வியாழன், 9 பிப்ரவரி, 2023

துருக்கி-சிரியா நிலநடுக்கம் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

 தினத்தந்தி : இஸ்தான்புல் துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது.
இந்த நிலையில், இன்றைய காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15, 383 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12 ஆயிரத்து 391 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 2 ஆயிரத்து 992 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 383 ஆக அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனையில் அதிர்ச்சி முடிவு - அதிரடிக்கு தயாராகும் சிறப்பு புலனாய்வு குழு

EXCLUSIVE; 'Ramajayam  case; Shocking result of fact-finding probe - Special Investigation Team ready for action

நக்கீரன் : Exclusive: ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனையில் அதிர்ச்சி முடிவு - அதிரடிக்கு தயாராகும் சிறப்பு புலனாய்வு குழு
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு திருச்சி மாவட்டம் திருவளர்சோலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தினாலும், சிபிஐ வரை விசாரித்தும் கொலையாளிகளைப் பிடிக்க முடியாமல் விசாரணை நீண்டு வருகிறது.
இந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சி வந்ததும் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
குற்ற வழக்கு விசாரணைகளில் கைதேர்ந்த டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் போன்ற போலீசார் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் பங்கேற்றனர்.

புதன், 8 பிப்ரவரி, 2023

ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுப்பு . தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக திமுக கண்டனம்


tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali :  மைசூர் ஓகே.. ஓசூர் “நோ”.. விமான நிலையம் இல்லையாம்! தமிழர்களை மத்திய அரசு புறக்கணிப்பதாக திமுக புகார்
புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் நகரங்களின் பட்டியலில் ஓசூர் நீக்கப்பட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை: மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் நகரங்களின் பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீக்கப்பட்டதால் அப்பகுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் அமைந்து இருக்கும் தொழில் நிறுவனங்கள் அதிருப்தி அடைந்து இருக்கின்றனர். மத்திய அரசு வளர்ச்சித் திட்டங்களில் தமிழ்நாட்டை புறக்கணிப்பதாக திமுக எம்.பி வில்சன் விமர்சித்து இருக்கிறார்.
மத்திய அரசு அறிமுகம் செய்த உதான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் வளர்ந்து வரும் நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் நான் உங்கள் வீட்டில் வீட்டுவேலை பார்க்கின்றேன் – இடிபாடுகளிற்குள் சிக்கி மன்றாடிய சிறுமி

BBC :  சிரியாவின் வடபகுதியில் பூகம்பத்தினால் தரைமட்டமான வீட்டின் கொன்கீறீட் இடிபாடுகளிற்குள் சிக்குப்பட்டிருந்த இருசகோதரங்கள் 36 மணித்தியாலத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.
சிரியாவின் ஹராம் கிராமத்தை தாக்கிய பூகம்பத்தினால் இடிபாடுகளிற்குள் சிக்குப்பட்டிருந்த இவர்கள்
மீட்கப்படுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் நான் உங்களிற்கு என்னவேண்டும் என்றாலும் செய்வேன் வீட்டில் வேலைபார்ப்பதற்கும் நான் தயார் என சிறுமி தன்னை காப்பாற்ற முயலும் நபரிடம் தெரிவிக்கின்றார்.
இல்லை இல்லை அப்படி சொல்லவேண்டாம் என மீட்புபணியாளர் தெரிவிக்கின்றார்

நிலநடுக்க பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது... பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட துருக்கி அதிபர்

 மாலை மலர் : இஸ்தான்புல துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.
மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும்.
ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
 இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

கால் டாக்சி ஓட்டுநரை தாக்கிய ஆளுநரின் ஆலோசகர் மீது புகார்! “உனக்கு அவ்வளவு திமிரா? நான் யார் தெரியுமா?”

“உனக்கு அவ்வளவு திமிரா? நான் யார் தெரியுமா?” : கால் டாக்சி ஓட்டுநரை தாக்கிய ஆளுநரின் ஆலோசகர் மீது புகார்!

Kalaignar Seithigal  - Prem Kumar   : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம் மீது கால் டாக்சி ஓட்டுநர் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம், நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து முகலிவாக்கம் வரை ஓலா கார் புக் செய்துள்ளார். இந்நிலையில், காரில் பயணித்த திருஞானசம்பந்தம், இறங்குவதாக புக் செய்த இடத்தை தாண்டி விதிகளை மீறி ஊடக ஆலோசகர் தொடர்ந்து காரை இயக்கக் கூறியதால், ஓலா கேப் ஓட்டுநர் திருநாவுக்கரசர், ஆளுநரின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் திருஞானசம்பந்தம் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கனிமொழி : இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லானும் கெடும்’

 minnambalam.com  Aara  :  ஆளுநர்களுக்கு சொல்லிக் கொடுங்கள் – நாடாளுமன்றத்தில் கனிமொழி
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (பிப்ரவரி 7) திமுக சார்பில் கனிமொழி எம்பி பேசினார்.
அப்போது அவர், “1967 ஆம் ஆண்டு  எங்களது மூத்த முன்னோடித் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் ராஜ்யசபாவில் பேசும்போது,
‘ஆளுநர்கள்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  மாநில அரசுகளுக்கு எதிரான கருவிகளாக ஒன்றிய அரசால் பயன்படுத்தப்படுகிறார்கள்’ என்று பேசினார்.
இதை நான் சொல்லவில்லை, பேராசிரியர் சொன்னதை இங்கு நான் குறிப்பிடுகிறேன்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

துருக்கி நிலநடுக்கத்தை 3 நாள் முன்பே 100% துல்லியமாக கணித்த ஆராய்ச்சியாளர்

 tamil.oneindia.com  - Noorul Ahamed Jahaber Ali  :  நெதர்லாந்தை சேர்ந்த ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி இப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்பதை துல்லியமாக கணித்து இருக்கிறார்.
ஆம்ஸ்டெர்டாம்: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து இருக்கும் சம்பவம் உலகத்தையே உலுக்கி இருக்கும் சுழலில்,
நெதர்லாந்தை சேர்ந்த ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி இப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்பதை துல்லியமாக கணித்து இருக்கிறார்.
இன்று அதிகாலை துருக்கியின் மத்திய மற்றும் தெற்கு பகுதியிலும் சிரியாவிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் 2,000 க்கும் அதிகமான மக்களை பலி வாங்கியதுடன் உலகையே உலுக்கி இருக்கிறது.

பாஜகவின் மகளிர் அணி செயலாளர் விக்டோரியா கௌரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து போராடும் வழக்கறிஞர்கள்

 bbc.com :  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் விக்டோரியா கௌரி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்கள், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பாக இன்று காலை 10:30 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், விக்டோரியா கௌரியின் பதவி ஏற்பதற்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அவரது தகுதி குறித்த சந்தேகத்திற்கு இடமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், "எங்களால் கூடுதல் நீதிபதியாக அவர் நியமிக்கப்படுவதன் பொருத்தப்பாட்டை கேள்விக்குள்ளாக்க முடியாது, கொலீஜியத்தின் செயல்முறை மீது சந்தேகம் எழுப்ப முடியாது," என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது லக்ஷ்மண சந்திர விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

தேனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி

 தேனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியின் போது காப்பாற்றப்பட்டுள்ளனர்.
 மாலைமலர் : தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, 3 குழந்தைகள் என 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கிணற்றுக்குள் இருந்து குழந்தைகளின் அழுகுரல் கேட்டு, அப்பகுதியில் வேலை செய்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
போடியில் இருந்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


சிவகாசி குடிநீர் தொட்டியில் நாயின் சடலம் : தமிழ்நாட்டில் தொடரும் அவலம்!

 minnambalam.com  - christopher  : சிவகாசி அருகே உள்ள கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் நாய் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் சமீப காலமாக தண்ணீர் தொட்டிக்குள் மனிதக்கழிவுகள், சடலம் கண்டெடுக்கப்பட்டு வருவது கடும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் பட்டியலினத்தவர் வசிக்கும் பகுதியில் இருந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவுகள் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிப்ரவரி 1ம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்குள் 9 நாட்களாக அழுகிய நிலையில் ஒரு இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பள்ளி மாணவிகளை பணக்காரர்களுக்கு விருந்து படைத்த கொடூரம்: மூடி மறைப்பது யார்?. திருச்சி அருகே முசிறியில்

 minnambalam.com- Kavi  அண்மையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பற்றி விவாதிக்க தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டிஜிபி மற்றும் மாவட்ட எஸ்.பி.க்கள் அடங்கிய அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டினார்.
அப்போது சட்டம் ஒழுங்கு கெட்டுப் போவதற்கான காரணிகளாக பத்து வகையான குற்றங்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. அந்த பத்து வகையான குற்றங்களில் ஏழாவதாக பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் பாலியல் வன்புணர்வு வழக்குகள், எட்டாவதாக பெண்கள், பெண் குழந்தைகள் கடத்தல் வழக்குகள் ஆகிய குற்றங்கள் இடம் பிடித்திருந்தன.
அந்த அளவுக்கு தமிழ்நாடு சட்டம் ஒழுங்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக பெண்கள் பாதுகாப்பு விவகாரம் இருக்கிறது. இதை மையமாக வைத்துத்தான்   கடந்த எடப்பாடி ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்த நிலையில் ஏழ்மையான குடும்பத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் கிராமத்து மாணவிகளைக் குறிவைத்து அவர்களை மூளைச் சலவை செய்து நகரங்களுக்கு அழைத்துச் சென்று பணக்கார முதியவர்களுக்கும், இளைஞர்களுக்காகவும் அனுப்பி வைத்து வரும் ஒரு கொடூரம் திருச்சி அருகே முசிறியில் நடந்து வருகிறது.

3,400 பேரை பலி வாங்கிய நிலநடுக்கம் - முன்பே உணர்த்திய பறவைகள் கூட்டம்

 மாலை மலர் : அங்காரா  துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 3,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது.
நிலநடுக்கத்தில் 3,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து துருக்கி அரசு 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலநடுக்கம் ஏற்படும் முன்னர் பறவைகள் அந்நகரைச் சுற்றி வட்டமடித்துள்ள காட்சிகள் வைரலாகி வருகின்றன.
நிலநடுக்கத்தை உணர்த்தவே பறவைகள் அவ்வாறு பறந்து திரிந்ததாக சமூக வலைதளத்தில் பலரும் கருத்து பதிவிட்டனர்.

திங்கள், 6 பிப்ரவரி, 2023

பாஜகவின் பட்டியலின பொதுப்பிரிவு பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி திமுகவில் இணைந்துள்ளார்.

திமுகவில் இணைப்பு

tamil.oneindia.com  - Yogeshwaran Moorthi  : சென்னை: தமிழ்நாடு பாஜகவின் மாநில பட்டியலின பிரிவு பொதுச்செயலாளர் என்.விநாயகமூர்த்தி அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். அதேபோல் ஈரோடு மாவட்ட பாஜக நிர்வாகிகளும் திமுகவில் இணைந்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளை தங்கள் கட்சிகளில் இணைக்க முக்கிய கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 1300ஆக உயர்வு

 மாலை மலர்  :  துருக்கி நாட்டின் தென் கிழக்கு பகுதியில் காசினா டெட் என்ற பகுதி உள்ளது. மிகச் சிறந்த தொழில் நகரமாக திகழும் இந்த பகுதி துருக்கி- சிரியா எல்லையில் அமைந்துள்ளது.
துர்நாகி என்ற நகரத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசினா டெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக இது பதிவானது.
இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டோடியது. பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நீண்ட நேரம் அவர்கள் வீடுகளுக்குள் செல்லாமல் உயிர் பயத்தில் ரோடுகளில் நின்று கொண்டு இருந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. அடுக்கு மாடி கட்டிடங்களும் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தது. வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. கட்டிடங்களும் கடுமையான சேதம் அடைந்தது. பல கட்டிடங்கள் தரைமட்டமானது.
அதிகாலை நேரம் என்பதால் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பொது மக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் பலர் என்ன நடந்தது என தெரியாமல் தூக்கத்திலேயே உயிர் இழந்துவிட்டனர்.

இயக்குனர் கஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.

  tamil.oneindia.com  Arsath Kan :  எனது கல்லூரித் தோழர் கஜேந்திரன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது! முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கம்!
இயக்குனர் கஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.
சென்னை: பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரனின் மறைவு, தமக்கு அதிர்ச்சியளிப்பதாக கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
கஜேந்திரனை தனது கல்லூரித் தோழர் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், கலையுலகிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியவர் என புகழாரம் சூட்டியிருக்கிறார்.
''பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர், திரு. டி.பி.கஜேந்திரன் அவர்கள் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர்.

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

தாம்பரம் அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று போதைக்கு அடிமையாக்கி கற்பழித்த வாலிபர் கைது

 மாலைமலர் : தாம்பரம் - தாம்பரம் அருகே உள்ள அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக மாணவி மிகவும் சோர்வாக இருந்தார். மேலும் சில நாட்களுக்குமுன்பு மாணவி பள்ளியில் மயங்கி விழுந்ததாக தெரிகிறது.
இதுபற்றி ஆசிரியர்கள் விசாரித்தபோது வீட்டின் உரிமையாளரின் மகன் விக்கி (22) என்பவர் மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்கியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
பள்ளியில் இருந்து மாணவி வரும்போது விக்கி அடிக்கடி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று உள்ளார். வீட்டு உரிமையாளரின் மகன் என்பதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி விக்கி மாணவியுடன் நெருங்கி பழகினார்.

இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஷ் சுபசிங்க இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு

Image result for OPEX holdings Onesh Subasinghe

இலங்கையின் ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், கோடீஸ்வர தொழிலதிபருமான ஒனேஷ் சுபசிங்க (45) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றிலிருந்து இன்று (5) அவரது சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜகார்த்தாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜகார்த்தா காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்- ஏழு திரை நீக்கி காண்பிக்கப்பட்ட ஜோதி தரிசனம்

 நக்கீரன் : 'அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை' ஆக வாழ்ந்தவர் ராமலிங்க அடிகளார் எனும் வள்ளலார். கடலூர் மாவட்டம் வடலூர் அருகேயுள்ள மருதூர்  கிராமத்தில் பிறந்தவர்.
இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவிய வள்ளலார், ஏழை எளிய மக்களின் பசியை போக்க, சத்தியஞான சபையில் தருமசாலையை நிறுவினார். அன்று முதல் இன்றுவரை அணையா அடுப்பு எரிந்து பசிப்பிணி நீக்கி வருகிறது.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152 -ஆம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7.30 மணிக்கு தர்ம சாலையில் சன்மார்க்கக் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மருதூர், கருங்குழி, மேட்டுக்குப்பம் ஆகிய ஊர்களிலும், காலை 10 மணிக்கு சத்திய ஞான சபையிலும் கொடியேற்றம் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம்.

30 குண்டுகள் முழங்க வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை சார்பில் இறுதி மரியாதை.

 மாலை மலர்  : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78), நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
இதனை போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. தற்போது அவரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
காவல்துறை சார்பில் 30 குண்டுகள் முழங்க வாணி ஜெயராம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
10 காவலர்கள் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர்.

சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

 hirunews.lk  : அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் முறுகலை ஏற்படுத்தியுள்ள
அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய இராணுவ தளங்களில் உளவு பார்த்ததாக கூறப்படும் இராட்சத சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, தமது போர் விமானங்கள் அமெரிக்க கடல் எல்லையில் பலூனை வீழ்த்தியதை உறுதிப்படுத்தியது.
ஒரு சிறிய வெடிப்புக்குப் பிறகு பலூன் கடலில் விழுவதை அமெரிக்க தொலைக்காட்சிகளின் காணொளிகள் காட்டின.
தென் கரோலினாவின் மர்டில் கடற்கரைக்கு அருகில்,ஆழம் குறைந்த 47 அடி கடலில் இந்த பலூன் விழுந்துள்ளது.
இதனையடுத்து ஏழு மைல்களுக்கு (11 கிமீ) பரவியுள்ள குப்பைகளை மீட்க இராணுவம் இப்போது முயற்சித்து வருகிறது.
பலூனின் கண்டுபிடிப்பு ஒரு இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வாணி ஜெயராமின் நெற்றியில் இருந்த ஆழமான காயம்.. நடந்தது என்ன? உடற்கூறாய்வு அறிக்கை சொல்வது என்ன?

 tamil.oneindia.com  -  Shyamsundar :  அதிக ரத்தம் இந்த காயம் வழியே வெளியேறிய காரணத்தால் அவர் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சென்னை: பாடகி வாணி ஜெயராம் மரணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரின் முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
பிரபல பாடகி வாணி ஜெயராம் இந்தியாவில் 19 மொழிகளில் பாடல்களை பாடி உள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மராத்தி என்று பல மொழிகளில் இவர் சிறந்த பாடகராக திகழ்ந்து வந்தார்.

மாதாந்திர மின்கட்டணம் விரைவில் நடைமுறைக்கு வரும்- அமைச்சர் செந்தில் பாலாஜி

 மாலை மலர  :  மின்கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அவரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். கிருஷ்ணம்பாளையம், வைராபாளையம் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பெரும்பாலும் குடும்ப வாரிசுகளே .. கேரளா எம்பி ஜான் பிரிட்டா

 

ராதா மனோகர் : இந்தியா நீதி துறை முழுக்க முழுக்க ஒரு குடும்ப வாரிசு அடிப்படையில்தான் இயங்குகிறது
உலகத்தில் எங்குமே நடக்காத அபத்தம் இங்கு நடக்கிறது
ஒரு நீதிபதியை யார் தீர்மானிக்கிறார்கள்?
நீதிபதிகளே தீர்மானிக்கிறார்கள்   அவர்களின் குடும்ப அங்கத்தவர்களை நியமிக்கிறார்கள்.
நீதிபதிகளின் நியமனம் மர்மமான முறையில்தான் நடக்கிறது
உதாரணமாக ஒரு நீதிபதி நியமிக்க படுகிறார்  அவரின் கொள்ளுத்தாத்தா அவரின் தாய்வழி தாத்தா ஒரு நீதிபதி அவரின் தந்தை வழி இன்னொரு தாத்தா நீதிபதி அப்பா நீதிபதி இப்படி பல குடும்ப அங்கத்தினர்கள் தொடர்ந்து நீதிபதிகளாக இருக்கிறார்கள்
47 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் குறைந்தது 14 பேர்வழிகள் பார்ப்பனர்கள்
1950 இருந்து 1970 வரையில் 14 உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 11 பேர்கள் பார்ப்பனர்கள்
நீதி துறையில் பல்லினத்துவம் கிடையாது ..கூச்சல் கூச்சல்
1980 இல் இருந்து இன்றுவரை எந்த ஒரு பட்டியல் இனத்தவரே பிற்படுத்த பட்டவரோ உச்ச நீதிமன்ற  நீதிபதிகளாக நியமிக்க படவில்லை

பிரச்சனைக்கு நடுவே.. உச்சநீதிமன்றத்துக்கு 5 புதிய நீதிபதிகள்.. மத்திய அரசு ஒப்புதல்.. என்ன நடந்தது?

Oneindi Nantha Kumar R   : உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொலிஜியம் பரிந்துரைந்த 5 பேரின் பெயர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
டெல்லி: உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட மொத்தம் 34 நீதிபதிகள் இருக்க வேண்டும்.
தற்பாது 27 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில் புதிய 5 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான கொலிஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்ற நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் கிரண் ரிஜூஜி. இவர் சமீபகாலமாக நீதிபதிகள் நியமனத்துக்கான கொலிஜியம் முறையை எதிர்த்து வருகிறார்.