தினமலர் : உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் சங்கம்பட்டி கிராமத்தில் நடந்த புரட்டாசி திருவிழாவில், 17 வயது சிறுவன் பிற சிறுவர்களுடன் நடனமாடினார்.
அங்கிருந்தவர்கள் அவரது ஜாதி பெயரை சொல்லி திட்டி, தாக்கியதால் தகராறு ஏற்பட்டது.
சில நாட்களுக்கு பின், அவனை கிஷோர் உள்ளிட்ட ஆறு பேர் கடத்திச் சென்று தாக்கினர். அங்குள்ள கோவிலில் முட்டிபோட வைத்து, ஜாதி பெயரை இழிவாக சொல்லி அடித்து மிரட்டி, 6 வயது சிறுவன் உட்பட அனைவரது கால்களிலும் விழ வைத்ததாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு வேண்டி, உசிலம்பட்டி நகர் போலீசில் சிறுவன் புகார் அளித்தார். அவரை தாக்கிய ஆறு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், 17 வயதுள்ள இரு சிறுவர்களை கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக