ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

 hirunews.lk  : அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் முறுகலை ஏற்படுத்தியுள்ள
அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய இராணுவ தளங்களில் உளவு பார்த்ததாக கூறப்படும் இராட்சத சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, தமது போர் விமானங்கள் அமெரிக்க கடல் எல்லையில் பலூனை வீழ்த்தியதை உறுதிப்படுத்தியது.
ஒரு சிறிய வெடிப்புக்குப் பிறகு பலூன் கடலில் விழுவதை அமெரிக்க தொலைக்காட்சிகளின் காணொளிகள் காட்டின.
தென் கரோலினாவின் மர்டில் கடற்கரைக்கு அருகில்,ஆழம் குறைந்த 47 அடி கடலில் இந்த பலூன் விழுந்துள்ளது.
இதனையடுத்து ஏழு மைல்களுக்கு (11 கிமீ) பரவியுள்ள குப்பைகளை மீட்க இராணுவம் இப்போது முயற்சித்து வருகிறது.
பலூனின் கண்டுபிடிப்பு ஒரு இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன் இந்த 'பொறுப்பற்ற செயல்' தொடர்பாக இந்த வார இறுதியில் மேற்கொள்ளவிருந்த சீனாவுக்கான தமது பயணத்தை உடனடியாக நிறுத்தியுள்ளார்.

எனினும் இது உளவு பார்க்கும் பலூன் இல்லை என்று தெரிவித்துள்ள சீனா, பொது பொதுமக்கள் பயன்பாட்டிற்கானது என்றும், தவறாக அது அமெரிக்க வான்பரப்பில் பிரவேசித்தது என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 28 அன்று பலூன் முதலில் அமெரிக்க வான்வெளியில் நுழைந்ததாகவும், மூன்று நாட்களுக்குப் பிறகு கனேடிய வான்வெளிக்கு நகர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜனவரி 31 அன்று மீண்டும் அமெரிக்காவுக்குள் நுழைந்ததாகவும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: