புதன், 2 மார்ச், 2022

ஒரு சங்கியின் பார்வையில் சென்னை புத்தக கண்காட்சி 2022

 Gowra Rajasekaran : இந்துவா வெறிபித்த சங்கியின் குமுறல்
சென்னை புத்தககாட்சி  ..  2022பற்றி ..  நல்லா இருக்கு!
தொடரட்டும்
சென்னை புத்தக கண்காட்சி 2022 சென்ற நண்பரின் பதிவு
 இலக்கிய உலகம் - சென்னைப்  புத்தகக்  கண்காட்சி  ....  !!!
அதிர்ச்சியூட்டும் வகையில் மதமாற்ற பிரிவினைவாதிகள் கைகளில் சென்று விட்ட தமிழ்  கலை, இலக்கிய ஊடகத்துறை .....  !!!
சென்னைப்  புத்தகக்  கண்காட்சி -  கிட்டத்தட்ட 800 ஸ்டால்களில் பாதிக்கும் மேல் பிரிவினைப் போராளிகளின் ஸ்டால்கள் .....  !!!
அவற்றில் நிரப்பப்பட்டுள்ள புத்தகங்கள் பெரும்பாலும்  இந்து விரோத, இந்திய விரோத, பார்ப்பன விரோத, இன, மொழி வெறுப்பரசியல் பரப்புரை செய்யும் என்னும் ஆனால் ஒரே வகையைச் சேர்ந்தவை .....   !!!


தேசியத் தலைவர் அம்பேத்கரை பச்சையாக சாதியத் தலைவராக முன்னிறுத்தும் ஸ்டால்கள்.
 ஈ.வே. ராமசாமி என்பவர் ஏதோ மாபெரும் எழுத்துலகச்  சித்தர் எனத் தோன்ற செய்யுமளவிற்கு ஸ்டால்களில் மார்பளவு/ ஆளுயரச் சிலைகளும், படங்களும், பொன்மொழி(!) வாசகங்களுமாக அத்தனை ஊடக வெளிச்ச வெள்ளம் ..... !!!
நமக்கே "தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்று பாராட்டிய(!) பெரியார் பற்றிய 'டமில் புக்' ரெண்டைத் தூக்கலாம் போல அத்தனை விளம்பர வித்தை  .... !!!
தி.ஜா, சுந்தர ராமசாமி, கல்கி, கண்ணதாசன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஜெயமோகன்  போன்ற தேவையில்லாமல் 'நற்பெயர்' வாங்கித் தொலைத்த எழுத்தாளர்களின் புத்தகங்களைத்  தேடித்தான் பார்க்க வேண்டி இருக்கிறது .....  !!!
எந்தவித விளம்பரப் படாடோபமும் இல்லாத நிலையில் ஆனாலும் இவர்களின் புத்தகங்கள். உண்மையான இலக்கிய ஆர்வலர்கள் தேடிக் கேட்டு வாங்கிச் செல்கிறார்கள் .....  !!!
நிஜமான நடுநிலை பதிப்பகங்களையே,  உண்மையான  மதசார்பற்ற எழுத்தாளர்களையே கண்காட்சி முழுக்க லென்ஸ் வைத்து தேடித்தான் பார்க்கும்  நிலை எனும் போது ......
இந்துமத ஆதரவு/ மதமாற்ற எதிர்ப்பரசியல் பதிப்பகங்களோ அல்லது  இலக்கிய கர்த்தாக்களோ இல்லை என்றே சொல்லி விடலாம் ...... !!!
கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் கூட தனித்தனி ஸ்டால்கள். கருணாநிதி கூட பரவாயில்லை .... "ஸ்டாலின் ஏன் பிரதமர் ஆகக் கூடாது?' என்று ஆங்கிலத்தில் புத்தகம் - ஆமாம்... ஆங்கிலத்தில்  .... !!!  
அதுவும் அதற்கென்று ஒரு தனி ஸ்டால். அதுவே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு "ஸ்டாலின் புகழ் பெற்ற சட்டமன்ற உரைகள்" என்று புத்தகமே போட்டு விட்டார்கள். எத்தனை உடன்பிறப்புகள் புல்லரித்து நின்றார்களோ .... !!!
இலக்கியச் செல்வி கனிமொழிக்கு தனி ஸ்டால் போடவில்லை. உதயநிதி, இன்பநிதி புக் ஸ்டால்கள் இல்லாத வருத்தம் கேன்டீனில் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டவர்களின் முகத்தில் மிகையாகத் தெரிகிறது என்று எழுதவில்லை என்றால் வழக்கு போட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன் .... !!!
முக்கி முக்கித் தேடி தரம்பாலின் (தமிழில் BR. மகாதேவன்) அழகிய நதி, மற்றும் அழகிய மரம் இரண்டு புத்தகங்களை (கிழக்கு பதிப்பகம்) வாங்கினேன் .... !!!
பல எதிர்ப்புகளுக்கு இடையில் வெளிவந்த "லூசி கலப்புரா" வின் கர்த்தாவின்டே நாமத்தில் புத்தகத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் பலரும் அறிந்த புத்தகம் கடைசிவரை கிடைக்கவே இல்லை  ....  !!!
பதிப்பக உரிமையையே ஜெபக்கும்பல் வாங்கி புத்தகமே வராமல் வெளியில் யாருக்கும் கிடைக்காமல் பண்ணி விட்டார்கள் போலும் என எனக்கு சம்சயம் .... !!!
GST பற்றிய சாதாரண அடிப்படை அறிவு கூட இல்லாத நபர் என்று அனைவர்க்கும் தெரிந்த  பிறகும் கூட திருமாவளவனின் புத்தகங்களை காட்சிப்படுத்தி வைத்திருக்கிறார்கள் .... !!!
இந்தப் பக்கம் தவறாமல் பக்திப்  புத்தகங்கள், தல வரலாறு, பிரபந்தம், தேவாரம், திருவாசகம் என்று ஒரே விதமான பட்டியல் வருடாவருடம் நீள்கிறது .... !!!
இந்த நாட்டில் கண்ணுக்குத் தெரியாமல்  புயல் போல வீசிக் கொண்டிருக்கும்  மதமாற்ற அரசியலுக்கு எதிர்வினையாற்றும் எழுத்தாளர்கள், அவர்களை ஆதரிக்கும் பதிப்பகங்கள் எண்ணிக்கை அருகி வருகிறது .... !!!
சென்ற முறை கிழக்கு பதிப்பகத்தில் உடையும் இந்தியா, மறைக்கப்பட்ட இந்தியா போன்ற சிற்சில புத்தகங்கள் வாங்க முடிந்தது. விஜய பாரதம் பதிப்பகத்தில் சில பதிலடி புத்தங்களை வாங்கினேன் ...... !!!
இந்த கண்காட்சியில் அதுவும் குறைவு. அரவிந்த நீலகண்டன், ஜடாயு, மாரிதாஸ், பாண்டே, வெங்கடேசன்  போன்றவர்களின் சில புத்தகங்கள் ..... !!!
ஆயினும் இன்றைய தேதியில் சர்வதேச நிதியுதவியுடன் பளபளா அட்டைகளுடன், கவர்ச்சிகரமான வெளித்தோற்றத்தில், சர்வதேச இன்டீரியர் ஸ்டைல்ட்  ஸ்டால்களில் விற்கப்படும் சுவிசேஷ  பதிப்பக/ எழுத்தாளர்களின் வெறுப்பரசியல் புத்தகங்களை விஞ்சும் நிலையில் - உள்ளடக்கத்தில் அல்ல- சனாதன எழுத்துலகம் இல்லை ..... !!!
சொல்லப் போனால் நமக்கு எதிராக  இத்தகைய ஒரு இலக்கிய ஆக்கிரமிப்புப் போர் நடக்கிறது என்ற புரிதல் கூட நம்மவர்களுக்குக் கிட்டத்தட்ட இல்லை போல் தெரிகிறது ..... !!!
பலர் தேமே என்று ஸ்டால் வாசலில் உட்கார்ந்து இருக்கிறார்கள். தம்மடிக்க வெளியில் சென்று விடுகிறார்கள். இடைவெளிகளில்  டீ, காப்பி, ஸ்னாக்ஸ் ..... !!!
மதமாற்றப் போராளிப் பதிப்பகங்களின் புதிய வெளியீடுகள் மட்டுமே இந்த வருட கண்காட்சியில் சில நூறு இருக்கும் போலத் தெரிகிறது. அவர்களுக்கு எல்லா புக்கும் விற்க வேண்டும் என்று கூட இல்லை போல .....!!!
பல புத்தகங்களில் உள்ளடக்கமும் பிரமாதம் இல்லை. ஒரு கடையில் 'கழிவறை இருக்கை' என்று ஒரு தலைப்பு. என்னடா இது வினோதமா இருக்கே என்று கேட்டால், அருகில் 'புக்கு சூப்பர் சார் கம்யூனிச சிந்தனை விளக்கம்' என்றார் ..... !!!
அமேசானில் தேடிப் பார்த்தால் 'காமம் ஏன் ரகசியம், அந்த அடிப்படைத் தேவை பற்றிய விழிப்புணர்வு இல்லா நிலை' என்று காமசூத்ரா போல ஏதோ சொல்கிறது. கழிவறைக்கும், நமது கம்யூனிசத்திற்கும் ஒற்றுமையை அவர் ஏதோ ஒரு வகையில் புரிந்து கொண்டார் போலத் தெரிகிறது ..... !!!
பெரும்பாலும் பல்வேறு புத்தகங்களில் 'திரும்பத் திரும்ப ஒரே இந்துவிரோத எதிர்ப்புப் பாட்டை வேறு வேறு தலைப்புகளில் பாடி இருக்கிறார்கள். எதையாவது ஒன்றை  எப்படியாவது ஒரு நடுநிலைத் தமிழன் தலையில் கட்டினால் போதும் ..... !!!
விதவிதமான கவனத்தைக் கலைக்கும் தலைப்புக்களில், முக்கால்வாசி  தலைப்புகளே என்னமாதிரி புத்தகம்/உள்ளடக்கம் என்பதைச் சொல்லி விடும். 'பெண் ஏன் அடிமையானாள்?' - இது பெரியார் ஸ்டாலில் அவரது சிலையின் கால்களுக்கிடையில் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகம் ...... !!!
இது எப்படியான நகைமுரண் என்பதைக் கூட அறியாமல் அந்தப் புத்தகத்தை வாங்கிச் செல்கிறான் மண்தோன்றும் முன், மண்டைக்குள் மூளை தோன்றிய நம்  நடுநிலைத் தமிழன் ...... !!!
இந்த இலக்கிய ஊடகப் போரில் வெற்றிக் கோட்டுக்கு மிக அருகே மதமாற்றப் போராளிகள். இலக்கிய உலகம் 90% அவர்களின் கைகளில். பக்தி இலக்கியப்  புத்தங்கங்களை மலிவு விலையில் தரும் கீதா பிரஸ் நமது ஆர்வமில்லாமை/ஆதரவில்லாமை காரணமாக  மூடிவிட்டார்கள் ..... !!!
நடுநிலைப்  பதிப்பகங்கள் தங்கள் கண்முன்னே அராஜமாக நடக்கும் இந்த இலக்கிய ஹைஜாக்கை வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். கைவிட்டுப் போகும் கனவாகத் தெரிகிறது போலும் ....... !!!
ஜெயகாந்தனைச் சீண்டுவார் இல்லை. சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் பெயர்கள் கூட பலரால் உச்சரிக்கப் படவில்லை. நல்ல எழுத்தாளர்களுக்குப் பஞ்சமோ என்று நினைக்கும் விதமாக 'மதசார்பற்ற' பதிப்பகங்கள் கண்காட்சியில் பங்கு கொள்கின்றன ...... !!!
அவர்களைச் சொல்லியும்  என்ன அவர்களுக்கு என்ன NGO நிதி கொட்டுகிறதா பாவம் ..... !!!
"நான் ஏன் இந்து இல்லை", "இந்துவாக சாக மாட்டேன்", போன்ற விதவிதமான சமூக நீதி(!)  வாசகங்கள் பொறியப்பட்ட, பெரும்பாலும் கருப்பு நிற பனியன்களில் அரங்கு முழுக்க உலா வரும் தடிதடியான கும்பலைப் பார்த்து மிரட்சியாக பொது மக்கள் விலகிச் செல்கிறார்கள் ..... !!!
விட்டால் பொண்டாட்டியை கட்டிப் பிடித்து விடுவான்கள் போல இருக்கிறது. இதுதான் தமிழ் இலக்கிய வளர்ச்சியா என்று திடுக்கிட வைக்கிறது சென்னைப் புத்தகக் கண்காட்சி 2022 ...... !!!
இதே மாதிரி பிற ஊர்களில் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளில்  நிலை பற்றிக் கூட ஒரு குன்ஸாக புரிந்து கொள்ள முடிகிறது. ஞானக்குறைவுபட்ட மதமாற்ற அரசியல் இலக்கிய (கர்மம்டா) சைத்தான் அதன் உச்சக் கிளையில் ஏறிப் பிட்டத்தைச் சொறிந்து கொண்டு நம்மைப் பார்த்து இளிக்கிறது ...... !!!
நமது கைகளில்  ஒரு மதமாற்ற பிட்டு நோட்டீசை "இந்தாடா புடிடா ..." திணிக்கவில்லை என்ற ஒன்றைத் தவிர பிற அனைத்தும் ஆகாவென அமோகமாக நடக்கிறது .....!!!
இதெல்லாம் சற்றும் புரிந்திராத, புத்தகக் கண்காட்சிக்கு  உள்ளே செல்லும், ஏற்கனவே தனது மதசார்பற்ற நிலையில் சற்றும் வழுவாத, ஒரு தமிழன் வெளியேறும் போது  பயங்கர ஆத்திரமான  இந்து/ பிராமண/சம்ஸ்கிருத/ இந்திய எதிர்ப்பாளராகவோ  அல்லது ஒரு மிகுவெகு உக்கிரமான சமூகநீதி ஆர்வலராகவோ  வெளியே வந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு அல்லது அதிர்ச்சியடைவதற்கு  ஏதாச்சுமில்லை .....!!!

கருத்துகள் இல்லை: