தமிழக அரசியில் நாளுக்கு நாள் மாறிவருகிறது. இதில் கட்சியின் காட்சிகள் அப்படியேதான் உள்ளது.
தமிழக முதல்வராக ஓபிஎஸ் இருந்தார் அவரை வைத்துக் கொண்டே வருங்கால முதல்வர் சின்னம்மா வாழ்க என்று புகழ் பாடப்பட்டது.
அதேபோல தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அவர் இருக்கும்போதே வருங்கால முதல்வர் தினகரன் வாழ்க என்று கோஷம் போடப்படுகிறது.
23ம் தேதி காலை தினகரன் துணைப்பொதுச் செயலாளராக பதவி ஏற்க ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.அவ்வைசாலை வழியாக அவா் வந்தபோது அவரின் கார்மீது மலா் தூவப்பட்டது.
மலர் தூவியவர்களுக்கு ரூ.2000ம் பணம் கொடுக்கப்பட்டது. சனி, 25 பிப்ரவரி, 2017
தினகரன் அலப்பறை : .. கோஷம் போட ரூ.3000ம், மலா் தூவ ரூ.2000, கொடிபிடிக்க 1000...
தமிழக அரசியில் நாளுக்கு நாள் மாறிவருகிறது. இதில் கட்சியின் காட்சிகள் அப்படியேதான் உள்ளது.
தமிழக முதல்வராக ஓபிஎஸ் இருந்தார் அவரை வைத்துக் கொண்டே வருங்கால முதல்வர் சின்னம்மா வாழ்க என்று புகழ் பாடப்பட்டது.
அதேபோல தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். அவர் இருக்கும்போதே வருங்கால முதல்வர் தினகரன் வாழ்க என்று கோஷம் போடப்படுகிறது.
23ம் தேதி காலை தினகரன் துணைப்பொதுச் செயலாளராக பதவி ஏற்க ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார்.அவ்வைசாலை வழியாக அவா் வந்தபோது அவரின் கார்மீது மலா் தூவப்பட்டது.
மலர் தூவியவர்களுக்கு ரூ.2000ம் பணம் கொடுக்கப்பட்டது. 20 கிராமங்களில் நாளை உண்ணாவிரதம், நெடுவாசலின் உச்சகட்டம்!
நாடுமுழுவதும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பல இடங்களை தேர்வுசெய்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் நெடுவாசல் உள்ளிட்ட சுமார் 15 இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், புதுகை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தவுள்ள மத்திய அரசை கண்டித்து சுற்றுவட்டார மக்கள் கடந்த ஒரு சில நாட்களாகவே போராட்டக்குரல் கொடுத்து வருகின்றனர். இவர்களோடு சென்னை ஐ.டி. ஊழியர்களும் போராட்டம் செய்துவந்தனர். மேலும், தமிழ்நாடு இளைஞர் கட்சி நாளை மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டம் மேலும் சென்னை உள்ளிட்ட ஐ.டி., நிறுவனங்களைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில், நெடுவாசல், புள்ளான் விடுதி கள்ளிக்கொல்லை, வாணக்கன்காடு, கருக்காக்குறிச்சி, கோட்டைக்காடு உள்ளிட்ட 20 கிராமத்திற்கு மேற்பட்ட மக்களும், இளைஞர்களும், மாணவர்களும் ஒன்றுதிரண்டு நாளைய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.டி. ஊழியர்களோடு கைகோர்க்கின்றனர்.
கமல் : (சுப்பிர)மணிப்பயல்களை தமிழ்ப்பயல்கள் தேடிச்சென்று தாக்கு..
தன்னை எதிர்ப்பவர்களை விமர்சிக்கும் சுப்பிரமணியன் சுவாமி, பயன்படுத்தும் வார்த்தைகள் மிகவும் நாகரீகமற்றதாக இருப்பதை கண்டுகொள்வதே இல்லை.
பொறுக்கி, எலி, நக்சல், தேச விரோதி, முட்டாள், முதுகெலும்பில்லாதவன், படிப்பறிவு இல்லாதவன் என வெறுக்கத்தக்க வார்த்தைகளை உபயோகிக்கிறார்.
குறிப்பாக கமலை மிக அருவெறுக்க தக்க வகையில் வசைபாடுகிறார். நேற்றைய டுவிட்டர் பதிவில் சாக்கடையில் ஊறி கிடக்கும் விலங்குகள் சில சமயம் ஒப்பனையும் இட்டு வேஷம் கட்டும் என்று கூறவும் கமல் கொதித்துவிட்டார்.
உடனடியாக தனது டுவிட்டரில் மணிப்பயல்களை தமிழ்பயல்கள் தேடிச்சென்று தாக்கு. கேட்பதற்கு நாதியற்றோர் நாதியின்றி மரணிப்பர் என்றார்.
இது சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. இனி நீ தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறோம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.லைவ்டே எடப்பாடியை எதிர்த்தவர்களின் பதவி பறிபோகுமா?
| இந்த டர்ட்டி டஜன் சசி டர்ட்டிங்களோட சீக்கிரம் ஒண்ணாயிடுவாய்ங்க |
விகடன் :செத்தது ஜனநாயகம்... இது பச்சைப் படுகொலை!

ஜெயிலில் சசிகலா இளவரசி சுதாகரனுக்கு வேண்டிய வசதிகள் குறைவில்லாமல் கிடைக்கிறது!
வெள்ளி, 24 பிப்ரவரி, 2017
பாவனா முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம்.. பல்சர் சுனில் தகவல்
பணம் பறிக்க திட்டமிட்டு பாவனாவை
கடத்தினோம். அவர் முரண்டு பிடித்ததால் பாலியல் தொல்லை கொடுத்தோம் என்று
முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் கூறினார்.
இதில் பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் கோவையில்இருந்து 2 பேரும் பாலக்காட்டில் இருந்து மணிகண்டன் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில், விஜேஷ் இருவரும் தலைமறைவாக இருந்தனர். இவர்கள் கோர்ட்டில் சரண் அடையலாம் என்று போலீசாருக்கு ரகசியதகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் எர்ணாகுளம் கோர்ட்டு முன்பு மாறு வேடத்தில் சுற்றி வந்தனர்.
நெல்லையில் போலீஸ் ஜீப்பிலேயே கைதி வெட்டி கொலை
ஈஷா மைய சிவன் சிலை திறப்பு விழாவில் மோடி ..
கோயம்புத்தூர் ஈஷா யோக மையத்தில் நிறுவப்பட்டுள்ள, 112 அடி சிவன் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், எதிர்ப்பையும் மீறி இந்தியப் பிரதமர் மோடி பங்கேற்றார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஜக்கி வாசுதேவ் என்ற ஆன்மிக குருவினால் நடத்தப்பட்டு வரும் ஈஷா யோக மையத்தால் 112 அடி உயரமுள்ள ஆதி யோகி சிவன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரி தினமான இன்று, இந்த சிலை பிரதமரால் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கென தனி விமானம் மூலம் பிரதமர் மோதி கோயம்புத்தூர் வந்தார். ஈஷா யோக மையத்திற்கு வந்த அவர், அந்த மையத்தில் உள்ள தியான மண்டபத்தில் ஜக்கி வாசுதேவுடன் இணைந்து தியான லிங்கத்திற்கு தீபாராதனை காட்டி தியானத்தில் ஈடுபட்டார்.
சாயி பாபா கலைஞரை தேடி வந்து பார்த்த காரணம் ... முற்பிறவியில் கலைஞர் ராஜ ராஜா சோழன் .. சத்திய சாயி பாபா ..
”உங்களுக்கெலாம் அவர் கருணாநிதி,,,எனக்கு அவர் ராஜராஜ சோழன்...”
ஆம்..ராஜ ராஜ சோழனின் மறுபிறவி அவர் அதனால் தான் அந்த மாமன்னனை நான் போய்ப் பார்த்தேன் என்றாராம்..
இதே விஷயத்தை கணபதி ஸ்தபதியும் என்னிடம் கூறியுள்ளார்..தமிழகத்தின் அத்தனை கட்டட அதிசயங்களையும் கலைஞரே நிர்மாணித்தார்... ...
கலைஞர் இல்லம் தேடி சத்ய சாய் பாபா வந்தார்..உலகமே அசந்தது..
பாபாவை பார்க்க மைக்கேல் ஜாக்சன் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு கிடைக்காமலே இறந்து போனார்..
சச்சின் பல நாள் காத்திருந்து நேரில் சந்தித்தார்..எவர் வீட்டிற்கும் பாபா பிற்காலத்தில் போனது கிடையாது..
பிரதமரோ, ஜனாதிபதியோ, தேடி வந்துதான் பாபாவைப் பார்க்க வேண்டும்..அப்படிப்பட்ட பக்வான் சத்ய சாய் பாபா, கலைஞரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, அவரது இல்லத்திற்கே போய், மாடி ஏறி கலைஞரைச் சந்தித்தது கண்டு ஆத்திகர்கள் ஆடிப்போனார்கள்..
சில நாத்திகர்கள் ஆத்திரப்பட்டார்கள்...
பின்னாளில் பாபாவிடம் நெருக்கமாக இருந்த ஓர் ஆத்திகர் என்னிடம் இது குறித்த உண்மையைச் சொன்னார்...,
அவர்,ஒரு சத் சங்கத்தின் போது பாபாவைச் சந்தித்தாராம். நிறைய தமிழ் பக்தர்களும் அங்கு இருந்தனராம்.. அப்போது,அவர், கோபமாக, பாபாவிடம்.. ”அந்த நாத்திகரை (கலைஞரை) நீங்கள் வீடு தேடிப்போகலாமா எனக்கேட்டாராம்...
அதற்கு பாபா சொன்ன பதில் கேட்டு அனைவரும் வாயடைத்துப் போயினராம்..பாபா சொன்னாராம்..”
கலைஞர் இல்லம் தேடி சத்ய சாய் பாபா வந்தார்..உலகமே அசந்தது..
பாபாவை பார்க்க மைக்கேல் ஜாக்சன் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு கிடைக்காமலே இறந்து போனார்..
சச்சின் பல நாள் காத்திருந்து நேரில் சந்தித்தார்..எவர் வீட்டிற்கும் பாபா பிற்காலத்தில் போனது கிடையாது..
பிரதமரோ, ஜனாதிபதியோ, தேடி வந்துதான் பாபாவைப் பார்க்க வேண்டும்..அப்படிப்பட்ட பக்வான் சத்ய சாய் பாபா, கலைஞரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, அவரது இல்லத்திற்கே போய், மாடி ஏறி கலைஞரைச் சந்தித்தது கண்டு ஆத்திகர்கள் ஆடிப்போனார்கள்..
சில நாத்திகர்கள் ஆத்திரப்பட்டார்கள்...
பின்னாளில் பாபாவிடம் நெருக்கமாக இருந்த ஓர் ஆத்திகர் என்னிடம் இது குறித்த உண்மையைச் சொன்னார்...,
அவர்,ஒரு சத் சங்கத்தின் போது பாபாவைச் சந்தித்தாராம். நிறைய தமிழ் பக்தர்களும் அங்கு இருந்தனராம்.. அப்போது,அவர், கோபமாக, பாபாவிடம்.. ”அந்த நாத்திகரை (கலைஞரை) நீங்கள் வீடு தேடிப்போகலாமா எனக்கேட்டாராம்...
அதற்கு பாபா சொன்ன பதில் கேட்டு அனைவரும் வாயடைத்துப் போயினராம்..பாபா சொன்னாராம்..”
நீட் தேர்வு – ஒரு சொந்த அனுபவம்.. பொது நுழைவு தேர்வு ..
இணையம், அலைபேசி போன்ற மேல்மட்ட சேவைகளுடன் பெருமளவு பழக்கப்படாத, தினக்கூலி வேலைகளில் உள்ள ஒருவர் தனது மகனுக்கோ, மகளுக்கோ நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தைக் கண்டிப்பாக இந்தப் பிரச்சனைகளுக்கு இடையே முடிக்க இயலாது.
இந்த
வருடம் முதல் மருத்துவப் படிப்பிற்கு இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு
நடைபெறும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
அதனடிப்படையில் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டு
விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 1-ம் தேதி முதல் மார்ச் 1
வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க
ஆதார் எண் அவசியம். ஆதார் இல்லாதவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க
முடியாது.
இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள் புதிய அட்டைக்கு முதலில் விண்ணப்பிக்க வேண்டும், அதற்க்காகச் சிறப்பு மையங்கள் அரசாங்கத்தால் பல இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன என்று நீட் தேர்வுக்கான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஆதார் அட்டை வைத்து இருந்தாலும் அதில் உள்ள விவரங்கள் மற்ற சான்றிதழ்களில் உள்ள விவரங்களோடு ஒன்றிப் போக வேண்டும் இல்லையென்றால் ஆதார் அல்லது மற்ற சான்றிதழ்களில் உள்ள விவரங்களை மாற்றி அமைத்த பின்னரே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
| அடித்தட்டு மக்கள் பொதுமக்கள் இல்லையா? |
இதுவரை ஆதார் அட்டை பெறாதவர்கள் புதிய அட்டைக்கு முதலில் விண்ணப்பிக்க வேண்டும், அதற்க்காகச் சிறப்பு மையங்கள் அரசாங்கத்தால் பல இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன என்று நீட் தேர்வுக்கான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே ஆதார் அட்டை வைத்து இருந்தாலும் அதில் உள்ள விவரங்கள் மற்ற சான்றிதழ்களில் உள்ள விவரங்களோடு ஒன்றிப் போக வேண்டும் இல்லையென்றால் ஆதார் அல்லது மற்ற சான்றிதழ்களில் உள்ள விவரங்களை மாற்றி அமைத்த பின்னரே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
பாவனா கடத்தல் .. பின்னணியில் நடிகர் திலீப் ?

நடிகை
பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான
பல்சர் சுனில் சரணடைந்ததைத் தொடர்ந்து மேலும் இருவர் கோவையில் கைது
செய்யப்பட்டனர். பின், பாலக்காடில் பதுங்கியிருந்த மணிகண்டன் என்பவரையும்
காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மணிகண்டனை கொச்சிக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘கேரள திரையுலகில் நடிகர், நடிகைகளுக்கு கார் டிரைவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்கும் சுனில் குமாருடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அவர் கூறும் செயல்களை நான் செய்துமுடிப்பேன். அதற்கு அவர் பணம் கொடுப்பார்.
மணிகண்டனை கொச்சிக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘கேரள திரையுலகில் நடிகர், நடிகைகளுக்கு கார் டிரைவர்கள் ஏற்பாடு செய்து கொடுக்கும் சுனில் குமாருடன் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. அவர் கூறும் செயல்களை நான் செய்துமுடிப்பேன். அதற்கு அவர் பணம் கொடுப்பார்.
1000 மதிமுகவினர் ஓ.பி.எஸ். அணியில் இணைந்தனர்! அம்புட்டு ஆளுங்களா?
ஜெயலலிதாவின்
69வது பிறந்த நாளான இன்று, மதிமுக-வில் இருந்து 1000 பேர் விலகி, முன்னாள்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளான இன்று, அதிமுக பேச்சாளர் பாத்திமா பாபு உட்பட ஆயிரம் மதிமுக தொண்டர்கள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர். தமிழக அரசியல் சூழல் குறித்து மதிமுக தலைவர் வைகோ எந்தக் கருத்தும் கூறாமல் அமைதி காத்துவந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை சட்டப்பேரவையில் திமுக நடந்துகொண்ட முறை சரியில்லை என்று விமர்சித்தார். அதிமுக-வை மற்றவர்கள் அழிக்க விடமாட்டேன் என்றும் கருத்து தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP)’துவக்கம் - கொடி அறிமுகம்! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் : தீபா பேட்டி
![]() |
| M A D Peravai ? So Sweet |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழ்நாடு முழுவதிலும் அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை (MADP)என்ற புதிய அமைப்பை துவங்கினார்.
பாஜக பின்னணியில் கமல் ரஜினி அரசியல் கட்சி உதயமாகிறது !
ஆனால்,
தனது பெயரில் கட்சி இல்லை. விவரம் சொல்கிறது அந்த புலனாய்வு வர இதழ்.
ஆச்சரியம், ரஜினி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது ஜெ., கலைஞர் கருணாநிதி
இருக்கும் வரை அரசியலுக்கு வரமாட்டேன் என்பதுதான்.
அதனாலேயே ரசிகர்களும் மக்களும் திட்டித் தீர்த்தாலும் கூட வாய் மூடி அமைதியாக இருந்தார்.
கலைஞர் நினைவு தப்பி வீட்டில் படுக்கையில் இருக்கிறார். இனி அவர் அரசியலில் இல்லை என்பது போலத்தான்.
ஜெ.,வும் மரணம் அடைந்து விட்டார். ஆனால் ரஜினியின் உடல்நிலை தீவிர அரசியலுக்கு ஒத்து வராது.
அவரால்
தமிழகம் முழுக்க அலைந்து திரியவும் முடியாது. இந்த சூழ்நிலையில்
திரையுலகில் தனது நண்பரான கமலிடம் மனம் விட்டு பேசி இருக்கிறார்.
பன்னீர்செல்வம் தினகரன் நாடகம் அடுத்த காட்சி ... எல்லாரும் ஒண்ணா வழக்குகளில் இருந்து எஸ்கேப்?
சென்றவர்கள், மீண்டும் வர வேண்டும்' என்றும் அழைப்பு விடுத்தார். 'கட்சியிலும், ஆட்சியிலும் தங்கள் குடும்பத்தின் ஆதிக்கம் இருக்காது' என்றும், அவர்களுக்கு உறுதி அளித்தார்.
சிறை செல்லும் முன், கட்சியை வழிநடத்தும் பொறுப்பை, தன் அக்கா மகன் தினகரனிடம் ஒப்படைத்தார் சசிகலா. அவரால், துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரன், நேற்று, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், பொறுப்பு ஏற்றார். சென்னை, ராயப்பேட்டை யில் உள்ள, தலைமை அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், அவை தலைவரும், அமைச்சருமானசெங்கோட்டையன், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை உட்பட, பலர் பங்கேற்றனர்.
எஸ்பிஐ ஏடிஎம்-ல் போலி 2,000 ரூபாய் ,,டெல்லி,,, மத்திய அரசு விசாரணை:
வங்கி ஏடிஎம் மையத்தில் போலி 2,000 ரூபாய் நோட்டு வந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தெரிவித்துள்ளார்.
டெல்லி சங்கம் விஹாரில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையத்தில் கால் சென்டர் ஊழியர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் பணம் எடுத்தபோது போலி 2000 ரூபாய் நோட்டுகள் வந்தன. இதுதொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டேட் வங்கி நிர்வாகம் தனி விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மத்திய நிதித்துறை இணை யமைச்சர் சந்தோஷ் கங்க்வார் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியபோது, கள்ள நோட்டு புழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லி ஏடிஎம் சம்பவம் கவலையளிக்கிறது. இதுதொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
வங்கதேசத்தில் இருந்து புதிய 2000 ரூபாய் நோட்டுகள் போலவே போலி நோட்டுகளை இந்தியாவுக்குள் கடத்தியது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. tamithehindu
நெடுவாசல் ! வெடிக்கிறது போராட்டம் ! ஹைட்ரோ கார்பன் என்றால் மக்கள் ஏன் இத்தனை அச்சப்படுகிறார்கள்..?
தஞ்சை
மாவட்டத்தின் கடைக்கோடியை அடுத்தும், புதுக்கோட்டை மாவட்டத்தின்
தொடக்கப்புள்ளியிலும் இருக்கிறது நெடுவாசல் கிராமம். ஊருக்கு நடுவே சிறிய
கடைத்தெரு. ஊரைச் சுற்றிலும் திரும்பிய பக்கமெல்லாம் தென்னை, வாழை,
கரும்பு, சோளம், தானியங்கள் என்று பசுமை பூத்துக் குலுங்கும் கிராமம்.
அமைதியும் ஆனந்தமும் கைகோர்க்க எளிய மனிதர்களால் நிறைந்த இந்த விவசாய பூமி
இன்று போராட்டக்களமாக மாறியிருக்கிறது. கடந்த எட்டு நாட்களாக ஒட்டு மொத்த
தமிழகமும் நெடுவாசல் கிராமத்தைதான் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
இன்னும் சில நாட்களில் இந்த கிராமத்தை இந்தியாவே திரும்பிப் பார்ப்பதற்கான
அத்தனை சாத்தியக் கூறுகளும் தென்படத் தொடங்கிவிட்டன. காரணம் ஹைட்ரோ
கார்பன் என்னும் எரிபொருள் வஸ்து.
இந்த ஹைட்ரோ கார்பன் மத்திய அரசிற்கு வரமாகவும் நெடுவாசல் கிராமத்திற்கு சாபமாகவும் அமைந்ததுதான் இதில் உள்ள முரண்பாடு.
இந்த ஹைட்ரோ கார்பன் மத்திய அரசிற்கு வரமாகவும் நெடுவாசல் கிராமத்திற்கு சாபமாகவும் அமைந்ததுதான் இதில் உள்ள முரண்பாடு.
பேரவை அலுவலகத்தை திறந்து வைத்தார் ஜெ.தீபா (படங்கள்)
அமெரிக்காவில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இந்தியர் சுட்டுக்கொலை, குற்றவாளி கைது
கன்சாஸ்,
ஐதாராபாத்தைச்சேர்ந்த மென்பொறியாளரான ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இவர் கன்சாஸ் பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றிற்கு சென்றிருந்த போது அங்கே வந்த 51 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென ஸ்ரீனிவாசை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று கத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், ஸ்ரீனிவாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அலோக் என்ற மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயர் ஆடம் புரிண்டன் என்றும், அவர் கடற்படையில் பணிபுரிபவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்dளது. அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். dailythanthi.com
கைதிகள் புகார் ! சுதாகரன் : ஐம் க்ரீம் ஸௌம் ... சிறையில் சுதாகரன் மந்திர உச்சாடனம் ...
பெங்களூரு:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரன் இரவு நேரங்களில் உடல் முழுவதும் திருநீரை பூசிக்கொண்டு மந்திரங்களை ஓதுவதாக கூறப்படுகிறது. இதனால் பீதியடைந்துள்ள சக கைதிகள் தங்களை வேறு சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோர் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து இதையடுத்து கடந்த 16ஆம் 3 பேரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலாவும் இளவரசியும் ஒன்றாக சரணடைந்த நிலையில் சுதாகரன் தனியாகவும் தாமதமாகவும் வந்து சரணடைந்தார். இரு மாநில வனத்துறையினர் மோதல்-வீடியோ 01:32 இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி-வீடியோ
தமிழக அரசை முழுசா விற்ற ஆளுநர் வித்தியா சாகர் ராவ் ...
2.சசிகலா தரப்பில்
ஆட்சி அமைக்க போராடுவது, அதற்கு டெல்லி முட்டுக் கட்டை போடுவது, அதற்கான
காரணங்களை அறிந்து கொள்கிறார். இங்கு தான் விளையாட வேண்டும் என்று கவர்னர்
மூளை வேலை செய்யத் துவங்குகிறது. தான் மிகக் கறார் கவர்னர் என்பது போல
முறுக்கிக் கொள்கிறார். சசி தரப்பு பதறுவதை ரசிக்கிறார். மும்பை பறந்து
விடுகிறார்.
3.டெல்லி பன்னீரை களம் இறக்குகிறது. பன்னீர் அம்மா சமாதியில் தனது நாடகத்தை துவங்குகிறார்.அதிமுக கடும் நெருக்கடிக்கு ஆளாகிறது.
4.சசி
தரப்பு தனது ஆதரவு உறுப்பினர்களை கூவத்தூரில் சிறை வைக்கிறது. இதை
மும்பையில் இருந்து கொண்டு ரசிக்கிறார். காய் நகர்த்தல் ஆரம்பமாகிறது.
சட்டசபை நம்பிக்கை தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்க பிரணாப் முகர்ஜியிடம் ஸ்டாலின் கோரிக்கை!
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்யுங்கள் என்று ஜனாதிபதியை சந்தித்து மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிப்ரவரி 24, 05:30 AM
புதுடெல்லி
தமிழக சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்யுங்கள் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், புதிதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியிடம் மனு
தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் டெல்லியில் நேற்று மாலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அப்போது, அவருடன் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மு.க.ஸ்டாலின் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:–
ரத்துசெய்ய வேண்டும்
தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானதும், அவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகவும் அமைந்துவிட்டது.
நாராயணமூர்த்தி vs விசால் சிக்கா ! இன்போசிஸ் நாய்ச்சண்டை
இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள்
இரண்டு பிரிவாக நின்று நாய்ச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின்
மென்சக்தியை (Soft power) உலகறியச் செய்த, நடுத்தர வர்க்கத்தினரின் கனவான
இன்போசிஸ் நிறுவனத்தில் நடக்கும் குடுமிபிடிச் சண்டைகள் இந்தியாவின்
பொருளாதார வளர்ச்சியையேப் பின்னுக்கு இழுத்துவிடும் எனப் பூச்சாண்டி
காட்டுகின்றன முதலாளித்துவப் பத்திரிகைகள்.
”நாங்கள் போற்றி வளர்த்த அறமதிப்பீடுகள் என்னாவது?” எனக் கொந்தளிக்கிறார்கள் இன்போசிஸ் நாராயணமூர்த்தி தலைமையில் திரண்டுள்ள ’நாகப்பதனி’ ஆதரவாளர்கள்.
“ஏய்… நான் சத்ரியண்டா.. அசைக்க முடியாதுடா” என்று ’நாகபதனி’ அணியினரின் கரவொலிகளுக்கிடையே அறிவித்துள்ளார் இன்போசிஸ் தலைமைச்செயல் அலுவலர் விசால் சிக்கா. “சோக்கா சொன்னாண்டா” எனச் சிக்காவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது ஆப்பன்ஹெய்மர் என்கிற முதலீட்டு நிறுவனம்.
”நாங்கள் போற்றி வளர்த்த அறமதிப்பீடுகள் என்னாவது?” எனக் கொந்தளிக்கிறார்கள் இன்போசிஸ் நாராயணமூர்த்தி தலைமையில் திரண்டுள்ள ’நாகப்பதனி’ ஆதரவாளர்கள்.
“ஏய்… நான் சத்ரியண்டா.. அசைக்க முடியாதுடா” என்று ’நாகபதனி’ அணியினரின் கரவொலிகளுக்கிடையே அறிவித்துள்ளார் இன்போசிஸ் தலைமைச்செயல் அலுவலர் விசால் சிக்கா. “சோக்கா சொன்னாண்டா” எனச் சிக்காவை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது ஆப்பன்ஹெய்மர் என்கிற முதலீட்டு நிறுவனம்.
பன்னீர்செல்வம் அணிக்கு வந்த தீபக் .. தம்பிக்கு ஒண்ணுமே கிடைக்கல்லியாம் ..
சென்னை: அதிமுக துணைப் பொதுச்செயலராகிவிட்ட டிடிவி தினகரனுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் திடீரென பொங்கி போர்க்கொடி தூக்கியதன் பின்னணி தொடர்பாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலா முகாமில் இருந்த தீபக் இன்று திடீரென முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆதரவாளராகிவிட்டார். ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் பங்களா தங்களுக்கே சொந்தம்; ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் தேவை; டிடிவி தினகரன் தலைமையை ஏற்க முடியாது என்றெல்லாம் தீபக் பொங்கிவிட்டார்.
இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில் நாம் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே சசிகலா கட்டுப்பாட்டுக்குப் போனவர் தீபக்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














