கோவை: ஜெயலலிதாவின் பிரசார கூட்டத்திற்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள்
திருப்பி விடப்படுவதாக மார்க்சிஸ்ட் கட்சியினரும் சமூக ஆர்வலர் டிராபிக்
ராமசாமியும் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற லோக்சபா தேர்தலையொட்டி கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில்
போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின்
பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம்
மேற்கொள்ள உள்ளார்.
ஜெ. கூட்டத்துக்கு திருப்பி விடப்படும் பஸ்கள்: மார்க்சிஸ்ட், டிராபிக்
ராமசாமி புகார்!
இந்த கூட்டங்களில் கட்சியினர், பொதுமக்களை அழைத்து வர கோவையில் இருந்து
பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் சுமார் 200க்கும் அதிகமான அரசு,
தனியார் பஸ்கள் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இதனால் வழக்கமான வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்கள் இன்று இயக்கப்படாததால்
பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர்
வி.ராமமூர்த்தி, தேர்தல் அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய், 1 ஏப்ரல், 2014
நரேந்திர மோடி தந்தை பெரியாருக்கு ஒப்பானவராம் விஜயகாந்த் உளறுகிறார்
தமிழகத்தில் வெண்தாடி வேந்தர் என்று அழைக்கப்படுபவர் தந்தை பெரியார் அவர்கள் .அவரை போலவே முற்போக்கு சிந்தனை உள்ளவர் மோடி என்பதால் இனி அவரை இந்தியாவின் வெண்தாடி வேந்தர் நரேந்திர மோடி என்று அழைக்கலாம் வெண்தாடி வேந்தர் என்று
இப்ப சொல்லுங்க இந்த ஆளை என்ன செய்யலாம் ? போகிற போக்கைப் பாத்தால் இனி விஜயகாந்த் சினத்துடன் தொண்டர்களை சாத்தும் காட்சி போய் தமிழக மக்களே கேப்டனை வெறுப்புடன் சாத்தும் காட்சியை எதிர்பார்க்கலாம்!
உருகும் அழகிரி!! வீரபாண்டி ஆறுமுகம் இருந்திருந்தால் என்னை நீக்கியிருக்க முடியாது
சேலம்: வீரபாண்டி ஆறுமுகம் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தம்மை யாரும்
தி.மு.க.வில் இருந்து நீக்கியிருக்க முடியாது என்று மு.க. அழகிரி உருக்கமாக
கூறியுள்ளார்.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆதரவாளர்களுடன் மு.க. அழகிரி நேற்று ஆலோசனை
நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மு.க. அழகிரி பேசியதாவது:
மறைந்த வீரபாண்டியார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் என்னை கட்சியை
விட்டு யாரும் நீக்குவதாக அறிவித்திருக்க முடியாது. என்னை கட்சியில்
இருந்து நீக்க வீரபாண்டியார் அனுமதித்திருக்க மாட்டார்.
இப்போது என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால்
எனக்கு எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை. என்னை கட்சியை வீட்டு நீக்குவதில்
உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.
என்னைப் பொறுத்தவரையில் எப்போதும் தி.முக.தான் எனக்கு எப்போதும் தலைவர்
கருணாநிதிதான். அவரைத் தவிர வேறு யாரையும் ஒருபோதும் தலைவராக ஏற்க
முடியாது.
இவ்வாறு அழகிரி பேசினார்.
Read more at: http://tamil.oneindia.in
ஜெயலலிதா சொத்து குவிப்பு பட்டியல் தாக்கல் ! பெங்களூரு நீதிமன்றத்தில் 18 ஆண்டுகள் 200 க்கும் மேல் வாய்தா ?
பெங்களூருவில் நடைபெறுவதென்ன ? கிட்டத்தட்ட 18
ஆண்டுகாலமாக 200 முறைக்கும் மேல் வாய்தா வாங்கியிருக்கும் வழக்குதான்
பெங்களூரில் நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கு என்று வடசென்னை திமுக
பிரச்சாரத்தில் ஸ்டாலின் கூறினார்.
மேலும், பெங்களூரு நீ மன்றத்தில் அரசுத்தரப்பு வழக்குரைஞர் பவானி சிங், ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களின் பட்டியலை தாக்கல் செய்துள்ளார்.
1. சென்னை அருகே வாலாஜாபாத்தில் 600 ஏக்கர்,
2. சிறுதாவூரில் 25 ஏக்கர் அளவில் ஒரு பங்களா.
3. நீலாங்கரையில் 2 ஏக்கர்.
4. கொடநாட்டில் 900 ஏக்கர் மற்றும் பங்களாக்கள். ( இங்கு ஒரு ஏக்கர் ரூ. 5 கோடி மதிப்பு இருக்கும் இதுவே 4 ஆயிரம் கோடியைத் தாண்டுகிறது. இது ஒரு உத்தேச மதிப்புதான்.)
5. காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர்.
6. கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங்குளம், வெள்ளங்குளம் பகுதியில் ஆயிரத்து 190 ஏக்கர்.
6. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர்.
7. ரெவரே அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர்
8. 30 வண்ணங்களில் பலவித கார்கள், டிரக்கர்கள்
9. ஐதராபாத்தில் திராட்சைத் தோட்டம்.

சமந்தா படத்தில் குத்து பாட்டுக்கு தமன்னா டான்ஸ்
தமிழில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த தமன்னா, கடந்த 2 வருடத்துக்கு முன் திடீரென்று தமிழ் படங்களை ஒதுக்கிவிட்டு டோலிவுட் படங்களில் மட்டுமே நடித்து
வந்தார். பல படங்களில் அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்காமல் ஒதுக்கி வந்தார். கோலிவுட் ஹீரோ ஒருவருடன் ஏற்பட்ட மோதலால்தான் அவர்
தமிழ்படங்கள் ஏற்காமல் இருந்ததாக கூறப்பட்டது. இந்தநிலையில் கடந்த ஆண்டு ‘வீரம்‘ படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை மட்டும் ஏற்று நடித்தார்.
தற்போது ராஜமவுலி தமிழ் தெலுங்கில் இயக்கி வரும் ‘பாஹுபலி‘ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார்
தங்கபாலு: திமுக, தேமுதிக-வுடனான கூட்டணி வாய்ப்பை சிலர் தடுத்துவிட்டனர்!
இந்தத் தேர்தலில் நீங்கள் போட்டியிடாததற்கு காரணம் என்ன?
இந்த முடிவை நான் 2011-ம் ஆண்டே எடுத்து, மேலிடத்துக்கும் தெரிவித்து
விட்டேன். கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ்
வெற்றிவாய்ப்பை இழந்தவுடன், தார்மிகப் பொறுப் பேற்று, மற்ற தலைவர்களுக்கு
முன்மாதிரியாக என் பதவியை ராஜினாமா செய்தேன். காங்கிரஸில் உள்கட்சி
ஜனநாயகம் வலுபெறாத வரை கட்சியில் பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது.
பிரேமலதா :மோடி பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் today's special

விழுப்புரம் நரேந்திரமோடி பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் என்று விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் உமாசங்கருக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை விழுப்புரம் வந்தார். விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை திறந்தவேனில் நின்றபடி, அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:–
வல்லரசு நாடாக...
நடைபெற உள்ள தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். உங்களுடைய வாக்கினை நன்றாக சிந்தித்து பதிவு செய்ய வேண்டும். இதுவரை தமிழகத்தில் இரண்டு முனை போட்டி தான் நடைபெற்றுள்ளது. தற்போது 5 முனை போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி வேட்பாளர் உமாசங்கருக்கு நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
நரேந்திரமோடி எப்படி குஜராத் மாநிலத்தை முதன்மை மாநிலமாக வைத்துள்ளாரோ அதேபோல் அவர் பிரதமரானால் இந்தியாவை லஞ்சம், ஊழல் இல்லாத வல்லரசு நாடாக மாற்றுவார்.
சிவனின் சூலாயுதமென்பது சிலுவை?? ஆதிச்ச நல்லூர் ?
சென்னை பல்கலையிலும் பின்னர் பெர்க்லி பல்கலையிலும் முனைவர் பட்ட ஆய்வை முடித்திருக்கும் தேவ அருணாச்சலம் அவர்கள் மண்ணியல், மொழியியல், உயிரியல் ஆகியவற்றிலும் பட்டம் பெற்றவர். இறையியலில் மேலதிக ஆய்வுசெய்துள்ளார். அறிவியல் கொள்கைகளின்படி விவிலியத்தை விளக்கும் இருபது நூல்களை அவர் எழுதியிருக்கிறார்.
திங்கள், 31 மார்ச், 2014
பிரியங்கா ராகுலை முந்திக்கொண்டு வருகிறார்.! விரைவில் கட்சியின் முக்கிய Post?
இந்த தேர்தலில் காங்கிரஸ்
கட்சியைமறைமுகமாக இயக்கும் சூத்திரதாரியாக பிரியங்கா காந்தி வதேரா விஸ்வரூபமெடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அவர்களை பின்னணியில் இருந்து இயக்குவது பிரியங்கா காந்திதான் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2009-ம் ஆண்டு தேர்தல் வரை சோனியாவின் ரேபரேலி தொகுதி, ராகுலின்
அமேதி தொகுதியில் மட்டுமே தனது கவனத்தைச் செலுத்தி வந்த பிரியங்கா காந்தி,
தற்போது அதையும் தாண்டி தீவிரமாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறார்.
கடந்த ஜனவரி 7-ம் தேதி, ராகுலின் வீட்டில் நடைபெற்ற கட்சியின் உயர்
தலைவர்கள் கூட்டத்தில் பிரியங்கா பங் கேற்றார். அப்போதிலிருந்து, கட்சியில்
அவரின் பங்களிப்பு அதி கரிக்கத் தொடங்கியுள்ளது.
ஆரியத்திற்கு முன் தமிழன் தெலுங்கன் மலையாளி மராட்டியன் இந்திக்க்காரன் கிடையாது
ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் நடக்கும் யுத்தமே தவிர ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் என்பது கண்கட்டி வித்தை.//
ஒவ்வொரு தமிழன் தெலுங்கன் மலையாளி இவர்கள் உள்ளும் இருப்பது இதுவே. அதையே ஆரியர்கள் அங்கீகரிக்கிறார்கள். ஆரியர்கள் தனக்கு எதிராக நினைப்பது திராவிடத்தைதான். திராவிடம் என்கிற வாரத்தை சமஸ்கிருத வார்த்தையாக இருந்தாலும் அதை அவர்கள் பயன்படுத்துவதுமில்லை. விரும்புவதுமில்லை. சூத்திரனா, பஞ்சமனா இருக்க வேண்டுமானால் பெரியாரை எதிர்க்கிற தமிழனா இரு.
சுயமரியாதை உள்ளவனாக இருக்க வேண்டுமானால் பெரியாரை ஆதரிக்கிற திராவிடனா இரு. mathimaran.wordpress.com/
இந்த வரலாற்று சிறப்பு மிக்க வாக்கியத்தை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அதற்கு எதிராகா மாறிவிடுகிறார்கள்.
‘பிராமணர் சங்கத்தோடு இணைந்து அதிமுக வை ஆதரிப்போம்’ (கண்கட்டாத வித்தை)
இதை பச்சை சந்தர்ப்பவாதம் என்றால்..
நீங்கள் தமிழன துரோகி. ‘இதுதான் பச்சைத் தமிழனின் கொள்கை’ அப்போ நீங்களும்
அதேதான். அதாங்க.. பச்சை.
ஆரியத்திற்கு முன் தமிழன் தெலுங்கன்
மலையாளி மராட்டியன் இந்திக்க்காரன்என்ற வேறுபாடுகள் கிடையாது… எல்லோரும்
அவர்களுக்கு சூத்திரன், பஞ்சமர்கள்தான்.ஒவ்வொரு தமிழன் தெலுங்கன் மலையாளி இவர்கள் உள்ளும் இருப்பது இதுவே. அதையே ஆரியர்கள் அங்கீகரிக்கிறார்கள். ஆரியர்கள் தனக்கு எதிராக நினைப்பது திராவிடத்தைதான். திராவிடம் என்கிற வாரத்தை சமஸ்கிருத வார்த்தையாக இருந்தாலும் அதை அவர்கள் பயன்படுத்துவதுமில்லை. விரும்புவதுமில்லை. சூத்திரனா, பஞ்சமனா இருக்க வேண்டுமானால் பெரியாரை எதிர்க்கிற தமிழனா இரு.
சுயமரியாதை உள்ளவனாக இருக்க வேண்டுமானால் பெரியாரை ஆதரிக்கிற திராவிடனா இரு. mathimaran.wordpress.com/
கங்கை அமரனின் வீட்டை மிரட்டி வாங்கிய ஜெயா சசி சுதாகரன் Gang
ஜெ.’மீதான சொத்துக் குவிப்பு வழக்கு உச்சகட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில்,
அரசு வழக்கறிஞர் பவானிசிங், சாட்சிகளின் அடிப்படையில்
எடுத்துவைத்திருக்கும் சாட்சியங்கள், ஜெ’தரப்பின் சொத்துக் கணக்கை
அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
ஜெ. முதல்வராக இருந்த 91-96 காலகட்டத்தில் வரு மானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு தான் தற்போது ஜெ.’ தரப்பை கலவரப்படுத்திக்கொண்டு இருக்கிறது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா முன்னிலையில் நடக்கும் இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் 24-ந் தேதி தொடங்கி நான்கு நாட்கள், சாட்சிகளின் சாட்சியங்களை அரசு வழக்கறிஞர் பவானிசிங் எடுத்து வைத்தார். முன்னதாக அவர் வைத்த வாதத்தின்போதே ‘இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆவர். இவர்களில் முதலாவது குற்றவாளி (ஜெ.)யும் இரண்டாவது குற்றவாளி சசி)யும் ஒரே வீட்டில் வசித்தார்கள் என் பதற்கான 9 ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இவர் கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர் கள் என்பதற்கான பல கம்பெனிகளின் ஆவணங்கள் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

பெண் கவிஞர் சல்மா : இந்திரா உள்பட பெண் தலைவர்கள் மோசமாக நடந்து கொண்டனர்!
பெண் கவிஞர் சல்மா.| கோப்புப் படம்.
நாட்டின் பெரிய பொறுப்புக்கு வந்த பெண் தலைவர்களெல்லாம் பெரும்பாலும்
மோசமாகவே நடந்து கொண்டார்கள் என்று திமுக மகளிரணி பிரச்சாரக் குழுச்
செயலாளரும், பிரபல பெண் கவிஞருமான சல்மா கூறியுள்ளார்.
திமுகவில் அழகிரிக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பது தேர்தல் முடிவில் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு உறுப்பினரும், திமுக எம்.பி. கனிமொழியின் தோழியுமான கவிஞர் சல்மா ’தி இந்து’வுக்கு அளித்த பேட்டி வருமாறு:
இந்த தேர்தலில் நீங்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வீர்களா?
எனது சொந்தத் தொகுதியான கரூரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முஸ்லிம்கள்
வசிக்கும் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்குக் கேட்டுள்ளேன். எனது
சொந்தப் பகுதியான வல்லநாடு, துவரங்குறிச்சி போன்ற பகுதிகளில் நான் அனைத்து
முஸ்லிம் பெண்களுக்கும் நன்கு அறிமுகமானவள்.
No Makeup Selfie ஒப்பனையற்ற செல்பீ” படம் முலம் 173 கோடி ரூபா நிதி சேகரிப்பு!
'ஒப்பனையற்ற
செல்பீ' படம் மூலம் புற்றுநோய் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் பிரிட்டனைச்
சேர்ந்த 18 வயதான பியோனா கன்னிங்ஹம் என்ற ஒரு குழந்தையின் தாய் ஒருவரின்
திட்டம் சமூவ வலைத்தளத்தினூடாக வெகுவாகப் பரவி 8 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்
(சுமார் 173 கோடி ரூபா) நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஒஸ்கார்
விருது வழங்கல் விழாவுக்கு ஒப்பனை இன்றி வந்த நடிகை கிம் நொவக் பரலாரும்
ஈர்க்கப்பட்டார் என்பதுடன் இதுவே புற்றுநோய் அறக்கட்டளைக்கு 'ஒப்பனையற்ற
செல்பீ' (நோ மேக்அப் செல்பீ) படத்துடன் பணத்தினை நன்கொடையாக வழங்க மக்களை
ஊக்குவிக்க காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெறுப்பு அரசியலை பரப்புகிறது பாஜக: சோனியா தாக்கு !
அசாமின் லக்கிம்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜகவை கடுமையாக சாடினார். | படம்: ரிது ராஜ் கோன்வர்
பாஜகவும், அதன் தலைவர்களும் வெறுப்பு அரசியலை பரப்பி வருவதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்தார்.
அசாம் மாநிலத்தின் லக்கிம்பூரில் இன்று (ஞாயிறு) நடைபெற்ற தேர்தல்
பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசும்போது, "நாடு
முழுவதும் வலம் வரும் எதிர்கட்சியினர் பெரிய பெரிய விஷயங்களைப் பேசி
வருகிறார்கள்.
குறிப்பாக, பாஜகவினரின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையே மிகப் பெரிய அளவில்
வேறுபாடுகள் இருக்கின்றன. அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் என்ன
செய்தார்கள்?'' என்று கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலின்: ஜெயலலிதாவின் அண்டப்புளுகு ஆகாசப்புளுகு !
ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை, அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் உடுமலையில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மு.க.ஸ்டாலின்,
இரண்டு
நாட்களுக்கு முன்பு மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா என்ன
சொல்கிறார் என்றால், மின்சாரத்தை பற்றி சொல்லுகிறார். மின் உற்பத்தி என்று
எடுத்துக்கொண்டால் எனது அரசின் பகீரத முயற்சியின் காரணமாக தற்போது
கிட்டதட்ட 2500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு
வருகிறது என்ற ஒரு அண்டப்புளுகை, ஆகாசப் புளுகை ஜெயலலிதா மதுரையில்
அவிழ்த்துவிட்டிருக்கிறார். 2500 மெகாவாட் அளவுக்கு கூடுதல் மின்சார
உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது என்று கூறுகிறார்களே, நான் கேட்கிறேன்
இதுவரையில் ஒரு மெகாவாட் மின்சாரத்தை இந்த 3 ஆண்டு காலத்தில் ஜெயலலிதா
ஆட்சி உற்பத்தி செய்திருக்கிறதா. கிடையாது.
கலப்பு திருமணம் செய்த கர்ப்பிணி "கவுரவ கொலை' : தாய், தம்பி உட்பட 4 பேர் கைது
ஞாயிறு, 30 மார்ச், 2014
நாஞ்சில் சம்பத் கூட்டத்தில் கவர்ச்சி குத்தாட்டம்.. முகம் சுளித்து ஓடிய பெண்கள்!
ஊட்டி: நீலகிரி தொகுதி அதிமுகவேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய
அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்ட
கூட்டத்தில் கவர்ச்சிகரமான குத்தாட்டம் இடம் பெற்றதால் கூடியிருந்த பெண்கள்
என்னடா கருமம் இது என்று முகம் சுளித்தபட இடத்தைக் காலி செய்ததால்
பரபரப்பு ஏற்பட்டது.
இப்போதெல்லாம் கொள்கையைச் சொல்லிக் கூட்டத்தைக் கூட்ட முடியாது. காரணம்
என்ன மாதிரியான கொள்கையை கட்சிகள் வைத்துள்ளன என்பது கட்சிகளுக்கேத்
தெரியவில்லை. இதனால் குத்தாட்டம், கவர்ச்சிகரமான ஆட்டம் பாட்டம் என்று சினிமாத்தனமாக
நடந்து கொண்டால்தான் கொஞ்சமாச்சும் கூட்டம் கூடுகிறது. குறிப்பாக
அதிமுகவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்தான் கவர்ச்சிகரமான
குத்தாட்டங்கள் அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
கவர்ச்சிகரமான முறையில் நடைபெறும் இந்தக் குத்தாட்டங்களைப் பார்க்க
மக்களும் ஓரளவு வருகின்றனர். குறிப்பாக ஆண்கள் கூட்டம் கட்டி ஏறுகிறது.
இந்த நிலையில் நீலகிரியில் அதிமுகவினரின் குத்தாட்டத்தால் பெண்கள் மிரண்டு
ஓடி விட்டனர்.
உதயக்குமாருக்கு ரூ.9 கோடி சொத்து: வேட்பு மனுவில் தகவல் ! So நிச்சயம் பதவி தேவைதான்
கூடங்குளம்
அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கன்னியாகுமரி
பாராளுமன்ற தொகுதியில் ‘ஆம் ஆத்மி’ கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
இடிந்தகரையில் தங்கியிருந்து போராட்டம் நடத்தி வந்த உதயகுமார் நேற்று அங்கிருந்து வெளியேறி நாகர்கோவில் வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்வதற்காக உதயகுமார் மதியம் 12.20 மணிக்கு வந்தார். வேட்பு மனுத்தாக்கலுக்கான ஆவணங்களை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அவர் மீது வழக்குகள் அனைத்தையும் வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டியது இருந்ததால் சுமார் 2 மணி நேரம் ஆனது. மதியம் 2.20 மணிக்கு கலெக்டர் நாகராஜனிடம் வேட்பு மனுவை உதயகுமார் வழங்கினார். அங்க சுத்தி இங்க சுத்தி இந்த இடத்துக்கு தான் வருவே அடுத்தது ஹாஸ்பிடல் காலேஜ மந்திரி ..

விஜயகாந்தைவிட வடிவேல் எவ்வளவோ மேல்..: அதிமுகவில் இணைந்த விஜயகாந்த் சகோதரர் பால்ராஜ் பேட்டி
- பால்ராஜ், மற்றொரு சகோதரர் நாகராஜ், அவரது மனைவி தேவிகா மற்றும் விஜயகாந்த். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
- விஜயகாந்த் சகோதரர் பால்ராஜ் தனது வீட்டில் மனைவி வெங்கடலெட்சுமியுடன்..
விஜயகாந்தைவிட வடிவேல் எவ்வளவோ மேல் என அதிமுவில் இணைந்த விஜயகாந்தின் சகோதரர் பால்ராஜ் (56) குற்றம் சாட்டியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜய காந்தின் சகோதரர் பால்ராஜ் வெள்ளிக்கிழமை மதுரையில்
முதல்வர் ஜெயலலிதா முன்னிலை யில் அதிமுகவில் இணைந்தார். அவரை
சந்திப்பதற்காக மதுரை சதாசிவம் நகர் திருவள்ளுவர் தெரு வில் உள்ள அவரது
வீட்டுக்குச் சென்றோம். 4-க்கு 6 அடி உள்ள சமையலறை, கால்களை நீட்டி படுக்க
முடியாத அளவுக்கு வெறும் 48 சதுர அடி மட்டுமே கொண்ட மற்றொரு அறை. இதுதான்
விஜயகாந்தின் சகோதரர் வீடு என்பதைக் கண்டதும் ஆச்சரியமாக இருந்தது. உடைந்த
நாற்காலியின் மீது வைக்கப்பட்டிருந்த அரசின் இலவச டி.வி.யைப் பார்த்துக்
கொண்டிருந்தவர், அதை நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினார்.
அழகிரி முதன்முறையாக திமுக வேட்பாளரைத் தோற்கடிக்க நேரடியாகவே ...
திமுக வேட்பாளரைத் தோற்கடிப்பதே என்மீது
ஆதரவாளர்கள் காட்டும் விசுவாசத்துக்கு அடையாளம் என உசிலம்பட்டியில் தனது
ஆதரவாளர்களிடம் மு.க.அழகிரி ஆவேசமாகக் கூறினார்.
திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட பின்னர் மு.க.அழகிரி மதுரைக்கு
வெள்ளிக்கிழமை காலை விமானத்தில் வந்தார். அவர் வந்த விமானத்தில் மத்திய
அமைச்சர் ப.சிதம்பரமும், அவரது மகனும் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ்
வேட்பாளருமான கார்த்தி சிதம்பரமும் வந்தனர்.
மதுரை விமான நிலையத்தில் ப.சிதம்பரத்துடன் தனியாக மு.க.அழகிரி சந்தித்துப் பேசினார். அதன்பின், ஆதரவாளர்களுடன் மதுரை சாய்நகரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
சனிக்கிழமை காலையில் ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

கஞ்சா கிடைக்கும் முதல் நாடு இந்தியா !
சர்வதேச அளவில் போதைப் பொருட்களின் நடமாட்டம் மற்றும் அவற்றின் விலை விபரம்
தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே மிக மலிவு விலையில் கஞ்சா
கிடைக்கும் முதல் நாடு இந்தியாதான் என்பது தெரிய வந்துள்ளது.
சராசரியாக 5 ரூபாய் இருந்தால் இந்தியாவுக்குள் ஒரு கிராம் கஞ்சாவை வாங்கிவிட முடியும் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
உலகில் உள்ள முக்கிய நாடுகளில் கஞ்சாவின் இன்றைய விலை விபரம்:-
(கிராம் ஒன்றுக்கான விலை, அமெரிக்க டாலர்களின் மதிப்பில்)> மலிவு விலையில் கிடைக்கும் நாடுகள்:-
இந்தியா- $0.08, தென்னாப்பிரிக்கா- $0.10, கவுட்டெமலா- $0.20, கென்யா- $0.20, நைஜீரியா- $0.20, பிரேசில்- $0.30, கொலம்பியா- $1.32, டொமினிய குடியரசு- $1.33.

சவூதி பெண்ணுரிமை போராளிக்கு விருது வழங்கி கவுரவித்த ஒபாமா
ஒரு நாள் அரசு முறை பயணமாக நேற்று தலைநகர் ரியாத்தை வந்தடைந்த அமெரிக்க
அதிபர் ஒபாமா, சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவூத்-தை
சந்தித்து பேசினார்.
நேற்றிரவு இங்கு ஓய்வெடுத்த ஒபாமா, சவூதியில் குடும்பத்தை சேர்ந்த ஆண்களின்
அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிவரும் பெண்ணியக்கவாதி குழுவினரை சந்தித்து
பேசினார்.
கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து சவூதி பெண்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு
வரும் பெண்ணுரிமை போராளியான மஹா அல்-முனீஃப், இந்த ஆண்டுக்கான அமெரிக்க
அரசின் பெண்ணுரிமை போராளி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்த சந்திப்பின்போது அந்த விருதினை மஹாவுக்கு வழங்கிய ஒபாமா, அவரது தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்தினார்.maalaimalar.com/
இந்த சந்திப்பின்போது அந்த விருதினை மஹாவுக்கு வழங்கிய ஒபாமா, அவரது தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்தினார்.maalaimalar.com/
ஜெயலலிதாவின் ஒப்புதல் வாக்குமூலம் :சேது சமுத்திர திட்டத்தை ஆதரித்தது உண்மைதான்
;ராமநாதபுரம்: ""சேது சமுத்திர திட்டம், ஒரு பாழான திட்டம். இத்திட்டம்
நிறைவேற்றப்படுமானால், தமிழக மீனவர் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் மாசுபடும்.
முதலில் இத்திட்டத்தை நான் ஆதரித்தது உண்மை தான்,'' என, ராமநாதபுரத்தில்
பிரசாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.ராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அன்வர்ராஜாவை ஆதரித்து, அவர் பேசியதாவது:ஏழை
மக்களின் நலன் கருதி சமையல் காஸ் சிலிண்டர்களின், மதிப்பு கூட்டு வரியை
ரத்து செய்துள்ளேன். சிறுபான்மையினர் நலனுக்காக, உலமாக்களுக்கு
ஓய்வூதியத்தை அதிகரித்துள்ளேன். நோன்புக் கஞ்சி அரிசிக்கு கூடுதல் மானியம்
அளித்து, ஹஜ்யாத்திரை பயண மானியத்தை உயர்த்தியுள்ளேன்.
அப்படியே விடுதலை புலிகளை எதிர்த்தேன் , கரசேவையை ஆதரித்தேன் வாஜ்பேயி அரசை என் சுயநலத்துக்காக கவிழ்த்தேன் ..கருணாதி ஆரம்பித்ததுக்காக மதுரவாயில் திட்டம் , சட்டசபையை மூடியது , அண்ணா நூலகத்தை முடக்கியது முக்கியகாக வருமானத்துக்கு அதிகமாக லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்ததும் உண்மை என்று நீங்கள் சொல்லி விட்டீர்கள் ஆனால் தமிழக மக்கள் உங்களை இருகரம் கூப்பி , சாரி தரையில் விழுந்து வணங்குவார்கள் ...

VIP mania கூடுதலாக 22 வி.ஐ.பி.,க்களுக்கு சிறப்பு பாதுகாப்பு தேவையா?மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் மத்திய அரசு
நாட்டில், வி.ஐ.பி., கலாசாரம் பெருகிவிட்டதாக பல்வேறு தரப்பினரும்
குற்றம்சாட்டி வரும் நிலையில், மேலும், 22 வி.ஐ.பி.,க்களுக்கு, மத்திய துணை
ராணுவப் படையின் சிறப்பு பாதுகாப்பு வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம்
அனுமதி வழங்கியுள்ளது.ஏற்கனவே, விலைவாசி உயர்வு, பொருளாதார மந்த
நிலை, ஊழல் போன்ற பல்வேறு காரணங்களால், மக்கள் அவதிப்படும் நிலையில்,
மத்திய அரசின் இந்த முடிவால், மக்கள் வரிப்பணம் மேலும் வீணடிக்கப்படும்
அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
ஜோலிகள் ஆயிரம் இருக்க இதெல்லாம் வேஸ்ட் , நான் நேருவையே நெறைய பக்கத்துலேயே பாத்துருக்கேன் அவ்ளோ எளிமை . அதேபோல காமராஜர் ராஜாஜி லால்பகதூர் ஆர்வி சிசுப்ரமனியம் எல்லாருமே அவ்ளோ எளிமையா இருந்தாக , இந்தமாதிரி எல்லாம் முன்னாடி 10கார்கல் பின்னாடி10கார்கல்லெவர பந்தாவெல்லாம் இல்லே , மவுண்ட் ரோட்லேயே முன்னாடி ஒரு சைரன் கார்வரும் பின்னாடி நேருவின் கார் வரும் அவ்ளோதான் இப்போ எல்லாமே வெறும் பந்தா பரமசிவமா ஆட்டம்போடுதுங்க அம்மாக்கு பிரசாரம் பண்ண தனிவிமானம் ஹெலிகாப்டர் கார்கள் என்று வீண் ஆர்பாட்டமே நடக்குது . சோனியா அப்டேரால் ஒருகச்சிதலைவி அம்புடுதான் ஆனால் அவளுக்கு எவ்ளோ செக்யூரிடி காவல் படைபூனைபடை ன்னு ,இந்திராகூட இவ்ளோ ஆரவாராம் செயலே .நம்மளை எமாத்துறாக என்று தெரியுது எவனும் ஒரு மண்ணும் நோன்ண்ட முடிலே . இந்தபகட்டுலேதான் மயங்கி கொடியிலே சொத்து சேக்கலாம்னு அரசியலுக்கே வாராக

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)