
ஆக்ராவில் நடந்த பாஜக பரிவர்த்தன் பேரணியில் இன்று பங்கேற்றார். ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் ‘பிரதான் மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா’ என்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் பொருளாதாரத்தில் பெரும் சலனம் ஏற்படுத்தியிருக்கும் பண மதிப்பிழப்பு குறித்தும் உரையாற்றினார்.
‘நான் உங்களிடம் 50 நாட்கள் கேட்டேன். சிரமங்கள் இருக்கும் எனத் தெரிவித்தேன். அனைத்து சிரமங்களையும் சந்தித்துக்கொண்டு, கறுப்புப் பணத்துக்கு எதிராக என் நாட்டு மக்கள் செயல்படுகிறார்கள் என்பது அற்புதமாக இருக்கிறது. என் ஏழை சகோதரர்களுக்கும், தலித் சகோதரர்களுக்கும், விவசாய சகோதரர்களுக்கும், பழங்குடி சகோதரர்களுக்கும் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்’ என, பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பேசிய மோடி, தன் திட்டத்தின் பல நன்மைகள் இருக்கிறதென முன்னிலைப்படுத்தினார். ‘இனி, பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கறுப்புப் பணமாக்கி, லஞ்சமாகக் கொடுக்க வேண்டாம். ஏழை மக்களுக்கும், மத்தியதர மக்களுக்கும் சென்றடையவேண்டிய நலன்களை கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் திருடிக் கொள்வது இனி நடக்காது’ எனக் கூறினார். எதிர்க்கட்சிகள் தன்னை விமர்சிப்பது குறித்துப் பேசிய மோடி, ‘சிட்பண்டுகள் எப்படி சாதாரண மனிதனை ஏமாற்ற பயன்படுத்தப்பட்டது என்பதை ஞாபகப்படுத்த வேண்டுமா? சாதாரண மக்கள் கஷ்டப்பட்டு சேமித்த பணம், அரசியல்வாதிகள் சட்டப் பைகளை நிரப்பியது குறித்துச் சொல்லவேண்டுமா?’ எனக் கூறினார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பனார்ஜி ஈடுபட்ட, சர்தா சிட்பண்டு ஊழல் குறித்தே மோடி தாக்கிப் பேசியிருக்கிறார். இறுதியாக, ‘பண மதிப்பிழப்பு குறித்து என்னை விமர்சிப்பவர்கள் யார்? அவர்களுக்காக, என் நேர்மைக்கு பட்டம் பெற வேண்டுமோ ? நான் மத்திய வர்க்கத்துக்காக போராடுவேன். உழைக்கும் வர்க்கத்துக்காக போராடுவேன்.மக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த இடையூரை குறைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பேன்.பாரத் மாதா கி ஜெய்’ எனக்கூறி தன் உரையை முடித்துக் கொண்டார். மின்னம்பலம்,காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக