வியாழன், 11 ஜூன், 2020

10 ஆயிரம் சீன ராணுவத்தினர் இந்திய எல்லையில் ..திரும்பப் பெற இந்தியா வலியுறுத்தல்

india-wants-china-to-de-induct-its-10-000-troops-heavy-weapons-deployed-along-the-lac.hindutamil.in/n :எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள சீன படை வீரர்கள் 10 ஆயிரம் பேரை திரும்ப பெற வேண்டும் என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த மே மாத தொடக்கத்தில் சீன ராணுவ வீரர் கள் அத்துமீறி நுழைந்தனர். இதன் காரணமாக மே 5, 6-ம் தேதிகளில் இரு நாடுகளின் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மே 9-ம் தேதி சீன ஹெலிகாப்டர்கள் லடாக் எல்லைக்குள் நுழைய முயன்றபோது இந்திய போர் விமானங்கள் விரட்டியடித்தன. இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் பதற்றம் அதிகரித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா, சீனா இடையே காணொலி காட்சி மூலம் 12 சுற்று பேச்சு வார்த்தைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 6-ம் தேதி இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை சீன எல்லைப் பகுதியான மால்டோவில் நடந்தது. இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங்கும், சீன தரப்பில் மேஜர் ஜெனரல் லியூ லின்னும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இருதரப்பு பேச்சுவார்த்தை குறித்து மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணித்து அமைதி வழியில் பிரச்சினைக்கு தீர்வு காண சீனாவும் இந்தியாவும் சம்மதித்துள்ளன. தூதரக ரீதியிலும் ராணுவ ரீதியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதனால் லடாக் எல்லையில் இருந்து சீன படைகள் படிப்படியாக வாபஸ் பெறப்படும் என்று தகவல் வெளியானது. இந்தநிலையில் மத்திய அரசு தரப்பு வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:
ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் ஜூன் 6-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பிலும் எல்லையில் இருந்து ராணுவ வீரர்களை திரும்பப் பெறுவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் லடாக் உள்ளிட்ட 3 பகுதியில் மட்டும் சீனா 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்து வைத்துள்ளது.
இதனை திரும்ப பெற வேண்டும். அப்போது மட்டுமே அமைதி திரும்பும். இந்தியா தரப்பிலும் வீரர்களை திரும்ப பெற தயார். ஆனால் இதற்கு சீனாவும் ஒத்துழைக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: