ஞாயிறு, 16 பிப்ரவரி, 2025

தி.மு.க. கூட்டணியின் வாக்கு 5 விழுக்காடு அதிகரித்துள்ளது! இந்தியா டுடே – சி வோட்டர் இணைந்து கருத்துக் கணிப்பு

May be an image of text that says 'சனிக்கிழமை 15-02-2025 தி.மு.க.வின் வின் வெற்றி தீர்மானிக்கப்பட்டது முர முரசெ சொலி'

நிலவினியன் மாணிக்கம் ; இன்­றைய செய்தி நாளைய வர­லாறு
திமுகவின் வெற்றி தீர்மானிககப்பட்டதா? ஓர் அலசல்..
தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியின் வாக்கு 5 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று இந்தியா டுடே – சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடந்தாலும் இந்தியா கூட்டணியானது தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும் அந்தக் கருத்துக் கணிப்பு கூறி இருக்கிறது.


இதை வைத்துப் பார்க்கும் போது தி.மு.க. கூட்டணியின் வெற்றி தீர்மானிக்கப்பட்ட வெற்றியாக உள்ளது. இதனை நாம் சொல்லவில்லை. ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ ஆகிய இரு நிறுவனங்கள் எடுத்துள்ள கருத்துக் கணிப்புதான் சொல்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியானது 47 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. இப்போது தேர்தல் நடந்தால் இந்தக் கூட்டணி 52 விழுக்காடு வாக்குகளைப் பெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 5 விழுக்காடு வாக்குகள் அதிகரித்தால், அனைத்துத் தொகுதியிலும் பல லட்சம் வாக்குகளையே வென்று விட முடியும் என்பதுதான் இதன் மூலம் தெரியவரும் உண்மையாகும்.
சி – வோட்டர் நிறுவனத்தின் இயக்குநர் யஷ்வந்த் தேஷ்முக் அளித்துள்ள பேட்டியில் இன்னும் தெளிவாக பல கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளார். அதில் தி.மு.க. தலைவர் – தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் குறித்த கணிப்பானது தெளிவாக இருக்கிறது.
•தி.மு.க. தலைவருக்கு எதிராக எந்த அதிருப்தியும் இல்லை.
•இன்றைய முதலமைச்சர், செல்வாக்கான தலைவராக இருக்கிறார்.
•இந்தியாவின் டாப் முதலமைச்சர்கள் ஐவரில் ஒருவராக இருக்கிறார். இந்தக் கணிப்பை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எடுத்தாலும் இந்தப் பட்டியலில் இருந்து அவர் வெளியேறுவது இல்லை. இது சாதாரணமான சாதனையல்ல.
•டாப் முதலமைச்சராக இருக்கும் அவர், மாநில மக்களாலும் சிறந்த முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார்.
•தற்போது தி.மு.க. வலுவாக இருப்பதற்கு அதன் தலைவரும் தொண்டர்களுமே காரணம்.
•திராவிட அரசியல் – தேசியவாத அரசியல் ஆகிய இரண்டையும் தி.மு.க. மிக அழகாகக் கையாண்டு வருகிறது.
•தமிழ்நாட்டு மக்கள் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கை அவர் வாரிசு அரசியல்வாதி என்பதால் வரவில்லை. அவர் தனது தந்தையால் மட்டும் செல்வாக்குப் பெறவில்லை. ஸ்டாலினுக்கே தனியான ஈர்ப்பு சக்தி இருக்கிறது.
•மக்களைக் கவரக் கூடிய ஈர்ப்பு சக்தி, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது.
– இவை அனைத்தையும் சி – வோட்டர் நிறுவனத்தின் இயக்குநர் யஷ்வந்த் தேஷ்முக் தனது பேட்டியில் சொல்லி இருக்கிறார். இவை அனைத்தும் எளிதில் கிடைத்து விடும் பாராட்டு அல்ல. மக்கள் மனதில் உள்ளதைத்தான் கணிப்பாக யஷ்வந்த் தேஷ்முக் சொல்கிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னால் – தி.மு.க.வின் செல்வாக்கு, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது செல்வாக்கு மிகமிக அதிகமாக ஆகி இருக்கிறது என்பதைத்தான் அவர் செல்லும் இடங்களில் காணப்படும் கூட்டமும், கூட்டத்தில் நிற்கும் மக்கள் முகங்களில் காணப்படும் உற்சாகமும் காட்டி வருகிறது.
சில நாட்களுக்கு முன்னால் திருநெல்வேலி பகுதிக்கு அரசு விழாவில் கலந்து கொள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்றார்கள். இரண்டு நாட்களும் அவர் செல்லும் இடமெல்லாம் தேனடையைப் போல மக்கள் கூடினார்கள். பல கிலோ மீட்டர் தூரம் மக்கள் நின்று வரவேற்பு கொடுத்தார்கள். ஒருவரையடுத்து ஒருவர் என்றில்லாமல் கூட்டம் கூட்டமாக – மொத்தம் மொத்தமாக மக்கள் நின்றார்கள். மக்கள் நின்றது மட்டுமல்ல, முதலமைச்சரைப் பார்த்ததும் அவர்கள் கொடுத்த ‘ரியாக்ஷன்’ என்பது மிகமிக முக்கியமானது. அவரைப் பார்த்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது, அனைவரது முகங்களும்.
முதியோர் முதல் பெண்கள் வரை –
கல்லூரி மாணவிகள் முதல் குழந்தைகள் வரை – அனைத்துத் தரப்பினரும் ஒரே மாதிரியான வரவேற்பை அவருக்குக் கொடுத்தார்கள். அவருக்கு கைகொடுப்பதில் ஆர்வம் காட்டினார்கள். குழந்தையை அவர் கையில் கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்வதில் தாய்மார்கள் துடிப்பைப் பார்க்க முடிந்தது. முதலமைச்சரின் படத்தை வரைந்து வந்து கொடுத்த மாணவிகள் அதிகம்.
இந்தக் கூட்டம் வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் மட்டுமல்ல என்பதையும் உணர்த்தியது. மாணவியர், ‘அப்பா, நீங்கள் எங்களுக்கு தரும் ‘புதுமைப் பெண்’ உதவித் தொகை கிடைக்கிறது’ என்பதைச் சொல்வதில் ஆர்வம் காட்டினார்கள். ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறுகிறேன்’ – என்று மாணவர்கள் சொல்ல முன்வந்தார்கள். ‘எனக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் தோறும் சரியாகக் கிடைத்து விடுகிறது’ என்று பெண்கள் அனைவரும் சொன்னார்கள். ‘என் பிள்ளை உங்கள் காலை உணவைத்தான் சாப்பிடுது’ என்று ஒரு தாய் உருகினார். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் நன்றியை முதலமைச்சரிடம் சொல்வதற்காகக் காத்திருந்ததைத்தான் திருநெல்வேலிக் கூட்டம் காட்டியது.
இதனைத்தான் புள்ளிவிபரமாக – கருத்துக் கணிப்பாக ‘இந்தியா டுடே – சி வோட்டர்’ வெளியிட்டுள்ளது. 2019 முதல் தி.மு.க. கூட்டணி தொடர் வெற்றியைப் பெற்று வருகிறது. அடுத்து வரப்போகும் தேர்தலில் சாதாரணமான வெற்றியை அல்ல, மகத்தான வெற்றியைப் பெறப் போவதையும் உறுதி செய்கிறது இக்கணிப்பு.
‘இந்தியா டுடே – சி வோட்டர்’ கணிப்பானது உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறது.
#ErodeWestAc_DmkITwing

கருத்துகள் இல்லை: