![]() |
அருண் சித்தார்த் - இயக்குனர் ராஜ்குமார் |
Arulanandam Arun : ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் ஈழத்தில் பெரியார் சிலை நிறுவப்படும்.- அருண் சித்தார்த் அறிவிப்பு
பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை.
இலங்கையில் சாதி வெறியின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் பெரியார் சிலை ஒன்றல்ல பல நூறு நிறுவப்படும் .
இந்தியாவில் இருந்து அண்மையில் இலங்கை வந்திருந்த வெங்காயம்,பயாஸ்கோப் போன்ற படங்களின் இயக்குநரும் பெரியாரிஸ்ட்டுமான ராஜ்குமார் அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்/ பெரியார் படிப்பு வட்டம் மற்றும் அம்பேத்கர் இயக்கம் ஆகியவற்றின் எமது அலுவலகத்தில் எம்மைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கையில் எமது தலைமையில் நிறுவப்பட இருக்கும் பெரியார் சிலை அமைப்பிற்கு தனது தனிப்பட்ட பங்களிப்பாக ஒரு தொகை பணத்தினை நன்கொடையாக வழங்கி வைத்தார்.பெரியார் சிலை நிறுவப்படும்.
ஈழத்தில் இலங்கையில் சாதிய ஒடுக்குமுறையின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் தாவடியில், கே.கே.எஸ்.வீதியில் எனது அலுவலகத்திற்கு முன்னால் 10 அடி உயரத்தில் தந்தை பெரியார் சிலையும் , அண்ணல் அம்பேத்கர் சிலையும் சமூக நீதி, சமதர்மம், பகுத்தறிவு, சுயமரியாதை , பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, சீதனமுறை ஒழிப்பு, போன்ற உயரிய மேன்மையான சிந்தனை முறையை பறைசாற்றும் நோக்கில் நிறுவப்படும்.
சிலைகள் நிறுவப்படும் திகதிகள் விரைவில் பொதுவெளியில் அறிவிக்கப்படும்.
இந்தச் சிலைகள் இரண்டும் ஈழத்தில் தந்தை பெரியாருக்கும் , அண்ணல் அம்பேத்கருக்கும் நிறுவப்படும் முதலாவது சிலைகளாக வரலாற்றில் பதியப்படும்.
பின்குறிப்பு- ஈழத்து, இந்திய, புலம்பெயர் தேசத்து சாதிய சண்டியர் அனைவரும் வரவேற்கப்படுகின்றீர்கள்.
ஒடுக்கப்பட்ட மக்களைக் காலங்காலமாக சுரண்டி வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து வரும் சனாதன சாதிய சங்கிகளுக்கும், சைமனின் வியாபார, புரட்டுத் தேசிய ஆமைக் குஞ்சுகளுக்கும் அருண் சித்தார்த் என்கின்ற ஈழத்துப் பெரியாரிஸ்ட்டின் அறைகூவல் இது.
முடிந்தால் இந்த சிலைகளில் கை வைத்துப் பாருங்கள்.
அருண் சித்தார்த்
பெரியார் படிப்பு வட்டம்
இல.238, கே.கே.எஸ்.வீதி
தாவடி, கொக்குவில்,
யாழ்ப்பாணம்.
தொ.இல.94774842464
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக