புதன், 22 ஜனவரி, 2025

தியாகராஜர் தெலுங்குப் பாடல் மட்டும் பாடி திருவையாற்றில் உஞ்சவிருத்தி செய்து வாழ்க்கை நடத்தியவர்

May be an image of 1 person and text

Thulakol Soma Natarajan :  தெலுங்குப் பாடல் மட்டும் பாடி திருவையாற்றில் உஞ்சவிருத்தி
செய்து வாழ்க்கை நடத்தியவர்
ஆந்திரத்தைப் பூர்விகமாக கொண்ட தெலுங்கு பிராமணர் தியாராஜன் .
அவர் பாடியவை கொச்சைத் தெலுங்கு என்று தெலுங்கு
மொழி வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அவர் மறைந்தது 6. 1. 1847ல்.
அதன் பிறகு, திதி கொடுபதற்காக அவரின்  உறவினர்கள் புல்லும் புதரும்
மண்டிக் கிடந்த அவரின் சமாதியில் அமர்ந்து அவர்
எழுதிய பாட்டுக்களைப் பாடி வந்தனர்.
தியாகராஜனனின் "ஆராதனை " இப்படித்தான் "ஆரம்பமானது ".
மைசூர் தேவதாசி குடும்பத்தை சேர்ந்த கன்னட நாகரத்தினம்மாள்
தன் சொத்தையெல்லாம் விற்று தியாகராஜனுக்கு கோவில் கட்டினார்.
ஆண்டுதோறும் ஆராதனை விழா நடத்தினார்.
இதில் கொடுமை என்னவென்றால் அந்த நிகழ்ச்சியில் நாகரத்தினம் அம்மாள் உட்படப் பெண்கள் எவரையும் பாட அந்தப்
பார்ப்பனக் கூட்டம் அனுமதிக்கவில்லை.


உடனே அந்த அம்மையார் பெண்களை ஒரு குழுவாக அமைத்துக் கொண்டு தனியாக
ஆராதனை நிகழ்ச்சியைத் தொடங்கினார்.
பிறகு வேறு வழியின்றிப் பெண்களையும் மேடையில் பாட அனுமதித்தனர் பர்ப்பனர்கள் .
ஆனால் இன்றும் முக்கியமான ஆராதனை நிறைவு நிகழ்ச்சியில் பெண்களைத் தனிக்
குழுவாகவும் ஆண்களைத் தனிக் குழுவாகவும்
இருக்கச் செய்தே நிகழ்வை நடத்துகின்றனர்.
கோயில் அமைத்த நாகரத்தினம்மாள் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்.
ஆனால் அவர் கன்னடத்தில் பாட முடியாது.
நிகழச்சி நடப்பது தமிழ்நாட்டில்
ஆனால் அங்கு இசையரசுஎம.் எம். தண்டபாணி தேசிகள்தமிழில் பாடியதால்
தீட்டு என்று தீட்டுக் கழித்து அவமானப்படுத்தினர்.
இந்தக் கொடுமை 178ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது.
இதைத் தட்டிக் கேட்கத் திராணியற்றவர்களாக இந்த "மரத் தமிழர்கள் " இருக்கிறார்கள்.
திராவிடத் தமிழர்களும் செவிடர்களாக ஆகிவிட்டனர்
என்று முடிவுக்கு வரும் இந்தத் "தமிழ்த் தீட்டுக்
கொடுமை?"
                         துலாக்கோல்/21.01.2025

கருத்துகள் இல்லை: