சனி, 6 நவம்பர், 2010

நாடு கடந்த நல்லூர் அரசு அமைக்க முயற்சி ?


- நமது நிருபர்
nallur1லண்டனில் வதியும் யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட சிலர் நாடு கடந்த நல்லூர் அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக நம்பகமாகத் தெரிய வருகிறது. ஏற்கனவே நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்று அமெரிக்காவில் அமைக்கப்பட்டு அதற்கு பல பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவாகி ஒரு பிரதமரும், மூன்று பிரதி பிரதமர்களும், இன்னும் பலர் அமைச்சர்களாகவும் அமர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது நாடு கடந்த நல்லூர் அரசு அமைப்பதற்கான முயற்சியில் இன்னொரு தமிழர் தரப்பு தயாராகி புலன்பெயர் தமிழர்களை புளகாங்கிதமடையவைத்து வருகின்றனர்.  இந்த முயற்சிக்கு ஜரோப்பாவிலும், அமெரிக்காவிலும், அவுஸ்திரேலியாவிலும் வதியும் நல்லூர் மக்களிடமிருந்து குறிப்பாகவும், இந்நாடுகளில் வதியும் தமிழீழ மக்களிடமிருந்து பொதுவாகவும் ஆதரவு பெருகி வருவதாகவும், எதிர்வரும் தை மாதத்தில் இதற்கான பூர்வாங்க தேர்தல்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. மேலும் உருத்திரகுமாரனின் நாடு கடந்த தமிழீழ அரசில் பதவி கிடைக்காத பலரும் மறைமுகமாக இத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அறியப்படுகிறது. 
நல்லூரில் தமிழர்களின் ராசதானி ஒன்று முன்னர் இருந்தது என்ற வகையில், நாடு கடந்த நல்லூர் அரசு அமைவது அவசியம் என இதன் ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான லண்டன் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார். இவரே நாடு கடந்த நல்லூர் அரசின் பிரதமராக அமர்த்தப்படுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
நாடு கடந்த நல்லூர் அரசு, உருத்திரகுமாரின் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு போட்டியாக இருக்க மாட்டாதெனவும், அவர்களுடன் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் தாங்கள் பணியாற்றப்போவதாகவும் இந்தச் சட்டத்தரணி மேலும் தெரிவித்தார். உதாரணமாக, நாடு கடந்த தமிழீழ அரசு காசு சேர்க்கும் இடங்களில் தங்கள் நாடு கடந்த நல்லூர் அரசு காசு சேர்க்கப் போக மாட்டாதெனவும், மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசிலுள்ள அமைச்சுப் பெயர்களில் தாங்கள் அமைச்சுக்களை உருவாக்கமாட்டோமெனவும், உதாரணமாக – நாடு கடந்த தமிழீழ அரசு பெண்கள் விவகார அமைச்சு என்ற பெயரில் அமைச்சு ஒன்றை உருவாக்கியிருந்தால் தாங்கள் பெண்கள் வெளிவிவகார அமைச்சு என்ற பெயரிலேயே அமைச்சு ஒன்றை உருவாக்குவோம் எனவும் அவர் விளக்கம் அளித்தார்.
இந்த முயற்சி இன்னும் பல ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கு நாடு கடந்த அரசு அமைக்கும் ஆவலைத் தூண்டும் எனவும், இதனால் பல நாடு கடந்த அரசுகள் உருவாகி இலங்கை அரசுக்கு சர்வதேச நாடுகளால் அழுத்தம் கொடுக்கப்பட்டு ஈற்றில் தமிழ் ஈழம் உருவாக இது வழிசமைக்கும் என தான் நம்புவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உலகின் மிக வயதான பெண் காலமானார்.


பாரீஸ்: உலகின் மிக மூத்த நபராக, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த  கன்னியாஸ்திரீ நேற்று முன்தினம்  மரணமடைந்தார். அவருக்கு வயது 114. கரிபியன் தீவு அருகே உள்ள செயிண்ட் பர்த்தலேமியைச்  சேர்ந்தவர் யூஜின் பிளான்சர்ட். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரியான இவர், கடந்த 1896 ம் ஆண்டு, பிப்ரவரி 16 ம் தேதி பிறந்தார். இவர், பல வருடங்களாக டச்சுத் தீவுகள் அருகே உள்ள கொராக்கோவில் வசித்தார். கடந்த 30 ஆண்டுகளாக, செயிண்ட் பார்த்தலேமியில் உள்ள மருத்துவமனையில் சேவை செய்து வந்தார். அமெரிக்காவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் மேற்கொண்ட  உலகின் மூத்த நபர் குறித்த ஆய்வில், யூஜின்  உலகின் மிக மூத்த நபர் என்று தெரியவந்தது. இது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இந்நிலையில், யூஜின் நேற்று முன்தினம் உயிரிழந்தார். முன்னதாக, உலகின் மிக மூத்த நபராக இருந்த  ஜப்பானைச் சேர்ந்த காமா சியான் (114) கடந்த மே மாதம் 2 ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து, உலகின் மிக மூத்த நபராக யூஜின் வந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து, தற்போது, அமெரிக்காவின் செயிண்ட் லூசியானாவில் வசித்துவரும் யூனிஸ் சான்பிரான் (114) உலகின் மிக மூத்த நபராகியிருக்கிறார். இவர் கடந்த 1896 ம் ஆண்டு ஜூலை 20 தேதி பிறந்தார். யூஜினைவிட சில மாதங்கள் மட்டுமே இளையவராவார்.

தாயாரைப் பார்க்க பிரபாகரனின் சகோதர சகோதரிகளுக்கு இலங்கை அரசு அனுமதி மறுப்பு


 பிரபாகரனின் சகோதர சகோதரிகளை இலங்கைக்குள் வரவிடுமாறு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திவயின சிங்கள ஊடகம் வெளியிட்ட செய்தியை மேற்கோள் காட்டி இலங்கை இணைய தளங்களில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. பிரபாகரனின் மூத்த சகோதரி வினோதினி ராஜரத்னம், இளைய சகோதரி மற்றும் சகோதரர் ஆகியோர் இலங்கைக்குள் வர அனுமதியளிக்குமாறு முன்னதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் வெளிநாட்டிலுள்ள தமது பிள்ளைகளைப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்ததால், இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். வல்வெட்டித்துறை பகுதியில் பிரபாகரன் சகாக்களுடன் இவர்கள் சந்திக்க உள்ளனர் என இலங்கை புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததை அடுத்து, அரசாங்கம் இவர்களுக்கு அனுமதி வழங்குவதை நிராகரித்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமது சகோதரரை இலங்கை இராணுவத்தினரால் தொடக்கூட முடியாது என வினோதினி தெரிவித்திருந்ததாகவும் திவயின சிங்கள ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளதாக இலங்கை இணைய தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 5 நவம்பர், 2010

கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று யாருமில்லாததால் நிறைய பேர் தீபாவளி ரேஸில்

சினிமா ரசிகர்களுக்கு ஒரு பத்து வருடங்களுக்கு முன் தீபாவளி, என்றால் உடனே அன்று வெளியாகும் திரைப்படங்கள்தான் ஞாபகம் வரும். குறைந்தது எட்டு படங்களாவது அன்றைக்கு ரிலீசாகும். ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து நான்கைந்து வருவதே பெரிது என்றாகிவிட்டதற்கு மிக முக்கியக் காரணம் இப்போதெல்லாம் ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் கிடைப்பதில்லை.
இம்முறை தீபாவளிக்குப் பெரிய நடிகர்களான கமல், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று யாருமில்லாததால் நிறைய பேர் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ள ஆவலாக இருந்தும் கடைசியில் நான்கு படங்களே வெளியாகின்றன.
உத்தமபுத்திரன்
தனுஷ், ஜெனிலியா, விவேக், பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், அம்பிகா, மயில்சாமி என்று இருபதுக்கும் மேற்பட்ட நடிகர்கள் குழுமியிருக்கும் படம். ரீமேக் இயக்குனரான ஜவஹரின் மூன்றாவது ரீமேக்.
தெலுங்கின் கமர்ஷியல் ஹிட் டைரக்டரான ஸ்ரீனி வைத்தாலா இயக்கி ராம் நடித்து வெற்றி பெற்ற ரெடி படத்தின் ரீமேக் தான் இந்த உத்தமபுத்திரன். தெலுங்கு ஜெனிலியா மட்டும் தமிழிலும் தொடர்கிறார். தெலுங்கில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் ஓரளவுக்கு ஹிட்.. ஆனால் தமிழில் விஜய் ஆண்டனியின் இசையில்  இதுவரை அப்படியேதும் தெரியவில்லை.
ஒரு ஜாயிண்ட் பேமிலி குடும்பத்திலிருந்து வரும் தனுஷ் தன் நண்பன் ஒருவனுக்குத் திருட்டுக் கல்யாணம் செய்து வைப்பதன்பொருட்டு அப்பெண்ணை கடத்துகிறார். அது ஆள் மாறி விட.. அதனால் ஏற்படும் குழப்பங்களும், கடத்தப்பட்ட பெண்ணான ஜெனிலியாவுடனான காதலும், ஜெனிலியா தனுஷ் காதலைப் பிரிக்க ஒரு புறமும், ஜெனிலியாவை அவரது நூறு கோடி சொத்துக்காகத் திருமணம் செய்யும் திட்டம் மறுபுறமுமாக போட்டி போடும் இரண்டு கும்பலைப் பற்றிய கதை.
பட்ஜெட் சுமார் 12 கோடி.
மைனா
ஒரு சின்ன படம் பெரிய ஆட்களின் கைகளில் சிக்கியதால் பெரிய படமாகிவிட்டது. சிறு வயது முதலே அன்பும் காதலுமாய் வளரும் அனகா, வித்யார்த்துக்கு இடையே நடக்கும் ஒரு சம்பவத்தால் பிரிய நேரிடுகிறது. பின்பு என்ன என்பதை பதைக்கப் பதைக்க சொல்லியிருக்கிறார்கள் என்று படத்தை வாங்கிய ஏ.ஜி.எஸ் நிறுவனத்தாரும், விநியோகிக்கும் ரெட் ஜெயிண்ட் மூவிஸாரும் சொல்கிறார்கள்.
லாடம் படத்தின் தோல்விக்குப் பிறகு பீனிக்ஸ் பறவையாய் எழ பிரபு சாலமன் முயற்சித்திருக்கும் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. டி. இமானின் இசையில் ஏற்கெனவே ஒரு பாடல் ஹிட். இன்னும் மற்ற பாடல்கள் படத்தோடு பார்க்கும் போது சரியான இம்பாக்டைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
அவுட்டோர் யூனிட்டையே பெரும்பாலும் பயன்படுத்தாமல், கிடைக்கும் வெளிச்சத்திலேயே படம்பிடித்திருக்கிறாரகள். ஒரு குட்டி ஆச்சர்யம் என்னவென்றால் இப்படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் விஜய் டிவி வாங்கியிருப்பதுதான். மிகக் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல விலைக்கு வாங்கப்பட்டிருக்கும் படம்.
பட்ஜெட் : சுமார் ஒன்றரைக் கோடி
வ - குவாட்டர் கட்டிங்
தமிழ் ரசிகர்களிடையே எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கும் படம். அதற்குக் காரணம் தமிழ் படம் ஹிட் கொடுத்த கூட்டணியான தயாநிதி அழகிரியின் க்ளவூட் நைன், சிவா, தயாரிப்பாளர் சசிகாந்தும், இப்படத்தின் ட்ரைலரும்தான். வழக்கமாய் அண்ணன் தம்பிகளிடையே பேசி வைத்துக் கொண்டு மூன்று வாரத்துக்கு ஒரு முறை ரிலீஸ் செய்வார்கள். இம்முறை இருவரும் ஒரே நேரத்தில் தங்கள் படங்களை வெளியிட்டிருப்பது ஒரு அதிசயம்தான். குவாட்டர் கட்டிங் என்கிற ஆங்கிலப் பெயர் வைத்தால் வரி விலக்கு கிடைக்காது என்பதற்காக சம்மந்தமேயில்லாமல் “வ” என்று வைத்திருப்பது வரிவிலக்கை கேலி செய்வதா? இல்லை விலக்கு கொடுத்த அரசை கேலி செய்வதா? என்று யோசிக்க வைத்திருக்கிறது.
சிவா, எஸ்.பி.பி.சரண், வேகா, என்ற கலாய்க்கும் கூட்டணியுடன், எழுதி இயக்கியிருப்பவர்கள் தம்பதி சமேதரான புஷ்கர் – காயத்ரி.
பட்ஜெட் சுமார் : 2 1/2 கோடி.
வல்லக்கோட்டை
படம் ஓடுகிறதோ இல்லையோ, மூணு மாசத்திற்கு ஒரு படம் என்று ஏ. வெங்கடேஷ் ரிலீஸ் செய்துகொண்டுதானிருக்கிறார். அந்த லிஸ்டில் இம்முறை அர்ஜுனுடன் சேர்ந்திருக்கிறார். வழக்கமான ஆக்‌ஷன் ப்ளாக் கதைதான். தீடீர் என நட்பாகிப் போன ஒருவரின் குடும்பம் பெரிய பிரச்னையில் இருக்க, நண்பருக்கு பதிலாக இவர் அக்குடும்பத்திற்குப் போய் எப்படி உதவி செய்கிறார் என்பதுதான் கதை என்று சொல்கிறார்கள்.
மகேஷ்பாபுவின் அதடுவின் பாதிப்பு இருக்கிற கதையாகத்தான் தெரிகிறது.
அர்ஜுன், ஹரிப்பிரியா, வின்செண்ட் அசோகன், சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை தினா, திரைக்கதை இயக்கம் ஏ.வெங்கடேஷ்.
பட்ஜெட் : சுமார் ஐந்து கோடி
சித்திரப்பூவே போன்ற ஒன்றிரண்டு படங்களும் இன்று வெளியாவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தன. ஆனால் தியேட்டர் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் பாடாவதி தியேட்டர்கள்தான் அகப்படும். ஊரெங்கும் எந்திரன் இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் படத்தின் செலவோடு செலவாக ஊருக்கொரு டெம்ப்ரவரி டெண்ட் கொட்டாய்கள் ஆரம்பிப்பதுதான் இனி வரும் காலத்தில் படங்கள் ஓட ஒரே வழி என்று தோன்றுகிறது.

