்பத்தி ராயுடு செய்தது தவறு என்று கூறியுள்ளனர். இதனால் கோபம் தலைக்கு ஏறிய ராயுடு, அந்த முதியவரை சட்டை காலரை பிடித்து அடித்துள்ளார்.

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

சிறுநீர் மலம் கழிப்பதற்கு வெட்கபட்டு . நோயாளியாகி டயலிஸ் . கிட்னி செலற்று போய்விட்ட மாணவரகள்

Juliet Jenifar: சென்னையிலுள்ள பிரபலமான ஒரு மருத்துவமனைக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன்.
அங்குள்ள ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை மையம் (டயாலிஸிஸ் சென்டர்) பக்கம் சென்றபோது, நான் பார்த்த காட்சி அதிரவைத்தது.
அந்த மையத்தில் சுத்திகரிப்பு செய்து கொண்டிருந்தவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள்.
பள்ளி செல்லும் வயதுடையவர்கள். பின்னர், மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
நிலைகுலைய வைத்த சூழல் நவீன வாழ்க்கைச் சூழல், உணவுக் கலாச்சாரம் என்று சிறுநீரகச் செயலிழப்புக்கான காரணங்களைப் பட்டியலிட்டவர், குழந்தைகள் பாதிக்கப் படுவதற்கான காரணங்களில் ஒன்றாக நம்முடைய பள்ளிகளில் உள்ள கழிப்பறைச் சூழலைக் குறிப்பிட்டார்.
“குழந்தைகள் கேட்கும் உணவு வகைகளையெல்லாம் வாங்கித் தரும் பெற்றோர், அவர்கள் உண்ணும் உணவும் பானங்களும் கழிவாக வெளியேறுவதில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்?” என்று கேட்டபோது கூட இந்தப் பிரச்சினையின் முழு உக்கிரத்தை நான் உணரவில்லை.
பின் இதுபற்றி சிறு பிள்ளைகள் பலரிடமும் பேசினேன். பள்ளிச் சூழலை அவர்கள் சொன்ன விதம், ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரான என்னையே நிலை குலையச் செய்தது.
பல பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் சிறுநீர், மலத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பழகியிருக்கிறார்கள். *ஆசிரியர்களுக்குப் பயந்து, வெட்கப்பட்டு, நடுங்கி*
ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு நல்லது. ஒரு வாரம் கூட உண்ணாவிரதம் இருக்கலாம். உடல் அதை ஏற்றுக் கொள்கிறது.
ஆனால், ஒரு மணி நேரம் சிறுநீர் / மலம் கழிப்பதைத் தள்ளிப் போடுவது கூட நல்லதல்ல. அன்றாடம் இதை மணிக்கணக்கில் செய்யும்போது உடல் சித்ரவதைக்கு உள்ளாகிறது.
உடல் உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினை
எனக்குத் தெரிந்து, காலையில் ஏழு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பும் மழலைகள் இருக்கிறார்கள். அவர்கள் கே.ஜி. வகுப்புகள் படிக்கிற பள்ளிக் கூடங்களுக்கு ஐந்து, பத்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்களில் செல்ல வேண்டும்.

தனியார் கல்லூரி கல்விக் கட்டணத்தில் அரசு தலையிடக் கூடாது! நிதி ஆயோக் பரிந்துரை

கேரள மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக்கட்டண நிர்ணயம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 28, 2017 அன்று ஒரு உத்தரவை வழங்கியுள்ளது. அதில் கேரளாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான ’கல்விக் கட்டண நிர்ணயக் குழு’ கட்டணத்தை அறிவிக்கும் வரை, தனியார் கல்லூரிகள் மாணவர்களிடம் ரூபாய் 11 இலட்சம் வரை கட்டணமாகப் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நடுத்தர வர்க்க, ஏழை மாணவர்கள், நீட் வரிசைப் படி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும், சேர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஆண்டுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.11 இலட்சத்தில், சேர்க்கை நடைபெறும் போதே ரூ.5 இலட்சத்தை கல்லூரியில் மாணவர்கள் செலுத்த வேண்டும் என்றும், மீதமுள்ள ரூ.6 இலட்சத்தை பணமாகவோ, அல்லது வங்கி உத்தரவாதமாகவோ சேர்க்கை முடிவடைந்து 15 நாட்களுக்குள் மாணவர்கள் கல்லூரிகளில் செலுத்திக் கொள்ளலாம் என்றும் அவ்வுத்தரவில் கூறியுள்ளது.

ரோஹிங்க்யா.. மியான்மர்.. பெரும்பான்மை சிறுபான்மை யுத்தமா? இனக்கொலையா?


மியான்மரை ஆளும் பெரும்பான்மை பர்மிய இனத்திற்கும் மியான்மரின் சிறும்பான்மை இனங்களுக்கும் இடையிலான மோதல்களானது உலகின் தொடர்ந்து நடந்து வரும் நீண்டகால மோதல்களுள் ஒன்றாகும்.
மியான்மரில் தங்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் வன்முறையில் இருந்து தப்புவதற்காக வங்கதேசத்தின் எல்லையை கடக்க  ரோஹிங்க்யா மக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது மியான்மர் இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி இருக்கிறது. தாக்குதல் குறித்த காணொளிகளை ஆய்வு செய்த பின்னர் அதை வெளியிட இருப்பதாக ஐரோப்பிய ரோஹிங்கியா சங்கம் (European Rohingya Council) அறிவித்துள்ளது.
முன்னதாக ஆகஸ்டு, 27 அன்று ரோஹிங்கியா ஆயுதக்குழு நடத்திய தாக்குதலில் 12 மியான்மர் பாதுகாப்புப் படையினர் பலியானார்கள். இராணுவத்தின் பதில் தாக்குதலில் 130 ரோஹிங்கியா முசுலீம்கள் கொல்லப்பட்டார்கள். அதில் பெரும்பாலானோர் அப்பாவிகள் என்றாலும் அனைவரும் ஆயுதக்குழுவை சேர்ந்தவர்களே என்று மியான்மர் நட்டு ஆலோசகரான ஆங் சான் சூ கீ கூறியுள்ளார். இவர்தான் மேற்குலகால் சமாதானப் புறவாக பீற்றப்பட்டு நோபல் பரிசு வழங்கப் பட்டவர்.
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அவர்கள் குடியேறியதாக கூறும் மியான்மர் அரசு அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் மறுக்கிறது.

ஒரிஜினல் லைசென்ஸ் ஒரு ஒரிஜினல் மாமூல் திட்டம் ... அமைச்சர்கள் வரை பங்கு பிரிக்க வசதி ..

மேலும், ஒரு முறை உரிமம் தொலைந்து போனாலோ அல்லது போலிசோ, வட்டார போக்குவரத்து அலுவலரோ (RTO) சோதனையின் போது பறிமுதல் செய்தால் திரும்ப பெறுவது மிகவும் கடினம். RTO -விடம் இருந்து பெறுவதக்கு ஒரு வாரம் ஆகிவிடும். போலீசிடம் இருந்து பெற வேண்டும் என்றால் மாதக்கணக்கில் ஆகிவிடும்.
மிழகத்தில் வரும் 2017, செப்டம்பர் 1 -ம் தேதி முதல் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்களும் தங்களது ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸை வாகன சோதனையின்போது காண்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டவர், போக்குவரத்து துறை அமைச்சரான விஜயபாஸ்கர்! தமிழக அரசுப் பேருந்து டிப்போக்களையே வங்கியில் அடமானம் வைத்து ஆட்டம் போடும் அதிமுக அமைச்சர் இவர்.
தமிழகத்தில் போக்குவரத்து வாகனங்கள் 13 லட்சம், போக்குவரத்து அல்லாத பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் 2 கோடியே 20 லட்சம் என மொத்தம் 2.33 கோடி வாகனங்கள் உள்ளன. அதேபோல தமிழகத்தில் உள்ள 81 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் கடந்த நிதியாண்டில் 19 லட்சத்து 87 ஆயிரத்து 480 பேருக்கு பழகுநர் ஓட்டுநர் உரிமங்களும், 9 லட்சத்து 61 ஆயிரத்து 771 பேருக்கு நிரந்தர ஓட்டுனர் உரிமமும் வழங்கப்பட்டுள்ளன.

எங்கடா கருப்புப் பணம் ? அம்பலமாகும் பணமதிப்பழிப்பு !

