![]() |
Dhinakaran Chelliah: !!! இந்திய வரலாற்றியல்!!!
இந்திய வரலாற்றுக்கு நிகழ்ந்த அநீதி வேறெந்த நாட்டின் வரலாற்றுக்கும் நிகழவில்லை.
James Mill என்பவர் இந்தியா வராமலேயே பிரித்தானியாவில் இருந்து கொண்டு,
இந்திய மொழியோ எதுவும் அறியாமல், தனக்குச் சொல்லப்பட்டதை இந்திய வரலாறாக எழுதிய நூல்தான் “The History of British India”.
இந்த நூல் வெளியிடப்பட்ட ஆண்டு 1817. இதுதான் இந்தியாவைப்பற்றி எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல். இது பிரித்தானியாவிலிருந்து இந்தியாவிற்கு பணி நிமித்தமாக செல்லும் கிழக்கிந்திய கம்பனியின் பணியில் சேரும் அதிகாரிகளுக்கு (introduction/orientation)உதவும் நோக்கில்,
அந்தக் கம்பனியின் பொருளுதவியடன் வெளியிடப்பட்ட நூல்.
ஹிந்து இந்தியா, முஸ்லிம் இந்தியா, பிரிட்டிஷ் இந்தியா என மூன்று தொகுதிகளைக் கொண்டது இந்த நூல். இப்படி மதத்தின் அடிப்படையில் எந்த ஒரு நாட்டின் வரலாறும் எழுதப்பட்டதில்லை.
இந்தக் கொடுமை இந்திய வரலாற்றுக்கு மட்டுமே நேர்ந்துள்ளது.
இந்த நூலின் அடிப்படைத் தன்மை மாறாமல் இன்றும் வாசிப்பதற்கு கிடைக்கிறது.
இதற்குப் பின்னால் எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் இதையே மூல நூலாகக் கொண்டு கொஞ்சம் விரிவுபடுத்தியோ, சுருக்கியோ எழுத ஆரம்பித்தார்கள்.
அது இன்றுவரைத் தொடர்கிறது.
ஆக இந்திய வரலாற்றியலுக்கு வயது இருநூறு ஆண்டுகள்தான் ஆகிறது.
நாம்தான் ராமாயணம், மகாபாரதம் போன்ற தொன்மங்களை வரலாறாக் கருதிக் கொண்டு ஏமாந்து போகிறோம், ஒரு சிலரால் ஏமாற்றப்படுகிறோம்!!!
நமது பெருமிதங்களைத் தேடுவது வரலாற்றின் நோக்கமாக இருத்தல் கூடாது,
உண்மையைத் தேடுவது வரலாற்றின் நோக்கமாக இருத்தல் வேண்டும்!!!
நமது முன்னோர்கள் செய்த நல்ல விடையங்களை விட தீமைகளே அதிகம்,
அதனால்தான் அன்னியரின் அனைத்து படையெடுப்புகளும் வெற்றியடைந்தன.
தவிர வரலாறாக கருதப்பட்ட ‘மெய்கீர்த்தி’ போன்றவை ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்தவர்களுக்குச் சாதகமாக காலந்தோரும் எழுதப்பட்டவை.
அவை உண்மையான வரலாறு ஆகாது.
இப்போதுள்ளது போல் சமூகத்தின் பெரும்பாண்மையினர் எப்போதுமே புறக்கணிக்கப் பட்டே வந்துள்ளனர்.
அவர்களின் குரலுக்கு மதிப்பில்லை,மரியாதையில்லை.
குறைந்தபட்ச அனுதாபம் கூட இல்லை.
சீனப் பயணி யுவான் சுவாங் தனது இந்தியப் பயணத்தின் போது அவர் சந்தித்த பஞ்சமர்களைப் (untouchables) பற்றிய குறிப்பை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
“பஞ்சமர்கள் யாரும் எளிதில் நகரத்திற்குள் நுழைந்துவிட இயலாது.
அவர்கள் இரவு வேளைகளில் மட்டும் அனுமதிக்கப் பட்டனர்.
அதுவும் வீதிகளை சுத்தம் செய்யும் பணிகளுக்காக.
அப்படி அவர்கள் நகருக்குள் நுழையும் பட்சத்தில் மர வாத்தியக் கருவியைக் கொண்டு சப்தம் எழுப்ப வேண்டும்.
தவிர கழுத்தில் கலையம் போன்ற பாத்திரம் அணிந்திருக்க வேண்டும்.
அந்த மண் பாத்திரத்தில்தான் தங்களது எச்சிலைக் கூட துப்பவேண்டும்”.
இது போன்ற விடையங்கள் நாம் வரலாறாக நினைக்கும் எந்த ஒரு அரசனின் மெய்கீர்த்திகளிலோ,
மோடி ஆவணத்திலோ(சரபோஜி மன்னர்கள் காலத்திய ஆவணங்கள்), செப்பேடுகளிலோ, கல்வெட்டுக்களிலோ இல்லை.
ஆக இந்திய வரலாற்றில் சாமானிய மக்களுக்கு துளியளவு இடம் இருந்ததில்லை.
ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திய வரலாற்றை திருத்தி எழுதும் முயற்சியில் பல வருடங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் வேதகாலத்திலிருந்து இந்திய வரலாறு தொடங்குகிறது என்கிறார்கள்.
வரலாற்று ரீதியாக இந்திய நாடு என முதலில் இந்த நிலப்பரப்புக்கு பெயரிட்டவர்கள் கிழக்கிந்திய கம்பனிக்காரர்கள் ஆவர்.
அதற்கு முன்பு வரை இந்தியாவில் பல இராஜ்ஜியங்கள் தனித் தனி சுதேசப் பிரதேசங்கள்தான் இருந்தன.
மகாபாரதப் போரில் அப்போதிருந்த அனைத்து இராஜியங்களும் பங்கேற்றதாக எழுத முனைகிறார்கள்.
மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் குஷாணர்கள்,சாகர்களின் காலம் கி.மு ஒன்றாம் நூற்றாண்டின் இறுதிக் காலம்.
இதன்படி சிந்தித்தால் இந்த குருசேத்ரப் போர் கி.மு ஒன்றாம் நூற்றாண்டு என்றல்லவா கணிக்கப்படவேண்டும்.
வேதங்களில் குறிப்பிடும் ஆரியர்களின் பஞ்ச ஜனா என்பது பரத வம்சத்தோடு, புரு, த்ருஹ்யூ, அனு, யது என்று எடுத்துக் கொண்டாலும் பாண்டவர்கள் பற்றிய எந்தக் குறிப்பும் எந்த நூலிலும் இல்லை.
தொன்மையான நூல்களாக கருதப்படும் வேத கால இலக்கியங்களிலும் பிராமணங்கள், சூத்திரங்கள் ஆகியவற்றிலும் பாண்டவர்கள் பற்றிய குறிப்பு ஏதும் இல்லை.
கீழை நாட்டுப் புனித நூல்களை, ஆங்கிலத்தில் பெயர்த்த ஜேர்மனிய அறிஞர் மாக்ஸ்முல்லரும், பாண்டவர்கள் பற்றிய குறிப்பு பண்டைய நூல்களில் இல்லை என்றே கூறுகிறார்.
தொன்மையான வட மொழி இலக்கண நூலை இயற்றிய பாணினியும் பாண்டவர் பற்றி பேசவில்லை.
ஆக இல்லாத ஒரு நபர்கள் இல்லாத ஒரு இனத்திற்கு இடையில் நடந்த கற்பனைக் கதைதானே இவை.
இந்திய வரலாறு கற்பனைக் கதைகளைக் கொண்டு எழுதப்பட வேண்டியதில்லை.
இதை வரலாறாக சித்தரிக்க முனையும் இன்றைய மதவாத அரசின் முயற்சியை நாம் கேள்வி கேட்பதும் அதற்கு எதிராக குரல் எழுப்புவதும் நமது கடமை!!!
மீள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக