ராதா மனோகர்
: திரு சௌமியமூர்த்தி தொண்டைமானும் திரு ஜி ஜி பொன்னம்பலமும்
குட்டாப்பிடி என்ற தோட்ட கிராமத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு பற்றிய செய்தி இது
அங்குள்ள தோட்டத்தில் நடந்த கலவரத்தில் தோட்டத்தை சேர்ந்த ஒருவர் கொலைசெய்யப்பட்டார்
அந்த கொலையில் சந்தேகத்தின் அடிப்படையில் எட்டு மலையக தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
எட்டு தொழிலாளர்களும் கூட்டம் கூடி திடடமிட்டு இந்த கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது
தொழிலாளர்கள் பதறிப்போய்விட்டார்கள்
எட்டு பேர்களும் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கத்தின் தலைவரிடம் போய் உதவி கேட்டு மன்றாடினார் குடும்பத்தினர்
அந்த தொழிற்சங்க தலைவர் ஒரு சிங்கள வழக்கறிஞரை அணுகி இது பற்றி பேசினார் . அவர் இந்த வழக்கை கையிலெடுப்பதற்கு 5000 ரூபாய் கேட்டார் . இந்த தொகைக்கு தொழிலாளரக்ள் எங்கு போவார்கள்?
அந்த தொழிற்சங்க தலைவரும் கையை விரித்து விட்டார்
பின்பு இந்த இவர்கள் கொழும்புக்கு போய் திரு தொண்டைமானை சந்தித்து நிலமையை எடுத்து சொன்னார்கள்
கவனமாக கேட்ட தொண்டைமானுக்கு இந்த எட்டு பேர்களும் குற்றவாளிகள் அல்ல என்று தோன்றியது
இவர்கள் நமது தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் அல்லவே என்ற எண்ணம் கொஞ்சம் கூட திரு தொண்டைமானுக்கு இருக்கவில்லை.
கவலைப்படாதீர்கள் நான் முடிந்ததை செய்கிறேன் என்று வாக்குறுதி அள்ளித்தர தொண்டமான்
அடுத்த கணம் டெலிபோனை எடுத்து அப்போது பிரபல கிரிமினல் அட்வாகேட்டாக இருந்த திரு ஜி ஜி பொன்னம்பலத்திடம் பேசினார்
குட்டாம்பிட்டி கொலை வழக்கை அவர் எடுத்து பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திரு ஜி ஜி பொன்னம்பலம் சம்மதம் தெரிவித்தார்
வழக்கு விசாரணைக்கு வந்தது திரு பொன்னம்பலம் தனது வாத திறமையினால் அந்த வழக்கை தவிடு பொடியாக்கினார்
அந்த எட்டு பேரும் தூக்கு தண்டனையில் இருந்து தப்பி விடுதலையானார்கள்.
அவர்களின் குடும்பம் தொண்டைமானுக்கும் பொன்னம்பலத்திற்கும் கோடானுகோடி நன்றி தெரிவித்து கொண்டாடினார்கள்
அன்று மாலையே திரு தொண்டமான் செக் புத்தகத்தை எடுத்து கொண்டு திரு பொன்னம்பலம் வீட்டிற்கு சென்றார்
உங்கள் பீஸ் எவ்வளவு என்று கேட்டார் திரு தொண்டமான்
5000 ரூபாய் என்றார் திரு ஜி ஜி பொன்னம்பலம்
சட்டை பையிலிருந்த செக் புத்தகத்தை எடுத்தார் தொண்டமான்
அதை கவனித்த பொன்னம்பலம் அது இலங்கை இந்திய காங்கிரஸ் செக் அல்ல அது தொண்டைமானின் செக் என்பதை கண்டுகொண்டு,
இது யாருடைய செக் என்று கேட்டார்?
ஏன் இது என்னுடைய செக்தான் என்றார்
ஏன் உங்களுடைய செக்கை தருகிறீர்கள்? இது இலங்கை இந்திய காங்கிரஸ் செக் இல்லையா?
இல்லை இலங்கை இந்தியா காங்கிரஸ் கணக்கில் போதிய பணம் இல்லை . அதனால்தான் என் செக் தருகிறேன் என்றார் தொண்டமான்
அப்படியானால் எனக்கு பணம் வேண்டாம் . ஸ்தாபனத்தின் பணம் என்றால் தாருங்கள் உங்கள் சொந்த பணம் என்றால் வேண்டாம் என்று பெருந்தன்மையாக மறுத்துவிட்டார் திரு ஜி ஜி பொன்னம்பலம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக