![]() |
![]() |
hirunews.lk : கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணை கைது செய்ய பொதுமக்களின் உதவியைக் கோரும் காவல்துறை!
துபாயில் உள்ள கெஹெல்பத்தர பத்மே என தெரிவிக்கப்படும் நபர் ஒருவரே கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேகநபருக்கு உதவியாக செயற்பட்ட பெண்ணே குற்றச் செயலை முன்னெடுப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வந்தி வீரசிங்க எனப்படும் நீர்கொழும்பைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
தற்போது குறித்த பெண்ணை கைது செய்வதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
பெயர்:- பிங்புர தேவகே இஷாரா செவ்வந்தி
வயது: 25தே.அ.அ.இ:- 995892480v
முகவரி:- 243/01, நீர்கொழும்பு வீதி, ஜய மாவத்தை, கட்டுவெல்லேகம
சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
தொலைபேசி இலக்கம் :- பணிப்பாளர், கொழும்பு குற்றப் பிரிவு :- 071-8591727
கொழும்பு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி:- 071-8591735
இந்த சந்தேக நபர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு காவல்துறை நிதியிலிருந்து வெகுமதி வழங்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தகவல்களை வழங்குபவர்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாக்கப்படும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக