செவ்வாய், 1 ஏப்ரல், 2025

இந்திய மக்களிடம் இருந்து எந்தெந்த வகையில் பணத்தை கொள்ளை அடிக்கலாம்?

Maha Laxmi :  பேங்க் அக்கவுண்ட்டில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம்.
ÀTM அதிக் தடவை உபயோகித்தால் அதற்கு அபராதம். டிஜிட்டல் பேமென்ட்டிற்கும்  அபராதம். ஹோட்டலில் சாப்பிட்டால் GST.
வீட்டில் சமைத்தால் அரிசி. மளிகை பொருட்கள் முதல் காய்கறி வரை அனைத்திற்கும் GST.
உணவுக்குத்தான் வரி என்றால் பொது இடங்களில் இயற்கை உபாதையை தீர்க்க சென்றால் கழிப்பறை பயன்பாட்டிற்கும் GST.
உண்ணும் உணவு முதல் உடலில் உள்ள கழிவுகள் அகற்றும் வரை அனைத்துக்கும் வரி.
உயிர் காக்கும் மருத்துவத்திற்கும், மருந்துகளுக்கும் வரி.
மாணவர்கள் கல்வி பயிலும் சாதனங்களுக்கு, அவர்கள் உடுத்தும் உடை முதல் அணியும் காலணி வரை அனைத்துக்கும் GST.
வாகனங்களை உபயோகித்தால் சாலை வரி,


காப்பீட்டுக்கு, எரிபொருளுக்கு வரி, சுங்க வரி. இப்படி எதற்கெடுத்தாலும் வரி கட்டும் நிலையில்,
 இப்போது IT return செய்து மூன்று ஆண்டுகள் கழித்து இரண்டு நாள் கால அவகாசத்தில் அந்த return தவறானது என்று கூறி refund செய்த தொகையை அபராத வட்டியுடன் திருப்பி செலுத்த உத்தரவு. IT return செய்த வருடத்திலேயே அதனை ஆய்வு செய்து தவறை திருத்த சொல்லியிருந்தால் அபராத வட்டி கட்ட வேண்டிய நிலைமையும்,
ஆடிட்டர்களை தேடி அலைந்து அவர்களுக்கு கணிசமான தொகை செலவு செய்யும் நிலையும் ஏற்பட்டிருக்காது. .
மொத்தத்தில் இந்திய மக்களிடம் இருந்து எந்தெந்த வகையில் பணத்தை கொள்ளை அடிக்கலாம் என்று யோசித்து யோசித்து செயல்படுகிறது மத்திய அரசின் நிதித்துறை.
திரு.மொரார்ஜி தேசாய் நிதி அமைச்சராக இருந்த போது அதிக அளவில் வரி விதித்ததால் அவரை வரிப் புலி என்று விமர்சனம் செய்தார்கள்.
அப்படி அவர் ஈட்டிய வரிப் பணம் மக்களின் நலத்திட்டங்களுக்கு தான் பயன்படுத்தப் பட்டது.
இன்றைக்கு நின்றால் வரி, அமர்ந்தால் வரி, படுத்தால் வரி, சாப்பிட்டால் வரி, படித்தால் வரி என்று சகல விதத்திலும் மக்களிடமிருந்து பணத்தை கொள்ளை அடிக்கும் அவல நிலையில் தான் இன்றைய இந்தியா இருக்கிறது

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

சுடுகாட்டிலும் GST