![]() |
ராதா மனோகர்: இலங்கை தமிழ் திரைப்படங்களில் பொன்மணி திரைப்படம் மிக உயர்ந்த இடத்தில இருக்கிறது
காவலூர் ராசதுரையின் கதையை திரு தர்மசேனா ச பத்திராஜா அவர்கள் படமாக்கி இருக்கிறார்.அண்மையில் மறைந்த திரு குழந்தை சண்முகலிங்கம் அவர்கள் கதாநாயகனை நடித்திருக்கிறார்
டாக்டர் நந்தி . சிவஞானசுந்தரம் சித்திரலேகா மௌனகுரு பவானி சிவனங்கசுந்தரம், சர்வமங்கலம் கைலாசபதி இன்னும் பலர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்
இது ஒரு சமூகத்தின் கதை என்ற ரீதியில் நகர்த்தப்பட்டதால் எந்த ஒரு கதாபாத்திரமும் சிறியதும் அல்ல பெரியதும் அல்ல.
சமூகத்தின் வாழ்வியல்தான் கதாநயான் என்றுதான் கூறவேண்டும்
ஜாதியும் மதமும்தான் வில்லன் என்று கூறவேண்டும்.
![]() |
மண்ணின் உண்மையான பிரச்னையை அப்படியே எடுத்து காட்டிய படம்
ஒரு நடுத்தர குடும்பத்தின் வறுமை சீதனம் போன்ற அவலங்களின் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பெற்றோர்
திருமண வயதை தாண்டியும் சீதன பிரச்சனையால் தடுமாறும் மூன்று மகள்கள்
இவர்களின் வாழ்வை எப்படி மேம்படுத்தலாம் என்று துடிக்கும் சகோதரன்( அண்மையில் மறைந்த திரு குழந்தை சண்முகலிங்கம் ஆசிரியர் இந்த கதாநாயகனாக வாழ்ந்து காட்டி இருக்கிறார்)
இந்த குடும்பத்தின் கடைசி மகளான பொன்மணி வீட்டின் பாரத்தை குறைக்க கிடைத்த ஒரு வாய்ப்பாக காதலனோடு ஓடிப்போகிறாள்
அதுவரை இந்த குடும்பத்தை எட்டி பார்க்காத ஜாதி உறவினர்களின் கண்களில் அந்த காதலனின் மதமும் ஜாதியும் உறுத்துகிறது
அந்த ஆண்ட பரம்பரை அடாவடிக்காரர்கள் பெண்மணியை சுட்டு கொன்றுவிடுகிறார்
அதுவும் திருமண கோலத்தோடு சர்ச்சில் இருந்து வெளியே வரும்போது
அசல் யாழ் மண்ணின் ஜாதி மத பயங்கரவாதத்தை தோல் உரித்து காட்டியுள்ளார்கள்.
பிற்காலத்தில் கொழுந்து விட்டு எரிந்த சோ கால்டு போர் கூட இந்த அடாவடி கலாச்சாரம் பெற்றெடுத்த குழந்தைதான்
இந்த பொன்மணி திரைப்படம் எங்கும் காணக்கிடைக்கவில்லை
இது பொதுவெளியில் இருந்தால் யாரவது பதிவிடவும்
விக்கிபீடியா : பொன்மணி (திரைப்படம்)
பொன்மணி திரைப்படத்தில் சுபாஷிணி
இயக்கம் தர்மசேன பத்திராஜா
தயாரிப்பு முத்தையா ராஜசிங்கம்
கதை காவலூர் ராசதுரை
திரைக்கதை காவலூர் ராசதுரை
இசை எம். கே. றொக்சாமி
நடிப்பு பாலச்சந்திரன்,
சுபாசிணி,
சித்திரலேகா மௌனகுரு,
எம். எஸ். பத்மநாதன்,
செ. சிவஞானசுந்தரம்,
சி. மௌனகுரு
சர்வமங்களம் கைலாசபதி,
எம். சண்முகலிங்கம்,
எஸ். திருநாவுக்கரசு,
ஆர். ராஜசிங்கம்,
எஸ். யோகநாதன்,
சோக்கல்லோ சண்முகம்
ஒளிப்பதிவு டொனால்ட் கருணாரத்தின
வெளியீடு ஏப்ரல் 1977
நாடு இலங்கை
மொழி தமிழ்
பொன்மணி 1977 ஆம் ஆண்டில் வெளியான ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். தர்மசேன பத்திராஜா இயக்கிய இத்திரைப்படத்தில் பாலச்சந்திரன், சுபாஷிணி, கலாநிதி செ. சிவஞானசுந்தரம் (நந்தி), எம். எஸ். பத்மநாதன், சித்திரலேகா மௌனகுரு முதலானோர் நடித்தார்கள்.
எம். கே. றொக்சாமியின் இசையில் கமலினி செல்வராஜன், சில்லையூர் செல்வராஜன் இயற்றிய பாடல்களை சக்திதேவி குருநாதபிள்ளை, எஸ். கே. பரராஜசிங்கம், கலாவதி சின்னசாமி, சாந்தி கணபதிப்பிள்ளை, ரஜனி-ராகினி சகோதரிகள், ஜனதா சின்னப்பு ஆகியோர் பாடினார்கள். டொனால்ட் கருணாரத்தின இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணி புரிந்தார். திரைக்கதை வசனத்தை காவலூர் ராசதுரை எழுத இத்திரைப்படத்தை முத்தையா ராஜசிங்கம் என்ற தொழிலதிபர் தயாரித்தார்.
யாழ்ப்பாணத்துச் சாதியமைப்பு பிரச்சினையை மையமாகக் கொண்டு இத்திரைப்படக் கதை உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாண உயர்சாதி இந்துக் குடும்பத்தில் கடைசிப் பெண்ணாகப் பிறந்தவள் பொன்மணி (சுபாசிணி). தாழ்ந்த சாதி இளைஞனைக் (பாலச்சந்திரன்) காதலித்து தனது காதலுடன் ஓடி விடுகிறாள். உயர் சாதிக் குடும்பத்தினர் பொன்மணியைக் கொன்று விடுகின்றனர்.
எடுக்கும் இளம் தோளில் மணமாலையே, (பாடியவர்: சக்திதேவி குருநாதபிள்ளை, இசை: எம். கே. றொக்சாமி, பாடல் வரிகள்: கமலினி செல்வராஜன்)
பாதையில் எத்தனை ராதைகள் பேதைகள் (பாடியவர்: கலாவதி சின்னசாமி, இசை: எம். கே. றொக்சாமி, பாடல் வரிகள்: சில்லையூர் செல்வராஜன்)
வானில் கலகலவென இருபறவைகள் திரியுது, (பாடியோர்: எஸ். கே. பரராஜசிங்கம், சக்திதேவி குருநாதபிள்ளை, இசை: எம். கே. றொக்சாமி)
பேராசிரியர் கைலாசபதியின் மனைவி திருமதி சர்வமங்களம் கைலாசபதியும் இப்படத்தில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு யாழ்ப்பாணம், குருநகர், சுன்னாகம், பண்ணை, மண்ணித்தலை, பரந்தன், ஆனையிறவு, கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெற்றன.
![]() |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக