tamil.oneindia.com - Noorul Ahamed Jahaber Ali : நெதர்லாந்தை சேர்ந்த ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி இப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்பதை துல்லியமாக கணித்து இருக்கிறார்.
ஆம்ஸ்டெர்டாம்: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து இருக்கும் சம்பவம் உலகத்தையே உலுக்கி இருக்கும் சுழலில்,
நெதர்லாந்தை சேர்ந்த ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி இப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்பதை துல்லியமாக கணித்து இருக்கிறார்.
இன்று அதிகாலை துருக்கியின் மத்திய மற்றும் தெற்கு பகுதியிலும் சிரியாவிலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் 2,000 க்கும் அதிகமான மக்களை பலி வாங்கியதுடன் உலகையே உலுக்கி இருக்கிறது.
முதல் நிலநடுக்கம் 7.8 என்ற ரிக்டர் அளவில் பதிவான நிலையில், 2 வது நிலநடுக்க 7.5 என்ற ரிக்டர் அளவிலும், 3 வது நிலநடுக்கம் 6 என்ற ரிக்டர் அளவிலும் பதிவாகின.
நிலநடுக்கம்! அதிர்ந்துபோன துருக்கி.. சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடங்கள்! நெஞ்சை உறைய வைத்த வீடியோ நிலநடுக்கம்! அதிர்ந்துபோன துருக்கி.. சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடங்கள்! நெஞ்சை உறைய வைத்த வீடியோ
தொடரும் அதிர்வுகள்
நிலநடுக்கங்கள் ஏற்பட்டதுடன் தொடர்ந்து நில அதிர்வும் ஏற்பட்டு வருகிறது. இதுவரை 30 முறை துருக்கியில் நில அதிர்வுகள் ரிக்டரில் 4 என்ற அளவில் இந்த நில அதிர்வுகள் பதிவானதாக அமெரிக்க புவியியல் நிலையம் கூறியுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக நிலநடுக்கத்தால் சேதமடைந்த, வெடிப்புகள் ஏற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து வருகின்றன.
சிரியாவிலும் பாதிப்பு
பூமிக்கு அடியில் வெறும் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த அதிர்வுகளால் பாதிப்புகள் மேலும் மோசமடையும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் மீட்புப் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கங்களின் தாக்கம் அண்டை நாடான சிரியாவிலும் எதிரொலித்தது. அங்கும் உயிர் சேதங்கள் ஏற்பட்டு உள்ளன.
உருக்குலைந்த நகரங்கள்
ஜோர்டான் மற்றும் லெபனானிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. கட்டிடங்கள் இடிந்து துருக்கி, சிரியாவியின் நகரங்கள் உருக்குலைந்து காணப்படுகின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், துருக்கியில் 1,541 பேர், சிரியாவில் 810 பேர் என இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,350 ஐ எட்டி இருக்கிறது.
அன்றே கணித்த ஆராய்ச்சியாளர்
அன்றே கணித்த ஆராய்ச்சியாளர்
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதியே இப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்று மிக துல்லியமாக கணித்து உள்ளார் நெதர்லாந்தை சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ். SSGEOS என்ற புவியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக உள்ள இவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "கூடிய சீக்கிரமோ அல்லது தாமதமாகவோ மத்திய - தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும்." என்று பதிவிட்டு உள்ளார்.
இரங்கல் பதிவு
ஆனால், அதை அப்போது யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் ட்விட்டரில் மீண்டும் ஃப்ரான்க் பதிவிட்டு இருக்கிறார். அதில், "மத்திய துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களும் என் மனம் இருக்கிறது. 115 மற்றும் 526 வது ஆண்டுகளை போல் இப்பகுதியில் இதுபோன்ற நிலநடுக்கம் ஏற்படும் என்று நான் ஏற்கனவே சொன்னேன்." என்று பதிவிட்டு உள்ளார்.
A researcher named Frank Hoogerbeets from the Netherlands has accurately predicted that a powerful earthquake will occur in the region on February 3rd
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக