மின்னம்பலம் : இந்தியா - இலங்கை ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
மூன்று நாள் பயணமாக இலங்கை சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக்கவை இன்று (ஏப்ரல் 5) சந்தித்தார். india srilanka bilateral mou
இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியா – இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!
1. மின்சாரத்தை அனுப்புவதற்கான எச்விடிசி இடைத்தொடர்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த உடன்படிக்கை.
2. டிஜிட்டல் தீர்வுகளை பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்பு
3. திருகோணமலையை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதில் ஒத்துழைப்புக்காக இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
4. இந்திய – இலங்கை இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு.
5. கிழக்கு மாகாணத்திற்கான பல்துறை நன்கொடை உதவிக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
6. இந்திய அரசின் சுகாதார அமைச்சகத்துக்கும் இலங்கையின் சுகாதார அமைச்சகத்துக்கும் இடையில் மருத்துவத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
7. இந்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் இந்திய மருந்தியல் ஆணையமும் இலங்கை அரசின் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையமும் மருந்தியல் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். india srilanka bilateral mou
சனி, 5 ஏப்ரல், 2025
பிரதமர் மோடிக்கு இலங்கை மித்ர விபூஷண பட்டம் வழங்கியது! ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக