கலைமோகன் - நக்கீரன் :முதுநிலை மருத்துவ, பல் மருத்துவ
படிப்புகளில் 50 சதவீத இடங்களை ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கீடு
செய்யக்கோரி திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் முறையிடக்கோரி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன் அடிப்படையில் தற்போது முதுநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்களை ஓ.பி.சி. பிரிவினருக்கு ஒதுக்கக்கோரி திமுக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது
வியாழன், 11 ஜூன், 2020
இலங்கை தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி .. தேர்தல் ஆணைய குழு அறிவிப்பு
BBC : இரண்டு தடவைகள் பிற்போடப்பட்ட இலங்கை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை தேர்தல் ஆணைக்குழு இன்று அறிவித்தது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலை ஆகஸ்ட் மாதம் 05ஆம் தேதி நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு இன்று, புதன்கிழமை, வெளியிட்டது.
இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி கலைத்திருந்தார்.
நாடாளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானதை அடுத்து, நாடாளுமன்றத்திற்கான தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது.
கொரோனா வைரஸ் காரணமாக ரத்ததான தேர்தல்
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இடம்பெற்ற நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கமும் அதனுடன் பரவ ஆரம்பித்திருந்தது.
வேட்பு மனுத் தாக்கல் மார்ச் மாதம் 19ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மார்ச் மாதம் 20ஆம் தேதி நாடு தழுவிய ரீதியிலான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
சென்னையில் செவிலியர்கள் திடீர்ப் போராட்டம் .. பணிசுமை ஊதிய உயர்வு கோரிக்கை
மின்னம்பலம் :
பணிச்சுமைக்கேற்ற
ஊதியம் வழங்கக்கோரி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த
செவிலியர்கள் நேற்று (ஜூன் 10) திடீர்ப் போராட்டம் நடத்தினர்.
சென்னையில்
அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக,
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 4,900 படுக்கைகள் உள்ளன. இந்த
மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள்
எனப் பலர் பணி செய்து வருகின்றனர்.இந்த நிலையில் சென்னையில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால்
தங்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கப்படுகிறது. ஆனால் அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்கள், பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் நேற்று திடீர்ப் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தின்போது அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்திருந்தனர்.
கோயில்களை திறக்குமாறு இந்து முன்னணி ஒற்றை காலில் போராட்டம்
hindutamil.in/ :ராமநாதபுரம் வழிவிடு
முருகன் ஆலயம் முன்பு ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்ட இந்து
முன்னணி அமைப்பினர். படம்: எல்.பாலச்சந்தர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆலயங்களைத் திறக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பினர் 14 இடங்களில் ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆலயங்களை திறக்க தமிழக அரசு தொடர்ந்து தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் தோப்புக்கரண போராட்டங்களை நடத்தினர்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆலயங்களை திறக்க தமிழக அரசு தொடர்ந்து தடைவிதித்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் தோப்புக்கரண போராட்டங்களை நடத்தினர்.
தமிழகத்தில் இன்று 1,875 பேருக்கு கொரோனா தொற்று: 23 பேர் உயிரிழப்பு - 1372 பேர் குணமாகினர்
மாலைமலர் :தமிழகத்தில் இன்று 1875 பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று 16,829 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் இதுவரை 6,55,675 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
15,456 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மொத்தம் 6,25,312 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
15,456 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் மொத்தம் 6,25,312 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அன்பு கோச்சுக்கப் போறான். அவன் கூப்ட்டான்னா அவன் நிகழ்ச்சிக்கு முதல்ல போயிரு
டான் அசோக் :கலைஞர்
பிறந்தநாளின்போது கனிமொழி எம்.பி ஒரு பதிவு எழுதியிருந்தார். ஊரில்
இருந்து வந்த பெரியவர் ஒருவர் நேராக கலைஞர் அறைக்கு வந்து, “என்ன கண்டுக்க
மாட்டேங்குற...,” என்றாராம். சுற்றி நின்றவர்களுக்கெல்லாம் பதற்றம் தொற்றி
இருக்கிறது. கலைஞர், “உங்க ஊர்ல கூட்டத்துக்கு வந்தேன். உன்ன தேடுனேன்.
காணோமே.. எங்க போயிருந்த,” என்றாராம். இவர், “ஒரு வேலையா வெளியூர்
போயிட்டேன். அதான் உன்ன பாத்துட்டு போலாம்னு வந்தேன். நல்லாருக்கியா?” என
சாதாரணமாக அந்த உரையாடல் தொடர்ந்திருக்கிறது. அந்தப் பெரியவர் அண்ணா
காலத்தில் இருந்து கலைஞரைப் பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண திமுக
தொண்டராம். இன்று ஜெ.அன்பழகன் மறைவுக்கு உதயநிதி ஒரு அஞ்சலிக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் தலைவர் ஸ்டாலினுக்கும் ஜெ.அன்பழகனுக்குமான உறவை, அதையொட்டிய சம்பவங்களை எழுதியிருக்கிறார். எது என்றாலும் பூசிமெழுகாமல் தலைவர் ஸ்டாலினிடம் நேருக்கு நேராக ஜெ.அன்பழகன் சொல்லிவிடுவாராம். கோபம் என்றாலும் எந்த தயக்கமும் இன்றி வெளிப்படுத்திவிடுவாராம். தலைவர் ஸ்டாலினும், “அன்பு கோச்சுக்கப் போறான். அவன் கூப்ட்டான்னா அவன் நிகழ்ச்சிக்கு முதல்ல போயிரு,” என உதயநிதியிடம் சொல்வாராம்.
ஜெ. அன்பழகனின் இறுதி பேட்டி..
![]() |
| மறைந்த பத்ருசயிக் |
; இந்தியாவில் எதிர்கட்சிகளே அதிகம் உழைத்தார்கள். மக்களுக்காக தெருவில் நின்றார்கள். உதவினார்கள். போராடினார்கள். குரல் எழுப்பினார்கள். அதன் எதிரொலியாக அவர்களும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டார்கள். இந்தியாவில் இரண்டே இரண்டு கட்சிகளில் மட்டும் தான் கொரோனாவில் மக்களுக்காக நின்றதால் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. அகமதாபாத் முனிசிபாலிட்டி எதிர்க்கட்சி தலைவர் காங்கிரசை சேர்ந்த பத்ருத்சயீக், தெற்கில் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் .
அறிகுறியற்ற கொரோனா தொற்றால் ஆபத்து இல்லை – உலக சுகாதார நிறுவனம்
தினத்தந்தி :அறிகுறிகளற்ற
கொரோனாவால் ஆபத்து இல்லை, இது மற்றவர்களுக்கு பரவுவது என்பது அரிதினும்
அரிது என்ற தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் கொரோனாவின் நிலைமை மோசம் அடைந்து வருகிறது என்று எச்சரிக்கை மணி அடிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் நிருபர்களிடம் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம், இப்போது கொரோனா பரவலில் 75 சதவீதம், அமெரிக்கா மற்றும் ஆசியாவின் 10 நாடுகளில் இருந்துதான் வருகிறது என்ற தகவலை வெளியிட்டார்.
கடந்த 10 நாட்களில், 9 நாட்கள் தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது; ஒரு நாளில் (ஞாயிற்றுக்கிழமை) 1 லட்சத்து 36 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு தெரிய வந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
10 ஆயிரம் சீன ராணுவத்தினர் இந்திய எல்லையில் ..திரும்பப் பெற இந்தியா வலியுறுத்தல்
.hindutamil.in/n :எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள சீன படை வீரர்கள் 10 ஆயிரம் பேரை திரும்ப பெற வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த மே மாத தொடக்கத்தில் சீன ராணுவ வீரர் கள் அத்துமீறி நுழைந்தனர். இதன் காரணமாக மே 5, 6-ம் தேதிகளில் இரு நாடுகளின் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மே 9-ம் தேதி சீன ஹெலிகாப்டர்கள் லடாக் எல்லைக்குள் நுழைய முயன்றபோது இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்தன. இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் பதற்றம் அதிகரித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா, சீனா இடையே காணொலி காட்சி மூலம் 12 சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை சீன எல்லைப் பகுதியான மால்டோவில் நடந்தது. இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங்கும், சீன தரப்பில் மேஜர் ஜெனரல் லியூ லின்னும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Racial profiling என்ற சொல்... 'இந்த ஜாதிக்காரர்கள் இப்படித்தான் .. இனவாத பொதுப்புத்தி
இனவாதம் நீதி சாதி BlackLivesMatter

Subashini Thf : Racial profiling என்ற சொல் இப்போது ஐரோப்பிய ஊடகங்களில்
அதிகம்
ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றது. இன ரீதியாக மக்களை
அடையாளப்படுத்தி `இந்த
இனத்தவர்கள் இப்படிப்பட்ட குற்றம் செய்வார்கள்` என்ற சிந்தனையைப் பற்றி
இன்று கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்றன.
இந்தியச்சிந்தனையில்
சாதியை வைத்து 'இந்த சாதிக்காரர்கள் இப்படித்தான் செய்வார்கள்` என்ற
பொதுவார்த்தைப் பயன்பாடு இருப்பதைப் பரவலாக நாம் எல்லோருமே அறிவோம். புலம்
பெயர்ந்த தமிழர்கள் சூழலிம் கூட இந்த ்டு வருவதை நான் என் நேரடி
அனுபவத்தில் இங்கு ஜெர்மனியிலும் நிகழ்வதை அறிவேன். இப்படிப்பட்ட
சிந்தனையைத் தான் Racial profiling என்று இன்று கூறி கண்டிக்கும் வகையில்
சமூக நீதியைக் காக்க முனைபவர்களும் இனவாதத்தைக் கண்டிக்க விரும்புபவர்களும்
முன்னெடுத்திருக்கின்றார்கள்.
வார்த்தைப் பிரயோகம் வழக்கில் ஒட்டிக் கொண
ஜோர்ஜ் ப்ளோய்டின் (Georg Floyd ) மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிரான குரலின் தொடர்ச்சியாக
பெல்ஜியத்தில் மாமன்னர் இரண்டாம் லியோபர்டு அவர்களது சிலை எங்கெங்கு உள்ளதோ அவை அனைத்தையும் எவ்வளவு விரைவில் நீக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்க வேண்டும் என்று இனவாத சிந்தனையை எதிர்க்கும் போராளிகள் இயங்கத் தொடங்கியிருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் ஏறக்குறைய 10,000 போராளிகள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேரனியை நிகழ்த்தினர்.

Subashini Thf : Racial profiling என்ற சொல் இப்போது ஐரோப்பிய ஊடகங்களில்
அதிகம்
ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றது. இன ரீதியாக மக்களை
அடையாளப்படுத்தி `இந்த
இனத்தவர்கள் இப்படிப்பட்ட குற்றம் செய்வார்கள்` என்ற சிந்தனையைப் பற்றி
இன்று கேள்விகள் எழத் தொடங்கியிருக்கின்றன.
இந்தியச்சிந்தனையில்
சாதியை வைத்து 'இந்த சாதிக்காரர்கள் இப்படித்தான் செய்வார்கள்` என்ற
பொதுவார்த்தைப் பயன்பாடு இருப்பதைப் பரவலாக நாம் எல்லோருமே அறிவோம். புலம்
பெயர்ந்த தமிழர்கள் சூழலிம் கூட இந்த ்டு வருவதை நான் என் நேரடி
அனுபவத்தில் இங்கு ஜெர்மனியிலும் நிகழ்வதை அறிவேன். இப்படிப்பட்ட
சிந்தனையைத் தான் Racial profiling என்று இன்று கூறி கண்டிக்கும் வகையில்
சமூக நீதியைக் காக்க முனைபவர்களும் இனவாதத்தைக் கண்டிக்க விரும்புபவர்களும்
முன்னெடுத்திருக்கின்றார்கள். வார்த்தைப் பிரயோகம் வழக்கில் ஒட்டிக் கொண
ஜோர்ஜ் ப்ளோய்டின் (Georg Floyd ) மரணம் ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இனவாதத்திற்கு எதிரான குரலின் தொடர்ச்சியாக
பெல்ஜியத்தில் மாமன்னர் இரண்டாம் லியோபர்டு அவர்களது சிலை எங்கெங்கு உள்ளதோ அவை அனைத்தையும் எவ்வளவு விரைவில் நீக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நீக்க வேண்டும் என்று இனவாத சிந்தனையை எதிர்க்கும் போராளிகள் இயங்கத் தொடங்கியிருக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸல்ஸ் நகரில் ஏறக்குறைய 10,000 போராளிகள் இனவாதத்திற்கு எதிரான தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேரனியை நிகழ்த்தினர்.
உத்தர பிரதேசம் . கொரோனா ஒழிவதற்கு மாணவியின் நாக்கை வெட்டி பலியிட்ட ...
Sridharrajagopal :
உத்திரப்பிரதேச மாநிலம் பண்டல்கண்டில் கொரோனாவிலிருந்து ஊரைக்காப்பாற்றுகிறோம் என்று 8வது படிக்கும் மாணவியின் நாக்கை அறுத்து பூஜை நடத்திய கொடூரம்..... யானைக்குப் பொங்கிய சங்கிகளெங்கே???
விராத்கோலி, மேனகா காந்தி, பிரகாஷ் ஜவடேகர் இதற்கு பொங்கமாட்டீர்களா???.
இது மட்டுமல்ல விவேக்சர்மா என்ற ஒரு பார்ப்பனா இளைஞரும் கொரோனா நாட்டில் ஒழியவேண்டும் என்று தனது நாக்கை தானே வெட்டி சிவனுக்கு படையல் வைத்து தற்போது மருத்துவ மனையில் உள்ளார் .. பாஜக நாட்டுக்கு தந்த சொத்து இந்த முட்டாள்தனம்தான் .. மக்களை பார்ப்பனீயத்துக்கு நிரந்தர அடிமைகளாக வைத்திருப்பதற்கு திட்டங்கள் தீட்டி செயல் படுத்தியதன் விளைவுகள்தான் இவை
A 24-year-old stonecutter in India chopped off his tongue in an apparent attempt to appease a goddess and stop the spread of the coronavirus, according to reports.
Vivek Sharma, who worked with his brother Shivam and seven others at the Bhavani Mata temple in Suigam, became alarmed about the deadly disease, according to the Times of India.
His co-worker Brijesh Singh Saab Singh told authorities that Sharma, a devotee of Kali Mata, had kept chanting the deity’s name.
கண்ணீரோடு விடை தருகிறோம்! எஸ்.எஸ்.சிவசங்கர்.
சிவசங்கர் எஸ்எஸ் :
எழுந்து
நின்று இடுப்பு பெல்ட்டை சரி செய்கிறார் என்றால், அண்ணன் ஜெ.அன்பழகன்
சண்டை செய்ய போகிறார், களத்தில் குதிக்கப் போகிறார், தன் பணியைத் துவக்கப்
போகிறார் என்று அர்த்தம். அந்த நேரத்தில் பார்த்தால், உடல்நிலை பிரச்சினை
உள்ளவர் போலவே தெரியாது. துள்ளி எழும் இளைஞனாக காட்சி அளிப்பார்.எதிரில் நிற்பவர் யாராக இருந்தாலும், தயக்கமே இருக்காது அவருக்கு, தன் கருத்தை எடுத்து வைக்க. அது ஆளும் முதலமைச்சராக இருந்தாலும் சரி, வானளாவிய அதிகாரம் கொண்ட சபாநாயகராக இருந்தாலும் சரி. விளைவுகள் குறித்தெல்லாம் கவலைகள் இருக்காது.
அவ்வளவு ஏன், தன் உள்ளம் எல்லாம் நிறைந்த கழகத் தலைவரிடமும் தன் கருத்தை சொல்லி விடுவார், அது எதிர்கருத்தாக இருந்தாலும். ஆனால் அது கழக வளர்ச்சிக்கான கருத்தாகத் தான் இருக்கும்.
சட்டமன்றத்தில், 2011 - 2016 காலகட்டத்தில் அவரோடு பணியாற்றுகின்ற இனிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அப்போது, அவரது அதிரடி நடவடிக்கைகளை காணுகின்ற வாய்ப்பு அமைந்தது. அழுந்த திருத்தமாக வாதங்களை வைப்பார். எத்தனை எதிர் குரல்கள் வந்தாலும் தயங்க மாட்டார்.
அப்போது ஜெயலலிதா முதலமைச்சர். இரும்பு பெண்மணியாக எண்ணி, அ.தி.மு.கவினர் அவரை கண்டு அஞ்சி நிற்கும் நேரத்தில், இயல்பாக அவரை எதிர் கொள்வார் அண்ணன் அன்பழகன்.
பணிய மொழி தமிழ் சொற்களஞ்சியம் தொகுப்பு.. வயநாடு, எரநாடு, கள்ளிக்கோட்டை, கோட்டயம்
Murugesan Maruthachalam : பணிய மொழி தமிழ் சொற்களஞ்சியம் தொகுப்பு பணியர்:- இவர்கள் கறுத்த உருவமும் அகன்ற மூக்கும் சுருண்ட மயிரும் உள்ள சாதியார். இவர்கள் வயநாடு, எரநாடு, கள்ளிக்கோட்டை, கோட்டயம் முதலிய காபித் தோட்டங்களில் வேலை செய்து அடிமைகளாக உள்ள சாதியார். இவர்கள் ஆப்பிக்காவிலிருந்து இங்கு வந்து குடிபுகுந்தவராகக் கூறப்படுகின்றனர். இவர்களின் பெண்களும் கிழங்கு முதலிய தோண்டித் தின்று வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் நம்பிக்கையுள்ள வேலையாட்கள். (தர்ஸ்டன்)
- அபிதான சிந்தாமணி பதிவு பக்கம் 1235.<
கத்துக்காரன் - தபால்காரர்,
பைசெபைங்குத்தாளு - நடத்துனர்,
படிபலிக்குஞ்ஞாளு - சுங்கச்சாவடி அதிகாரி,
பண்டி ஓட்டுத்தாளு - ஓட்டுனர்,
அடிச்சுபாராளி - தூய்மை பணியாள்,
ஆளு - ஜனம்,
ஏமக்காற - காமுகன், கமக்காரன் (ம).
புதன், 10 ஜூன், 2020
தூக்கிவிடக்கூட ஆளின்றி கிடந்த பாடகர் டி.எம்.சௌந்தரராஜனின் சகோதரர்!!! -
nakkheeran.in - அண்ணல் :
இசை உலகில் கொடிகட்டிப் பறந்த டி .எம்.சௌந்தரராஜனின் சொந்த தம்பி கலைமாமணி
விருது பெற்ற டி.எம்.கிருஷ்ணமூர்த்தி உதவிக்கு ஆளின்றி ஆட்சியர் அலுவலக
வளாகத்தில் ஆதரவின்றி கிடந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியது.
இசை உலகில் தனி சாம்ராஜ்யம் நடத்தி இன்றுவரை
தனக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டி.எம் சௌந்தர்ராஜன். இவர்
சினிமாவிற்கு வருவதற்கு முன்பே 1944 இல் இவரது சகோதரரான
டி.எம்.கிருஷ்ணமூர்த்தி உடன் இசை கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார்.
டி.எம்.எஸ்ஸை விட நான்கு வயது இளையவரான டி.எம்.கிருஷ்ணமூர்த்தி மிருதங்க
வித்துவானாக ஜொலித்தவர். குறிப்பாக அவரது சகோதரர் டி.எம்.எஸ்க்கு இசை
ரீதியாக உதவிகள் செய்தவர். அவரது இசை சேவையை பாராட்டி கடந்த 2003 ஆம் ஆண்டு
தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.சிபிஎஸ்இ தேர்வுகளும் ரத்து செய்யப்படுமா?
மின்னம்பலம் :
தமிழகத்தில்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,
சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் பொதுத் தேர்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடத்துக்கான பொதுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பல்வேறு மாநிலங்களும் பொதுத் தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை: லடாக் எல்லையில் வாழும் மக்களின் நிலை என்ன? BBCGroundReport
ஆமீர் பீர்சாதா, பிபிசி செய்தியாளர் - ரிங்ச்சேன் அங்கமோ சுமிக்சன், சுயாதீன பத்திரிகையாளர் :
BBC :கிழக்கு லடாக்கில் இந்தியா - சீனா இடையே கடந்த சில வாரங்களாக ராணுவப் பதற்றம் நிலவி வந்தப் பகுதியில் உள்ள பல நிலைகளில் இருந்து இரு நாட்டு ராணுவங்களும் பின்வாங்கியுள்ளன. இந்தியா - சீனா இடையே ராணுவ மட்டத்திலான இரண்டாவது பேச்சுவார்த்தை இந்தவாரம் தொடங்கவுள்ள நிலையில் இது நிகழ்ந்துள்ளது. இதனால், இப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்திருப்பதாகத் தோன்றுகிறது.
இந்தப் பதற்றத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ, பிரதேசக் கட்டுப்பாடு, எல்லை சார்ந்த பிரச்சனைகள் ஒருபுறம் முன்னெழுந்தாலும், மறுபுறம் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே வாழும் மக்கள் வாழ்வில் ஏற்பட்ட நிச்சயமின்மையும், பதற்றமும் பெரிதும் பதிவாகவில்லை.
இந்த ராணுவப் பதற்றம் எல்லையோர மக்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? அவர்களுக்கு ஏற்பட்ட நடைமுறைப் பிரச்சனைகள் என்னென்ன? இருநாட்டுப் பிரச்சனையில் அவர்கள் நிலை என்ன? இந்தக் கேள்விகளை அலசுகிறது களத்தில் இருந்து திரட்டப்பட்ட இந்த செய்திக் கட்டுரை.
BBC :கிழக்கு லடாக்கில் இந்தியா - சீனா இடையே கடந்த சில வாரங்களாக ராணுவப் பதற்றம் நிலவி வந்தப் பகுதியில் உள்ள பல நிலைகளில் இருந்து இரு நாட்டு ராணுவங்களும் பின்வாங்கியுள்ளன. இந்தியா - சீனா இடையே ராணுவ மட்டத்திலான இரண்டாவது பேச்சுவார்த்தை இந்தவாரம் தொடங்கவுள்ள நிலையில் இது நிகழ்ந்துள்ளது. இதனால், இப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வந்த பதற்றம் சற்று தணிந்திருப்பதாகத் தோன்றுகிறது.
இந்தப் பதற்றத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ, பிரதேசக் கட்டுப்பாடு, எல்லை சார்ந்த பிரச்சனைகள் ஒருபுறம் முன்னெழுந்தாலும், மறுபுறம் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே வாழும் மக்கள் வாழ்வில் ஏற்பட்ட நிச்சயமின்மையும், பதற்றமும் பெரிதும் பதிவாகவில்லை.
இந்த ராணுவப் பதற்றம் எல்லையோர மக்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? அவர்களுக்கு ஏற்பட்ட நடைமுறைப் பிரச்சனைகள் என்னென்ன? இருநாட்டுப் பிரச்சனையில் அவர்கள் நிலை என்ன? இந்தக் கேள்விகளை அலசுகிறது களத்தில் இருந்து திரட்டப்பட்ட இந்த செய்திக் கட்டுரை.
அரசு உங்களை காப்பாற்றாது .... சவுக்கு சங்கர்
savukkuonline.com :
சென்னையில்
நாளுக்கு நாள் நோய்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் என்ன
நடக்கிறது, என்ன நடக்கவிருக்கிறது என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இந்தக் குழப்பத்தைத் தடுத்து , மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய
இடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். ஆனால் அவருக்கு இந்த
நோய் எத்தகையது, எப்படி பரவுகிறது, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது
குறித்து துளியாவது அறிவிருக்கிறதா என்று தெரியவில்லை. தொடக்கத்தில்,
நோய் வயதானவர்களைத்தான் தாக்கும் என்றார். பின்னர் மூன்றே நாட்களில் நோய்
தொற்று பூஜ்யத்தைத் தொடும் என்றார். பிறகு, இது பணக்காரர்களை தாக்கும்
நோய்’ என்றார். இப்போது நோய் பரவ பொதுமக்கள்தான் காரணம் என்கிறார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக முதல்வர் பேசி வருகிறார்.
சென்னையில்
நாளுக்கு நாள் நோய்தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் என்ன
நடக்கிறது, என்ன நடக்கவிருக்கிறது என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள்.
இந்தக் குழப்பத்தைத் தடுத்து , மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய
இடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். ஆனால் அவருக்கு இந்த
நோய் எத்தகையது, எப்படி பரவுகிறது, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது
குறித்து துளியாவது அறிவிருக்கிறதா என்று தெரியவில்லை. தொடக்கத்தில்,
நோய் வயதானவர்களைத்தான் தாக்கும் என்றார். பின்னர் மூன்றே நாட்களில் நோய்
தொற்று பூஜ்யத்தைத் தொடும் என்றார். பிறகு, இது பணக்காரர்களை தாக்கும்
நோய்’ என்றார். இப்போது நோய் பரவ பொதுமக்கள்தான் காரணம் என்கிறார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக முதல்வர் பேசி வருகிறார்.
Video Player
00:00
01:02
ஒரு
முதல்வருக்கு அனைத்து விவகாரங்களும் தெரிந்திருக்க வேண்டும் என்பது
அவசியமில்லை. அது சாத்தியமும் இல்லை. அவருக்கு வழிநடத்தவும், ஆலோசனை
சொல்லவும் தான் படித்த அதிகாரிகள் இருக்கிறார்கள். ஒரு முதல்வரின் பணி,
இது போன்ற சிக்கலான காலகட்டத்தில் சரியான அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதும்
தான்.ஜெ.அன்பழகன் என்னை வெளியே போகாதீங்கனு சொன்னார்: ஸ்டாலின்
மின்னம்பலம் :
ராணுவ வீரரின் தியாகத்துக்கு இணையானது அன்பழகனின் தியாகம் என்று ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று (ஜூன் 10) உயிரிழந்தார். இந்தியாவிலேயே மக்கள் பிரதிநிதி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தது இதுதான் முதல்முறை. அன்பழகன் உடல் கண்ணம்மாப்பேட்டை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பெற்றோர் நினைவிடத்திற்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.
அரசின் வழிமுறைகள் காரணமாக மயானம் வருவதைத் தவிர்த்த திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்பழகன் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ஸ்டாலின் உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திரு. ஜெ. அன்பழகன் காலமானார் .. சென்னை மருத்துவ மனையில் திமுக எம் எல் ஏ...
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார். கடந்த 10 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார். கடந்த 10 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விடுதலை புலிகளால் கொல்லப்பட்ட 67 கிழக்கு தளபதிகளும் பொறுப்பாளர்களும் ........
Reginald Rgi : கருணாவின் பிளவுக்கான காரணங்களை பார்ப்போம் அதன்பின் பிள்ளையான் பிளவைப் பார்ப்போம்.2004.01.01 அன்று கிழக்கில் நடந்த வருடப்பிறப்பு வைபவத்தில் கிழக்கு படையணிகள் மத்தியில் கருணா அம்மான் உரையாற்றும் போது "எனக்கு தலைவருடன் சேர்ந்து கொஞ்சவேலைகள் இருக்கின்றது இனி உங்களை ரோமியோசேரா' (கேணல் ரமேஷ் ) மற்றும் ராபேட் ( 15 ) தான் வழிநடத்துவார்கள் என்று கூறினார் இதன் கருத்து என்னவென்றால் விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டமைப்பில் தலைவர் பிரபாகரன் பாரிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்த இருந்தார் இதன் அடிப்படையில் தமிழீழ கூட்டுப்படைத் தளபதியாக கேணல் கருணா நியமிக்கப்பட இருந்தார் இது இவ்வாறு நிகழுமாயின் புலிகளின் இரண்டாம் நிலைக்கு கருணாவே வரக்கூடிய வாய்ப்பு இருந்தது ஆனால் புலிகளின் முக்கிய மூன்று தளபதிகள் மத்தியில் இரண்டாம் நிலைத் தளபதிகளுக்காக பனிப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது
உதாரணமாக பொட்டம்மான் தலைமையில் ஒன்றுகூடல் வைத்தால் கடற்புலிகளின் தளபதி சூசை செல்லமாட்டார் ஏனெனில் சூசை பொட்டம்மானுக்கு கீழ்ப்பட்டவராக வந்து விடுவார் என்று இதே போன்று சூசையினால் ஒருங்கிணைக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு பொட்டம்மான் செல்லமாட்டார் இதற்கெல்லாம் ஆப்பு வைத்தாற்போல சமாதான காலத்தில் தலைவர் வந்து உரையாற்றவிருந்த கலந்துரையாடலில் தலைவருக்குப் பதிலாக கருணாம்மான் வந்து உரையாற்றியது மற்றைய தளபதிகள் மத்தியில் மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தன
சிவகுமாரை சீண்டி சீண்டி ஆதிக்க அசிங்கங்களை தூசிதட்டி, துவைத்து...துவசம் ..
சாவித்திரி கண்ணன் :
இன்னும் என்னவெல்லாம் செய்வீர்களோ,செய்து பாருங்கள்!ஆனால்,அந்த மனிதனை களங்கப்படுத்துவதாக நினைத்து கண்ணியப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்…! அவரை அவதூறு செய்யத் துணிந்த,மற்றும் தூண்டிவிட்ட ஆதிக்க சக்திகளின் கறைபடிந்த அசிங்கங்களை மக்கள் தற்போது தூசிதட்டி எடுத்து,துவைத்துப் போடுகிறார்கள்….!
ஆளாளுக்கு திருப்பதியிலும், இன்னும் பல கோயில்களிலும் தாங்கள் சந்திக்க நேர்ந்த அவலங்களையும்,பாகுபாடுகளையும் சொந்த அனுபவத்திலிருந்து பேசி கொந்தளிக்கின்றனர்….! அவர் என்ன இல்லாதையா சொல்லிவிட்டார்…? இன்னும் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கிறதே…!
யார் ஒருவரும் இயல்பாகக் கூட பேச முடியாதபடிக்கு எதற்கெடுத்தாலும், மிரட்டல்,வழக்கு, அவதூறுகள்.. என்பதாக சமூகத்தை சகிப்புத் தன்மையற்றதாகவும், மதவெறி,மற்றும் துவேச உளவியலுடன் வளர்த்தெடுக்க திட்டமிட்டு ஆதிக்க சக்திகள் இயங்கி கொண்டுள்ளனர்.
கோயில்களுக்கு மன அமைதி வேண்டி பக்தன் செல்கிறான்.அந்த வகையில் இந்த சமூகத்திற்கு கோயில் என்ற நிறுவனம் இன்றியமையாததாக உள்ளது! ஆனால்,அந்த கோயில்கள் என்பவை காலங்காலமாக பொருளாதார கேந்திரங்களாகவும், சமூக பாகுபாடுகளை நிலை நிறுத்திக் கொள்ளும் களமாகவும் இருப்பதை மக்கள் உணராமல் இல்லை.
செவ்வாய், 9 ஜூன், 2020
பாதிரியார்கள் கைப்படாத யாராவது நம்மிடம் இருக்கிறார்களா?” - லூசி களப்புரா.
இளஞ்செழியன் :
“பாதிரியார்கள் கைப்படாத யாராவது நம்மிடம் இருக்கிறார்களா?” - லூசி களப்புரா.“கன்னியர் மடங்களில் கண்கலங்கும் சகோதரிகளின் குரல்கள் என் காதுகளை எட்டுகின்றன. ஆண் மேலாதிக்கத்திற்கும், பாதிரியார்களின் ஏகாதிபத்தியத்திற்கும் அடிமையாக இருக்கின்ற சகோதரிகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக என்னுடைய எழுத்து அமையும் என நம்புகிறேன்” என்கிற கத்தோலிக்க சகோதரி லூசி களப்புராவின், “கர்த்தரின் நாமத்தில்” நூலினை வாசித்து முடித்தேன்.
கத்தோலிக்க கிறித்தவர்களைப் பொறுத்தளவில், சேவை செய்வதற்கு ஒரேயொரு வழி
பெண்கள் கன்னியராகவும், ஆண்கள் பாதிரியராகவும் ஆக்குவதுதான். அப்படித்தான்
ஒரு கதையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மேலும், பொருளாதார பாரத்தைத்
தாங்க இயலாத பெற்றோர்கள், ‘இறைவா, என்னுடைய குழந்தையை உமக்கு
காணிக்கையாக்கி விடுகிறேன்’ என்பார்கள். அந்த குழந்தையின் விருப்பத்தை
அறியாமலேயே சபைக்கு அனுப்பி விடுவார்கள்.
சென்னை கூடுதலாக 1,500 படுக்கைகள்.. அரசு மருத்துவமனைகளில்
தினமலர் : சென்னையில் உள்ள,அரசு மருத்துவமனைகளில், கொரோனா பிரிவுகளில், நோயாளிகள் கூட்டம் நிரம்பி வருவதால்,கூடுதலாக,1,500 படுக்கை வசதிகளை, மருத்துவமனைகள் ஏற்படுத்தி வருகின்றன.
சென்னையில், கொரோனாவால், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில், 11 ஆயிரம் பேர் வரை சிகிச்சையில் உள்ளனர். இதில், கொரோனா முதல் நிலை பாதிப்புடைய, ஆபத்தில்லாத நோயாளிகள், 5,000க்கும் மேற்பட்டோர், கொரோனா தடுப்பு சிறப்பு மையங்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.நாள்பட்ட நோயாளிகள், முதியவர்கள் என, 6,000க்கும் மேற்பட்டோர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளை திரும்பப்பெற உச்சநீதிமன்றம் உத்தரவு!!
ஜெ. அன்பழகன் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் ...

nakkheeran.in - இரா. இளையசெல்வன் :
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி
வருகிறார் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான
ஜெ.அன்பழகன். சிகிச்சை அளித்து வரும் ரேலா மருத்துவமனை நிர்வாகம், நேற்று
அறிவித்த அறிவிப்பில், 'முன்னேற்றம் அடைந்திருந்த அவரது உடல்நிலை
மோசமடைந்துள்ளது. கவலைக்கிடமாக இருக்கிறார் ' என தெரிவிக்கப்பட்டது.அன்பழகனின் உடல்நிலை குறித்து அறிந்த, தெலுங்கான கவர்னரும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை செளந்திரராஜன் , ஹைதராபாத்தில் இருந்து கரோனாவுக்கான முக்கிய மருந்தினை வாங்கி ரேலா மருத்துவமனைக்கு இன்று அனுப்பி வைத்துள்ளார். கரோனாவுக்கான முதல் மருந்து கண்டுப்பிடிப்பை ஹைதராபாத் கண்டறிந்துள்ளது. அந்த மருந்தினைத்தான் தெலுங்கானா மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தரப்பட்டு வருகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

