வியாழன், 20 பிப்ரவரி, 2025

பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் வரிசையாக நிற்கவைத்து பேருந்து பயணிகள் சுட்டுக்கொலை

 வீரகேசரி : பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தான் மாநிலத்தில் இனம்தெரியாத நபர்கள் பேருந்து பயணிகளை வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்றுள்ளனர்
லாகூருரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தினை இடைமறித்த ஆயுததாரிகள் அதிலிருந்தவர்களை இறங்கச்செய்து படுகொலை செய்துள்ளனர்.
பலோச்சிஸ்தானின் பார்க்கான் என்ற பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த பகுதி ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் ஆப்கான் பாக்கிஸ்தான் எல்லைகளிற்கு அருகில் உள்ள இந்த பகுதியில் அதிகளவு சுயாட்சியை கோரி ஆயுதப்போராட்டம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



பயணிகளை வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்றனர் என சடாட் ஹ_சைன் என்ற அதிகாரியொருவர் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளார்.

பயணிகளிடம் அவர்களின் அடையாள அட்டையை பெற்ற பின்னர் பஞ்சாபை சேர்ந்தவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய பின்னர் அவர்களை சுட்டுக்கொன்றனர் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: