அரைமணி நேரம் விடாது மழை பெய்தால் அரை அடிக்கு மழைநீர் தேங்கிவிடுகிறது. இதுதான் இன்றைய சென்னையின் உண்மை நிலை. வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக வானிலை மையம் அறிவிப்பதற்கு முன்னரே, “பருவமழையை சந்திக்கத் தயாராக இருப்பதாக’ அறிவித்தது சென்னை மாநகராட்சி.
100 ஆண்டுகள் பெய்யாத பேய் மழை, தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மூன்றே நாட்களில் பெய்ததால்தான் யாரும் எதிர்பார்க்காத வெள்ளத்தில் மக்கள் சிக்கித்தவித்ததாக ஜெ. அரசு கடந்த ஆண்டு காரணம் கூறியது.
வானிலை மையம் அறிவுறுத்தியும் எந்தவித மான முன்ஏற்பாடுகளும் செய்யாமல் இருந்ததாலும், செம்பரம்பாக்கம் ஏரியை எந்தவிதமான முன்னறி விப்பும் இன்றி இரவு நேரத்தில் திறந்துவிட்ட தாலும்தான் பலநூறு பேர் மரணமடைந்தனர், லட்சக்கணக்கான மக்கள் ரொம்பவே நொந்து போயினர்.
















