வியாழன், 9 பிப்ரவரி, 2023

துருக்கி-சிரியா நிலநடுக்கம் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

 தினத்தந்தி : இஸ்தான்புல் துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் எல்லை நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் பல்லாயிரக்கணக்கானோரின் உயிரை காவு வாங்கி உள்ளது.
இந்த நிலையில், இன்றைய காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15, 383 ஆக அதிகரித்துள்ளது. துருக்கியில் 12 ஆயிரத்து 391 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் 2 ஆயிரத்து 992 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 383 ஆக அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.


கடும் பனிப்பொழிவுக்கு இடையே கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர். இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

கருத்துகள் இல்லை: