சனி, 25 ஜனவரி, 2025

வேங்கைவயல் - மாற்று சமூக பஞ்சாயத்து தலைவரை பழி வாங்க திட்டமிட்டு குற்றத்தை நிகழ்த்தி உள்ளனர்

May be an image of 3 people and text

பா. உதயகுமார்  :  வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது...
மலம் கலக்குவதற்கு முன்பே, மலம் கலக்க போகிறவர்கள் தண்ணீரை யாரும் அருந்தவேண்டாம் என எச்சரித்து நீர் தொட்டியின் மேல் ஏறி உள்ளனர்.
அங்கே இவர்கள் பொட்டலாமாக எடுத்து சென்ற மலத்தை விடியோ எடுத்து, செல்ஃபி யும் எடுத்துள்ளனர்.அதன்பிறகு மலத்தை தொட்டிக்குள் கலந்துள்ளனர்.
அதன் பிறகு இந்த பிரச்சினை விஸ்வரூபம் ஆனதும் வீடியோவை டெலீட் செய்து விட்டனர்.
முதலில் மாற்று சமூகத்தினர் தான் இந்த செயலை செய்திருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியது, ஆனால் மாற்று சமூகத்தினர் இந்த பகுதிக்கு யாரும் வந்ததில்லை, வந்து போனதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.


காவல்துறைக்கு சவால் நிறைந்ததாக மாறி போனது வேங்கை வயல் பிரச்சினை. அதன்பிறகு நீர் தொட்டி இருக்கும் பகுதி மக்களிடம் விசாரணை தொடங்கியது. அப்போதுதான் ஒரு சிறிய clue கிடைத்தது.
மலம் கலக்குவதர்க்கு முன்பே, மலம் கலந்ததாக சொல்லப்பட்ட செய்தி எவ்வாறு மக்களிடம் சென்றது என்று ஆராய்ந்து. அந்த விஷயத்தை சொன்னவர்கள் மேல் விசாரணை வளையம் தொடங்கியது. அந்த நபர்கள் தான் முதலில் நீர் தொட்டியில் ஏறி உள்ளனர் என்பதை உறுதி செய்த காவல் துறை, அவர்களின் கைபேசியை ஆராய தொடங்கினர்.
அதன்பிறகு அந்த கைபேசியில் backup செய்ய அனுப்பி வைத்துள்ளனர். இந்த விசாரணை நேரத்தில் இவர்களை சுதந்திரமாக  செல்லவும் அனுமதித்துள்ளனர் காவல்துறை. இவர்களை தனிப்படை மூலமும், கைபேசி call recording மூலமும் நோட்ட மிட்டு இருந்தனர்.
அப்போதுதான் அந்த cellphone உரையாடல் நிகழ்ந்தது. அதன்பிறகும் காவல்துறை இவர்களை கிடுக்கிப்பிடி செய்யவில்லை. விடியோ ஆதாரம் கிடைத்ததும் தான், நடந்த குற்றத்தை முழுமையாக உறுதி செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குற்றதுக்கான பின்னணி என்னவென்றால், மாற்று சமூக பஞ்சாயத்து தலைவரை பழி வாங்க திட்டமிட்டு குற்றத்தை நிகழ்த்தி உள்ளனர் என்பது அம்பலமாகி உள்ளது.
அதனால் இவர்களுக்காக நியாயம் கேட்கிறோம் என்று உங்கள் மரியாதையை இழந்து விடாதீர்கள். நிச்சயமாக பல்ப் வாங்க போறது உறுதி. சுய ஜாதி பாசத்தால் குற்றவாளிகளுக்கு துணை போகாதீர்கள். இது உங்களுக்கு backfire ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை
இந்த விசயத்தில் காவல்துறையின் விசாரணை முறை அதை உறுதி செய்த விதம் அனைத்தும் பாராட்டுக்குரியவை.

கருத்துகள் இல்லை: