திங்கள், 31 மார்ச், 2025

மோடி பதவி விலகுகிறாரா? ஆர் எஸ் எஸ் RSS will decide PM successor says Sanjay Raut

 மின்னம்பலம் -   Kavi : அடுத்த பிரதமரை மகாராஷ்டிராவில் இருந்து ஆர்எஸ்எஸ் தேர்ந்தெடுக்கும் என்று சஞ்சய் ராவத் கூறியதற்கு பாஜக தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. RSS will decide PM successor says Sanjay Raut
பிரதமர் மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் சென்றார். அங்குள்ள ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் தலைமையகத்திற்குச் சென்ற அவர்  ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேசவ பலிராம் ஹெட்கேவர் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தினார்.
அப்போது பேசிய அவர்,  “ஆர்.எஸ்.எஸ்-ன் விதை 100 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்டது. அது இன்று பெரிய ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. அடுத்த 25 ஆண்டுகள் நமக்கு முக்கியமானது” என்று கூறியிருந்தார்.



இந்த  நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் மோடி நாக்பூர் சென்றது குறித்து பேசியுள்ள உத்தவ் தாக்ரே பிரிவு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “மோடிக்கு அடுத்தது அடுத்த பிரதமர் யார் என்று ஆர்.எஸ்.எஸ்.தான் முடிவு செய்யும். இந்த 10, 11 ஆண்டுகளில் மோடி ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு வந்தது இல்லை. இதுவரை ஆர்.எஸ்.எஸ். எது செய்தாலும் மூடிய கதவுகளுக்கு பின்னால்தான் செய்யும். தற்போது அதில் சில மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகிறது. தலைமை மாற்றத்தை ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. பிரதமர் மோடி தனது பதவியில் இருந்து வெளியேறுகிறார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவரை ஆர்.எஸ்.எஸ். தேர்ந்தெடுக்கவிருக்கிறது” என்று கூறியிருந்தார்.

மோடிக்கு தற்போது 74 வயது, இந்த செப்டம்பர் வந்தால் 75 வயதாகிறது. 75 வயதை எட்டிய பிறகு,பாஜக தலைவர்கள் இளைய  தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.  அதேசமயம் எதிர்க்கட்சிகளும் மோடி பதவி விலகுவாரா என்று கேள்வி எழுப்பி வரும் நிலையில் சஞ்சய் ராவத் இவ்வாறு கூறியுள்ளார்.

இதற்கு இன்று (மார்ச் 31) தேவேந்திர பட்னாவிஸ் பதிலளித்துள்ளார்,  “2029ஆம் ஆண்டிலும் நரேந்திர மோடியையே பிரதமராக நாடு பார்க்கிறது. மோடியை எங்கள் தலைவராக பார்க்கிறோம். பிரதமர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை.  எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை” என்று பதிலளித்துள்ளார்.  RSS will decide PM successor says Sanjay Raut

கருத்துகள் இல்லை: