

இந்த நிலையில் சென்னையில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால்
தங்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கப்படுகிறது. ஆனால் அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்கள், பணியாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் நேற்று திடீர்ப் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தின்போது அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்திருந்தனர்.
போராட்டம் குறித்து செவிலியர் ஒருவர் கூறும்போது, “தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 400 கொரோனா நோயாளிகள் உள்ளனர். அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்கு 20 செவிலியர்கள் மட்டுமே இருக்கிறோம். இதன் காரணமாக எங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கூடுதல் நேரம் பணியாற்றுகிறோம். எனவே பணிச்சுமைக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும்” என்றார்.
இதையடுத்து மருத்துவமனை டீன் டாக்டர் நாராயணபாபு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை கடிதம் ஒன்றை மருத்துவமனை டீன் டாக்டர் நாராயணபாபுவிடம் கொடுத்தனர்.
-ராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக