திங்கள், 13 ஏப்ரல், 2020

சடலங்களை புதைக்க இடமில்லாத நிலையில் கல்லறைகளாக மாறும் பூங்காக்கள் ?: அமெரிக்காவில் அவலம்

வீரகேசரி : ஒட்டு மொத்த உலகையே அச்சத்தில் உறையச் செய்துள்ளது உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ். கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் மிக மோசமாகி வருகின்ற நிலையில், நியூயோர்க்கில் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
அங்கு சடலங்களை புதைக்க கூட இடம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது பூங்காக்களை கல்லறைகளாக மாற்ற யோசனை செய்து வருகிறார்கள். அமெரிக்காவில் இதுவரை 551,081 பேர் பாதிக்கப்பட்டும், 22,105 பேர் உயிர்ழந்து  உள்ளனர்.
இதிலும், உலகிலேயே மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக நியூயோர்க் உருவெடுத்து உள்ளது இந்நிலையில் நியூயோர்க் மாகாணத்தில் கொரோனாவினால் பலர் பலியாகி வருவதால் அங்கு சடலங்களை புதைக்க கூட இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கு தினமும் சராசரியாக 800 பேர் வீதமானோர் இறந்துள்ளார்கள .
அங்குள்ள பெரிய கல்லறைகள் எல்லாம் இப்போதே சடலங்களை புதைக்க இடம் இன்றி காணப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. அத்தோடு, ஏற்கனவே 2 ஆயிரம் பேருக்கும் அதிகமான உடலை வைத்தியசாலையில் ஐஸ் பெட்டிகளுக்கு வைத்து உள்ளனர். வெளியே புதைக்க இடம் இல்லாத காரணத்தால் இந்த உடல்களை புதைக்காமல் வைத்து இருக்கிறார்கள். நியூயோர்க்கில் சடலங்களை புதைக்க இடம் இல்லாத காரணத்தால் அங்கு அருகே இருக்கும் மாகாணங்களில் உடல்களை புதைக்க திட்டமிட்டு வருகிறார்கள். மேலும், நியூயோர்கிலுள்ள பெரிய மற்றும் சிறிய கல்லறைகள் அனைத்திற்கும் தினமும் 80-90 சடலங்கள் வருவதாக அங்கு பணியாற்றும் நபர்கள் தெரிவிக்கிறார்கள்

சேலத்தில் 70 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு!

Salemnakkheeran.in - இளையராஜா : சேலத்தில் கரோனா நோய் தொற்றின் பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்களாக சந்தேகிக்கப்படும் 70 இடங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே செல்லவும், வெளிநபர்கள் இப்பகுதிகளுக்குள் நுழையவும் கடுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஏப். 13ம் தேதி நிலவரப்படி, 18 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாநகரில், கரோனா நோய்த்தொற்று உள்ளவர்களிடம் நேரடி, மறைமுக தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன.
>தடை செய்யப்பட்ட பகுதிகள் விவரம் வருமாறு: ]
சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 2வது வார்டில் அம்மாபாளையம் மெயின் ரோடு, கே.கே. நகர், பொன் நகர், 19வது வார்டில் ஆசாத் நகர், தர்மன் நகர், சுப்ரமணிய நகர், அம்மாபாளையம் மெயின் ரோடு ஆகிய 7 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சடலம் மூலம் வைரஸ் பரவுமா? மக்கள் போராட்டம்!

சடலம் மூலம் வைரஸ் பரவுமா? மக்கள் போராட்டம்! மின்னம்பலம் : கொரோனா தொற்று மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் பீதி சென்னை அம்பத்தூர் பகுதியில் இன்று (ஏப்ரல் 13) போராட்டமாகவே வெடித்திருக்கிறது.
ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னையில் எலும்பு முறிவு நிபுணராக பணியாற்றி வருகிறார். கடந்த பத்து நாட்களுக்கு முன் அவருக்கு காய்ச்சல் அதிகமாக ஏற்படவே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. அவர் மட்டுமல்லாமல் அவர் மனைவி, குடும்பத்தினர் என மூவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. நேற்று இரவு அந்த மருத்துவர் மரணமடைந்துவிட்டார். 60 வயதான அவரது உடலை சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி, தனியார் மருத்துவமனைப் பணியாளர்கள் அம்பத்தூர் மின் மயானத்துக்கு ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த மயான ஊழியர்கள், ‘எங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை. எனவே இந்த உடலை நாங்கள் தகனம் செய்யமாட்டோம்’ என்று கூறினார்கள். அதற்குள் அம்பத்தூர் மின் மயானம் அமைந்திருந்த பகுதியில் குடியிருப்பவர்கள், ‘கொரோனாவால் உயிரிழந்தவரை இந்த பகுதியில் தகனம் செய்யக் கூடாது’ என்று திடீரென எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னையில் 208 பேருக்கு கொரோனா... பீலா ராஜேஷ் சுகாதார செயலர்

tamil.samayam.com : பீலா ராஜேஷ் தமிழகத்தில் இன்று 98 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றோடு 1,173 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 58 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 11 பேர் இறந்துள்ளனர். மொத்தம் 63,380 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ளது. வீட்டு கண்காணிப்பில் 33,850 பேரும் 136 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர். திருப்பூரில் இன்று ஒரே நாளில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 208 பேர் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது.

மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க தனியாருக்கு தடை .. கொரோனாவை விட மோசமான எடப்பாடி மோடி கூட்டணி

nakkheeran.in - இரா. இளையசெல்வன் : ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம்
இழந்து தவிக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்டுவரும் நிவாரண உதவிகளுக்கு எடப்பாடி அரசு தடை
விதித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. இந்த தடை உத்தரவுக்கு பின்னணியில் அரசியல் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்!
கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க தேசிய ஊரடங்கை மத்திய அரசும், 144 தடை உத்தரவை எடப்பாடி அரசும் அமல்படுத்தியிருக்கின்றன. இதனால் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கிறார்கள். ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அவர்களுக்கான அன்றாட அத்யாவசிய பொருட்களை தமிழக அரசியல்கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஒவ்வொரு பகுதிகளிலும் வழங்கி வருகின.
இந்த நிவாரண உதவிகளுக்குத்தான் தற்போது தடைவிதித்திருக்கும் எடப்பாடி அரசு, ’’ நிவாரண உதவிப் பொருட்களை வழங்கும் சேவையிலிருந்து அரசியல்கட்சிகளும் தொண்டு நிறுவனங்களும் விலகிக்கொள்ள வேண்டும். நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அலுவலர்களிடம் கொடுக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது ஊரடங்கு சட்டத்தை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும் ‘’ என உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசின் தடை பட்டினி சாவுக்கு வழிவகுக்கும்: அரசியல் கட்சிகள்!


அரசின் தடை பட்டினி சாவுக்கு வழிவகுக்கும்: அரசியல் கட்சிகள்!மின்னம்பலம் : கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் இந்த சூழலில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகின்றனர். இந்நிலையில், “பொதுமக்களை நேரடியாக அணுகி இதுபோன்று நிவாரணம் வழங்குவது 144 தடை உத்தரவு விதியினை மீறும் செயலாகும். விதி மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தமிழக அரசு சார்பில் நேற்று (ஏப்ரல் 12) அறிவிப்பு வெளியிடப்பட்டது.

புலிகள் ஒழுக்க சீலர்கள் என்பது வலிந்து திணிக்கப்பட்ட மாயை.?

அன்ரன் பாலசிங்கம் கூறினால் மந்திரம், செல்வி கூறினால் தந்திரமா? பீமன்
.ilankainet.com :புலிகளால் வெருகலில் மேற்கொள்ளப்பட்ட கொடுஞ்செயல்களை நினைவுட்டும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பெண்களணித் தலைவி செல்வி மனோகரன் பதிவொன்றை இட்டிருந்தார். அந்தப்பதிவில் கிழக்கினை ஆக்கிரமித்த வன்னிப்புலிகள் எமது பெண்களை 'கதறக் கதற கற்பழித்திருந்தனர்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்பதிவின் பின்னர் புலிவியாபாரிகளும் , புலிவாலில் தொங்கிக்கொண்டிருக்கும் அரசியல் அநாதைகளும், அவரது கருத்துச்சுதந்திரத்திற்கு சவால் விட்டு , பதிவையே நீக்கிகொள்ளுமளவுக்கு உளவியல் தாக்கமொன்றை கொடுத்ததை அவதானிக்க முடிந்தது.
தமிழர் தேசத்தில் கருத்துச்சுதந்திரக்கிற்கு ஏற்படுத்தப்பட்டிருந்த அச்சுறுத்தலே தமிழ் மக்களின் இன்றைய அவலநிலைக்கு காரணமாகும். 'சுவருக்கும் காதுண்டு' என பீதியை ஏற்படுத்தி மக்களை வாயடைக்கச் செய்ததன் ஊடாக புலிகளின் பேயாட்டம் மேலோங்கியது. மக்களால் எதிர்ப்புக்காட்ட முடியாது போனது, அராஜகத்திற்கு எதிராக அணி திரள முடியாது போனது.

இந்த அவல நிலையை தொடர்ந்தும் கொண்டுசெல்வதற்கு தமிழ் மக்களின் சாபக்கேடுகளான சில கோடாரிக்காம்புகள் ஊடகம் என்ற போர்வை போர்த்திக்கொண்டு இன்றும் செயற்பட்டுவருகின்றார்கள்.
உண்மைகள் இயற்கையாக வெளிவரும் தன்மை கொண்டவை. செல்வியின் இப்பதிவை வைத்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை வீழ்த்தநினைக்கின்றனர் அரசியல் அநாதைகள். ஆனாலும் புலிகள் ஏப்ரல் 10 ம் திகதியன்று பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார்கள், பெண்புலிகளின் அந்தரங்க உறுப்புக்களில் சுட்டு வினோதமடைந்தார்கள், அவர்களது உடைகளை களைந்துவிசீ வெயிலில் காயப்போட்டார்கள் என்பதெல்லாம் இன்றுவரை புலிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள். 

மேம்பாலங்களுக்கு கீழே.. சாலை ஓரங்களில்.... குடிசைகளில் இனி பட்டினியில் சாக வேண்டியது தானா…?

சாவித்திரி கண்ணன் : பேரதிர்ச்சியாக இருக்கிறது…!
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக தனியார்களோ, அமைப்புகளோ நிவாரணப் பொருட்கள் வழங்க கூடாதாம்!
தமிழக அரசு அறிவித்துள்ளது! எல்லோரும் காசையும்,பொருளையும் அரசுக்கு கொடுத்துட்டு,சும்மா கையக்கட்டிக் கெடக்கணுமாம்!
இப்பவும் உணவின்றி லட்சோபலட்சம் மக்கள் ரோட்டோரங்களில் எங்கெங்கும் சுருண்டு படுத்திருக்கிறார்கள்…!இதை களப்பணியில் உள்ள அனைத்து நிருபர்களும் அறிவார்கள்,காவல்துறையும் அறியும்!
இவர்கள் இது நாள் வரை அரைகுறை வயிற்றுடனாவது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு தனிப்பட்ட பலரின் மனிதநேயமே காரணம்!
இன்னும் பிளாட்பாரங்களில், சாலை மேம்பாலங்கள் அடியில்,எம்.ஆர்.டி ரயில்வே மேம்பாலம் அடியில், ஓலைகுடிசைகளில், ஓட்டுவீடுகளில், குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகளில் வேலையிழந்தவர்களாக வாழும் கோடானுகோடி எளியமக்கள், இனி பட்டினியில் சாக வேண்டியது தானா…?

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

தமிழகத்தின் ஒட்டு மொத்த சீரழிவை ... மக்கள் நல கூட்டணியின் துரோக வரலாறு ,

LR Jagadheesan : எனக்குத்தெரிந்தவரை பொதுசுகாதாரம் இன்னமும் மாநில அதிகாரத்துக்கு உட்பட்டது. ஆனால் ஒரு கொள்ளைநோய்க்கான சிகிச்சையளிக்கும் மருத்துவர், செவிலியர் மற்றுமுள்ள க 50 ஆண்டுகாலம் வாழும் வரலாறாக வாழ்ந்துகாட்டிய மாநிலம் இன்று பாண்டிச்சேரி போன்ற யூனியன் பிரதேசத்தைவிட கேவலமாக மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது. மானமிழந்து. மதிப்பிழந்து. சுயமரியாதை இழந்து.
சுகாதாரபணியாளர்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு கவச உடைகளை மாநில அரசு வாங்கக்கூடாது என்று மத்திய அரசு ஆணையிடுகிறது. நிரந்தரமாக காலில் விழுந்து கூழைக்கும்பிடு போட்டே ஆட்சிக்கு வந்த எடுபிடி கும்பல் அதை எதிர்க்கக்கூட வக்கின்றி வாய் மூடி கிடக்கிறது. மாநிலசுயாட்சிக்கு ஒட்டுமொத்த
இந்தியாவுக்கும் ஒற்றை உதாரணமாக முன்னோடி மாநிலமாக உதாரணமா
ஒரு நூற்றாண்டுகாலம் ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொஞ்சம் கொஞ்சமாய் போராடி போராடிப்பெற்ற அத்தனை உரிமைகளும் இன்று முற்று முழுதாக பறிக்கப்பட்டதற்கும் இன்று தமிழ்நாடு இப்படி நாதியற்று கேட்பாரின்றி கிடக்கவும் யார் காரணம்?
இதோ இந்த படத்தில் இருக்கும் மார்க்சிய புரட்சியாளர்களும் வாழும் அம்பேட்கார்களும் பிரபாகரனின் அண்ணன்களும் தான் முதன்மைக்காரணம்.
கலைஞருக்கு எதிராக விஜயகாந்த் என்கிற ஒரு அரசியல் அட்டைக்கத்தியை, வியாபாரியை தலைமேல் தூக்கிவைத்து கொண்டாடிய இவர்கள் மநகூ என்றொரு அரசியல் trojan hourseஐ உருவாக்க என்ன காரணம்?

கிராமங்களில் உருவாகும் திடீர் திண்ணை கடைகள்!

கிராமங்களில் உருவாகும் திடீர் திண்ணை கடைகள்!மின்னம்பலம : கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வருமான இழப்பை ஈடுகட்ட ராமநாதபுர மாவட்டக் கிராமங்களில் உற்பத்தியான காய்கறிகள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்ய திடீர் திண்ணை கடைகள் உருவாகி உள்ளன.
ஊரடங்கு உத்தரவு மூலம் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு மக்களைக் காப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது என்பதால் அனைவரும் வாழ்வாதாரம் இழந்தாலும் தங்களை தாங்களே தற்காத்து கொள்ள ஒத்துழைத்து வருகின்றனர்.

தனியார் ஆய்வக சோதனை செலவை அரசே ஏற்கும்: பீலா ராஜேஷ்

தனியார் ஆய்வக சோதனை செலவை அரசே ஏற்கும்: பீலா ராஜேஷ்மின்னம்பலம் : கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் அண்மையில் உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் தனியார் ஆய்வகங்களில் சோதனை மேற்கொண்டால் அதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில், தனியார் ஆய்வகங்களில் சோதனை மேற்கொண்டால் அதற்கான செலவை அரசே ஏற்கும் என்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா குறித்த நிலவரத்தைத் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்துத் தெரிவித்தார். அவர் கூறுகையில், “இன்றைய நிலவரப்படி 39,041 பேர் வீட்டு கண்காணிப்பில் இருக்கின்றனர். 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்தவர்களின் எண்ணிக்கை 58,189, அரசு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 162. 10,655 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் மட்டும் 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேர் வெளி இடங்களிலிருந்து வந்தவர்கள், 90 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்கள். மொத்தம் தமிழகத்தில் 1075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தங்கள் குடிமக்களை திரும்ப அழைக்காத நாடுகளுக்கு விசா தடை – டிரம்ப் அதிரடி

மாலைமலர் : அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தங்கள் குடிமக்களை திரும்ப அழைத்துக் கொள்ளாத நாடுகளுக்கு ஜனாதிபதி டிரம்ப் விசா தடைவிதித்துள்ளார். கொரோனா வைரசால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
அங்கு உயிரிழப்பும் நாளுக்கு நாள் எகிறி வருகிறது. இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நோக்கி செல்கிறது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் விதிகளை மீறும் வெளிநாட்டினரை தாயகம் அழைத்துக்கொள்ளாத பிற நாடுகள் மீது கடுமையான விசா தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.

கம்யுனிசமும் ஜாதியும் . உலக கம்யுனிஸ்ட் சித்தாந்தம் .. கார்த்திகேயர்ன் பஸ்தூரா

Karthikeyan Fastura : s · கேள்வி : You are an entrepreneur..but why are you ordinantly advocating marxism
என் பதில் : எனக்கு கம்யூனிஸ்ட் சித்தாந்தம் முழுமையாக ஏற்புடையது
அல்ல, நான் தீவிரமான இடதுசாரியும் அல்ல. மற்ற உலக நாடுகளில் கம்யூனிச சித்தாந்தம் பொருந்தும் அளவிற்கு இந்தியாவிற்கு பொருந்தாது. இந்தியா வர்க்க பேதங்கள் மட்டும் கொண்டிருக்கவில்லை. அதற்கும் மேலாக நுணுக்கமான சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. அதனைப் பேசாமல் தொழிலாளர் பிரச்சனையை, விவசாயிகள் பிரச்சினையை பேசினால் முழுமையான சமதர்ம சமத்துவ சமுதாயத்தை கட்டமைக்க முடியாது.
அவர்களிடம் சாதியத்தை அணுகுவதில் குழப்பங்கள் இருக்கிறது, நிறைய தயக்கங்கள் இருக்கிறது. ஒருவரை ஆதரிப்பதால் மற்றவரை இழக்க நேரிடுமோ என்ற குழப்பம். சாதியம் தவறு என்று ஒத்துக் கொள்பவர்கள், அதை தவிர்க்க முடியாது என்பதையும் சேர்த்தே சொல்வார்கள். அதனால்தான் கேரளாவிலும் மேற்குவங்காளத்திலும் வட கிழக்கு மாகாணங்களிலும் பரவலாக மக்களை ஈர்த்தாலும் நிலை நிறுத்திக் கொள்வதில் இன்று போராடுகிறார்கள். அவர்களின் பெயருக்கு முன்னே காம்ரேட், சகாவு, தோழர் என்று பெயர் இருந்த போதும் பெயருக்குப் பின்னே நாயர், ராய், முகர்ஜி இன்று சாதிய ஒட்டுக்கள் இன்றும் இருக்கும்.

அமெரிக்காவில் 40 க்கு மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழப்பு .. கொரோனா வைரஸ் .

தமிழ் இந்து : மரணத்தாண்டவம் ஆடி வரும் கரோனா வைரஸுக்கு அமெரிக்காவில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அமெரிக்க-இந்தியர்கள் பலியாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இந்தியர்கள் 1,500 என்று அமெரிக்காவில் உள்ள இந்தியச் சமூகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று அமெரிக்காவில் 2,108 பேர் பலியாகி கரோனாவுக்கு ஒரே நாளில் அதிகம் பேர் பலியான நாடாகியது. கரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை 5 லட்சமாக அதிகரித்துள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக தரவுகள் கூறுகின்றன
நியூயார்க் நியூஜெர்சியில் அதிக அளவில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். கேரளாவைச் சேர்ந்த 17 பேர் குஜராத்தைச் சேர்ந்த 10 பேர் , பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் 4 பேர், ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் 2 பேர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்தவர் ஒருவர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர், இதில் பலரும் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்றும் ஒரெயொருவர் மட்டும் 21 வயது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கால் உணவு இல்லை: 5 குழந்தைகளை கங்கையில் வீசிய தாய் !

தினமலர் : : லக்னோ: நாட்டில் நடந்து வரும் ஊரடங்கால் தனது குழந்தைகளுக்கு உணவு இல்லை என்ற விரக்தியில் 5 குழந்தைகளையும் கங்கை நதியில் வீசி உள்ளார்..
உ.பி., மாநிலம் பாதோகி மாவட்டத்தை சேர்ந்த பெண். பெயர் விவரம் ஏதும் போலீசார் வெளியிடவில்லை. கடந்த 18 நாட்களாக கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டாலும் உயிர் தான் முக்கியம். ஊரடங்கை பின்பற்றியதால் தான் இந்தியாவில் இந்த அளவுக்கு உயிர்ப்பலி குறைந்த விகிதத்தில் உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இருப்பினும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால் பிரதமர் மோடியே இந்த முடிவு எடுத்தமைக்கு மன்னிப்பும் கோரினார்.
 அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஆவன செய்வோம் என்று பிரதமர் உறுதி அளித்தார்.
(வழக்கம் போல பாஜக அரசின்  இது போன்ற அறிவிப்புக்கள் எதுவும் நம்புவதற்கு உரியதாக இல்லை  என்பதே ஏழை  மக்களின் அனுபவமாக உள்ளது . எனவே இந்த தாய் இந்த முடிவை எடுத்துள்ளார் ) பாதோகி மாவட்டம், ஜஹாங்கிராபாத் பகுதியை சேர்ந்த ஒரு தாய் தனது 5 குழந்தைகளையும் கங்கை நதியில் மூழ்கடித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கங்கை நதியில் மூழ்கிய குழந்தைகளை தீயணைப்பு படையினர் உதவியுடன் தேடி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் சிறுவனின் ஜோதிட பொய்கள் அம்பலம் வீடியோ

ஆரிய சங்பரிவாரத்தின் புரளிகள்
தினமலர் பத்திரிகை ஒரு வீடியோ வெளியிட்டு அது Whatsapp ல சுத்திகிட்டு வந்துகிட்டிருக்கு.
அதாவது 14 வயசு பையன் ஆகஸ்டு 2019 லயே அவனோட யூடியூப் சேனலில் உலகம் எதிர்கொள்ளப்போகும் கொரோனா ஆபத்தை அப்பவே கணித்து சொன்னதாகவும், அந்த சிறுவன் சொன்னது அப்படியே நடப்பதாகவும், ஆச்சரியமாக இருப்பதாகவும், பில்டப் செய்து வீடியோ வெளியிட்டிருக்கானுங்க.
ஆனா அந்த வீடியோவில் அந்த சிறுவன் பேசுறதை சாதுர்யமா எடிட் பண்ணிட்டு இவனுங்கதான் பேசிட்டு இருக்கானுங்க. அந்தப்பையனோட குடுமியை பார்த்ததும் லேசா பொறி தட்ட தேடியபோது... யூடியூப்ல கிடைக்கும் வீடியோ இதுதான்...
அந்த சிறுவன் சொல்வது இதுதான்... "நவம்பர் 2019ல் #இந்தியா #பாகிஸ்தான் போர் மூளும். அதற்கு இந்த இரண்டு நாடுகளுக்கும் ஆதரவாக ஈரான், அமேரிக்கா, சீனா போன்ற நாடுகளும் களமிறங்கி #உலகப்போர் மூளும். ஏப்ரல் மாதம் முடிவடையும். பொருளாதாரம் போரால் அடிவாங்கும்"
இதைச்சொல்ல வீடியோவில் எழுதி காண்பிக்கும் ஒரு Chart... இந்த பதிவில் இணைத்துள்ளேன்.
இதை கிரகங்களின் நிலைப்படியும் அதனது பயண வழியையும் வைத்து இந்த சிறுவன் கணித்துள்ளானாம்.
அந்த வீடியோவில் அவன் எங்குமே வைரஸ் என்றோ, இத்தாலி ஸ்பெயின் பிரான்சு நாடுகளை குறிப்பிட்டோ, அங்கே அதிக அளவில் மக்கள் உயிரிழப்பார்கள் என்றோ, ஊரடங்கு போடப்படும் என்றோ எங்கும் சொல்லவில்லை.

கொரோனா வைரஸ் Rapid test kid ரேபிட் டெஸ்ட் கருவி தமிழகம் வராத பின்னணி.. மத்திய அரசு கையப்படுத்தி விட்டது?

By Velmurugan P   -  /tamil.oneindia.com  :  சென்னை: சீனாவில் இருந்து தமிழக அரசு வாங்க உள்ள ரேபிட் டெஸ்ட் கருவியால் ஆரம்ப நிலைலேயே கொரோனா
பாதிப்பை கண்டறிய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு உடலில் அதற்கு எதிரான எதிர்ப்பு புரதம் உருவாகி இருந்தால் மட்மே கண்டுபிடிக்க முடியும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் இந்த கருவி தமிழகத்திற்கு பலன் தருமா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கண்டறிய 12 அரசு மருத்துவமனைகள் மற்றும் 7 தனியார் மருத்துவமனைகள் என மொத்தமே 19 இடங்களில் தான் கொரோனா பரிசோதனை கூடங்கள் உள்ளன. இந்த பரிசோதனை மையங்கள் மூலம் ஒரு நாளைக்கு 700 பேருக்குத்தான் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகள் வருவதற்கும் காலதாமதம் ஆகிறது.
 50 ஆயிரம் கிட்டுகள் இதனால் நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே கொரோனா நோய் தொற்றை 30 நிமிடத்தில் கண்டறிய கூடிய தேரபிட் டெஸ்ட் கிட்டை சீனாவிடம் இருந்து வாங்க தமிழக அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. முதற்கட்டமாக 50 ஆயிரம் கிட் தமிழகம் வருவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த கருவிகளை மாநில அரசுகள் நேரடியாக வாங்க தடை விதித்தது

வங்காள தேசத்தில் முஜிபர் ரஹ்மான் கொலை குற்றவாளிக்கு நள்ளிரவில் தூக்கு நிறைவேறியது முன்னாள் இராணுவ அதிகாரி


வங்காள தேசத்தில் முன்னாள் இராணுவ அதிகாரிக்கு நள்ளிரவில் தூக்கு தண்டனை நிறைவேற்ற  தினத்தந்தி : வங்காள தேசத்தின் தேசத் தந்தை என்று அழைக்கப்பட்ட முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முன்னாள் இராணுவ அதிகாரிக்கு நள்ளிரவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. டாக்கா< வங்காள தேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும், அந்நாட்டின் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த 1975-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.இவர் தவிர மேலும் 4 தலைவர்களை கொன்ற வழக்கில் குற்றவாளியான முன்னாள் ராணுவ அதிகாரி அப்துல் மஜித், இந்தியாவில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது.

மும்பை தாஜ் ஓட்டல் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

மும்பை தாஜ் ஓட்டல் ஊழியர்கள் 6 பேருக்கு  கொரோனா பாதிப்புதினத்தந்தி : மும்பை தாஜ் ஓட்டலின் ஊழியர்களில் 6 பேருக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் காணப்பட்டன. மும்பை தாஜ் ஓட்டலின் ஊழியர்களில் 6 பேருக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் காணப்பட்டன. அதன் பிறகு இந்த 6 ஊழியர்களும் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அனைவரும் மும்பை மரைன் லைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, மும்பையில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் உள்ளன. மும்பையில் மட்டும், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1146 ஆகும், இவர்களுக்கு பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், தாஜ் ஓட்டலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தங்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு பல மருத்துவர்கள் இந்த ஓட்டலுக்கு வந்து தங்கினர். இத்தகைய சூழ்நிலையில், ஓட்டலின் 6 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

BBC : கொரோனா அமெரிக்காவில் 20,000 பேர் உயிரிழப்பு; ஆபத்தில் பொருளாதாரம்

  1. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது. இதுவரை 1,08,702 பேர் இத்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
  2. கொரோனாவால் இதுவரை அமெரிக்காவில்தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 20,000க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகி இருக்கின்றன.
  3. பிரிட்டனில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 10 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
  4. உலக நாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கை தளர்த்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
  5. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  6. • தமிழ்நாட்டில் சனிக்கிழமையன்று மேலும் 58 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது

கே.பி. ராமலிங்கம் திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்

தி.மு.க.வில் இருந்து கே.பி. ராமலிங்கம் டிஸ்மிஸ்; மு.க. ஸ்டாலின் உத்தரவுதினத்தந்தி : சென்னை, தி.மு.க. விவசாய அணி செயலாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். நாமக்கல் மாவட்ட தி.மு.க.வில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 2 முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் பதவி வகித்தார். இந்த நிலையில், சமீபகாலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து கே.பி.ராமலிங்கம் அதிக ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கி இருந்தார். சமீபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர் கூட்டவேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கே.பி.ராமலிங்கம் கட்சி தலைமையின் கருத்தை மீறி, மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருகிறது.
அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லாதது என தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து தி.மு.க. தலைமைக்கு கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து விவசாய அணி மாநில செயலாளர் பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது.

துக்ளக் மன்னன் கி.பி 1324 முதல் 1351 வரை இந்தியாவின் வடக்குப் பகுதிகள் மற்றும் டெக்கான் பகுதிகளையும் .... வரலாறு

Susairaj Babu : இனிய இரவு வணக்கம் நண்பர்களே,.
இன்றைய நாளில் முஹம்மத் பின் துக்ளக்கின் நிர்வாக திறமையை படிப்போமா?
வங்காளத்திற்கு படையெடுத்துச்சென்ற முகமது பின் துக்ளக்கின் தந்தை கியாசுதீன் துக்ளக் மாபெரும் வெற்றியுடன் நாடு திரும்பிக்கொண்டிருந்தார். அவரை வரவேற்க பிரம்மாண்ட மண்டபம் ஒன்றைக் கட்ட நினைத்தார் முகமது பின் துக்ளக். இந்த விஷயமாகத்தான் மீர் இமார்த்திற்கு தகவல் சொல்லப்பட்டிருந்தது. கலையில் கைதேர்ந்தவரான இமார்த் பிரம்மாண்ட வெற்றி மண்டபத்தை அமைத்தார். வரவேற்பு தடபுடலாக நடந்தது கியாசுதீனுக்கு. அலங்கார விளக்குகள், நவரத்தினங்கள் பதித்த விரிப்புகள் என காசை வாரி இரைத்திருந்தார் இளவரசர். இவற்றைக் கண்ட மாத்திரத்தில் சொக்கிப்போய் நின்ற மன்னர் கியாசுதீனை கை பிடித்து இருக்கையில் அமரச் சொன்னார் இளவரசர் முகமது பின் துக்ளக். அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்ட முகமது, தூரத்தில் நின்றிருந்த இமார்த்தைப் பார்த்து தலையை அசைத்த சில வினாடிகளில் அந்த விபரீதம் நடந்தது. மண்டபத் தூண்கள் சரிந்து விழுந்தன மன்னர் மரித்துப் போனார்.
. கில்ஜி வம்சத்தை முடிவிற்குக் கொண்டுவந்த பெரும் வீரரான கியாசுதீன் துக்ளக்கை இப்படி தீர்த்துக்கட்டிய பிறகு பதவிக்கு வந்தார் முகமது பின் துக்ளக்.

கொரோனாவால் காணாமல் போன இதர நோய்கள்? சமுகவலையில் உலாவரும் .

இரா.கணேசன், : அரசு மருத்துவமனைகளில் இப்போது மட்டுமல்ல எப்போதும் உண்மை முகத்துடன் மருத்துவ பணியாளர்கள் உலா வருகின்றனர்.
OPD மூடப்பட்டுள்ள போதிலும், இந்த அவசரகாலத்தில் அவசர கேசுகள் 99% இல்லை!
நோய் எவ்வாறு குறைந்து?
தெருக்களில் வாகனங்களும் அதிகமாக இல்லை ; எனவே சாலை விபத்து எதுவும் இல்லை.
மதுக்கடைகள் மூடிக் கிடக்கின்றன –மது குடிப்பதால் ஏற்படும் சாவுகள், விபத்துகள், சண்டைகள் மற்றும் கொலைகள் நின்றுவிட்டன.
ஆனால் மாரடைப்பு, மூளை இரத்தக்கசிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுமா இல்லை ??
உடல் பரிசோதனை என்ற பெயரில் யாராலும் வசூல் செய்ய முடியவில்லை!
சுடுகாடுகளுக்கு தினமும் வரும் இறந்த உடல்களின் எண்ணிக்கை 90% சதவீதம் குறைந்துள்ளது?!!
கோடை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் வரும் இறந்த உடல் எண்ணிக்கையில் பெரிய பற்றாக்குறை ஏற்பட்டது ஏன் என்று தெரியவில்லை??!
மருத்துவமனைகளில் இருந்த நோய்களை காணவில்லை என்பது உண்மையில் ஆச்சரியம்.

முதலீட்டின் அடிப்படை கள் பற்றிய Investment Workshop

Karthikeyan Fastura : நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மிகப்பெரிய ஏற்பட்டால் இதையே ஒரு வாய்ப்பாக மாற்றவும் முடியும். இதை பற்றித் தான் Investment Workshopல் பேசி வருகிறோம். இது இப்போது முதல் இரண்டு லெவல் முடிந்து மூன்றாம் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறோம்.
பொருளாதார சரிவு Great Depression என்பார்கள். எலியட் வேவ் தியரில் இதை தி கிராண்ட் சைக்கிள் என்று சொல்வார்கள். அது இப்போது நடக்க இருப்பது அது தான். இது வரை நாம் எதெல்லாம் சரியான முதலீடுகள் என்று சொல்லிவந்தோமோ அதெல்லாம் தலைகீழாக மாற இருக்கிறது. இதை பற்றி பெரிய விவாதங்கள் நடைபெறவேண்டும் ஆனால் கொரோனா தாக்குதலில் முழுகவனமும் உள்ளதால் மக்களுக்கு இந்த பொருளாதார சுனாமியை பற்றிய போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. இதில் சரியான புரிதல்
இந்த முதல் இரண்டு வகுப்புகளை தவறவிட்ட நிறைய நண்பர்கள் இன்வெஸ்ட்மென்ட் ஒர்க் ஷாப் முதல் பகுதி எப்போது நடக்கும் என்று ஆர்வமுடன் கேட்டவண்ணம் உள்ளார்கள். அவர்களுக்காக மீண்டும் நாளை மாலை Zoom Webinar வழியாக நாளை நடக்க இருக்கிறது. ( நாளை மறுநாள் இரண்டாம் பகுதி நடக்க இருக்கிறது. அது பற்றிய அறிவிப்பு நாளை வெளிவரும்)

Farm to Table. வீட்டுத் தோட்டம் - 3

Farm to Table : வீட்டுத் தோட்டம் - 3
உங்கள் தோட்டங்களுக்கு ஏற்ற சிறந்த பயிர்கள் எவை?
மறு கேள்வியில்லாமல் முதலில் நீங்கள் தெரிவு செய்வது கொடி வகைகளாகத்தான் இருக்க வேண்டும். காரணம், சிலநேரங்களில் பூசணி, பீர்க்கங்காய் மற்றும் பாகற்காய் போன்றன தாமாகவே முளைத்து நன்றாக வளர்ந்து காய்ப்பதை அவதானித்து இருப்போம். சிலநேரங்களில் வீட்டின் கூரையின் மீதும் வேலிகளிலும் படருவதுண்டு. ஆமாம், உண்மையிலேயே கொடிவகை மரக்கறிகளை உற்பத்தி செய்வது என்பது சிரமம் குறைந்தது என்பதுடன் அதிக பலன் பெறக்கூடிய சிறந்த ஒரு தெரிவுமாகும்.
இந்த பதிவுக்கு பொருந்தும் வகையில் வீட்டுத் தோட்டங்களுக்கான சிறந்த தெரிவுகளாக கருதக்கூடிய தாவரங்கள் சிலவற்றை பட்டியலிடலாம். வரட்சி,
பராமரிப்பு சிரமம், வேலைப்பழு போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு வகைப் படுத்தப்பட்டுள்ளது.
1) படர்ந்து வளரும் கொடிவகை தாவரங்கள்
2) நிழல் குறைந்த பல்லாண்டு தாவரங்கள்
3) நிழல் குறைந்த பல்நோக்கு தாவரங்கள்
கொடிவகை தாவரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் காய்கறிகளை குறிப்பாக ரெண்டு பிரிவுகளுக்குள் அநேகமானவற்றை அடக்கிவிடல் முடியும்.