Balasubramania Adityan T : பிரபாகரனை இடிப்பது போல் தன்னோடு மார்பிங் செய்து அசத்திய பலே சீமான்...
உற்று பாருங்கள் பயபுள்ள சேட்டை நன்றாக புரியும்🤣
சீமான் பிரபாகரனுடன் இருக்கும் போட்டோவை 'எடிட்'செஞ்சு கொடுத்ததே நான் தான் என்று சினிமா இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தகவல் !
வெங்காயம், பயாஸ்கோப் ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார். கிராமப்புற கதைக்களத்துடன் உருவான இந்த இரண்டு படங்களும், கலை ரீதியாக விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றவை.
இந்நிலையில், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து உள்ளார்.
அதில், சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படத்தை தான் தான் எடிட் செய்த உண்மையை கூறி உள்ளார்
இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் அளித்துள்ள பேட்டியில், "நான் தொலைக்காட்சி ஒன்றில் டைட்டில் அனிமேட்டராக வேலை செய்து வந்தேன். அப்போது, நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த செங்கோட்டையன், சீமான் உடன் நெருக்கமாக இருந்தவர்.
நான் அவருக்கு சில படங்களை எடிட் செய்து கொடுத்து உள்ளேன்.
அப்படி ஒருமுறை டிவிடிகளை கொண்டு வந்து கொடுத்து, சீமான், பிரபாகரன் இருவரும் அருகருகே இருப்பது போல படம் வேண்டும் என்று கேட்டார். நான் எதற்கு என்று கேட்டதற்கு, "நாங்கள் அவருக்கு சர்ப்ரைஸாக பரிசு கொடுப்பதற்காக இந்த புகைப்படம் வேண்டும்" என்று சொன்னார் சீமான்.
என்னால் முடிந்த அளவுக்கு அந்த படத்தை எடிட் செய்து இருவரையும் அருகருகே இருப்பதுபோல சேர்த்துக் கொடுத்தேன்.
பிற்காலத்தில் சீமான், பிரபாகரனை சந்தித்ததாக வேறு வேறு தகவல்களுடன் உலா வரும் போது செங்கோட்டையனை இதுபற்றி சந்தித்து கேட்டேன்.
நம் புகைப்படத்தால் ஒரு அரசியல் தலைவர் உருவாகி விட்டார் என சந்தோஷமாக கூறினார் செங்கோட்டையன்.
ஆனால், அதே காலகட்டத்திலேயே, இந்தப் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்ற தகவலும் பரவியது.
ஆனால், இதுவரை நான் யாரிடமும் இதை சொன்னது இல்லை.
பிரபாகரனுடன் சீமான் இருப்பது போல தற்போது கிடைக்கும் புகைப்படம் நான் உருவாக்கியது.
இது தவிர பிரபாகரனுடன் சீமான் இருப்பது போல வேறு புகைப்படம் எதுவும் இணையத்தில் எங்குமே இல்லை.
சீமான் பிரபாகரனை சந்தித்தாரா? அப்போது புகைப்படம் எடுத்தாரா? இல்லை சந்திக்கும் போது புகைப்படம் எடுக்கவில்லையா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
பிரபாகரன் பெயரையே யாரும் உச்சரிக்காத சூழலில் நான் வந்த பிறகுதான் இங்கு பிரபாகரன் பெயரை உச்சரிக்கும் சூழல் உருவானது என சீமான் சொல்கிறார்.
அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்ற முறையில் நான் மிகவும் சங்கடப்பட்டு இருக்கிறேன்.
இந்த புகைப்படத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு சீமான் சொல்லும் நிறைய தகவல்கள் உண்மைக்கு முரணானதாக உள்ளது எனத் தெரிவித்து உள்ளார் சினிமா இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார்.
சீமான் சினிமா வாய்ப்பு இல்லை என்ற உடன் இது போல பிராடுதனங்கள் செய்பவர் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
ஆனால் எனக்கு இல்லை.
நீங்களே நன்றாக பாருங்கள்.
பிரபாகரனை தன்னோடு எடிட்டிங் செய்ததை இப்போது உற்று பாருங்கள்.
உங்களுக்கே நன்றாக தெரியும்.
காசுக்கு வாய் கிழிய பேசும் சினிக்காரப் பயல்கள் யாரையுமே நம்பாதீர்கள்.
சினிமா பயிற்சியை அவர்கள் அரசியலில் உங்களிடம் நடித்துக் காட்டுவார்கள்.
இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் படம் கமென்ட்டில் உள்ளது.
பயபுள்ள தம்பிகளை என்னமா ஏமாத்தி இருக்கான்🤔
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
பகிர்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக