திங்கள், 20 ஜனவரி, 2025

யாழ்ப்பாணதில் பிரமாண்ட திருவள்ளுவர் கலாசார மையம்

 ராதா மனோகர் : திருக்குறள் -  இல்லறவியலில்  42 ஆவது குறள்.
"துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை'
இக்குறளில் இறந்தார்க்கும் என்பதை பலரும் இறந்த உறவினர்கள் அன்பர்கள் போன்றோர்க்கு இல்வாழ்வான் துணையாக இருத்தல் வேண்டும் என்பதாக பொழிப்புரை எழுதியுள்ளார்கள்.
மேலும் சிலர் இறந்தவர்களுக்கு செய்யவேண்டிய ஆண்டு திதி போன்றவற்றை தவறாமல் செய்யவேண்டும்.
இறந்தவர்களின் நினைவாக தானங்கள் கொடுக்க வேண்டும் என்பது போலவும் கூறுகிறார்கள்
ஆனால் இது பற்றி எனக்கு வேறொரு கோணத்தில் ஒரு கருத்து தோன்றுகிறது.
உதாரணமாக தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா கலைஞர் போன்றவர்கள் புகழுடம்பு எய்திய நிலையில் அவர்களுக்கு நாம் எப்படி துணையாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறதல்லவா?
பெரியார் அண்ணா கலைஞர் போன்றவர்கள் யார்?
இவர்கள் வெறுமனே உடலும் மனமும் கொண்டவர்கள் என்று மட்டுப்படுத்த முடியுமா?


இவர்கள் எந்த கொள்கைகளுக்காக காலமெல்லாம் போராடினார்களோ அந்த கொள்கைகள்தான் இந்த தலைவர்கள்.
இவர்கள் வேறு இவர்களின் கொள்கைகள் வேறல்ல
இந்த தலைவர்களையும் இவர்கள் முன்னெடுத்த கொள்கைகளையும் வேறு படுத்தி பார்க்க முடியாது.
இவர்களுக்கு துணையாக இருத்தல் என்பது இவர்களின் கொள்கைகளுக்கு துணையாக இருத்தல் என்றே கருத முடியும்
இதன்  அடிப்படையிலேயே இறந்தார்க்கு துணையாக இருத்தல் என்பது இறந்தவர்கள் கொண்டிருந்த கொள்கைகளுக்கு கடமைகளுக்கு துணையாக இருத்தல் என்றெண்ணுகிறேன்
.இந்த கருத்து பற்றி உங்கள் கருத்துக்களை விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்!
மீள் பதிவு
யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாசார மையம்

கருத்துகள் இல்லை: