![]() |
Esther Vijithnandakumar : வேலையில்லாத பட்டதாரி வேலையில்லாத பட்டதாரின்னு சொன்னா
ஏன்டாம்ப்பா அந்த வேலையில்லாத பட்டத்தை படிக்கிறீங்க?
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று இலங்கையில் எல்லா திணைக்களத்திலும் வேலை செய்கிறார்கள் ஆனால் அவர்கள் எந்த விதத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் ?
பதிமூன்று வருடங்கள் கடந்தும் இன்னும் அந்த தொழிலில் நிரந்தர நியமனம் பெறாது அவர்களை இன்னும் நிரந்தரமாக்காமலும் அரசாங்கம் வைத்திருக்கிறது
அவர்கள் தரம் ஒன்றைத்தவிர வேறு எந்த முன்னேற்றமோ Job promotion அடைய முடியாத ஒரே தொழில் இலங்கையில் பியோன் வேலையும் அபிவிருத்தி உத்தியோததத்தரின் வேலையும்தான்
அலுவலகத்தில் ஒரு சாதாரண பியோன்களை போல நடத்தும் நிலைதான் இருக்கு எந்தவொரு வேலையும் இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் வேலை போல இல்லை
அதுமட்டுமா இவ் உத்தியோகத்தர்களை யாராவது மதிக்கிறார்களா ஒரு கிராம உ.தியோகத்தர் கல்வி பொது தரதர உயர்தரத்தோட வேலைக்கு வாறான் அவனுக்குஇருக்கும் மதிப்பு கூட அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு இல்லை .
உங்களுக்கு தெரியுமா அபிவிருத்தி உத்தியோகாத்தர்கள் உள்வாங்கப்பட்ட நாளில் அவர்களை கிராமசேவை பிரிவுகளுக்கு அனுப்பட்ட போது அங்கே கிராம உத்தியோத்தருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் பல முரண் பல சண்டைகள் தொழில் செயற்பாடுகளால் இதனால் இரத்தினபுரியில் ஒரு அபிவிருத்தி உத்தியோகத்தருக்கும் கிராமசேவையாளருக்கும் சண்டையும் வாக்குவாதங்களும் பெருகி அந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டு இறந்தார்.
இது கற்ற பட்டதாரிகளுக்கு தேவையா அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்வாங்கும் போது இந்த மூலைமுடுக்கில் கிடந்த பல்கலைக்கழகம் போகாது சும்மா ஒரு டிகிரியை உந்த பல்கலைக்கழகம் முழுதும் எடுத்து வைத்திருந்தஅத்தனை பேரையும் பட்டதாரி என்ற பெயரில் GAQ படித்த அத்தனை பேரையும் அரசாங்கம் தன்னுடைய வாக்கு வங்கிக்காக அப்போதிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்தவினால் உள்வாங்கப்பட்டார்கள்
பின்னர் அதில் பலர் ஆசிரியர் தொழிலுக்குப் போனாலும் ஒரே சம்பளத்தில்தான் இருக்கிறார்கள்.
இவ் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வெறும் குமாஸ்தாக்களாக அரச நிறுவனங்களில் பேப்பர் வேலை செய்பவர்களாகவே நான் பார்த்திருக்கிறேன் தொழில் அறிவு மொழி அறிவு ஏன் எழுத்து அறிவும் இல்லாத பல உத்தியோகத்தர்கள் மிகவும் மோசமாக நிறுவனங்களில் இருக்கிறார்கள்.
வெறும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்காக அவர்தம் வேலையில் தரித்திருக்கிறார்கள் அரசாங்கம் சரி இவர்களுக்கு ஒரு பயிற்சி அல்லது அவர்களின் தரத்தை உயர்த்த பரீட்சைகள் கணிப்டூதான் வைக்கிறதா என்றால் அங்கும் இல்லை இங்கும் ஒன்றும் இல்லை
இலங்கையில் எப்பாகத்தையும் விட யாழ் மற்றும் கிழக்கில்தான் இந்த வேலையில்லாத பட்டதாரி கூட்டம் ஒரே அரச வேலைக்காக காத்து கிடக்கிறார்கள் அது பெரும் கவலைக்குரியதும் அவர்களை இந்த வெத்து பட்டதாரி நிலையிலிருந்து வெளியேற்ற வேண்டும் கக்கூஸ் கழுவினாலும் கவர்மெண்டுலத்தான் கழுவணும் என்ற நிலையை மாத்தணும் நீங்க மாறணும்
எத்தனையோ தொழில்நுட்பம் கல்வி நிலை வந்துகொண்டேயிருக்கு ஏன் வடக்கை எடுத்தால் தண்ணீர்குழாய் திருத்துபவர்கள் குளிர்சாதனப்பெட்டி திருத்துபவர்களுக்கு கடும் தட்டுபாடு அவ் தொழில்கள் அகெளரவமானவை அல்ல அவற்றை கற்கும் போது மத்தியகிழக்கில் நல்ல சம்பளத்தோட வேலையில் பல இளைஞர்கள் உழைப்பதை நான் நன்கறிவேன். ஆனால் இந்த வெத்து டிகிரியால் தானும் நாசமாகி நாடும் நாசமாகி போனதுதான் மிச்சம்.
வெளிவாரி கலை பட்டதாரி கல்வி முறையை பல்கலைக்கழகம் மானியங்கள் நிறுத்தவேண்டும் நான் சனாதிபதியா இருந்தால் மாற்றத்தை கல்வியிலிருந்துததான் ஆரம்பிப்பேன்.
அரசாங்கம் எந்தவொரு பட்டதாரியையும் உள்வாங்கி உள்வாங்கி காரியாலயங்களில் இடத்தை நிரப்பாது ஒரு உழைப்புள்ள அரச ஆளணியை உருவாக்க முன் வரவேண்டும்.
குறிப்பாக நல்ல சம்பளம் பெறும் தேவையுள்ள தொழில்களை மாணவர்கள் பெறவும் கற்கவும் பாடசாலை மட்டத்தில் மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டும்.
அதை விடுத்து வேலையில்லா பட்டதாரின்னு ஒரு முட்டாள்கூட்டம் நாளும்பொழுதும் உருவாகி மேலும் மேலும் இவ் நாட்டுக்கு சுமையைத்தான் கூட்டுமே தவிர நாடும் உருப்படாது பட்டதாரியும் உருப்படாமல்தான் போவான்/போவாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக