சனி, 10 ஆகஸ்ட், 2013

சேரன் மகள் காதல் : காவல்துறைக்கு கவுன்சிலிங் தேவைதான் காதலர்களுக்கு தேவை இல்ல

16 வயதுகூட நிரம்பாத சிறுமியை கதாநாயகியாக ஆடை குறைத்து, கிழவர்களுக்கு ஜோடியாகவும் அதைவிட மோசமாக கவர்ச்சி உடையில் பாலியல் பொருளாகவும் காட்டுகிறவர்கள் சொல்கிறார்கள்:
“அந்தப் பொண்ணுக்கு 20 வயது. அதுக்கு என்ன விவரம் தெரியும்? பெத்தவனுக்கு இல்லாத அக்கறையா?” தன்னுடைய தந்தை மேல் காவல்துறையில் புகார் கொடுக்கக் கூடிய அளவிற்கு ஒரு பெண்ணிற்கு தைரியம் இருக்கும்போது, தன் தந்தையை மீறி தன் காதலனை கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பது ஏன்? கல்யாணம் ஆகி இருந்தால் இந்தப் பிரச்சினை இவ்வளவு தூரம் வந்திருக்காது.
தன் தந்தையை கிரிமினலாக குற்றம்சாட்டி புகார் கொடுப்பதை விட, தன் மனதுக்கு பிடித்தவனை தந்தைக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்வது தவறில்லை. அதுவே தந்தைக்கு காட்டும் மரியாதையும்கூட.
ஏன் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை? அதைத் தடுத்தது, தடுப்பது யார்? இந்த முடிச்சை அவிழ்த்தால், இதன் குற்றவாளிகள் யார் என்று தெரியும்?

கிரானைட் முறைகேடு :பி.ஆர்.பி நிறுவனம் மீது ரூ1,061 கோடி இழப்பு வழக்கு!

மதுரை: பி.ஆர்.பி. நிறுவனம் முறைகேடாக கிரனைட் கற்களைவெட்டி எடுத்ததில், அரசுக்கு ஆயிரத்து 61 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் மீது மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ள கிரானைட் முறைகேடு வழக்குகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கீழையூர், கீழவளவு மற்றும் பூரண்குளம் பகுதிகளில், பி.ஆர்.பி. நிறுவனம், முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்த காரணத்தால், அரசுக்கு சுமார் ஆயிரத்து 61 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்த குற்றச்சாட்டின் பேரில், பி.ஆர்.பி. நிறுவனம் மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நில ஊழல் : சோனியா மருமகனுக்கு சிக்கல் ! 200 கோடி மதிப்புள்ள இந்த நிலம் வெறும் 7. 5 கோடி

குர்கான்: அரியானா மாநிலத்தில் அரசு நிலத்தை தனது பெயரில் மாற்ற
சோனியா மருமகன் ராபர்ட் வதோரா போலியான ஆவணங்கள் மற்றும சட்ட மீறல்களை செய்ததாக ஐ.ஏ.எஸ்.அதிகாரி அசோக் கேம்கா தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அரியானா மாநிலத்தில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு முதல்வர் பூபிந்தர்சிங்ஹூடா முதல்வராக இருந்து வருகிறார். குர்கான் அருகே ஷிக்கோபூர் கிராமத்தில் 3. 5 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானதாக இருந்தது. இந்த நிலம் முதன்முதலில் டி.எல்.எப்., என்ற நிறுவனத்திற்கு குறைந்த விலையில் விற்கப்பட்டது. அதாவது சுமார் 200 கோடி மதிப்புள்ள இந்த நிலம் வெறும் 7. 5 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து கடந்த ஆண்டு அன்னா ஹசாரேயின் நெருங்கிய நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். நிழல் உலக தாதா தாவுத்....நிஜ உலக தாதா ராபர்ட் வதோரா ..

பி.வி.சிந்து வெண்கலம் வென்றார்! உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில்


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்து வெண்கலம் இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், உலகின் 3ம் தரநிலை வீராங்கனை ரட்சனோக் இன்டானனை (தாய்லாந்து) சிந்து எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ரட்சனோக் முன்னிலையில் இருந்தார். அவருக்கு ஈடுகொடுத்து சிந்து போராடினார். ஆனால் அடுத்தடுத்து 5 புள்ளிகளை எடுத்து அசத்திய ரட்சனோக், முதல் செட்டை எளிதாக வென்றார். அதே வேகத்தில் 2-வது செட்டையும் கைப்பற்றினார். 35 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இப்போட்டியில், 10-21, 13-21 என்ற செட்கணக்கில் சிந்து தோல்வியடைந்தார். இதனால் அவர் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

ராமதாஸ் :ஆந்திராவில் திருப்பதி, காளஹஸ்தி தமிழர் இழந்த பகுதிகளை மீட்கவேண்டும் ! 32 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை நாம் ஆந்திராவிடம் இழந்தோம்.

ஆந்திராவில் தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராம தாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.;இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ’’ஆந்திரத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக் கை எழுந்துள்ளது. ஆந்திரத்தில் உரிமை இழந்து வாடும் நமது தமிழ் சொந்தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.1956-ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழ்நாடு தான். தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டு அருகில் உள்ள ஆந்திரா, கர்னாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. இதனால், தமிழகம் மொத்தம் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிகளை இழந்தது. இதில் பாதி, அதாவது 32 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை நாம் ஆந்திராவிடம் இழந்தோம்.  தமிழ்நாட்டில் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கிய 9 வட்டங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தெலுங்கு பேசும் மக்களுக்காக மட்டுமே ஆந்திரா உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழை தாய் மொழியாகக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் 300-க்கும் அதிகமான கிராமங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது தமிழர்களுக்கு செய்யப்பட்ட துரோகம் ஆகும். இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள தமிழர்களும், இப்பகுதிகளைச் சேர்ந்த மக்களும் போராடியதன் பயனாக 1961-ஆம் ஆண்டில் திருத்தணி வட்டமும், பள்ளிப்பட்டு பகுதியும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன.

தலைவாவுக்கு ஜெயாவின் மிரட்டல் ! கலைஞர் கண்டனம் !

சென்னை: தலைவா திரைப்படம் வெளியிடுவதில் தொடரும் தடங்கலுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அரசியல் வாதிகள் மேடைகளில் முதலமைச்சரைப் பற்றி வாயைத் திறந்தாலே போதும், உடனடியாக அவர்கள் மீது அவதூறு வழக்கு போடப்படுகிறது. பத்திரிகைகள் அந்தப் பேச்சினை வெளியிட்டால் அவர்கள் மீதும் அவதுhறு வழக்கு. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்கே பொதுக் கூட்டமோ, நிகழ்ச்சிகளோ நடத்த முடியவில்லை. ஒரு சில அரசியல் தலைவர்கள் ஒரு சில மாவட்டங்களில் உள்ளேயே நுழையக் கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. நெருக்கடி நிலை காலத்திலே கூட இப்படிப்பட்ட நிலைமைகள் இல்லை. அந்த வரிசையிலே தான் "தலைவா" திரைப்படம் பல கோடி ரூபாய்ச் செலவிலே தயாரிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அந்தப் படத்தில் தம்பி விஜய் நடித்து, அது வெளிவருவதை அவருடைய ரசிக நண்பர்கள் பெரிதும் ஆவலாக எதிர்பார்த்து நிற்கிறார்கள். இந்த நிலையில் அந்தப் படத்திலே ஏதோ ஒரு வாக்கியம் அரசைத் தாக்குவதைப் போல இருப்பதாகக் கூறி, அந்தப் படம் வெளிவரும் திரையரங்குகளுக்கெல்லாம் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா கொடைநாட்டில் இருக்கும் வரை தலைவா வராது ! ஜெயலலிதா ஏன் பயப்படுகிறார் ? புரியல்லையே ?

சென்னை: வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குப் பிறகு முதல்வரைச் சந்திக்க விஜய்க்கு நேரம் ஒதுக்குவார் முதல்வர் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு சுதந்திர தினத்தில் தலைவா படம் வெளியாகக் கூடும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வெளியாக இருந்த தலைவா ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டிக்கெட் புக் செய்தவர்களுக்கான கட்டணங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆக 12-ம் தேதிக்குப் பிறகு விஜய் & கோவுக்கு முதல்வர் அப்பாயின்ட்மென்ட்..15ல் ரிலீஸ்? தலைவா இன்று தமிழ்நாட்டில் வெளியாகாத நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர்களோ கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குச் சென்று படம் பார்க்கின்றனர். 'தலைவா' படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்திருந்ததால் வரிவிலக்கு குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது.

தலைமைச் செயலரிடம் ஜேம்ஸ் வசந்தன் புகார் செய்ய முடிவு

சென்னை: நில விற்பனை விவகாரத்தில் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் இதுகுறித்து தலைமை செயலாளரிடம் புகார் செய்யப் போவதாகவும் இசையமைப்பார் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்தார். சுப்பிரமணியபுரம், ஈசன் உள்பட சில திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் மீது ராதா வேணு பிரசாத் (வயது 65) என்பவர் நீலாங்கரை போலீசில் புகார் கொடுத்தார். அதனடிப்படையில், கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஜேம்ஸ் வசந்தன் கடந்த 4-ந் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த ஜேம்ஸ்வசந்தன், தன் மனைவி ஹேமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுடன் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

பாக் பாடகி : இந்திய ராணுவத்தினரின் மரணத்தால் இதயம் நொறுங்கிவிட்டது

டெல்லி பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லையில் நடத்திய தாக்குதலில் 5
இந்திய வீரர்கள் பலியானது பெரும் வருத்தம் தருகிறது. இந்த செயலுக்காக நான் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலமான சுஃபி பாடகி சனம் மார்வி. டெல்லியில் இசைக்கச்சேரியில் பங்கேற்க வந்திருந்தார் சனம். ஆனால் பாகிஸ்தான் வீரர்களின் திடீர் தாக்குதலால் ஏற்பட்ட சூழலால் அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பாகிஸ்தான் திரும்பினார். இந்தநிலையில், தனது நாட்டு ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு சனம் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது.. இந்த தாக்குதலில் தங்களது பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் வேதனையில் நானும் பங்கேற்கிறேன். ஒரு தாயாக அவர்களது வலியில் நானும் பங்கேற்கிறேன். என்னுடைய இதயம் வலிக்கிறது. இப்படிப்பட்ட சோகமான சூழலில் என்னால் பாட முடியாத நிலை

தூர்வாராததால் 4 டி.எம்.சி. தண்ணீர் வீணாகக் கடலில்! தண்ணீர் வந்தும் கண்ணீரில் விவசாயிகள்


சென்னை, ஆறு, ஏரி, கால்வாய்கள் தூர்வாராத காரணத் தால் தண்ணீர் திறந்து விடப்பட்டும் உபரி நீர் கடலில் கலந்து வீணா கிறது.
மழை வெள்ள காலங்களில் காவிரியை, உபரி நீர் கால்வாயாக பயன்படுத்தும், கர்நாடக மாநிலத்தை போல, கொள்ளிடம் ஆற்றை, தமிழகம் பயன்படுத்து வது தொடர்கிறது. நேற்று ஒரே நாளில், கிட்டத்தட்ட நான்கு டி.எம்.சி., தண்ணீர், கொள்ளிடம் வழியாக, கடலில் கலந்து வீணாகி யுள்ளது. முறையான திட் டமிடல் இல்லாததே, இதற்கு முக்கிய காரணம் என, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்திய மாணவி georgianna வின் சடலம் இன்று சென்னை வருகிறது ! லண்டன் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட

சென்னை: லண்டன் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக
கூறப்பட்ட இந்திய மாணவியின் சடலம் மறு பிரேத பரிசோதனை முடிந்து இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது.முகப்பேர் மேற்கு பாடி குப்பம் பகுதியில் வசிப்பவர் நாஞ்சில் சாம்சன் (49). ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மகள் ஜார்ஜியானா (18). லண்டன் லிவர்புல் யுனிவர்சிட்டியில் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் முதலாண்டு படித்து வந்தார். கடந்த மாதம் 12ம் தேதி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக சாம்சனுக்கு தகவல் வந்தது.இதையடுத்து 14ம் தேதி அவர் லண்டன் சென்றார். அதற்குள் சடலத்தை பல்கலைக்கழக நிர்வாகம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டது. தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந் தார். இதையடுத்து நீதிமன்றம் ஜார்ஜியானா சடலத்தை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. கடந்த 4ம் தேதி பிரேத பரிசோதனை நடந்தது. ஜார்ஜியானா சடலம் நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று மாலை லண்டனில் இருந்து புறப்பட்ட அவர்கள், இன்று காலை 8 மணியளவில் சென்னை வருகிறார்கள்.

போலீஸ் முன்பாகவே தமிழ் நாய் என இழிவுப்படுத்திய மலையாளி அதிகார வர்க்கம் : ஜேம்ஸ் வசந்தன் ஆவேசம் !

சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் ராதாதேவிபிரசாத். இவர், நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில், “எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார். இதுபற்றி நீலாங்கரை போலீசார் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் சென்னையில் வெள்ளிக்கிழமை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பொய் வழக்கு போட்டு காவல்துறை கைது செய்தது குறித்து தமிழக முதல்வர் முழு விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தனக்கு உரிய நீதி பெற்றுத் தரவேண்டும் என்றும் ஜேம்ஸ் வசந்தன் கோரிக்கை வைத்தார்.
65 வயது மூதாட்டிக்கு தான் எவ்வாறு பாலியல் தொந்தரவு கொடுக்க முடியும் என்றும், தன் மீது நிலப் பிரச்சனை காரணமாக வேண்டும் என்றே பொய் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர் என்றும், இதற்கு பின்னணியில் பெரிய மலையாளி அதிகார ஊடுருவல் இருப்பதாகவும் தெரிவித்த அவர், காவல்துறை முன்னிலையில் தன்னை தமிழ் நாய் என்று ராதாதேவிபிரசாத் இழிவு படுத்தியதாகவும், இது குறித்து புகார் அளித்தும் காவல்துறை அப்புகாரை ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
ஜேம்ஸ் வசந்தனுடன், அவரது மனைவியும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். காவல் துறையால் தாங்கள் எப்படி நடத்தப்பட்டோம் என்று அவர் கூறினார்.
இசை அமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார், சின்னத்திரை கலைஞர்கள் உமா பத்மநாபன், விஜய் ஆதிராஜ் ஆகியோர் ஜேம்ஸ் வசந்தனுக்கு ஆதராவாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி கொடுத்தனர்.
நாம் தமிழர் கட்சி, தமிழர் முன்னேற்ற கழகம், மே 17 இயக்கம், தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சி, தமிழர் பண்பாட்டு நடுவம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சி இயக்கங்களின் சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், ஜேம்ஸ் வசந்தனை 'தமிழ் நாய்' என்று இழிவு படுத்திய பெண்மணிக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இழிவு படுத்தி பேசியதற்கு அப்பெண் உடனடியாக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில்

தலைவா 22ம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது? படமோ மொக்கை இன்னும் எதுக்கு இந்த பில்டு அப்.

சென்னை:நடிகர் விஜய் நடித்த, "தலைவா' படம், தமிழகத்தை தவிர, தென் மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் வரும், 22ம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது. "படம் வெளியிட ஏற்பட்ட தாமதத்திற்கு, தமிழக போலீசிற்கு பங்கில்லை' என்று, டி.ஜி.பி., ராமானுஜம் தெரிவித்துள்ளார்.விஜய் - அமலாபால் நடித்த, "தலைவா' படம், நேற்று (9ம் தேதி) தமிழகம் உட்பட, உலகம் முழுவதும், 2,000 தியேட்டர்களில் வெளியாக இருந்தது. படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு தாமதமானதாலும், அரசியல் கலந்த வசனங்கள் இருப்பதாக தகவல் வெளியானதாலும், இப்படத்தை திரையிடும், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாலும், "தலைவா' படம், நேற்று தமிழகத்தில் வெளியிடப்படவில்லை.ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மும்பை மற்றும் வெளிநாடுகளில், நேற்று படம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில், நேற்று காலை தியேட்டர்களுக்கு வந்த விஜய் ரசிகர்கள், ஏமாற்றமடைந்தனர்.கருணாநிதி ஆட்சியில் இவர் திரைப்படம் வெளியிட கருணாநிதி குடும்பத்தார் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று இவரும் இவர் தந்தையும் பெரிய சீன் போட்டு தேர்தலில் அம்மாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்கள்.

பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற்றம்

The U.S. Consulate in the Pakistani city of Lahore was shut Friday following “specific threats,” 
சர்வதேச நாடுகளில் இயங்கும் அமெரிக்க தூதரங்கள் மீது தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தனர். அதுபற்றி தகவலறிந்த அமெரிக்க உளவுத்துறை முஸ்லிம் நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களை தற்காலிகமாக மூடியது. இந்த நிலையில் பாகிஸ்தானில் லாகூரில் இயங்கும் அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களை வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இங்கு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் அதிரடி திட்டம் தீட்டியிருந்தனர். எனவே தங்களது ஊழியர்களின் உயிரை காப்பாற்றவே இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தவிர பாகிஸ்தானுக்கு யாரும் சுற்றுலா செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளவர்கள் பாதுகாப்புடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டி.ஆர்.எஸ்., கட்சி உடைகிறது! நடிகை விஜயசாந்தி காங்கிரசில் சேருகிறார் ?

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கினால், தன் கட்சியை காங்கிரசுடன்
இணைப்பதாக, வாக்குறுதி அளித்த, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியான, டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவ், அந்த வாக்குறுதியை மீறுவதோடு, பல நிபந்தனைகளையும் விதிப்பதால், பிரபல நடிகை விஜயசாந்தி மூலம், அந்தக் கட்சியை உடைக்க, காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.ஆந்திர மாநிலத்தை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க, காங்கிரஸ் செயற்குழுவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் ஒப்புதல் அளித்து விட்டன. தெலுங்கானா அமைவது, கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதால், டி.ஆர்.எஸ்., கட்சியை, காங்கிரசுடன் இணைக்க வேண்டும் என, காங்., மேலிட தலைவர்கள் வலிறுத்தி வருகின்றனர்."தெலுங்கானா தனி மாநில கோரிக்கை ஏற்கப்பட்டால், என் கட்சியை, காங்கிரசுடன் இணைத்து விட தயார்' என, ஏற்கனவே சந்திசேகர ராவ் வாக்குறுதி அளித்திருந்ததே, இதற்கு காரணம். ஆனால், சமீப நாட்களாக, சந்திரசேகர் ராவ் அளித்து வரும் பேட்டிகளில், "தெலுங்கானா தனி மாநிலம் குறித்த மசோதாவை, பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றிய பிறகே, கட்சியை காங்கிரசுடன் இணைப்பது குறித்து யோசிக்க முடியும்' என, தெரிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி, "ஐதராபாத்தை எந்தக் காரணத்திற்காகவும், ஆந்திராவுக்கான தலைநகராக மட்டும் இருக்க, அனுமதிக்க முடியாது. அந்த நகரம், ஈட்டக்கூடிய வருவாயில், ஒரு பைசாவை கூட, ஆந்திராவுக்கு தர முடியாது' என்றும், சொல்லி வருகிறார். சந்திரசேகர ராவின் இந்தப் பேச்சு, காங்கிரசுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

தனுஷ் கஸ்துரி ராஜாவின் மகனே இல்லையாமே ? உண்மை பெற்றோர் விவகாரமொன்று?

“ரஞ்ஜனா’ இந்திப் படம் மூலம் டெல்லிச் சீமை வரை கொடிநாட்டிய நடிகர் தனுஷுக்கு சிவ கங்கை சீமையிலிருந்து புது சிக்கல் உருவாகியுள்ளது.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் என்ற அடையாளத்துடன்  “துள்ளு வதோ இளமை’ பட  நாயகனாக அறிமுகமானார் தனுஷ். அறிமுகமான  ஆண்டு 2002. அதே  ஆண் டில், தொலைந்த தன் மகன்  கலைச்செல்வன்தான் இன் றைய நடிகர்  தனுஷ் என புதிய விவகாரத்திற்கு  கோடிட்டுள்ளார்  சிவகங்கை பேருந்து  நிலையத்தில் டைம் கீப்பராக பணியாற்றும் கதிரேசன்.
‘என் சொந்த ஊரு திருப்பாசேத்திப் பக்கத்திலுள்ள கல்லூரணி. என் மனைவி பேரு மீனாள். எங்களுக்கு இரண்டு குழந்தைகள்.  மூத்தவன் கலைச்செல்வன். இரண்டாவது தன பாக்கியம். நான் கண் டக்டரா வேலை பார்த்துக்கிட்டிருந்தப்ப எங்க  வீடு மேலூர் பக்கத்தில எம். மலம் பட்டி ஆர்-டி.ஓ. ஆபீஸ் பக்கம்  இருந்துச்சு. 10-ம் வகுப்பில் 365 மார்க் எடுத்தான் கலை.
திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் சீதையம்மாள் பள்ளியில் +1 சேர்த்துவிட் டோம். ஹாஸ்டலுடன்   சேர்ந்தது அந்த ஸ்கூல். ஹாஸ்டல்   வார்டன் சீதாபதி எங்க   ஊருக்காரரு என்பதால் அவர் பொறுப்பில் இவனை விட்டோம். கொஞ்ச நாளிலேயே இவன் வைச்சிருந்த டிரங்க் பெட்டியில்ஸ “அம்மா, என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு இந்த படிப்பு பிடிக்கலை. நான் ஊரைவிட்டே போறேன். எனக்கு எப்பத் தோணுதோ, அப்ப உங்களைத் தேடி வருவேன்” அப்படின்னு எழுதி வைச்சுட்டு வெளியேறிட்டான்’. அவன் போனது 2002-ம் வருஷம்.

ஜேம்ஸ் வசந்தனை தமிழ் நாய் / பட்டி என்று மலையாளிகள் போலீஸ் நிலையத்தில் வைத்தே அழைத்தார்கள் வீடியோ விளக்கம்


ஜேம்ஸ் வசந்தன் தவறான அதிகாரிகளுக்கு பாடம் கற்பிக்க திட்டம்?

தவறான வழியில் செல்லும் அதிகாரிகளுக்கு பாடம் கற்பிக்க பல அமைப்புகள் (மலையாளிகள் )அமர்ந்து கொண்டு, நம் மேலேயே பொய் வழக்கும் பதிந்து, நம்மை அடிமைகளாய் நடத்தி, சமூக ஒற்றுமையை குலைக்க முயற்சிக்கும் சின்ன புத்திக்காரர்களுக்கு எதிராகத்தான் இந்த கண்டனம். உயர் பதவிகள் ஒன்றும் அவர்கள் வீட்டு சொத்து அல்ல, வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்குவதற்கு. தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள், விழிப்புணர்வு அமைப்புகளின் தலைவர்களும், செயலாளர்களும் நாளை (9th August) சென்னை Press Club அரங்கத்தில் எங்களோடு இணைந்தால் நமது குரல் பலத்து ஒலிக்கும். ஒன்று சேருவோம், உரிமையைப் பெறுவோம்! எனக் கூறியுள்ளார்.

வருங்கால முதலைமச்சர் ஆசையால் தலைவா தொலைஞ்ச கதை ! விஜயின் அடுத்த படத்துக்கு நல்ல கதை! ஜெயா வழங்கியுள்ளார் ?

விஜய் நடித்து, இன்று தமிழகம் எங்கும் ரிலீஸ் ஆயிருக்க வேண்டிய தலைவா,
‘அரசியல்’ சிக்கல்களில் சிக்கியதில் தமிழகத்தில் மட்டும் ரிலீஸ் ஆகவில்லை. பிற மாநிலங்களில் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. சில வெளிநாடுகளில் நேற்றே திரையிடப்பட்டது. படம் எப்படி? இடைவேளை வரை அனைவராலும் ரசிக்கப்படும். இடைவேளைக்குப் பிறகு, தீவிர விஜய் ரசிகர்களுக்கு பிடித்தாலும் பிடிக்கலாம். முதல் பாதி ஆஸ்திரேலியா கதை. இரண்டாம் பாதி மும்பை கதை. மும்பையில் அனைவருமே தமிழ் பேசுகிறார்கள். பேசாமல் மும்பையை தமிழகத்துடன் இணைக்க மனு செய்து, ஆதாரமாக தலைவா டி.வி.டி. ஒன்றையும் கொடுக்கலாம்.
டைரக்டர் விஜய், ‘காப்பி மன்னன்’ என்பது பிரசித்தம். இதில் சக்கரவர்த்தி ஆகியிருக்கிறார். இரண்டாம் பாதியில் தேவர் மகன் உட்பட நாலைந்து படங்களில் இருந்து காட்சிகளை சுட்டு கொடுத்திருக்கிறார். அட, அதை அப்படியே ஈயடிச்சான் காப்பியாக கொடுத்திருந்தாலாவது, பழைய படம் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்.

ஹன்சிகா 23வது குழந்தையை சட்டப்படி தத்தெடுக்கிறார் ! ஆனா சிம்புவை தத்தெடுக்காதீங்க .

ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் ஆதரவற்ற
குழந்தையொன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதுவரை 22 குழந்தைகளை தத்தெடுத்திருக்கும் அவர் பிறந்த நாளான நாளை 23வது குழந்தையை தத்தெடுக்கிறார். அத்துடன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கும் உதவி செய்திருக்கிறார். இது பற்றி ஹன்சிகாவின் தாயார் மோனா மோத்வானி கூறும்போது, ‘இந்த பிறந்த நாளில் ஹன்சிகா ஆதரவற்ற ஒரு குழந்தையை தத்தெடுக்கிறார். ஏற்கனவே அவர் 22 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் தேவைகளை முழுமையாக கவனித்து வருகிறார். இதுதவிர கேன்சரால் பாதிக்கப்பட்ட 10 பெண்களுக்கான மருத்துவ செலவையும் அவர் ஏற்கிறார். சமுதாயத்துக்காக அவர் தன்னால் முடிந்த சிறு சேவையை செய்வதை அறிந்து நாங்கள் சந்தோஷப்படுகிறோம். ஹன்சிகா தெலுங்கு பட ஷூட்டிங்கில் இருக்கிறார். இன்று மாலை அவர் மும்பை சென்று குழந்தையை தத்தெடுப்பதற்கான நடைமுறைகளை பூர்த்தி செய்கிறார் என்றார்.

பார்ப்பனர்களின் எச்சில் இலைகளை எடுப்பதா ? பெண் ஊழியர்கள் போர்க்கொடி ! அன்னபூர்ணேஸ்வரி கோயில் அநியாயம்

கண்ணூர், ஆக.7- கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை எடுக்கவேண்டும் என்ற பழைய பழக்கவழக்கத்தை இன்றும் வலி யுறுத்தும் இழிவை எதிர்த்து கோயில் பெண் ஊழி யர்கள் இருவர் போர்க்கொடி உயர்த்தி யுள்ளனர்.
தீண்டாமையும், பார்ப்பனர் ஆதிக்கமும் இன் னமும் சில குறிப்பிட்ட கோயில்களில் கடைப் பிடிக்கப்படுவது பற்றிய கடுமையான கருத்து வேறு பாடுகளும், விவாதமும் புதிய உச்சத்தை அடைந் துள்ளன. செருகுண்ணு அன்னபூர்ணேஸ்வரி கோயி லில் பணியாற்றும் இரண்டு பெண் ஊழியர்கள் சடங்குகளின்போது பார்ப்பனர்கள் விருந்து  உண்ட எச்சில் இலைகளை எடுக்க மறுத்து போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
பார்ப்பனர்கள் உணவு உண்டபின்னர், அவர் களது எச்சில் இலைகளை இதுவரை கோயில் பார்ப்பனரல்லாத பெண் ஊழியர்களே எடுப்பது நீண்ட நாட்களாக நிலவி வரும் வழக்கமாகும்.

கண்மாய் நடுவில் பிராடு பிளாட்கள் விற்பனை? பலர் வீடும் கட்டி விட்டனர் !

மேலூர்: மேலூர் அருகே பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள கண்மாய், குறைந்த விலைக்கு "பிளாட்' போட்டு விற்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலூர் தும்பைப்பட்டி ஊராட்சியில் உள்ளது தாமரைப்பட்டி. இங்கு சர்வே எண் 469/2ல், 16 ஏக்கர் பரப்பளவில் ஒடுங்காபுலி கண்மாய் உள்ளது. பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள இக்கண்மாயை நம்பி, பல ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இக்கண்மாயை ஆக்கிரமித்து சில வீடுகள் கட்டப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள இடங்களையும் "பிளாட்' போட்டு விற்கும் பணி பணி நடக்கிறது.ரங்கசாமி: கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து கடந்த மாதமே பொதுப்பணித்துறை மற்றும் தாசில்தாருக்கு மனு கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. தற்போது, "பிளாட்' போட்டு குறைந்த விலைக்கு விற்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதனால் விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதை அடைபட்டுள்ளது, என்றார்.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

தலைவா டிக்கட் பணத்தைத் திரும்பத் தரும் தியேட்டர்கள்!

சென்னை: விஜய்யின் தலைவா திரைப்படம் சில நிபந்தனைகளுடன் வரி இதற்கிடையே, தலைவா திரைப்படத்தை ஃபோர் ஃபிரேம்ஸ் தியேட்டரில் வரிவிலக்கு கமிட்டியும், அரசு அதிகாரிகளும் இன்று பார்த்தனர். படம் பார்த்து முடித்த பிறகு நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சில நிபந்தனைகளுடன் தலைவா திரைப்படத்தை வெளியிட மேலிடத்திலிருந்து அனுமதி வழங்கப்பட்டதாகக் கூற்பட்டது. படத்தின் நீளமும் 2.40 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் கசிந்தன. ரிலீஸ் இல்லை இந்த நிலையில் தலைவா படம் நாளை வெளியாகாது என திரையரங்குகள் அறிவித்துவிட்டன. தலைவா ரிலீஸை ஒட்டி தியேட்டர்கள் முன்பு வைக்கப்பட்ட பேனர்கள், கட் அவுட்டுகள் அகற்றப்பட்டு வருகின்றன. பணம் வாபஸ் இந்தப் படத்துக்கு சில தினங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன (நேற்றுதான் அவை நிறுத்தப்பட்டன).

கலைஞர் டிவியில் குஷ்புவின் தஞ்சாவூர் டெசோ நிகழ்ச்சி இருட்டடிப்பு ! திருந்தாத ஸ்டாலின்

டெசோ இயக்கத்தின் சார்பில் தஞ்சையில்
ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:–
ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்காக கடந்த 50 ஆண்டுகாலமாக குரல் கொடுத்து வருகிறோம். ஐ.நா. சபையிலும் இது குறித்து தி.மு.க. வலியுறுத்தி உள்ளது. ஆனால் இன்று வரை ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இலங்கையில் தமிழர்கள் 2–ம் தர குடிமக்களாக மட்டும் அல்ல அடிமைகளாக நடத்தப்பட்டு வருகிறார்கள். அங்கு ஏராளமான தமிழ்ப்பெண்கள் விதவைகளாக உள்ளனர். 4½ லட்சம் குழந்தைகள் அனாதைகளாக உள்ளனர். லட்சக்கணக்கான குடும்பங்கள் வெளியிடங்களுக்கு சென்று விட்டனர்.
சாதாரண திமுக தொண்டனின் திமுக பற்றுதலை வெறும் கேலிகூத்தாக்கும் ஸ்டாலினின் மோசமான அரசியல் . தஞ்சாவூரில் குஷ்பூ கலந்து கொண்ட நிகழ்ச்சியை பற்றி ஒரு வரி தானும் சொல்லவில்லை , அதைவிட மோசமான விடயம் என்னவென்றால் ஸ்டாலினின் வழ வழா பேச்சை வேண்டுமென்றே கலைஞர் டிவியில்

Delhi Gang Rape சிறார் காப்பகத்தில் திடீர் மோதல்!

டெல்லி மருத்துவ மாணவி பலாத்கார வழக்கு குற்றவாளிகளில் ஒருவனான சிறுவன் அடைக்கப்பட்டிருக்கும் சிறார் காப்பகத்தில் திடீரென இன்று மோதல் நிகழ்ந்துள்ளது. டெல்லியில் இயங்கி வரும் இந்த சிறார் காப்பகத்தில் இன்று காலை அங்கு அடைக்கப்பட்டிருந்த கைதிகளிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. உள்ளே தீ வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே பலாத்கார வழக்கில் கைதான குற்றவாளிகள், திஹார் சிறையில் கொடூரமாக துன்புறுத்தலுக்குள்ளாகினர் என்ற புகார் எழுந்த நிலையில் சிறார் காப்பக சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோதலை கட்டுப்படுத்த போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தாலும் விதிகளின் படி உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
tamil.oneindia.in