மாணவியை விட்டு பிரியாத சிட்டுக்குருவி


 
ஊட்டி அருகேயுள்ள இந்து நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகள் கீர்த்திகா (13). இவள் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை அருகேயுள்ள கேந்திர வித்யாலயா பள்ளியிம் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

கடந்த 2 மாதத்துக்கு முன் கீர்த்திகா பள்ளிக்கு சென்றாள். செல்லும் வழியில் சிட்டுக் குருவி ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.அதனை அன்போது தனது இல்லத்துக்கு எடுத்து வந்தாள் கீர்த்திகா.

தனது உடன் பிறந்த சகோதரியாக அதனை அன்போடு கவனித்து வளர்த்து வந்தாள். அதற்கென தனிக் கூண்டு அமைத்து கண்ணை இமை காப்பது போல் பார்த்துக் கொண்டாள்.

கீர்த்திகாவின் சீரிய முயற்சியாலும், அவள் காட்டிய கருணையாலும் சிட்டுக்குருவி சீரான வளர்ச்சி பெற்றது
தற்போது கீர்த்திகாவின் தோழியாகவே மாறி விட்டது.

பணி இடங்களில் பெண்களுக்கு `செக்ஸ்' தொல்லையை தடுக்க புதிய சட்டம்

Sexual Harassment Billடெல்லி: பணிபுரியும் இடங்களில் செக்ஸ் தொல்லைகளில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்தது. அதில் செக்ஸ் தொல்லையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் `பணி இடங்களில் பெண்களுக்கு எதிரான செக்ஸ் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் சட்டம்-2010' என்ற சட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பணி இடங்களில் `செக்ஸ் தொல்லை' என்பதற்கு உச்ச நீதிமன்றம் சில வரையறைகளை வகுத்துள்ளது. அதன்படி உடலை தொடுதல், செக்ஸ் காரணத்துக்காக மிரட்டுதல் அல்லது வேண்டுகோள் விடுத்தல், உடல் மற்றும் வார்த்தை ரீதியாக விரும்பத்தகாத செயல்கள், வார்த்தைகளால் அல்லாத செக்ஸ் தொடர்பு போன்றவை செக்ஸ் தொல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இது தவிர, பெண்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு அளிப்பதாக உறுதிமொழி அளித்தோ அல்லது அச்சுறுத்தியோ செக்ஸ் தொல்லை கொடுப்பது மற்றும் செக்ஸ் தேவைக்காக பணியிடத்தில் விரும்பத்தகாத சூழ்நிலையை உருவாக்குவது போன்றவையும் செக்ஸ் தொல்லைகளாக கருதப்படும்.

அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் அமைப்புசார நிறுவனங்களில் இத்தகைய தொல்லைகளை எதிர் கொள்ளும் பெண்களுக்கு இந்த சட்டத்தின் மூலமாக பாதுகாப்பு கிடைக்கும்.

பணிபுரியும் பெண்கள் மட்டுமல்லாமல் ஒரு நிறுவனத்துக்கு வாடிக்கையாளராகவோ, தொழில்ரீதியாகவோ, தினக் கூலி தொழிலாளராகவோ செல்லும் பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை தரப்பட்டாலும் இந்த சட்டப்படி தண்டனை தர முடியும்.

மேலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மாணவிகள், மருத்துவமனைகளில் பெண் நோயாளிகள் ஆகியோரும் இந்த சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பெற முடியும்.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிப்பதற்காக, நிறுவனங்களிலேயே புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என இந்த சட்டம் வலியுறுத்துகிறது.

10 பேருக்கு மேல் வேலை செய்யும் அனைத்து நிறுவனங்களிலுமே இத்தகைய கமிட்டி கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். இது தவிர மாவட்ட கலெக்டர்களால் `புகார் கமிட்டியும்' அமைக்கப்படும். அதிலும் பெண்கள் புகார் தரலாம்.

பாதிக்கப்பட்ட பெண் அளிக்கும் புகாரை முழுமையாக விசாரித்து தண்டனை அளிப்பதற்காக இந்த கமிட்டிகளுக்கு 90 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். இந்த சட்ட விதிகளை முறையாக செயல்படுத்தாத நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்.

அதே நேரத்தில், தவறான புகார்கள் அளிக்கும் பெண்களை தண்டிக்கவும் இந்தச் சட்டத்தில் இடம் உள்ளது. பாதிப்புக்குள்ளான பெண் தனது புகாரை உறுதிப்படுத்தவோ அல்லது தகுந்த ஆதாரத்தை சமர்ப்பிக்கவோ தவறினால் அவருக்கு தண்டனை கிடைக்கும்.

ஆனால், இந்தச் சட்டத்தின் கீழ் வீடுகளி்ல் வேலை பார்க்கும் பெண்கள் நிவாரணம் பெற முடியாது. வீட்டு வேலை செய்யும் பெண்களை இந்தச் சட்டத்தின் கீ்ழ் மத்திய அரசு சேர்க்கவில்லை.

வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 6 மாதத்தினுள் மீள்குடியேற்றம்

வட பகுதியில் இருந்த புலிகளினால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் குடும்பங்களை 6 மாதகாலத்தி னுள் மீள் குடியேற்றும் வகையில் முஸ்லிம்களுக்கான செயலகம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள தாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கெஹலிய, நவம்பர் முதலாம் திகதி முதல் 6 மாத காலத்திற்கு இந்த செயலகம் மன்னார் முசலி பிரதேசத்தில் இயங்கும். இதனூடாக 1990 ஆம் ஆண்டு புலிகளினால் வெளியேற்றப்பட்ட புத்தளம் உட்பட பல்வேறு பகுதிகளில் வாழும் வடபகுதி முஸ்லிம்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும். 30 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 90 ஆயிரம் பேர் 48 மணி நேரத்தில் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அமைதி நிலை உருவாக்கப்பட்டுள்ள நிலையில் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களை இடமாற்றும் அதிகாரம் கல்விப் பணிப்பாளர்களுக்கு இல்லை!

தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களை மற்றும் மாகாணப் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் அதிகாரம் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சிறிசேன தெரிவித்தார்.கல்வி அமைச்சில் நேற்று இதுதொடர்பாக வெளியாகியுள்ள சுற்றறிக்கைக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சின் செயலாளர் மேற்படி தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,’தேசிய பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்களை மாகாணப் பாடசாலைகளுக்கும், மாகாண பாடசாலை ஆசிரியர்களை தேசிய பாடசாலைகளுக்கும் மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள் இடமாற்றம் செய்துள்ளனர். இந்தவிடயம் கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வாறான இடமாற்றங்கள் இடம்பெற்றிருப்பின் அவற்றை இரத்துச் செய்ய வேண்டும். டிசம்பர் 31 ஆம் திகதி வரை ஆசிரியர் இடமாற்றங்கள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.அதேவேளை நாட்டின் 326 தேசிய பாடசாலைகளின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ய கல்வி அமைச்சின் 20 கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

அறியாமை இருளகற்றி மகிழ்ச்சிக்கு தீபாவளித் திருநாள் வழிவகுக்கட்டும்: ஜனாதிபதி

தீபாவளித் திருநாள் கொண்டுவரும் சமாதானம் மற்றும் நல்லெண்ண ஒளி எமது மக்களின் வாழ்வில் அறியாமை இருளகற்றி மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் வழிவகுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தீபத்திருநாளாம் தீபாவளித் திருநாளை முன்னிட்டு இலங்கை வாழ் அனைத்து இந்து மக்களுக்கும் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தீபாவளிப் பண்டிகை தீயவற்றை நீக்கி நன்மையையும் அறியாமையை நீக்கி அறிவுடமையையும் இருளை நீக்கி ஒளியையும் வெற்றி கொள்வதை குறித்து நிற்கின்றது.
உலகெங்கிலுமுள்ள இந்துக்களால் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகை இந்து சமயத்தின் உயர்ந்த ஆன்மீகப் பெறுமானங்களுக்கேற்ப ஒரு சிறந்த வாழ்க்கைக்காக மனிதர்கள் மேற்கொண்ட ஒரு உறுதியான போராட்டத்தின் முன்னேற்றத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது என்ற வகையில் மக்களின் ஆன்மீக சுபீட்சத்திற்கான ஒரு கொண்டாட்டமே தீபாவளிப் பண்டிகையாகும்.
நாட்டில் சமாதானம் மீளக் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் இச்சூழ்நிலையில் இந்து மக்கள் இத்திருநாளை சுதந்திரமாகவும் இனம், மதம் மற்றும் ஏனைய எல்லா வேறுபாடுகளையும் மறந்து சமூகங்கள் மத்தியில் அன்பையும் பரஸ்பர புரிந்துணர்வையும் வளர்க்கும் ஐக்கிய உணர்வுடனும் கொண்டாடுவதற்கான சூழல் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது.
எமது மக்கள் பயங்கரவாதத்தின் காரணமாக எதிர்நோக்கி வந்த எல்லா கஷ்டங்களும் மறைந்து அபிவிருத்திக்கும் சுபீட்சத்திற்குமான புதியதோர் யுகத்தின் ஆரம்பத்தில் எமது நாடு தற்போது இருக்கின்றது. இந்து மக்கள் தற்போது உலகெங்கிலுமுள்ள தங்களது சகோதர இந்து மக்களுடன் சேர்ந்து இத்தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கும் அந்த மகிழ்ச்சியுணர்வை ஏனைய சமூகங்களுடன் பகிர்ந்து கொண்டு நாட்டில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கேற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இத் தீபாவளித் திருநாள் கொண்டு வரும் சமாதான மற்றும் நல்லெண்ண ஒளி எமது மக்கள் வாழ்வில் அறியாமை இருளகற்றி மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் வழிவகுக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன். இலங்கை வாழ் இந்துக்களுக்கு எனது மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள்.

கருணா, பிள்ளையான், கே.பி. மூலம் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கு அரசாங்கம் குறி!

கருணா, பிள்ளையான் மற்றும் கே.பி. ஆகியோரை முறையாக நிர்வகித்து அரசாங்கம் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலுக்கு குறிவைத்துள்ளது. குறிப்பாக, கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் புலிகளின் சர்வதேச செயற்பாடுகள் குறித்தும் சொத்து விபரங்கள் தொடர்பிலும் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு அரசாங்கம் கூடுதலாக சுதந்திரம் கொடுத்துள்ளது. அல்லது விசாரணைகளை நடத்த வில்லை என எவரும் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது எனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று வியாழக்கிழமை தேசிய நூலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் ஊடகச் செயலாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறுகையில்,
கடந்த யுத்த காலப்பகுதியில் பங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு அழிவுகளை ஏற்படுத்திய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திகாந்தன் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கும் தற்போது பாதுகாப்பு பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள குமரன் பத்மநாதனுக்கும் எல்லாவிதமான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் பதவிகளை கொடுத்து கௌரவித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக உண்மை நிலையை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். கருணாவும் பிள்ளையானும் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து பிரபாகரனையும் அவரது ஆயுதப்போராட்டத்தையும் அழிக்க உதவி செய்தார்கள். அதேபோன்று இலங்கை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட புலிகளால் சர்வதேச செயற்பாட்டாளர் குமரன் பத்மநாதன் தற்போது சர்வதேசத்தில் மறைந்துக் கொண்டுள்ள புலிகளை வேட்டையாடும் நடவடிக்கைக்கு அரசாங்கத்திற்கு உதவுகின்றார்.
இவ்வாறு அரசாங்கம் நாட்டை எதிர்கால அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்து திட்டமிட்டமுறையில் முன்னாள் புலி இயக்க உறுப்பினர்களை பயன்படுத்தி வருகின்றது. இன்று 11 ஆயிரம் புலி சந்தேக நபர்களுக்கு அரசாங்கம் புனர்வாழ்வு அளித்து வருகின்றது.
1987, 88 களில் ஜே.வி.பியின் போராட்டங்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதைப்போல் இவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்படும் என்றார்.

இலங்கையில் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கு சொந்தமானதல்ல

இலங்கையில் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கு சொந்தமானதல்ல. இதுவே அரசாங்கத்தின் கொள்கையாகும். எனவே, இன விகிதாசார பிரதேசங்கள் என்பது நிராகரிக்கப் படுகின்றது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. காணிகள் இருக்குமிடத்திலேயே மக்களைக் குடியேற்றமுடியும். இதன்போது சிங்களம், தமிழ், முஸ்லிம் என வேறுபாடு பார்க்கமுடியாது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோதே தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் மக்கள் இன விகிதாசாரத்தை மாற்றக் கூடிய குடியேற்றங்களை மேற்கொள்ள முயற்சிப்பதாக கொழும்பு மாவட்ட கத்ததோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நல்லிணக்க ஆணைக்குழுவில் வழங்கிய சாட்சியம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறுகையில்,
நல்லிணக்க ஆணைக்குழுவும் பேராயர் சாட்சியம் அளித்திருப்பதை நாம் வரவேற்கிறோம்.அவரை மதிக்கிறோம்.ஆனால் ஒரு பிரதேசத்தில் வாழும் மக்கள் தொகையில் மாற்றத்தை மேற்கொள்ள முயற்சி நடக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இலங்கையில் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்திற்கு சொந்தமான பூர்வீகப் பிரதேசம் அல்ல என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.
சிங்களவர்கட்கும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவொரு பிரதேசத்திலும் வாழும் உரிமையுண்டு. தனிப் பிரதேசங்கள் என்ற கோட்பாடுகளின் காரணமாகவே நாட்டில் பேரழிவுகள் ஏற்பட காரணமாகின. இங்கு வாழும் 20 மில்லியன் மக்களும் எங்கும் வாழலாம். அதற்கு தடை விதிக்க முடியாது
கொத்மலை நீர் மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட போது மலையக மக்களின் இனவிகிதாசாரம் குறையும் என தர்க்கங்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் நாட்டின் அபிவிருத்திக்கு பிரதேசங்கள் தேவையென்னும் போது இனவிகிதாசாரம் பார்க்க முடியாது.அக்கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாட்டில் எப்பிரதேசத்தில் வெற்றுக்காணிகள் உள்ளனவோ.அங்கு மக்கள் குடியேற்றப்படுவார்கள்.அதனையே டி.எஸ்.சேனநாயக்கவும் மேற்கொண்டார்.இதன்போது சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லிம்கள் என இனபாகுபாடு பார்க்க முடியாது.இந்த நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் அனைத்து இனங்களுக்கும் சொந்தமாகும்.
நாட்டில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது.ஆனால் அந்த பயங்கரத்தின் தேவைகளை நிறைவேற்றும் சூழ்ச்சிகரமான சில முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதை அரசாங்கம் நன்கறியும் இலங்கையில் எந்தவொரு பிரதேசமும் தனியொரு இனத்துக்க சொந்தமான பூர்வீக பிரதேசம் அல்ல என்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.

ஆஸ்கார ரவிச்சந்திரன்! முகம் காட்டாத முதலாளி

முகம் காட்டாத முதலாளி

அகர முதல எழுத்தெல்லாம் ஆஸ்கார் ரவி முதற்றே உலகு – கோடம்பாக்கத்தில் ஜீவிக்கும் அநேக உதவி இயக்குனர்களின் திருக்’குரல்’தான் இது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களை குரல் விட்டு எண்ண நினைத்தால் அகர வரிசைப்படி மட்டுமல்ல, சிகர வரிசைப்படியும் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் பெயர்தான் முதலில் வரும். ஏன், ஏவிஎம் இல்லையா? அவர் இல்லையா இவர் இல்லையா என்று அடுக்குவோருக்கு ஒரே பதில்தான். ரவிச்சந்திரன் ஓடுகிற குதிரையை மட்டுமே நம்பினவர் இல்லை. பரியை நரியாக்குவார். நரியைப் பரியாக்குவார். அப்படி ஒரு அசாத்திய ராஜதந்திரம் அவருக்கு.
வேங்கடவனின் பிரசாதமான ‘லட்டு’ என்பது இவரது அலுவலகத்தின் பெயர். இறுக்கிப் பிடிச்சா லட்டு. உதறிப்போட்டா பூந்தி என்ற லாஜிக்கை ஒரு ‘குக்’கை விட நன்கு அறிந்தவர் என்பதால் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் முதலாளி என்ற சகல திசைகளிலும் பயணம் போய் கொண்டிருக்கிறார். அதுவும் வெற்றிகரமாக!
“ஆஸ்கார்ல கதை சொல்லியிருக்கேன். பண்ணலாம்னு சொல்லிட்டார்” இந்த வார்த்தையை பல உதவி இயக்குனர்களிடம் கேட்டு அதிர்ந்திருக்கிறேன். இதிலென்ன அதிர்ச்சி?
அவர்களிடம், “எப்ப சொன்னீங்க?” என்று கேட்டுப்பாருங்களேன். “இப்பதான். நாலு வருஷம் ஆச்சு” என்பார்கள் கண்களில் ‘பல்ப்’ எரிய! இந்த நாலு வருடத்தில் ஒரு சந்திப்பில் கூட அவர்களது நம்பிக்கையின் ‘டங்ஸ்ட்டன்’ இழையை அறுத்திருக்கமாட்டார் ரவி.
மூன்று நான்கு கோடிகளில் படம் எடுப்பது பிரமாண்டம் என்று பேசிக் கொண்டிருந்த காலத்தில், முப்பது, நாற்பது கோடியை அசால்ட்டாக எடுத்து வைப்பார் ஒரு படத்திற்கு. அதில் பாதி விளம்பரத்திற்கு மட்டும் போய்விடும். இன்றைய மெகா விளம்பர  ‘சன்’னுக்கெல்லாம் டாடியே இந்த ஆஸ்கர் ரவிதான்!
‘வானத்தைப் போல’ என்கிற இமாலய வெற்றிப்படத்துடன் தொடங்கியது ஆஸ்கர் ரவியின் தயாரிப்பாளர் வாழ்க்கை. இவரது தயாரிப்பில் உருவான ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படம் திரைக்கு வரவிருந்த நேரம். கவர்னர் மாளிகையில் முதல்வராகப் பதவியேற்கிறார் ஜெயலலிதா. இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது ஜெயா டிவியில். ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ரோஜாக் கூட்டம் விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது. கவர்னர் ஜெ.வை அழைத்தபின், அவர்  இருக்கையிலிருந்து எழுந்து வந்து ‘போடியம்’ முன் நிற்பாரல்லவா? அந்தச் சில நிமிடங்கள் எத்தனை முக்கியமானது? மொத்தத் தமிழகமும் உற்று நோக்குகிற நேரமல்லவா அது! நாற்காலிக்கும் போடியத்திற்கும் நடுவில் அம்மா நடந்த அந்தத் துளி நேரத்தில் நம்ம ரோஜாக்கூட்டம் விளம்பரம் வரணும் என்றார் ரவி.
ரோஜாக்கூட்டம்
அம்மா கவனித்தால் என்னாகும் என்பது ஜெயா டிவிக்காரர்களின் கவலை. கவனித்துக் கேட்டாலும், டேரிஃப் ரேட்டைச் சொல்கிற மாதிரி கவுரவமான தொகை இருந்தால் ஓ.கே என்றது அவர்கள் தரப்பு. அப்புறம் என்ன? ரவியின் ஆசைதான் நிறைவேறியது. இதற்காக அவர் கொடுத்த லட்சங்களை வைத்து ஒரு மினி பட்ஜெட் படத்தைத் தயாரித்திருக்கலாம். அதுதான் ரவிச்சந்திரன்!
ஆமாம்… ரவிச்சந்திரன் எப்படியிருப்பார்? யாராவது பார்த்திருக்கிறீர்களா? நேரில் போனால் மட்டுமே அது சாத்தியம். புகைப்படமோ, வரை(ந்த) படமோ எதுவாகவும் இருக்கட்டும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு, பார்ட் ‘போஸ்’ கூட தந்ததில்லை அவர். இதில் அவருக்குப் பல வசதிகள் இருந்தன.
தன்னிடம் நடிக்க வாய்ப்புக் கேட்டு வந்த ஓர் இளைஞருடன் பக்கத்திலிருக்கிற ஓட்டலுக்கு நாலைந்து நாட்கள் போய் வந்தார் ரவிச்சந்திரன். படகு காரில் போய் இறங்குவார்கள் இருவரும். லேசான டிபனுடன் சினிமாவையும் சேர்த்துக் கொறித்துவிட்டுத் திரும்புவார்கள். ஒருநாள் ரவிச்சந்திரன் போகாமல் நடிகர் மட்டும் போயிருந்தார் அங்கே. சார்… உங்க டிரைவர் வர்லியா? என்றாராம் சர்வர்! இதைக் கேள்விப்பட்டாலும் கவலைப்படமாட்டார் ரவிச்சந்திரன். ஏனென்றால் அவரது வெற்றி அதற்குள்தான் அடங்கியிருக்கிறது.
பட ரிலீஸ் தினத்தில், முன் வரிசை டிக்கெட்டில் கூட அவரைப் பார்க்கலாம். சி கிளாஸ் ரசிகனின் ஒவ்வொரு கமென்ட்டையும் காது குளிரக் கேட்பார். இப்படிப் பல தியேட்டர்களில் படம் பார்த்த அனுபவம்தான் எந்தெந்த இடங்களில் ரசிகன் பிரத்தியேக இன்டர்வெல் விடுவான் என்பதைக் கூட யூகிக்க வைக்கிறது அவரை. கோடம்பாக்கத்தில் எந்த முக்கியஸ்தர் படமெடுத்து முடித்தாலும் ‘ரவி சார்’ ஒருமுறை பார்த்துவிட்டால் நல்லது என்று நினைக்காமல் இருக்க மாட்டார்கள். ப்ரீ வ்யூ பார்த்துவிட்டு அவர் சொல்லும் ஒருவரிக் கருத்துக்கு ராணுவ மரியாதை தருவது கோலிவுட் கலாசாரம். ஒரே காரணம், அவர் சொன்னதுக்கு மாற்றாக ரிசல்ட் வந்ததில்லை இதுவரை என்பதுதான்!
அசோக் நகரைச் சுற்றியுள்ள ஏரியாவின் ஆட்டோ டிரைவர்களுக்கு ஓர் அனுபவம் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும். தெரு முனையில் நின்று கொண்டிருப்பார் ரவிச்சந்திரன். ஏம்ப்பா ஆட்டோ வருமா? எங்க சார் போவணும்? என்ற டயலாக்குகளை அடுத்து இருவரும் போய் இறங்குகிற இடம் ஏதாவது ஒரு பிரிவியூ தியேட்டராக இருக்கும். தன்னுடன் வந்த ஆட்டோ டிரைவரையும் தியேட்டருக்குள் அழைத்துப் போவார். கையோடு கொண்டு போகிற ரீல்களைக் கொடுத்து அவர் தயாரித்து வரும் படத்தின் பாடல்களைப் போடச் சொல்வார். இது அவர் பார்ப்பதற்காக அல்ல. ஆட்டோ டிரைவர் பார்ப்பதற்காக!
எனக்காக சொல்லக் கூடாது. உன் அபிப்பிராயம் என்ன? நிஜத்தை சொன்னால் மீட்டர் சார்ஜ் ப்ளஸ் ஆயிரம்! யாருக்கு வலிக்கும்?
“இன்னா சார். ஈரோ மூஞ்சே சர்யா தெர்ல…” என்று டிரைவர் சொல்லிவிட்டால் போதும். அந்தப் பாடல் எத்தனை லட்சம் செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும் ரீ ஷூட் போகும். ஹீரோவுக்கு குளோஸ் அப் வச்சு ஒரு முறை எடுங்கப்பா என்பார் இயக்குனரிடம். சில நேரங்களில் இந்த ஆட்டோ ரேஞ்ச் இன்னும் குறைந்து காய்கறி வியாபாரி, கடலை மிட்டாய் வியாபாரி என்று இறங்கும்.
அவர் பாடல்களைத் தேர்ந்தெடுப்பது இன்னும் வேடிக்கை. தனது பட பாடல்களை ஒரு சிடியில் பதிந்து கொள்வார். இதைக் கேட்பதற்கென்றே அவரது அறையில் ஒரு பாடாவதி டேப் ரெக்கார்டர் இருக்கும். அதில் “குறையன்றுமில்லை… மறை மூர்த்தி கண்ணா” பாடலைப் போட்டாலும், “குறை தவிர வேறில்லை கண்ணா” என்றுதான் பாடும். அப்படியொரு பழ பழஸ்.
எல்லார் வீட்டிலேயும் காஸ்ட்லி செட் இருக்காதுல்ல சார். இந்த மாதிரி டேப்ல போட்டு கேக்கும்போதும்கூட அந்தப் பாட்டு புடிச்சிருக்கணும் சார், அதுதான் ஹிட் ஆவும் என்பார்.
அமாவசை, கார்த்திகை, பவுர்ணமி, பஞ்சமி, ஓரை, ராகு, குளிகை, எமகண்டம், சதுர்த்தி, கரிநாள்னு காசு பணத்தை மதிக்கிற மாதிரி பஞ்சாங்கத்தையும் மதிப்பார். இத்தனை சங்கதிகளும் இடம் கொடுக்கிற நேரத்தில்தான் அன்ன ஆகாரம், ஆழமான தூக்கம் எல்லாம்.
“ஆபிஸ் பாய் இருந்தா தண்ணி கொடுக்க சொல்லுங்களேன்” என்றால், “சாருக்கு சாப்பாடு வாங்க போயிருக்கான்” என்பார்கள் அலுவலக ஊழியர்கள். போன பையன் கேரியரோடு திரும்புவான் என்று எதிர்பார்ப்பவர்கள் பேஸ்த் அடித்துப் போவார்கள். நாலு கேரட், கொஞ்சம் முட்டைகோஸ், கால் கிலோ தக்காளியோடு வருவான் பையன். சாருக்கு அதுதான் மதிய உணவு. மாலை உணவு எல்லாம்!
தசாவதாரம் படம் எத்தனையோ கோடியில் எடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் இவர்தான் என்பது ஊர் உலகமே அறிந்த விஷயம். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் ஆசியாவின் பெரிய சம்பள நடிகர் ஜாக்கி சான். அப்புறம் மனிஷா கொய்ராலா, தமிழக முதல்வர் கலைஞர் இன்னும் இன்னும்… ஆனால் முக்கியமாக மேடையில் இருக்க வேண்டிய ரவிச்சந்திரன், அங்கு வரவேயில்லை. ஏன்? அதான் சொன்னோமே, பஞ்சமி சதுர்த்தி பிரதர்ஸ்… அவர்கள்தான் காரணம்.
முகம் வெளியே தெரியாத வரைக்கும்தான் உங்களுக்கு யோகம் என்று எந்த ஜோசியனோ சொல்லி வைக்க, கோடம்பாக்கத்தில் எத்தனையோ பேருக்கு முகவரி தருகிற மனுஷர், தன் முகம் மறைத்துக் கிடக்கிறார்.
அதனாலென்ன… காற்றுக்கு முகமா இருக்கிறது?

சம்பளம் குறைத்து வாய்ப்பு தேடும் ஹீரோ!

Actor Vinay reduce his reduce
"உன்னாலே உன்னாலே", "ஜெயம் கொண்டான்", "மோதி விளையாடு" உள்ளிட்ட படங்களில் நடித்தும் ஹீரோ வினய்க்கு பெரிய அளவில் புதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் காரணம் வினய் கேட்டு வந்த அதிகப் படியான சம்பளம் தான். இதன் விளைவு தான் தனக்கு புதிய பட வாய்ப்புகள் கிட்டவில்லை...என்பதை உணர்ந்த வினய், அதிரடியாக சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது, "சாக்லெட்" பட அதிபரும், "மதுர" பட இயக்குநருமான மாதேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சம்பளத்தை குறைத்துள்ளதால் தொடர்ந்து புதிய பட வாய்‌ப்புகள் வாயிற் கதவை தட்டும் என நம்புகிறார் வினய் ! இப்பொழுதாவது புத்தி வந்ததே

அரசு பள்ளியில் கிறிஸ்தவ மத பிரசாரம் முன்சிறையில் பா.ஜ., மறியல்

புதுக்கடை: முன்சிறை அரசு மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்தவ மத போதனைகள் அடங்கிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு பா.ஜ., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
முன்சிறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ராஜம்மேரி. இவர் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியரிடம் கிறிஸ்தவ போதனைகள் அடங்கிய "ஆயிரம் ஸ்தோத்திர பலிகள்', "குழந்தைகளை நல்வழிப்படுத்தும் திருமறை' ஆகிய இரண்டு புத்தகங்களை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அரசு பள்ளியில் மாணவர்களிடம் கிறிஸ்தவ போதனை புத்தகங்களை வழங்கி, மாணவர்களை மதம் மாற்ற தூண்டும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கேட்டு பா.ஜ., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. முன்சிறை அரசு பள்ளி முன் நடந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி ஒன்றிய தலைவர் கமலதாஸ் தலைமை வகித்தார்.

பா.ஜ., மாவட்ட தலைவர் தர்மராஜ், செயலாளர் சந்திரகுமார், முன்சிறை ஒன்றிய தலைவர் சவுந்தர்ராஜன், ஒன்றிய பொதுச்செயலாளர் வக்கீல் கோபாலகிருஷ்ணன், பாலத்தடி விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் குமார், பொதுச்செயலாளர் ஐயப்பதாஸ், மாவட்ட இந்து முன்னணி தலைவர் குழிச்சல் செல்லன், விளாத்துறை நகர தலைவர் மோகன், பைங்குளம் நகர தலைவர் சந்தோஷ்குமார், நகர இளைஞரணி தலைவர் பிஜூ, ஏழுதேசம் நகர தலைவர் ராஜகுமார், கொல்லங்கோடு பஞ்., துணைத்தலைவர் பத்மகுமார், முன்சிறை பஞ்., யூனியன் கவுன்சிலர் செல்வராஜ், ராம்குமார், சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இரண்டு பஸ்களை சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரி அருள்முருகன் வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முதன்மை கல்வி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்த வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
சம்பவ இடம் வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சசிகலா, குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரி அருள்முருகன், குளச்சல் டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், புதுக்கடை இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் அகியோரிடம் மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர் சந்திரகுமார், முன்சிறை ஒன்றிய தலைவர் சவுந்தர்ராஜன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில், ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை இடமாற்றம் செய்யப்படுவார் எனவும், ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதற்கு சந்திரகுமார் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் முன்சிறையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.அரசு கல்வி நிறுவனங்களில் மத பிரசாரத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுக்கடை நகர காங்., தலைவர் துரை தெரிவித்தார்.

மலர் - சென்னை,இந்தியா
2010-11-05 06:40:41 IST
துபாய் ராஜ், கிறிஸ்டியன் தான் சதாம் க்கு தூக்கு போட்டது. நீ துபாயில் துண்டு பிரசுரம் கொடுத்து பார், உன் கை துண்டு அயிடும்....
PG - USA,இந்தியா
2010-11-05 06:31:02 IST
This is an age old problem. Even in prison this people do it. These are all fundamentalists....
2010-11-05 04:11:00 IST
கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ மதம் மட்டுமே உயர்ந்தது என்ற கண்முடித்தனமான நம்பிகையில் இது போன்ற தவறுகளை செய்கிறார்கள். அரசு பள்ளியில் கிறிஸ்தவ மதம் போதிக்க நினைப்பது தவறு. பாரதிய ஜனதா கட்சி குமரி மாவட்டதில் வினயகர் சதுர்த்தியில் கலவம் செய்த கயவர்களை கண்டித்து போராட்டம் நடத்துமா? மதவெறி இல்லாத மனிதன் யார்? பிஜேபி ஏ நீ என்று மக்களை மக்களாக வாழா விடுவாய்? திருந்துங்கடா இல்லை என்றால் திருத்தபடுவீர்கள்......
alex - usa,இந்தியா
2010-11-05 03:03:18 IST
குமரி பாலா, நீ குமரிக்கு பலன் இல்லே. பிறகு என்னடா கன்யா குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதத்தின் பலன் கிடைகாத ஒருத்தன் உண்டா. பொன்.ராதாகிருஷ்ணன் ஜெயிப்பதும் தோற்பதும் கூட ..பாரதிய ஜனதா கட்சி வீணாக மத கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றது....கிறிஸ்தவ மதம் ஒருபோதும் தீ‌யவையை போதித்தது கிடையாது. நல் ஒழுக்க புத்தகம் வாசித்தால் மாணவர்கள் கெட்டு போவதிலை.......
தமிழ் - chennai,இந்தியா
2010-11-05 02:29:40 IST
குண்டு போடுவதற்கும், கர்ப்பிணிகளை குஜராத்தில் கொல்வதற்கும் என்ன பதில்?...
jalsa - nagercoil,இந்தியா
2010-11-05 02:14:18 IST
நானும் முன்சிறை தான். இந்த பிஜேபி காரனுக்கு வேற வேலை இல்லை. நானும் அங்கே வந்திருந்தேன். நான் ஒரு முஸ்லிம்மையும் பார்க்கவில்லை, ஒரு தி மு க காரர்களையும் பார்க்கவில்லை. மொத்தமே பத்து பேர் கூட வரல. ஏன்டா இப்படி பொய் சொல்லுறீங்க. இப்படி பொய் சொல்லி தான் இந்தியாவையே இல்லாம பண்ணிடீங்க. ஏன்டா mohandasu, யாருப்பா அப்படி 50000 குடுக்குறாங்க. ஏன்டா இப்படி சவடால் விட்டு விட்டு தானேடா உங்க கட்சி இல்லாம போச்சு....
ponnuswamy - DXB,இந்தியா
2010-11-05 01:55:15 IST
திருவாளர் ராஜ் அவர்களே, பைபிளில் உள்ள சாலோமனின் உன்னத பாட்டுக்கள் என்ற அதிகாரத்தை படித்தால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும் என் நினைக்கிறேன். பகவத் கீதாவில் சொல்லாத ஒழுக்க நெறிகளா ? ஹிந்து மதத்தில் சொல்லாத ஒழுக்க்க நெறிகள் வேறு எந்த மதத்திலும் இல்லை என்றே சொல்லலாம். ஐரோப்பா நாடுகளில் எல்லாம் கிறிஸ்தவ் மதத்தை தான் பின்பற்றுகிறார்கள். அங்கே உள்ள வாழ்வியல் முறை எப்படி இருக்கு? இதுவா கிறிஸ்தவம் சொல்லி கொடுத்தது. சொல்லுங்க. அந்த முறைகளை எல்லாம் இந்தியாவிலும் பரவி விடும் ராஜ் அவர்களே. கிணறு வாழக்கையினை விட்டு பரந்த வாழ்வு வாழ வாருங்கள். i...
பெரியார் - சென்னை,இந்தியா
2010-11-05 01:23:39 IST
சொன்னா கேக்கவே மாட்டேங்கிறாங்க. மதம் என்பது வாழ்க்கை என்ற சாப்பாட்டுக்கு ஊறுகா மாதிரி. ஊருகாயையே சாப்பாடா சாப்பிட்டீங்கன்னா ஒழிஞ்சு போய்டுவீங்க....
mohanadhas - male,மாலத்தீவு
2010-11-04 12:58:11 IST
mr . raj do you know how the christianity is spread to the poor and uneducated people through out the world . read the histry of the christinity.[ by killing , money power muscle power, women etc] in kk distric if convert one hindu to christian i will get 50000 rupees or a job. in the name jesus they are the people doing all the nonsense things....
krishnapriyan - nagercoil,இந்தியா
2010-11-04 11:23:59 IST
ஹிந்துகளின் உரிமைக்காக பாடுபடும் பிஜேபி கு எனது மனமார வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம்...
குமரி பாலன் - முன்சிறை,இந்தியா
2010-11-04 11:15:26 IST
டேயி ராஜ் நான் முன்சிறை யை சார்ந்தவன் , எங்கள் இடத்தில நடப்பது உனக்கு துபாய் இல் இருந்தா பார்க்க முடியாது, நடந்த போராட்டத்தில் தி மு க நிர்வாகிகளும் இருந்தனர் , முசுலீம் சகோதரர்களும் வந்துதிருந்தனர், ஆதரங்களுடன் தான் போராட்டம் நடை பட்டது ....
Deivanayagam - Doha,கத்தார்
2010-11-04 09:30:24 IST
ராஜ், பாட புஸ்தகத்தில் இல்லாத ஒழுக்கம் துண்டு பிரச்சாரத்திலா? ஆசிரியர், பள்ளியில் ஆசிரியர் வேலை பார்க்க வேண்டும், மத போதிக்கவா வேலை?????...
Raj - Dubai,இந்தியா
2010-11-04 01:47:11 IST
பாரதிய ஜனதா கட்சி வீணாக மத கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றது....கிறிஸ்தவ மதம் ஒருபோதும் தீ‌யவையை போதித்தது கிடையாது. நல் ஒழுக புத்தகம் வாசித்தால் மாணவர்கள் கெட்டு போவதிலை....அரசியல் லாபத்துக்காக வீண் நாடகம் ஆடுகின்றனர்

கமலின் மருதநாயகத்தை தயாரிக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்?

Maruthanayagam Kamalகமல் ஹாஸனின் மருதநாயகம் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பார் என்று செய்திகள் வெளியாகத் துவங்கியுள்ளன.

கமல் நடித்த தசாவதாரம் படத்தைத் தயாரித்தவர் ரவிச்சந்திரன். இந்தப் படத்தின் மூலம் அவர் தனது பேனர் பெயரான Oscar என்பதை Aaskar என்று மாற்றிக் கொள்ள வேண்டி வந்தது. Oscar Academy-ன் எதிர்ப்பு காரணமாக இந்த மாற்றத்தை அவர் செய்யவேண்டியிருந்தது.

அதன் பிறகு படத்தின் பிஆர்ஓ உள்ளிட்ட பல விவகாரங்களில் கமலுக்கும் ரவிச்சந்திரனுக்கும் ஏழாம் பொருத்தமாகிவிட, கமல் கடைசி நேரத்தில் தசாவதாரம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்விலும் பங்கேற்காமல் தவிர்த்தார்.

இப்போது, ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் கமலுக்கும் மீண்டும நட்பு துளிர்த்துள்ளது. இதன் விளைவு அறிவிப்போடு நின்று போன கமல்ஹாஸனின், மர்மயோகி, மருதநாயகம் மற்றும் தலைவன் இருக்கின்றான் ஆகிய மூன்று படங்களில் ஏதேனும் ஒன்றைத் தயாரிக்கப் போவதாகக் கூறி வருகிறாராம்.

குறிப்பாக மருதநாயகத்தை ரூ 200 கோடி பட்ஜெட்டில் தயாரிப்பது பற்றி ஆலோசனை செய்து வருகிறாராம்.

இதனை ஆஸ்கர் ரவிச்சந்திரனே தன்னைச் சந்திக்கும் பத்திரிகையாளர்களிடம் கூறிவருகிறாராம்.

பாரதியின் கனவுகளுக்கு புத்துயிர் : நனவாகிறது நதிகள் இணைப்பு

சிவகங்கை : நதிகள் இணைப்பு என்பது இன்றைய அரசியல்வாதிகளின் வாய்ச்சொல்லாக மட்டுமே இருக்கிறது. ஆனால் "வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால், மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்' என பல ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசனம் கண்டவர் பாரதியார். அவரின் கனவுகளுக்கு உயிர் கொடுத்துள்ளது தமிழக அரசு. இதன்படி தென் மாவட்டங்களில் உள்ள 10 நதிகளை இணைக்கும் திட்டம், 3,290 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளது.

வட மாநிலங்களில் ஓயாத மழை; வெள்ளச்சேதம்; மீட்பு பணிகள் என செய்திகள் வரும். அதே காலகட்டத்தில் தென் மாநிலங்களில் கடும் வறட்சி என்ற தகவலும் பரபரக்கும். ஒரே நாட்டில் ஒரு பகுதியில் வெள்ள நிவாரணம், மறு பகுதியில் வறட்சி நிவாரணம் என முரண்பட்ட நிலை.

இது தான் தீர்வு: தொடர் மழையால் நதிகளில் உபரி நீர் கடலில் கலக்கும். சில மாநிலங்களில் குடிநீர் பஞ்சம், தலைவிரி கோலமாய் தாண்டவமாடும். இதே நிலை பல ஆண்டுகளாக நீடித்ததால், நதிகள் இணைப்பு என்ற முழக்கம் உருப்பெற்றது. இதற்கு பலதரப்பினரும் உயிர் கொடுக்க, தேசிய நதிகள் இணைப்பு என்ற நிலைப்பாடு வலுப்பெற்றது. பல கட்ட விவாதங்கள், ஆலோசனைகளுக்கு பின், முதற்கட்டமாக தென்னக நதிகள் இணைப்பு என்ற கருத்தும் மேலோங்கியது. வழக்கம் போல சண்டை போடும் நம் அண்டை மாநிலங்கள், ஆரம்ப நிலையிலேயே இக்கருத்தை மண் தோண்டி புதைத்தன. காவிரி நீருக்காக கர்நாடகா, பாலாற்றுக்காக ஆந்திரம், பெரியாறுக்காக கேரளம் என கையேந்தி, அலட்சியம், அவமரியாதைகளால் கூனிகுறுகிப்போய் நிற்கிறது தமிழகம். இப்பிரச்னைகளை சமாளிக்க தமிழக நதிகள் இணைப்பு மட்டுமே, ஒரே தீர்வு என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்த அரசு, இத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்துள்ளது.

சிறு நதிகள் இணைப்பு: முதற்கட்டமாக சிறு நதிகளை இணைக்கும் முயற்சியை அரசு துவக்கியுள்ளது. தென்மாவட்டங்களில் திருச்சி மாயனூர் கட்டளை கதவணையில் இருந்து காவிரி, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு உள்ளிட்ட நதிகளை இணைக்கும் திட்டம், 2008-09 ல் அறிவிக்கப்பட்டது. இதற்காக 3, 290 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.இத்திட்டத்தால் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் வளம் பெறும். கடந்த ஆண்டு மார்ச்சில் கால்வாய் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் துவங்கி, தற்போது முடிந்துள்ளன.

நீங்கும் அபாயம்: காவிரி கட்டளையில் இருந்து அக்கினி ஆறு, தெற்கு வெள்ளாறு, பாம்பாறு, விருசுழி ஆறு, மணிமுத்தாறு, சருகணி ஆறு, உப்பாறு, வைகை, கிருதுமால் நதி, காணல் ஓடை, குண்டாறு என 11 நதிகள் இணைக்கப்படும். இதற்கான கால்வாய் 257 கி.மீ., நீளமுடையது. கால்வாய், காவிரி கட்டளையில் துவங்கும் போது 20 மீ., அகலம், 5 மீ., ஆழம் இருக்கும். முடிவில் 6.4 மீ., அகலம் இருக்கும். கிராம சாலைகளில் 38, மாநில சாலைகளில் ஐந்து, தேசிய சாலைகளில் மூன்று பாலங்கள் மற்றும் நான்கு ரயில்வே பாலங்கள் கட்டப்படும். ஆறுகளின் உயரத்தை கணக்கிட்டு, 25 சுரங்க கால்வாய்களும் அமைக்கப்படவுள்ளன. இத்திட்டத்தின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில், வெள்ள அபாயம் நீங்கும்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆதிமூலம் கூறுகையில்,""தென் மாவட்ட நதிகள் இணைப்பால் காவிரியில் உபரியாக செல்லும் நீர், வறட்சி மாவட்டங்களுக்கு கிடைக்கும். இதில் ஒரு "கியு செகண்ட்' க்கு 6,000 கன அடி நீர், 1.17 கி.மீ., (நொடிக்கு) வேகத்தில் வரும் என்கின்றனர் பொதுப்பணி துறையினர். இதன்மூலம் உள்ள ஒன்றரை லட்சம் எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்,'' என்றார்.
ஜான் - பெங்களூர்,இந்தியா
2010-11-05 04:41:18 IST
Ithu romba nall thittam.. ithaiyum arasiyal akkidathinga...
கோ. விஜயராஜ் - ஷிபா.ரியாத்,சவுதி அரேபியா
2010-11-05 04:13:44 IST
நீண்ட நாளுக்கு பிறகு நல்ல திட்டம். இந்த திட்டத்தில் அரசியல் கலக்காமல் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் உடனடியாக நிறைவேற்றவேண்டும். இந்த திட்டத்தால் காலபோக்கில் விவசாயம் நடக்கிறதோ இல்லையோ குடிநீருக்காகவாவது உபயோகமாக இருக்கும்....
Pons - Indiana,யூ.எஸ்.ஏ
2010-11-05 03:58:36 IST
Grt to read this. Pls boss do well......
B.Prabhu - vietnam,இந்தியா
2010-11-05 03:29:10 IST
பாராட்டவேண்டிய திட்டம் , திட்டம் நிறைவேருமா . முயல்வோம் வெற்றி பெறுவோம்...
குஞ்சுமணி - சென்னை,இந்தியா
2010-11-05 02:48:41 IST
ரஜனிகாந்த் நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி கொடுக்குறதா சொன்னார். மறக்காம வாங்கிக்கங்கப்பா...
nalavan - in,இந்தியா
2010-11-05 02:22:10 IST
மனமார்ந்த வாழ்த்துக்கள் தினமலருக்கு,தீபாவளி அன்று நல்ல செய்தி சொன்னதற்கு , இந்த திட்டமாவது நிறைவேறும அல்லது கலர் t .v , 2 ஏக்கர் நிலம் மாதிரி தேர்தல் வகுரிதி பட்டியலாகி விடுமா கருணாநிதிக்கு இதெலாம் சாதாரணம்...
விவேக் - ஜோஹன்னேச்புர்க்,தென் ஆப்ரிக்கா
2010-11-05 01:18:43 IST
இது தீபாவளி நற்செய்தி.. இத்திட்டம் விரைவாக நிறைவேற எல்லாம் வல்ல அந்த கடவுளை வணங்குவோம்....

ரியாத்தில் 80 மில்லியன் டாலர் மதிப்பில் சைனா மார்ட் வளாகம்

துபாய்: சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் ஒரு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 80 மில்லியன் டாலர் மதிப்பில் பிரமாண்டமான சைனா மார்ட் வளாகம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு 250 சீனத் தயாரிப்புப் பொருட்களை விற்கும் அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர்கள், மின்னணு, மின்சாதப் பொருட்கள், செராமிக்ஸ், அலங்காரப் பொருட்கள் என 12 வகையான பொருட்கள் இங்கு விற்கப்படுகின்றன.

இதுகுறித்து இந்தத் திட்டத்தின் பங்குதாரரும், துணைத் தலைவருமான அப்துல் அஜீஸ் அல் கிரிதிஸ் கூறுகையில், சவூதி, சீன கூட்டு முயற்சியாக இது தொடங்கப்பட்டுள்ளது. சீனத் தொழிலாளர்களே இதில் முழுக்கமுழுக்க ஈடுபடுவாரக்ள். அரபி மொழியை சரளமாக பேசக் கூடிய 500 பணியாளர்கள் இதில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றார்.

சீனாவின் வெய் ஷிமிங் மற்றும் அலி கிரிதிஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்த சைனா மார்ட்டை தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்ற பிரமாண்ட வணிக வளாகங்கள் ஜெட்டாவிலும், தமானிலும் தொடங்கப்படும் என்றும் அல் கிரிதிஸ் தெரிவித்துள்ளார்.

விபச்சாரம்: கன்னட பிரசாத் கூட்டாளிகள் கைது-3 பெண்கள் மீட்பு

சென்னை: காரில் வெளி மாநில பெண்களை வைத்து விபசாரம் நடத்திய கன்னட பிரசாத்தி்ன் கூட்டாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பிடியிலிருந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.

சென்னை புறநகர் போலீசார் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது காரில் வெளி மாநில பெண்களை வைத்து விபசாரம் நடத்திய புரோக்கர்கள் குகன் (35), சண்முகம் (28) ஆகியோர் பிடிபட்டனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

காரில் இருந்த ஹைதராபாத்தை சேர்ந்த பூனம் (28), மும்பையைச் சேர்ந்த ரோகித் (22), பெங்களூரைச் சேர்ந்த ரூபா (25) ஆகியோரை போலீசார் மீட்டனர்.

இதில் குகன் பிரபல விபசார புரோக்கர் கன்னட பிரசாத்தின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.

இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பெண்கள் மைலாப்பூர் அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்திரலேகா மீது ஆசிட் வீசியது, சேஷனை ஓட விட்டது போன்றவை திமுக ஆட்சியில் இல்லை-கருணாநிதி

சென்னை: சந்திரலேகா மீது ஆசிட் வீசியது, டி.என்.சேஷனை ஓட ஓட விரட்டியது, பல்வேறு படுகொலைகள் என இருந்த அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் குற்றச் செயல்கள் குறைவுதான் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் - குறிப்பாக ஜெயலலிதா தொடர்ந்து செய்துவரும் பொய்ப் பிரசாரத்திற்கு, உதவி செய்யும் நோக்கத்துடன்; என்ன செய்தாலும் ஜெயலலிதாவைப் போன்றவர்களை ஆதரிப்பதே பிறவிப்பயன் என்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதைப் போல, நடுநிலை நாளேடு ஒன்று, நேற்று ஒரு தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் படிப்பவர்களை திசைதிருப்புவதற்காக, திட்டமிட்டு செய்திகளை எல்லாம் ஆங்கிலத்திலே சொல்வார்களே, அதைப் போல - ஊதி ஊதிப் பெரிதாக்கி, மிகைப்படுத்தி - கடுகுக்குள் மலையைப் புகுத்தி எழுதியிருக்கிறார்கள்.

நல்லாட்சி நடத்தி வரும் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் சிறப்பான செயல்பாடுகளால் குறை ஒன்றும் கண்டுபிடிக்க இயலாததன் காரணமாக, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்ற கடைசி அஸ்திரத்தை எடுத்துக்கொண்டு, பொத்தாம்பொதுவாக, "வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ'' என்ற பாணியில் சட்டம் ஒழுங்கைப் பற்றியும், குற்ற நிகழ்வுகள் குறித்தும் திசை திருப்பும் வகையில் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன.

இந்தியாவிலேயே மிகச்சிறப்பாகச் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று தமிழகம் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம். சாதி மதப்பூசல்கள் தலையெடுக்காத வண்ணம் தமிழக அரசின் தொடர் கண்காணிப்பில் மிகுந்த விழிப்புணர்ச்சியுடன் காவல் துறை சட்டம் ஒழுங்கைப் பராமரித்து வருகிறது.

30.10.2010 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த "பசும்பொன் தேவர் குருபூஜை'' மிகவும் அமைதியாக நடைபெற்றது. சட்டம் ஒழுங்கை காவல் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் நன்கு பராமரித்து வருவதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள். அமைதிக்குக் குந்தகமின்றி நடத்தப்பட்டதும், சட்டம் ஒழுங்கு சிறப்பாகப் பராமரித்து வருவதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதங்கள் வருவதாகக் கூறி 18.10.2010 அன்று மதுரையில் திட்டமிட்டபடி அவரது பொதுக் கூட்டத்தை நடத்த விடாமல், தடுத்திட முயற்சிப்பதாகவும், அவரது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்றும் தொடர்ந்து அவரது கட்சியினர் அறிக்கைகள் விடுத்தபோதும் கூட; காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கைகளினால் 18.10.2010 அன்று எதிர்கட்சித் தலைவர் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி மதுரை சென்று கூட்டத்தை நடத்தி பாதுகாப்பாகச் சென்னைக்குத் திரும்பினார் என்பதை நாடே அறிந்துள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறுவது உண்மைக்கு மாறானது என்பதைத் தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள்.

தமிழகத்தில் மட்டுமே தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் கொலைக் குற்றங்களும், கொள்ளைகளும், கடத்தல்களும் நடப்பது போன்றும், இவற்றையெல்லாம் காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது போன்றும் ஒரு பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விஷமத்தனமான பிரச்சாரத்திற்கு அடிப்படை ஏதுமில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் 2004-ஆம் ஆண்டில் மிக உயர்ந்த எண்ணிக்கையில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 817 குற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில்; தி.மு.க. ஆட்சியில், கடந்த 2009-ஆம் ஆண்டில் 7 லட்சத்து 17 ஆயிரத்து 957 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள்தொகை அடிப்படையில் குற்ற நிகழ்வுகள் நடக்கும் விகிதாசாரத்தை எடுத்துக் கொண்டால்கூட பிற மாநிலங்களை விடக் குறைந்த அளவில் குற்றங்கள் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் உள்ளது. உதாரணமாக, 2008-ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 322 குற்றங்கள் நிகழ்ந்தன. டெல்லி மாநிலத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 286 குற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் தமிழகத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 266 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற பிற மாநிலங்களை ஒப்பீடு செய்தால்கூட; சென்னைப் பெருநகரில் குற்ற நிகழ்வுகள் குறைந்த அளவிலேயே உள்ளது என்பதும் புள்ளி விவரங்களிலிருந்து தெளிவாகத் தென்படுகிறது. அண்மைக் கால குற்ற நிகழ்வுகளை எடுத்துக்கொண்டால்கூட, குற்றநிகழ்வுகளில் குற்றவாளிகள் உடனடியாகக் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப் பட்டுள்ளனர்.

17.7.2010 அன்று நடந்த சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் குற்றவாளி 4 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதச் செயல்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் கொடும் குற்றவாளிகள் 2009-ஆம் ஆண்டில் 2220 பேரும், 2010-ஆம் ஆண்டில் இதுவரை 1808 பேரும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா தமிழகத்தின் முதல்-அமைச்சராக இருந்த போது - மயிலாடுதுறையில் காங்கிரஸ் தலைவர் குரு ஞானசேகரன் படுகொலை; முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் சம்பந்திகள் இரண்டு பேர் படுகொலை; வேலூர் நகைக்கடையைக் கொள்ளையடித்து மூன்று பேர் சுட்டுக் கொலை; மயிலாடுதுறை கல்லூரி மாணவி கற்பழித்துக் கொலை; சென்னையில் தலித் மக்கள் முன்னணித் தலைவர் பாலு என்பவர், அவர் மகன் கண்ணெதிரே படுகொலை; சசி என்ற சசிகுமார் என்ற சினிமா ஸ்டண்ட் நடிகர் வெட்டிக் கொலை; திருப்பத்தூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் மணி என்ற கழகத் தோழர் சுட்டுப் படுகொலை; திருமுல்லைவாயிலைச் சார்ந்த சப்-இன்ஸ் பெக்டர் மகன் விஜி வர்கிஸ் நடுரோட்டில் வெட்டிக் கொலை; சூனாம்பேட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கோவலன் வெட்டிக் கொலை - என ஜெயலலிதா ஆட்சியில், 2003-ஆம் ஆண்டு மட்டும், சங்கிலித் தொடர் போன்ற படுகொலை நிகழ்ச்சிகள் நடந்தபோது; அவற்றையெல்லாம் வெறும் செய்தி என்ற அளவில், வெளியிட்டனவே தவிர; "சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது; நல்லாட்சிக்கு இது அழகல்ல'' என்று அறிவுரை கூற முன்வருவதற்கான திராணியும், தைரியமும் இருந்தனவா என்றால், இல்லை. இப்போது மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு எழுதுகிறார்களே, என்ன காரணம்? நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா?

ஜெயலலிதா ஆட்சியில் - காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் 3-9-2004 அன்று கொலை செய்யப்பட்டு; அந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அவரது சகோதரர் ரகு, மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், அப்பு, கதிரவன், ரவி சுப்பிரமணியன் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்ட போதும்; சுந்தரேச அய்யர், அப்பு உட்பட 11 பேர் மீதும் குண்டர் சட்டம் ஏவப்பட்ட போதும்; தலையங்கங்கள் தீட்டி தங்கள் சான்றாண்மையைக் காட்டிக்கொள்ள முயற்சித்தார்களா?

8-8-1993 அன்று சென்னை சேத்துப்பட்டில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்து 11 பேர் பரிதாபமாக மரணமடைந்த போது 14-4-1995 அன்று சென்னை இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடித்து "பைபிள்'' சண்முகம் என்பவர் மாண்டபோது; 10-7-1995 அன்று திரைப்பட இயக்குநர் மணிரத்னம் வீட்டில் குண்டு வெடித்தபோது; 1991 முதல் 1996 வரையிலான 5 ஆண்டுக்கால ஜெயலலிதா ஆட்சியில் 333 வெடிகுண்டு சம்பவங்கள் நடந்து - 135 பேர் மரணமடைந்து, 394 பேர் காயமடைந்தபோது; சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று தமது பேனா முனையைத் தீட்டிட முன்வந்தார்களா?

சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.கே.பாலன் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டாரே; கழக நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கத்தின் தம்பி, ஈரோடு மாவட்டத்தில் காவல் துறை ஆய்வாளராக இருந்தவர்; திடீரெனக் காணாமல் போனாரே, இவற்றின் அடிப்படையில், ஜெயலலிதாவின் காவல் துறை செயலிழந்துவிட்டது என்று சுட்டிக்காட்ட முயற்சி செய்தனவா?

16-8-1991 அன்று மத்திய மந்திரி ப.சிதம்பரம் கல்வீசித் தாக்கப்பட்ட போது; அ.தி.மு.க.வைச் சார்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்களே, அதாவது, ரமேஷ் என்பவரும், பி.சொக்கலிங்கம் என்பவரும் தாக்கப்பட்டபோது; 19-5-1992 அன்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது "ஆசிட்'' பாட்டில் வீசப்பட்டு தாக்கப்பட்டபோது; 2-12-1994 அன்று முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் சேஷன் தங்கியிருந்த ஓட்டல் தாக்கப்பட்ட போது; 26-7-2004 அன்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டபோது; சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 2005 டிசம்பர் மாதம் நிவாரணம் பெறுவதற்காக ஜெயலலிதா அரசு கையாண்ட தவறான அணுகுமுறையின் காரணமாக, 40-க்கும் மேலான அப்பாவிப் பொது மக்கள் நெரிசலில் சிக்கி மாண்டபோது; சட்டம்-ஒழுங்கைப் பற்றி வாய் திறந்தார்களா?

ஆனால், இனியாவது நடுநிலை நாளேடுகள் நாட்டு மக்களுக்குத் தேவையான - ஆக்கப்பூர்வமான செய்திகளையும், எந்த ஒரு கட்சியையும் சாராமல், விருப்பு வெறுப்பின்றி அரசியல் குறித்த செய்திகளையும், நாகரிக - கலாச்சாரக் கேடுகளுக்குத் துணை புரியாத செய்திகளையும், நல்லெண்ணத்தையும், நற்செயல்களையும் ஊக்குவித்து உற்சாகப் படுத்தும் செயல்களையும் வெளியிடுவது குறித்து சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்! நடுநிலையாளர்க்குக் கெடுமதி; கூடாதல்லவா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

சங்குப்பிட்டிப் பால நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைகின்றன

பூநகரியையும் காரைதீவையும் இணைக்கும் சங்குப்பிட்டிப் பால நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவுறும் நிலையில் உள்ளன. கடந்த 3 தசாப்தங்கள் நீடித்த யுத்தம் காரணமாக ஏ 32 எனப்படும் இப்பாதையின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்திருந்தன.

தற்போதைய அமைதிச் சூழலில் ஏ 32 பாதை மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

தற்போது யாழ்ப்பாணத் தீவகற்பத்தைச் சென்றடையக்கூடிய ஒரே பாதையாக ஏ9 வீதி விளங்குகின்றது.

ஆனால் சங்குப்பிட்டிப் பாலத்துடன் கூடிய இந்த ஏ 32 பாதையின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து 80 கிலோமீற்றர்களால் குறைவடையுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைதீவுக்கும் சங்குப்பிட்டிக்குமிடையிலான களப்பில் நிர்மானிக்கப்பட்டுவரும் சங்குப்பிட்டிப் பாலம் 288 மீற்றர் நீளமானதாகும்.

இரண்டு தடங்களைக் கொண்ட சங்குப்பிட்டிப் பாலம் பிரிட்டிஷ் அயன் பிரிட்ஜ் திட்டத்தின்கீழ் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நிர்மாணிக்கப்படுகிறது.

கடந்த மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப் பணிகள் 95 வீதம் நிறைவடைந்துள்ளன.

இதுவரை 1,000 மில்லியன் ரூபா இந்தப் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாகவும் புத்தளம் , மன்னார்ப் பகுதி மக்கள் யாழ்ப்பாணம் சென்றடைய இப்பாதை பெரிதும் உதவுமென்றும் பெருந் தெருக்கள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார்

ஏ 32 எனப்படும் இந்த வீதியை இவ்வாண்டு இறுதிக்குள் திறந்து வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பெருந் தெருக்கள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


காணி உறுதி இருந்தும் யாழ்ப்பாணத்தில் வீடு இல்லை: சிங்களவர்கள்



யாழ்ப்பாணத்தில் தமக்கு காணிகள் இருந்தும் அதற்கான உறுதிகள் இருந்தும் அரசாங்கம், தம்மை அந்தக்காணிகளில் குடியேற்ற தாமதித்து வருவதாக யாழ்;ப்பாணத்தில் வசித்ததாக கூறப்படும் சிங்களவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற இந்த மக்களின் பிரதிநிதிகள் சிலர் தம்மிடம் உள்ள காணிகளின் உறுதிகளை ஊடகங்களுக்கு காண்பித்தனர்.
தாம் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் வசித்த காணிகளை தமிழீழ விடுதலைப்புலிகள், தமது ஆதரவாளர்களுக்கும் மாவீரர் குடும்பங்களுக்கும் வழங்கியுள்ளதாக ஊடக சந்திப்பை நடத்தியவர்கள் தெரிவித்தனர்.
தாம் யாழ்ப்பாணத்தில் இருந்து 30 வருடங்களுக்கு முன்னர் விரட்டப்பட்ட பின்னர், மிஹிந்தலையில் தற்காலிகமாக இருந்ததாகவும் பின்னர் தற்போது யாழ்ப்பாணம் சென்றுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

MGM திவால்? பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான எம் ஜி எம் நிறுவனம் திவால் நோட்டீஸ்

ஜேம்ஸ்பாண்ட் பட நிறுவனம் திவால்
- பி.பி.சி
சிங்கம் மீண்டும் கர்ஜிக்குமா?
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களை தயாரித்த பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான எம் ஜி எம் நிறுவனம் திவால் நோட்டீஸ் அளித்திருக்கிறது.
லியோ என்கிற சிங்கத்தின் கர்சனையுடன் துவங்கும் எம் ஜி எம் நிறுவனத் தின் முத்திரை, உலக அளவில் பிரபலமானது. ஹாலிவுட் திரைப்பட வரலாற்றில் இதுவரை காலமும் அறியப்பட்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களிலேயே, எம்ஜிஎம் தான் மிகப்பிரபலமானது.
திரைப்படத்துறையின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படும் காலகட்டத்தில் 1924 ஆம் ஆண்டு உருவான எம் ஜி எம்மின் தயாரிப்பில் உருவான பென்ஹர் போன்ற திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளை பெற்றன.
அதேபோல உலக அளவில் பிரபலாமாக அறியப்படும் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களுக்கான முதன்மை காப்புரிமையும் எம் ஜி எம்முடையது தான்.
இப்படியான திரைப்படங்களை தயாரித்திருந்தாலும், எம் ஜி எம் நிறுவனத்தின் கடன்சுமை என்னவோ தொடர்ந்து அதிகரித்தபடியே இருந்து வந்தது. அது தயாரித்த திரைப்படங்கள் பலவும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்தன. அந்நிறுவன திரைப்படங்களின் டி வி டி விற்பனையில் ஏற்பட்ட சரிவும் அதன் பொருளாதார பிரச்சினைகளை அதிகப்படுத்தியது.
எம் ஜி எம் நிறுவனம் வர்த்தகரீதியில் வெற்றிபெறாத திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்தது தான் அதன் இன்றைய பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் என்கிறார் பிரிட்டிஷ் திரைப்படத்தயாரிப்பாளர் மைக்கேல் வின்னர்.
தற்போது திவால் நோட்டீஸ் கொடுத்திருப்பதன் மூலம் தனது கடனை அடைக்கும் பொறுப்பிலிருந்து எம் ஜி எம் நிறுவனம் தன்னை விலக்கிக் கொள்கிறது. அதே சமயம் நிறுவனத்தின் கடன் அடைக்கும் முழு பொறுப்பும் கடன் கொடுத்தவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அடுத்த கட்டமாக, எம் ஜி எம் நிறுவனம் மறு சீரமைப்பு செய்யப்பட்டு, ஸ்பைகிளாஸ் எண்டர்டைன்மெண்ட் என்கிற திரைப்படத்தயாரிப்பு நிறுவன நிர்வாகிகளால் நடத்தப்படும். இந்த ஸ்பைகிளாஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தான் சிக்ஸ்த் சென்ஸ் மற்றும் சீ பிஸ்கட்ஸ் போன்ற பிரபல திரைப்படங்களை தயாரித்தது.
தற்போதைய திவால் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்த பிறகு, அரை பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை திரட்டப்போவதாகவும், அதை வைத்துக்கொண்டு, மட்டுப்படுத்தப்பட்ட நிறுவனமாக திரைப்படதயாரிப்பு மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாகவும் எம் ஜி எம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் மீள் கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு அடுத்த 30 நாட்களுக்குள் நீதிபதி ஒப்புதல் அளித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த ஒப்பந்த நடைமுறைகள், எம் ஜி எம் நிறுவனத்தின் ஜேம்ஸ் பாண்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான லார்ட் ஆப் தி ரிங்க்ஸின் தொடர்ச்சியான தி ஹாப்பிட் திரைப்படத்தின் எதிர்காலமும் உறுதிசெய்யும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

புலி ஆதரவாளர்களைக்கூட வெட்கப்பட அல்லது மீள்சிந்தனைக்கு உட்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன் Teavadai

சபாஷ் வரதராஜப்பெருமாள்
ரி.பி.சி வானொலியில் அரசியல் தலைவர்கள் அவ்வப்போது வந்து அரசியல் கலந்துரையாடல் செய்வதுண்டு. அவை ஒரு அரசியல் கட்சியின் பிரச்சாரமாக இருக்கும். சரியான விளக்கங்கள் தரமுடியாது போனவர்களும் உண்டு. அதற்கு காரணம் வானொலியில் வந்து கேள்வி என்பது என்னவென்று தெரியாமல் கேட்கும் நேயர்களும் முக்கிய காரணம். கேள்வி கேட்க வருபவர் ஏதேதோ உளறி ஒரு விசர்க்கேள்வியை கேட்டுட்டுப்போவார் வானொலி இயக்குனர் சுருக்கமாக உங்கள் கேள்வியை கேளுங்கள் என்று சொன்னாலும் அதை விளங்கிக்கொள்ளாமல் ஒரு சிறிய கேள்விக்கு ஒரு பிரசங்கம்ஆ வைத்துவிட்டு இதுதான் என் கேள்வி என்று சொல்லி விட்டுப்போவார்கள். அரசியல்வாதியும் அவர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு எதையெல்லாம் சொல்லி விட்டுப்போவார்கள். அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் இப்படி நொந்த நிகழ்ச்சியாக மாறிப்போய் விடும்.
நீண்ட நாட்களுக்குப்பின் நேற்று 04.11.10 அன்றிரவு வடக்கு கிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வழக்கம்போல் கேள்விகள் அமைந்திருந்தாலும் அவர் கொடுத்த விளக்கம் மிக நன்றாக இருந்தது. புலிகள் தொடர்பாக அவர் கொடுத்திருந்த விளக்கம் புலி ஆதரவாளர்களைக்கூட வெட்கப்பட அல்லது மீள்சிந்தனைக்கு உட்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன். அரசியல் நாகரீகம் என்பது என்ன என்பதை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. புலிகளை விமர்சனக்குட்படுத்தியருந்தாலும் நாகரீகமாக அதனைச் செய்திருந்தார். அதற்காக ரீ வடையின் வாழ்த்துக்கள் அவருக்கு.
தமிழ்மக்களை அரசியல்மயப்படுத்துவதற்கு பதிலாக தமிழ்த்தேசியக் கட்சிகள் முதற்கொண்டு புலிகள் வரை அவர்களுக்கு உருவேற்றி உருவேற்றி அவர்களது சிந்தனைகளை மழுங்கடித்து விட்டன. துருப்பிடித்துக் கிடக்கின்ற தமிழ்மக்களின் சிந்தனைகளை புதுப்பித்து புதிய பாதையில் பயணிக்கின்ற பயணத்தை வரதராஜப்பெருமாள் போன்ற அரசியல் ஞானிகள் அதனை மேற்கொள்ள வேண்டும்.  வானொலி மட்டுமல்ல பத்திரிகைகள், இணையத்தளங்கள் எல்லாவற்றிலும் இவர்களின் கருத்துக்கள் முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்க வேண்டும். அதற்காக கொமண்ட்ஸ் என்கிற பெயரில் கருத்துக்களை மழுங்கடிக்கின்ற வேலைகளை தவிர்த்து விட்டு  நல்லதொரு கருத்துப்பரிமாற்றம் இடம்பெற வேண்டும்.
வரதராஜப்பெருமாள் அவர்களின் ஐரோப்பிய பயணம் கலந்துகொண்ட கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் எல்லாம் பயனுள்ளவை. புதியதொரு பாதைக்கு பயணிக்க வேண்டிய தேவையை புலம்பெயர்ந்த மக்களுக்கு இட்டுச் செல்ல வழிவகுத்திருக்கிறது.
வாழ்த்துக்கள்

பாலியல்படங்கள்: அம்பலமாகும் அடையாளம்: ஆபாசத்துக்கு எதிராக இலங்கை நடவடிக்கை


- பி.பி.சி செய்தி
இலங்கையில் உள்நாட்டில் தயாராகும் ஆபாசப் படங்களில் நடித்த நடிகர் நடிகைகளின் புகைப்படங்களை வெளியிட கொழும்பு மேஜிஸ்டிரேட் நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி தந்துள்ளது.
இத்தகைய நடிகர் நடிகைகள் 83 பேரின் புகைப்படங்கள் தம்மிடம் இருப்பதாகவும், இவை இணைய தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டதாகவும் கூறிய காவல் துறைப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி இந்த புகைப்படங்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பத்திரிக்கைகளில் வெளியிடப்படும் என்றார்.
நடிகர்களின் அடையாளங்கள் தெரிந்த பிறகு, இவர்களுக்கு பின்னால் - ஆபாசப் படங்களை தயாரிப்பது விற்பது போன்ற வேலைகளை செய்யும் நபர்களைப் பிடிக்க முடியும் என்றும் காவல் துறை நம்புகிறது.
ஆபாசப் படங்களில் நடிப்பது சிறை தண்டனைக்குறிய குற்றம் என்று காவல் துறைப் பேச்சாளர் கூறினார்.
அதேசமயம் சில பெண்களின் ஆண் நண்பர்கள், அந்த பெண்களுக்குத் தெரியாமலோ அல்லது அவர்களை ஏமாற்றியோ எடுத்த படங்கள் எல்லாம் இணைய தளத்தில் இருக்கின்றன. இது போன்ற படங்களை வெளியிடுவது பாதிக்கப்பட்ட பெண்களை மேலும் பாதிக்கச் செய்யும் விடயமாக அமையும் என்ற கருத்தும் சில மட்டங்களில் இருக்கிறது.
சமீப காலமாக உள்ளூரில் தயாரிக்கப்படும் ஆபாசப் படங்கள் அதிக அளவில் இணையத்தில் புழங்குவதால் இது போன்ற நடவடிக்கை தேவை என்று காவல் துறை கூறுகிறது. ஆபாசப் காட்சிகளைக் கொண்ட இணைய தளங்களையும், குறுந்தகடுகளையும் தடை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் காவல் துறை கூறுகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர்களால் திருமாவளவனுக்கு கடும் நெருக்கடி -வர்மா

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவு நீடிக்குமா அல்லது இடையில் முறிந்து விடுமா என்ற பட்டிமன்றம் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க,    எமது உறவு உறுதியாக உள்ளது என்று  இரண்டு கட்சித் தலைவர்களும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சங்கடப்படுத்தும் வகையில் பேசவேண்டாம் என்று காங்கிரஸ் தலைமைப் பீடம்  தமிழகத் தலைவர்களுக்கு உத்தரவிட்டும் இளங்கோவன்,   கார்த்திக் சிதம்பரம்  போன்ற ஒரு சிலர் எல்லை மீறிப் பேசி வருகின்றனர்.
தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் சோனியா காந்தியின் பேச்சுக்குக் கட்டுப்படுபவர்கள்   என்பதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்களை முதல்வர் கருணாநிதி ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஆனால் அவர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்குவதற்காக இராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி ஆரம்பிக்கப்பட்ட நடைப் பயணம் காங்கிரஸ் கட்சியைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது.   தமிழக அரசு அமுல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையில் உதித்தவை என்று காங்கிரஸார் பிரசாரம் செய்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் பிரசாரத்துக்கு இளைஞர் காங்கிரஸால் ஆரம்பிக்கப்பட்ட நடைப் பயணம் இடையில் தடம் மாறி திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கும் பயணமாக  மாறியது.     இலவசத் தொலைக்காட்சியினால்     பொதுமக்களுக்கு எந்தவிதமான பிரயோசனம் இல்லை என்று இளைஞர் காங்கிரஸ் பிரசாரம் செய்கிறது. இந்தப் பிரசாரத்தினால் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்க முடியாது. தாங்களும் தருகிறார்கள் இல்லை. தருபவர்களையும் தடுக்கிறார்கள் என்ற ஆவேசம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தமிழகக் காங்கிரஸின் கோஷ்டிப் பூசல் அரசியல் உலகில் மிகப் பிரபல்யமானது. ராகுல் காந்தியின் மேற்பார்வையிலேயே இளைஞர் காங்கிரஸ் வளர்த்தெடுக்கப்பட்டது.    தமிழக இளைஞர் காங்கிரஸில் கோஷ்டிப் பூசல்   இல்லை என்று யாரும் கூற முடியாத நிலை உள்ளது. வாசன் கோஷ்டி,    இளங்கோவன் கோஷ்டி என்று இளைஞர் காங்கிரஸ் இரண்டு பிரிவுகளாக உள்ளது.
திராவிட முன்னேற்றக்    கழகத்தைச் சீண்டிப் பார்த்த   தமிழக காங்கிரஸ்   தலைவர்கள் திருமாவளவனைச் சீண்டத் தொடங்கி விட்டனர்.   இலங்கையில் இறுதிக்கட்ட   யுத்தத்தின் போது     இந்திய அரசு நடந்து கொண்ட முறையை      திருமாவளவன் கடுமையாக விமர்சித்து வருகிறார்.   கூட்டணிக்குள் இருந்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு  எதிராக  திருமாவளவன் குற்றம் சாட்டுவதைத் தமிழகக் காங்கிரஸ் தலைவர்களினால் ஏற்றுக்கொள்ள  முடியவில்லை.
இலங்கையில் நடைபெற்ற   இறுதிக்கட்ட யுத்தத்தின் போது   திராவிட முன்னேற்றக் கழக அரசும் மெத்தனமாய்  இருந்தது என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதைப் பற்றி திருமாவளவன் வாயே திறப்தில்லை.     காங்கிரஸ் கட்சியைக் குற்றவாளிக் கூண்டில்   நிறுத்தும் திருமாவளவன் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் குற்றம் சாட்டு வதில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும்,    திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகளும்  இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றன. காங்கிரஸின்    தயவு     இல்லாமல் திருமாவளவன் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க  முடியாது.
ஆகையால் அவர்    இராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் திருவாய் மலர்ந்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகளின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் கட்சி ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவு இல்லாமல் வெற்றி பெற்றிருக்க முடியாது    என்பதை இரண்டு கட்சித் தலைவர்களும் மறந்து விட்டனர்.    தமிழகத்தில் உள்ள தலித்துக்களில் அதிகமானோர் திருமாவளவன் பின்னால் உள்ளனர்.   தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் சில தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தி  தலித்களிடள்ளது.    அமைச்சர் சிதம்பரத்தின் மகன் என்பதைத் தவிர வேறு எந்த விதமான செல்வாக்கும் இல்லாத கார்த்திக்கின் அண்மைக் காலக் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் வேறு ஒருவர் இருப்பதாகவே தோன்றுகிறது.
நடிகர் எஸ்.எஸ்.சந்திரனின் மறைவு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல நடிகர்களும்,   நடிகைகளும் இருந்தாலும்   எஸ். எஸ். சந்திரனின் பேச்சு   எப்பவும்   எதிர்க் கட்சிகளை மட்டம்   தட்டுவதாகவே இருக்கும்.  எஸ்.எஸ்.சந்திரனின் இடத்தை நிரப்புவதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய நடிகர் ராதாரவியை மீண்டும் கட்சியில் இணைத்துள்ளார் ஜெயலலிதா.
நடிகர் ராதாரவி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய போது  திராவிட முன்னேற்றக் கழகத்தில் அல்லது சரத்குமாரின் கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு   இருந்தது.   அரசியலை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்த ராதாரவி மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தியை ராதாரவி கடந்த வாரம் சந்தித்தார். அப்போது காங்கிரஸில் ராதாரவி இணைகிறார் என்று பரபரப்பாகச் செய்தி வெளியானது.      ராதாரவி அதை மறுக்கவோ ஒப்புக் கொள்ளவோ இல்லை.     இந்த நிலையில் திடீரென அவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்திஉள்ளது.    அண்ணா திராவிட முன்னேற்றக்      கழகத்தின் பெரும் புள்ளிகளில்    பலர் அதிலிருந்து  வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து வருகிறார்கள்.   இந்த நிலையில் ஏதோ ஒரு இலாபம் இல்லாமல் ராதாரவி மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்கமாட்டார்.
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ள ஒரு தொகுதியில் ராதாரவி தேர்தலில் போட்டியிடலாம் அல்லது காலியாகும் ராஜ் சபை உறுப்பினராகி நாடாளுமன்றம் செல்லலாம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறுபவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைப்பதற்கு ஜெயலலிதா விரும்புகிறார்.    தமிழக   தேர்தல் நெருங்கிவரும்   சமயத்தில்   கட்சியில் பலம் குறையக் கூடாது என்பதில் ஜெயலலிதா கவனமாக உள்ளார்.