”எனக்கு 50 நாட்கள் மட்டும் கொடுங்கள்; இந்த முடிவு தவறாகப் போனால் என்னைப் பொதுவிடத்தில் வைத்து தூக்கிலிடுங்கள்” – கண்களில் வழியும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பிளிறினார் மேதகு பாரத பிரதமர் மோடி. அது நவம்பர் 13-ம் தேதி, 2016-ம் வருடம். ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய்த் தாள்கள் செல்லாது என அறிவித்த ஐந்தாம் நாள் மேற்படி “மேதகு” கோவாவில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றச் சென்ற போது தான் நாடெங்கும் மக்கள் வங்கிகளின் வரிசையில் நிற்கும் போது தங்கள் உழைத்துச் சம்பாதித்த காசு திடீரெனச் செல்லாததாக அறிவிக்கப்பட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
ஐம்பது நாட்கள் பொறுத்துக் கொண்டால் ”டைரக்ட்டாக” சொர்க்கம் தான் என அறிவிக்கப்பட்ட கூட்டத்தில் வேறு ஒரு சுவாரசியமான தகவலையும் பிரதமர் அவர்கள் வெளியிட்டார். அதாவது, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நகைகள் வாங்குவதற்கு பான் எண்கள் கட்டாயம் என்கிற விதியைத் தளர்த்திக் கொள்ளுமாறு தனக்கு கடிதங்கள் எழுதியதாகவும், என்றாவது அதைத் தான் வெளியிட்டால் அந்த உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளுக்கே செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.

கோயிலை வைத்து பிழைக்கும் எந்த பார்ப்பான் ஆவது முள்குத்தி கொண்டு உலா வருகிறானா?

பாசறை செல்வராஜ் : கடந்த 10/15 வருடங்களா நேர்த்திக்கடன் செய்கிறோம் என்ற பெயரில் முதுகில் துடையில் கம்பியை குத்தி கயிற்றில் தொங்குகிறார்கள் இந்த செயல்கள் நீக்கமற எல்லா கிராமங்களிலும் அதுவும் குறிப்பா வன்னியர் ஆதிதிராவிடர் இளைஞர்கள் இது கடவுள் பிராத்தனை என்ற அளவில் செய்கிறார்கள் இதன் வலி என்னவென்று பத்து ஆண்டுகள் கழித்து பார்த்தால் அதன் வலி தெரியும் நன்பர்களே
இதில் எனக்கு சில கேள்விகள் உண்டு முகநூலில் இது போன்ற பிராத்தனை நன்பர்கள் பதில் சொல்லலாம்
கோயிலையே மூலதனமா வைத்து பிழைப்பு நடத்துகிற பாப்பான் எங்கேயாவது இப்படி முள்குத்திக்கொண்டு தொங்குகிறானா?
பாப்பான் வீட்டு சாமி மட்டும் வடை பாயாசம் கேக்குது!
எந்த பாப்பானாவது அம்மனை ஜோடித்து வீதிதோறும் தூக்கிச் செல்கிறானா?
பாப்பான் வீட்டு சாமி கள் சாராயம் குடிக்க மறுக்குது !
இதையெல்லாம் இந்த காலத்து இளைஞர்கள் மாணவர்கள் கொஞ்சம் சிந்தித்து பாருங்க தம்பிகளா!

பெனாசிர் கொலையில் முஸ்ராப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

ராவல்பிண்டி: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள பயங்கரவாத தடுப்பு கோர்ட், அவரது சொத்துகளை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ, கடந்த 2007 டிச.27ம் தேதி ராவல்பிண்டி நகரில் தேர்தல் பிரசாரத்தின் போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. அதிபராக இருந்த முஷாரப்பிற்கு, இந்த கொலையில் தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து, அவர் துபாயில் தஞ்சமடைந்துள்ளார். வழக்கை விசாரித்த கோர்ட் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், முஷாரப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததுடன், அவரது சொத்துகளை முடக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கில், முன்னாள் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 2 பேருக்கு 17 வருட சிறை தண்டனையும், மேலும் 5 பேரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது.  தினமலர்

விண்ணில் பாய்ந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., செயற்கைக்கோள் தோல்வி

சென்னை: விண்ணில் பாய்ந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., செயற்கைக்கோள் தோல்வி அடைந்தது
இயற்கை பேரிடர் காலங்களில் தரை, வான் மற்றும் கடல் வழி பயணத்திற்கு வழிகாட்டும் 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1 எச்' என்ற அதிநவீன செயற்கைக்கோள் இன்று( ஆக.31) இரவு 7:00 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., விண்வெளி திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஏழு செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' விண்ணில் செலுத்தி உள்ளது. அதன்படி 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1 எச்' என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., சி- 39 ராக்கெட் மூலம் திட்டமிட்டபடி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இரவு 7 மணியளவில் விண்ணில் பாய்ந்தது. அதன் பின்னர் தொழில் நுட்ப கோளாறுகாரணமாக தோல்வி அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரோ தலைவர் கிரண்குமார் விளக்கம்: செயற்கை கோளுக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வெப்ப தடுப்பு சரியாக பிரியாததால் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கை கோள் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் விளக்கம் அளித்துள்ளார். தினமலர்