மாலைமலர் :
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள
நிலையில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும்,
வெளியில் வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடிய சாலைபுதுடெல்லி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி
கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை
* மீன்பிடித் தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி
* தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்திப் பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்
* பால் உற்பத்தி மற்றும் விநியோகம் வழக்கம் போல நடைபெறலாம்
* ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி வங்கிகள், ஏ.டி.எம்-கள் செயல்படும்















