
தற்பொழுது 94 வயதான டி.எம்.கிருஷ்ணமூர்த்தி, 91 வயதான தனது மனைவியுடன் ஒத்தக்கடை அருகே நரசிங்கம் அப்பகுதியில் வசித்து வருகிறார். கலைமாமணி விருது பெற்றதற்காக தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் 2500 ரூபாயை நம்பியே இருவரும் குடும்பம் நடத்தி வருகின்றனர்.
அதற்கான ஓய்வூதிய புதுப்பிப்பு இந்த மாதத்துடன் நிறைவு பெறுவதால் அதை புதுப்பிப்பதற்காக ஒத்தக்கடை பகுதியிலிருந்து அரசு பேருந்து மூலம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று காலை வந்தார்.
நிற்க முடியாத அளவிற்கு முதுமை காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சாலையில் மயங்கி விழுந்தார். தூக்க ஆளின்றி நீண்ட நேரம் கூச்சலிட்டுக் கொண்டு இருந்த அவரை அங்கிருந்தவர்கள் கரோனா அச்சத்தால், தூக்கிவிட ஆளின்றி அரை மணி நேரத்துக்கும் மேலாக பலரையும் உதவிக்கு அழைத்து கூச்சலிட்டுக் கொண்டு இருந்தார்.
பின்னர் சிலர் தூக்கி விசாரித்தபோது வந்த காரணத்தைக் கூறினார். ஓய்வுதியம் புதுப்பிக்கும் பணி அடுத்த மாதம் நடைபெறுவதால் சென்று வருமாறு மாவட்ட கருவூல பணியாளர்கள் அவரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு இருந்த தன்னார்வலர் ஒருவர் ஆட்டோ மூலம் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்க பண உதவி செய்து அனுப்பிவைத்தார். ஆதரவின்றி முதுமையில் பிரபலங்கள்கூட தவித்து வருவது வேதனை ஏற்படுத்துகின்றது. கரோனா நோயைக் காரணம் காட்டி மனிதநேயம் மடிந்து போனது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக