திங்கள், 17 பிப்ரவரி, 2025

வரும் தலைமுறைகளின் கல்வியை சிதைக்க முழு மூச்சாக வேலை செய்யும் முட்டாள்கள்.

 Vasu Sumathi  : மஹாகும்ப மேளாவில் சரியான ஏற்பாடுகள் செயப்படவில்லை என்று பாஜக அரசை மக்கள் கேவலமாக பேசுகிறார்கள்.... சரி! அடுத்த தேர்தலில் அங்கு பாஜக என்னவாகும்? 🤔
லக்கிம்பூரில் போராடும் விவசாயிகள் மீது பாஜக மத்திய அமைச்சரின் மகன் தன் ஜீப்பை ஓட்டி பல பேரை கொன்றான்.
😔 அடுத்த தேர்தலில் லக்கிம்பூரில் பாஜக மாபெரும் வெற்றி
ஹத்ராஸில் ஒரு மகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்து போனாள். நாடே கொந்தளித்தது
😔அடுத்த தேர்தலில் ஹத்ராஸில் பாஜக மகத்தான வெற்றி
மபி மாநிலம் மண்ட்சவுரில் ஊர்வலம் சென்ற விவசாயிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரை கொன்றனர்.


😔அடுத்த தேர்தலில் மண்ட்சவுரில் பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றி.
குஜராத்தில் மோர்பி பாலம் இடிந்து விழுந்து 150+ பேர் ஆற்றில் மூழ்கி அநியாயமாக பலியாகினர்
😔அடுத்த தேர்தலில் மோர்பியில் பா.ஜ.க. வேற்றி.
ஆக பாஜக என்ன செய்தாலும் பரவாயில்லை, மக்கள் அவர்கள் மீது ஒருபோதும் கோபப்படுவதில்லை.
ஒரு தொகுதியில் பாஜக ஆட்சியின் அவலம் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறதோ அடுத்து வரும் தேர்தலில் அந்த அளவுக்கு நேர்மாறாக அவர்களின் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை. இதேதான் ஒரு சில தென் மாநிலங்களை தவிர்த்து இந்தியா முழுவதும் நடந்திருக்கிறது.
மக்களை கல்வியறிவில்லாமல் ஆட்டு மந்தைகளை போல் வைத்திருப்பதால் இது சாத்தியமாகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் இந்த பருப்பு வேகாது என்பதால்தான் நம் மீது அவர்களுக்கு வெறுப்பு.
அடுத்து வரும் தலைமுறைகளின் கல்வியை எப்படியாவது சிதைக்க வேண்டும் என்று முழு மூச்சாக வேலை செய்துக் கொண்டிருக்கின்றனர் இந்த முட்டாள்கள்.
தமிழ் மீது, தமிழ்நாட்டின் மீது, தமிழர்கள் மீது, வாயை திறந்தாலே வன்மத்தை உமிழ்ந்துக்கொண்டு அதே தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று பகல் கனவு காணும் கோமாளியான இந்த அண்ணாமலைதான் அவர்கள் ஏஜென்ட்.

கருத்துகள் இல்லை: