தேசம் நெட் : பிரான்ஸ் நாட்டின் தீவிர வலதுசாரிக் கட்சியான தேசிய மறுசீரமைப்பு கட்சியின் தலைவரான மரியன் லு பென் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்கு ஒதுக்கிய பணத்தை தனது சொந்தக் கட்சியின் நிதித் தேவைக்கு மோசடியாக செலவு செய்த குற்றச்சாட்டில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுள்ளது.
மரியன் லு பென் 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிவாய்ப்பு அதிகமாகவுள்ள வேட்பாளராக கணிக்கப்பட்டிருந்தார்.
நேற்றைய தினம் தண்டனை வழங்கிய பாரிஸ் உயர்நீதிமன்றம் மரியான் லு பென் அடுத்த முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதையும் தடை செய்துள்ளது.
மேற்கு ஐரோப்பாவைப் பொறுத்தவரை தீவிர வலதுசாரித் தலைவர் ஒருவருக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பானது இது ஒரு தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் என்றே பார்க்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக