பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள கோவிந்த்வால் சாகிப் மத்திய சிறைச்சாலையில் இன்று பயங்கர மோதல் ஏற்பட்டது.
இரு குழுவினரிடையே ஏற்பட்ட இந்த சண்டையில் 2 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் பலத்த காயமடைந்தார். கொலை செய்யப்பட்ட இருவரும் பாடகர் சித்து மூஸ் வாலா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.
மூன்று பேரும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மீது இந்த கொலை வழக்கு தவிர மற்ற சில வழக்குகளும் இருப்பதாகவும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு குர்மீத் சிங் சவுகான் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூஸ் வாலா கடந்த மே மாதம் 29-ம் தேதி மன்சா மாவட்டத்தில் உள்ள மூஸா என்ற கிராமத்தில் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். பஞ்சாப் அரசு வி.ஐ.பி-க்களுக்கு கொடுத்துவந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்ட பிறகுதான் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக