tamil.goodreturns.: கோயம்புத்தூர் நகரின் போக்குவரத்து சிக்கலை குறைக்கவும், மக்களுக்கு வசதியான மற்றும் வேகமான போக்குவரத்து வசதிகளை வழங்கும் நோக்கில் அந்நகரில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்நகரில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு முக்கியமான கட்டமான, மெட்ரோ பாதை அமைக்க வேண்டிய இடங்களில் நில அளவை பணிகள்,தடைகள் அடையாளம் காணுதல் மற்றும் பயன்பாட்டு வசதிகளை மாற்றுதல் ஆகிய பணிகள் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இடமளிக்கும் வகையில், சத்தியமங்கலம சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 948) சாலை விரிவாக்கத்திற்கான நில அளவை பணியை மேற்கொண்டது. கோயம்புத்தூர் மாநகராட்சி, நெடுஞ்சாலை மற்றும் மெட்ரோ ரயில் துறை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமையன்று , கோவையில் உள்ள டெக்ஸ்டூல் மேம்பாலம் அருகே சாலை விரிவாக்கத்திற்காக ஒரு நில அளவை பணிகளை தொடங்கினர். கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், இதற்கு முன்பு, தேசிய நெடுஞ்சாலை துறையின் சாலை விரிவாக்கத் திட்டத்திற்கு ஆதரவாக 20 மீட்டர் நீளத்திற்கு ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது மெட்ரோ ரயில் திட்டம் முன்னேறி வருவதால், இப்போது சாலையின் இருபுறமும் 30 மீட்டர் பரப்பளவில் ஒரு புதிய கணக்கெடுப்பை நடத்தி வருகிறோம்.
வேகமெடுக்கும் கோவை மெட்ரோ ரயில் திட்டம்.. தீயாய் நடக்கும் பணிகள்!
இந்த கணக்கெடுப்பு ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தார். அண்மையில், சிவில் அமைப்பு உக்கடம் பேருந்து நிலையத்தில் பயன்பாட்டு மேப்பிங் கணக்கெடுப்பை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Also Read
ஏழைகளின் தங்கம்... விலை உயர்வில் தங்கத்தோடு போட்டி போடும் வெள்ளி!
கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஆய்வை நடத்துவதற்காக அந்த மாநகராட்சிக்கு சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ரூ.2 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த சர்வே முடிந்ததும், நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்து சம்பந்தப்பட்ட பங்குதாரர்களும் முடிவுகளை மதிப்பாய்வு செய்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பார்கள்.
கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது நில அளவை பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மெட்ரோ பாதை அமைக்க தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். 2026ம் ஆண்டில் மெட்ரோ ரயிலுக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2028ம் ஆண்டுகள் பணிகள் நிறைவு செய்யப்பட்டு மெட்ரோ ரயில் சேவை செயல்பட தொடங்கும் என தெரிகிறது. கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடையும் போது, நகரின் போக்குவரத்து முறையில் மாற்றம் ஏற்படும். கோவை மாநகராட்சி மக்கள் பல இடங்களுக்கு விரைவாக பயணிக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக