செவ்வாய், 1 ஏப்ரல், 2025

மோடிக்கு ஒரு ட்ரில்லியனில் எத்தனை பூஜ்யம் என்றே தெரியாது.- .டிரில்லியன் டாலர் பொருளாதாரம்

 Vasu Sumathi : 2015ல் இந்தியா ஒரு 8 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்றும்,
அதை 20 டிரில்லியன் டாலராக உயர்த்துவேன் என்றும் - நம் இந்தியாவின் பொருளாதார புலி அன்று அமெரிக்காவில் அளந்து விட்டார்.
2025ல் உண்மை நிலை: இந்தியா இன்னும் 4.2 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்தான்...
அவர் மேல் கோபிக்க வேண்டாம்,
அவருக்கு ஒரு ட்ரில்லியனில் எத்தனை பூஜ்யம் என்றே தெரியாது..
அதைவிட கொடுமை என்னவென்றால்,
மூன்றாவது முறையாக இந்த குருவி மூளைகளை அரியணையில் ஏற்றி அழகு பார்க்கும் பெரும்பான்மை படிப்பறிவில்லா கோமிய பக்தர்களுக்கு, பூஜ்யம் என்றால் என்னவென்றே தெரியாது.



பாஜகவின் பொருளாதார அறிவுக்கு மற்றோரு சான்று இதோ...
சென்ற ஆண்டு IDBI வங்கி ரூ.5,788 கோடி லாபம் ஈட்டியுள்ளது. "வியாபாரம் செய்வது அரசாங்கத்தின் வேலை கிடையாது" என்ற பொன்மொழியை உதிர்த்த விஸ்வகுருவின் அரசு, அதில் 60.72% பங்குகளை விற்க முடிவு செய்கிறது. (லாபம் ஈட்டும் நிறுவங்களை தனியாருக்கு தாரை வார்த்துவிடு)
அதே நேரத்தில் Vodafone-Idea,  2024 இல் ₹31,238 கோடி இழந்திருக்கிறது. வோடபோன் நிறுவனத்தின் நிலுவைத் தொகையான ரூ.36,950 கோடியை மத்திய அரசு 49 சதவீதமாக ஈக்விட்டியாக மாற்றுவதற்கு இசைந்திருக்கிறது.

இதில் உச்சபட்ச கோமாளித்தனம் என்னவென்றால் vodafone னின் தற்போதைய சந்தை விலையான 6.81 ரூபாய்க்கு பதிலாக ஒரு பங்குக்கு 10 ரூபாய் என்று, தேவையேயில்லாமல் கூடுதலாக 11,787 கோடி ரூபாய் செலுத்தி வாங்குகிறது. ஆதித்யா பிர்லாவுக்கு இப்போது இந்த உதவித்தொகை தேவைதானா? (நட்டத்தில் இருக்கும் நண்பர்களின் தனியார் நிறுவங்களை அரசாங்க பணத்தில் வாங்கிவிடு)
அந்த பணம் ஏதாவது மாநிலத்தில் இவர்கள் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் போது இவர்களுக்கு வந்து சேர வேண்டிய வழியில் வந்துவிடும்.
#நாட்டை_நாசமாக்கிய_நச்சுக்கள்

கருத்துகள் இல்லை: