செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ராஜினாமா

 மாலைமலர் :  டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் விசாரணை
பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையால் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு இருக்கிறார். டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும், அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தங்களது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.
 இருவரது ராஜினாமா கடிதங்களையும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணை நடத்திய பின் கைது செய்தனர்.


ஏற்கனவே, பணமோசடி குற்றச்சாட்டில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் பதிவியில் இருந்த சத்யேந்திர ஜெயின் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
இருவரும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிலையில், தங்களது ராஜினாமாவை அறிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: